search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Irumbu Thirai"

    நடிகர் விஷால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர் மன்றங்களை அனைத்தையும் மக்கள் நல இயக்கமாக மாற்றி இருக்கிறார். #Vishal #HappyBirthdayVishal
    விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மித்ரன் இயக்கத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக 100 வது நாளை கடந்து இருக்கிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். வில்லனாக அர்ஜுன் நடித்திருந்தார்.

    விஷாலின் பிறந்தநாளான இன்று, பிறந்தநாள் விழா, இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழாவையும் சேர்த்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடினார். இதில் விஷால், இயக்குனர் மித்ரன், நடிகை சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். 



    இதில் தன்னுடைய ரசிகர் மன்றத்தை ‘மக்கள் நல இயக்கம்’ ஆக மாற்றி இருக்கிறார். இவ்விழாவில் இதற்கான கொடியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில் விவேகம், வித்தியாசம், விடா முயற்சி எனவும், அணி சேர்வோம் அன்பை விதைப்போம் என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
    ‘இரும்புத்திரை’ வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஷால், நான் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணை தினமும் பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
    அண்மையில் வெளியான 'இரும்புத்திரை' படம் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான படமாக எடுக்கப்பட்டு இருந்தது. ஆதார் அட்டை முதல் தேர்தல் முறை வரை எல்லா மின்னணு செயல்பாடுகளில் இருக்கும் சிக்கல்களை அலசி இருந்தது. படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான விஷால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசினார். 

    அப்போது மின்னணி வாக்குப்பதிவு எந்திரம் பற்றி கேட்டபோது, ‘எனக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. வாக்குசீட்டு முறையை தான் நம்புகிறேன். என்னிடம் ஆதார் அட்டை இருக்கிறது. ஆனால் இன்னும் வங்கியில் அதை இணைக்கவில்லை. முன்பைவிட இப்போது இன்னும் விழிப்புணர்வோடு இருக்கிறேன்.

    மெர்சல் அளவுக்கு இந்த படத்துக்கு பிரச்னை யாரும் பண்ணவில்லையே என்றால் அதற்கு காரணம் நாங்கள் உண்மையை தான் சொல்லி இருக்கிறோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்று பொருள்’ என்று பதிலளித்தார். விஷால் அடுத்து அரசியலுக்கு வரும் திட்டத்தில் இருக்கிறார்.



    அதற்கு முன்பாக ஜனவரியில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு அடுத்த முகூர்த்த நாளிலேயே அங்கே தனது திருமணம் நடக்கும் என்றும் கூறினார். மணப்பெண் யார் என்று கேட்டதற்கு ‘அவரை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்’ என்று மறைமுகமாக சொன்னார். விஷாலும் வரலட்சுமியும் காதலிப்பதாக சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    இரும்புத்திரை, நடிகையர் திலகம் படங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியில் இருக்கும் சமந்தா, என்னைப் பற்றி வந்த செய்தியில் உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார். #Samantha
    ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றதில் உற்சாகமாக இருக்கிறார் சமந்தா. அந்த உற்சாகத்தில் அவர் அளித்த பேட்டி...

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறீர்களே?

    இல்லை. யுடர்ன் படத்தை நான் தயாரிப்பதாக வந்த செய்திகள் உண்மை இல்லை. அந்த படத்தை வேறு ஒருவர் தயாரிக்கிறார். அதில் பத்திரிகையாளராக வருகிறேன். வித்தியாசமான கதாபாத்திரம்.

    பெரிய குடும்பத்தில் மருமகளாகி இருக்கிறேன். மிகவும் கவனமாக இருக்கிறேன். மாமனாரை பார்த்து பயந்தேன். ஆனால் அவர் மிகவும் கூலாக இருக்கிறார். ஏதாவது பிரச்சினை என்றால் ‘அட விடும்மா’ என்று உற்சாகப்படுத்துகிறார். சினிமா குடும்பம் என்பதால் என்னை புரிந்துகொள்கிறார்கள்.

    திருமணத்துக்கு பின் அதிகமாக கவர்ச்சி படங்கள் வெளியிடுகிறீர்களே?

    என் சமூக வலைதளங்களில் எந்த படங்களை வெளியிட வேண்டும் என்பது என் உரிமை. அதில் தலையிட, அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. எனக்கு என் எல்லை தெரியும்.

    பிரதிக்‌ஷா அமைப்பு மூலம் இதுவரை 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை நடத்தியுள்ளோம். தெலுங்கானா கைத்தறித்துறை தூதுவராக இருக்கிறேன். நெசவாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். தமிழக அரசு கேட்டால் இங்கேயும் தூதுவராக தயார்.



    ரஜினி, கமல் யாருக்கு உங்கள் ஆதரவு?

    அரசியல் பற்றி சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது. சினிமா மட்டும்தான் தெரியும்.

    திருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பை விட்டு விடுவேன் என்று நாக சைதன்யா கவலைப்பட்டார். தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் திருமணம் ஆன பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மையை நான் அகற்ற வேண்டும். திருமணத்துக்குப் பிறகு முன்பைவிட பிஸியாக நான் நடிப்பதை இந்த உலகம் காண வேண்டும் என சைதன்யா விரும்பினார். நிச்சயமற்ற தன்மை திரையுலகில் எதிர்காலத்தில்கூட ஏற்படலாம். அவரோடு நிறையச் சண்டை போடுவேன். ஆனால், நாங்க சண்டை போடுறோம் என்பது பக்கத்தில் இருக்கிறவங்களுக்குக்கூடத் தெரியாது. சத்தத்தைக் கூட்டாமல், இருவரும் ஜாலியாகச் சண்டை போட்டுப்போம். பார்ப்பவர்கள் ஏதோ ரகசியம் பேசிட்டு இருக்காங்கன்னு நினைப்பாங்க. குடும்பத்தில் என்னைப் பாதுகாப்பாக உணர வைத்ததுதான் அவர் எனக்குத் தந்திருக்கும் சிறந்த பரிசு’ என்றார்.
    ×