என் மலர்
கார்
- டீசல் என்ஜின், பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கும்.
- 4 வண்ண தேர்வுகளிலும், வேலர் ஆட்டோபயோகிராபி கிடைக்கிறது.
ரேஞ்ச் ரோவர் வேலர் காரில், ஆட்டோபயோகிராபி என்கிற வேரியண்ட் அறிமுகமாகி உள்ளது. இதுவரையில், எஸ்.இ டைனாமிக் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே ரேஞ்ச் ரோவர் வேலர் கார் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி ஆட்டோபயோகிராபி வேரியண்ட்டிலும் கிடைக்கும். கூடவே டீசல் என்ஜின், பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கும். இந்த காரின் முன்-பின்பக்க பம்பர்களிலும், முன்பக்க பெண்டர்களிலும் பர்னிஷ்டு செய்யப்பட்ட காப்பர் டீடெயிலிங் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க எல்.இ.டி. ஹெட்லைட்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், இந்த புதிய வேலர் காரில் புதிய டிசைனில் 20 அங்குல அலாய் சக்கரங்கள் டார்க் கிரே நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 11.4 அங்குல தொடுதிரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிரைவருக்கான டிஸ்பிளே, 4 நிலை கிளைமேட் கண்ட்ரோல், 3டி சரவுண்ட் சவுண்ட் டெக்னாலஜி கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் 4 வண்ண தேர்வுகளிலும், வேலர் ஆட்டோபயோகிராபி கிடைக்கிறது. ஆரம்ப ஷோரூம் விலை ரூ.89.90 லட்சம்.
- எம்ஜி M9 காரில் 90-kWh NMC பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த LED டெயில்-லைட் வடிவமைப்பு ஒரு தனித்துவமான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை உறுதி செய்கிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆடம்பர பிராண்ட் பிரிவான எம்ஜி செலக்ட் மூலம் எம்ஜி M9 தி பிரசிடென்ஷியல் லிமோசின் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய எம்ஜி M9 வேரியண்ட் இந்திய சந்தையில் ரூ. 69.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய எம்ஜி M9 அதிநவீனத்தையும் புதுமையையும் விரும்புவோருக்கு ஏற்ற மாடல் ஆகும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி M9 விநியோகங்கள் ஆகஸ்ட் 10-ந்தேதி முதல் தொடங்கும்.
பேட்டரி மற்றும் பவர்டிரெய்ன்:
எம்ஜி M9 காரில் 90-kWh NMC பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முறையே 245 hp பவர் மற்றும் 350 Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும் 548 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் கொண்டுள்ளது. இந்த மாடல் 11-kW வால் பாக்ஸ் சார்ஜரையும், 3.3-kW போர்ட்டபிள் சார்ஜரையும் வழங்குகிறது. மேலும், வாழ்நாள் உத்தரவாதத்தையும் 3 ஆண்டுகள்/வரம்பற்ற கிலோமீட்டர் வாகன உத்தரவாதத்தையும் பெறுகிறது.

வெளிப்புற சிறப்பம்சங்கள்:
எம்ஜி M9 மூன்று தனித்துவமான வண்ணங்களில் வழங்கப்படுகிறது. அதாவது பியர்ல் லஸ்டர் ஒயிட், மெட்டல் பிளாக் மற்றும் கான்கிரீட் கிரே. எம்ஜி M9 ஒரு தனித்துவமான வெளிப்புற வடிவமைப்பைப் பெறுகிறது. அதன் நவீன இருப்பை உறுதிப்படுத்தும் ஒரு தடிமனான ட்ரெப்சாய்டல் மெஷ் கிரில் மூலம் சிறப்பிக்கப்படுகிறது. ஸ்பிலிட் LED ஹெட்லைட்கள் மற்றும் கனெக்ட்டெட் DRLகள் கூர்மையான மற்றும் அதிநவீன முன்புற தோற்றத்தை உருவாக்குகிறது. பின்புறத்தில், ஒருங்கிணைந்த LED டெயில்-லைட் வடிவமைப்பு ஒரு தனித்துவமான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை உறுதி செய்கிறது.
உட்புறம் மற்றும் அம்சங்கள்:
உட்புறத்தில், எம்ஜி M9 16-வழிகளில் சரிசெய்யும் வசதி, 8 மசாஜ் அமைப்புகள், ஹீட்டிங் மற்றும் வென்டிலேஷன் ஆகியவற்றைப் பெறுகிறது. இதில் டூயல் சன்ரூஃப் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 13-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் (சப் வூஃபர் மற்றும் ஆம்ப்ளிஃபையர் உட்பட) மற்றும் பலவற்றைப் பெறுகிறது.
விலை:
இந்தியாவில் எம்ஜி M9 எலெக்ட்ரிக் MPV கார் ரூ. 69.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுக விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் ரூ.1,00,000 செலுத்தி எம்ஜி M9 காரை முன்பதிவு செய்யலாம்.
- முழு கருப்பு தோற்றத்துடன் செல்ல, 21-இன்ச் ஏரோடைனமிக் சக்கரங்களும் கிளாஸ் பெயின்ட் தீம் பெற்றிருக்கிறது.
- இரண்டு மோட்டார்கள் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை விநியோகிக்கிறது.
போர்ஷே நிறுவனம், Taycan 4S பிளாக் எடிஷனை அறிமுகப்படுத்தி, அதன் பிளாக் எடிஷன் மாடல்களின் வரம்பை விரிவுபடுத்தியுள்ளது. புதிய கார் ரூ. 2.07 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த காருடன் வரும் இதர ஆப்ஷனல் பேக்கேஜ்களை தேர்வு செய்தால், இந்த விலை மேலும் அதிகரிக்கும்.
கெய்ன் பிளாக் எடிஷனைப் போலவே, Taycan 4S காரின் நிலையான மாடலோடு ஒப்பிடும்போது வெளிப்புற மற்றும் உட்புற மாற்றங்களைப் பெறுகிறது. வெளிப்புற வடிவமைப்பில் தொடங்கி, போர்ஷே Taycan S பிளாக் எடிஷன், ஏப்ரான், சைடு ஸ்கர்ட்ஸ், ரியர் டிஃப்பியூசர் மற்றும் ORVM இன் கீழ் பகுதி உள்ளிட்ட முன்பக்கத்தில் பல பகுதிகளில் ஹை-கிளாஸ் பிளாக் பெயின்ட் செய்யப்பட்டு இருக்கிறது.
விஷயங்களை இன்னும் சிறப்பானதாக்க, நிறுவனம் பேட்ஜ்கள் மற்றும் எழுத்துக்களையும் கருப்பு நிறமாக்கியுள்ளது. முழு கருப்பு தோற்றத்துடன் செல்ல, 21-இன்ச் ஏரோடைனமிக் சக்கரங்களும் கிளாஸ் பெயின்ட் தீம் பெற்றிருக்கிறது. ஹெட்லேம்ப்களும் ஸ்மோக்டு எஃபெக்ட் பெறுகின்றன.
Taycan 4S பிளாக் எடிஷன் 13 வெளிப்புற வண்ணத் தேர்வுகளுடன் தரநிலையாக வருகிறது - பிளாக், வைட், ஜெட் பிளாக் மெட்டாலிக், ஐஸ் கிரே மெட்டாலிக், வொல்கனோ கிரே மெட்டாலிக், டோலமைட் சில்வர் மெட்டாலிக், ஜெண்டியன் புளூ மெட்டாலிக், கார்மைன் ரெட், புரோவென்ஸ், நெப்டியூன் புளூ, ஃபுரோசன் பெர்ரி மெட்டாலிக், ஃபுரோசன் புளூ மெட்டாலிக் மற்றும் பர்பிள் ஸ்கை மெட்டாலிக் ஆகியவை அடங்கும்.

உள்ளே, Taycan 4S பிளாக் எடிஷன் தோற்றம் அதன் ஸ்டாண்டர்டு மாடலைப் பிரதிபலிக்கிறது. மேலும் பிளாக் எடிஷன் கருப்பு நிறத்தில் இரண்டு Race-tex (Alcantara/leatherette) உட்புற அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்களையும், இரண்டு திடமான லெதர் தேர்வுகளையும் வழங்குகிறது. டூயல்-டோன் இன்டீரியர் வடிவமைப்புகள் விரும்புவோர் தேர்வு செய்யக்கூடிய ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
அம்சங்களின் பட்டியலில் பனோரமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா, ADAS சூட், 14 வழிகளில் பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் 710 வாட் திறன் கொண்ட 14-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.
பிளாக் எடிஷனின் பவர்டிரெய்ன் ஸ்டான்டர்டு Taycan 4S ஐப் போன்றே, 105kWh பேட்டரி பேக் (WLTP வரம்பு 668 கிமீ) கொண்டுள்ளது. மேலும் இரண்டு மோட்டார்கள் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை விநியோகிக்கிறது. இவை ஒன்றாக அதிகபட்சமாக 598 hp திறன் மற்றும் 710 Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.
இது காரை 3.7 வினாடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும். மேலும் 320kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தி பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும்.
- புது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆறு இருக்கைகளைக் கொண்டிருக்கும்.
- நிலையான மாடல் Y-ஐ விட 186 மில்லமீட்டர் நீளமானது.
டெஸ்லா மாடல் Y இந்திய சந்தையில் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீண்ட வீல்பேஸ் மற்றும் ஆறு இருக்கைகள் கொண்ட டெஸ்லா மாடல் Y காரின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ காண உலகம் தயாராகி வருகிறது. புதிய மாடலின் அதிகாரப்பூர்வ வெளியீடு இன்னும் வரவில்லை என்றாலும், காரைப் பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய மாடலின் விவரங்கள் சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் (MIIT) தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. புதிய நீண்ட வீல்பேஸ் எலெக்ட்ரிக் கார் வெர்ஷன் மாடல் YL என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வரிசை இருக்கைகள் உள்ளன. அதிக இடம் மற்றும் கூடுதல் இருக்கைகளுடன், இந்த மாடல் அதிக சக்தியையும் தரும்.
இந்த புது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆறு இருக்கைகளைக் கொண்டிருக்கும். கேப்டன் இருக்கைகள் இடம் பெற்றிருக்கலாம். இதற்கு ஏற்றவாறு, கார் இப்போது 4,976 மிமீ நீளத்தைக் கொண்டுள்ளது. இது நிலையான மாடல் Y-ஐ விட 186 மில்லமீட்டர் நீளமானது. அதனுடன், உயரமும் 44 மில்லிமீட்டர் அதிகரித்துள்ளது.

இது நீண்ட வீல்பேஸ் மாடல் என்பதால், டெஸ்லா வீல்பேஸை 3,040 மில்லிமீட்டர் அல்லது தற்போதைய ஐந்து இருக்கைகள் கொண்ட மாடல் Y-ஐ விட 150 மில்லிமீட்டர் நீளமாக நீட்டித்துள்ளது. கூடுதல் நீளத்துடன், புதிய YL சக்கரங்களுக்கான புதிய வடிவமைப்பு, புதுப்பிக்கப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் புதிய இருக்கைகளுடன் அழகியலில் சில மாற்றங்களைப் பெறுகிறது.
தற்போது வெளியான தகவல்களின் படி, டெஸ்லா மாடல் YL ஐந்து இருக்கைகள் கொண்ட மாடலை விட அதிக சக்தியுடன் வரும். இது 455 hp பவர் வெளியீட்டைக் கொண்டிருக்கும், இது ஐந்து இருக்கைகள் கொண்ட மாடலில் 443 hp-ஐ விட அதிகமாகும். அதனுடன், சந்தையில் காரின் மற்றொரு ஏழு இருக்கைகள் கொண்ட மாடல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இரண்டு மாடல்களின் வெளியீட்டு தேதி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
- 2025 வால்வோ XC60 தற்போதைய மாடலை போன்ற தோற்றம் கொண்டுள்ளது.
- புதிய வால்வோ XC60 காரில் புதுப்பிக்கப்பட்ட இருக்கை மேற்கவர்கள் மற்றும் கேபின் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் XC60-ஐ வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்தது. இருப்பினும், இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை சில மாதங்களுக்கு தள்ளி வைத்தது. அந்த வரிசையில், தற்போது வால்வோ XC60 மாடல் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி வெளியிட வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் தான், வால்வோ நிறுவனம் XC60 விற்பனையில் 2.7 மில்லியனுக்கும் அதிக யூனிட்களை பதிவு செய்ததாக அறிவித்தது. இது அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையான மாடலாக இருந்த வால்வோ 240 மாடலை மிஞ்சியது. 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, வால்வோ கார்களின் நடுத்தர அளவிலான SUV வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிடித்தமானதாக இருந்து வருகிறது.
வெளிப்புற புதுப்பிப்புகள்:
2025 வால்வோ XC60 தற்போதைய மாடலை போன்ற தோற்றம் கொண்டுள்ளது. பின்புறத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஏர் வென்ட்களுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட கிரில், ஸ்மோக்டு-அவுட் எஃபெக்ட் கொண்ட டெயில்-லேம்ப்கள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் என பல வடிவமைப்பு மாற்றங்களை பெறுகிறது.

உட்புற புதுப்பிப்புகள்:
2025 வால்வோ XC60 காரில் புதிய UX மற்றும் OTA அப்டேட்களுடன் கூடிய பெரிய 11.6-இன்ச் ஃப்ரீஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் இருக்கும். புதிய வால்வோ XC60 காரில் புதுப்பிக்கப்பட்ட இருக்கை மேற்கவர்கள் மற்றும் கேபின் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதுதவிர இந்த மாடலில் போவர்ஸ் & வில்கின்ஸ் ஹை ஃபிடிலிட்டி ஆடியோ சிஸ்டம் மற்றும் பிற முக்கிய இன்டீரியர் அம்சங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
எஞ்சின் மற்றும் பவர்டிரெய்ன்:
வால்வோ XC60 இன் 2025 மாடல் அதன் தற்போதைய மாடலைப் போலவே அதே எஞ்சினைக் கொண்டிருக்கும். இது 2.0 லிட்டர் டுவின்-டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெறுகிறது. இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் அதிகபட்சம் 250 hp பவர், 360 Nm பீக் டார்க் வழங்கும் திறன் கொண்டது.
- டெஸ்லா மாடல் Y கார்கள் 61 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
- மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூமை முதலமைச்சர் பட்னாவிஸ் திறந்து வைத்தார்.
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது.
மும்பை மேற்கு குர்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூமை இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 61 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், டெஸ்லா ஷோரூம் இந்தியாவில் திறக்கப்பட்டதற்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா எலான் மஸ்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், எலான் மஸ்க்கையும் அவரது டெஸ்லா நிறுவனத்தையும் இந்தியாவிற்கு வரவேற்கிறேன். உலகின் மிகப்பெரிய மின்சார வாகன வாய்ப்புகளில் ஒன்று இப்போது மிகவும் உற்சாகமாகிவிட்டது. போட்டி புதுமைகளை உருவாக்குகிறது. மேலும் நாம் நிறைய தூரம் போகவேண்டியுள்ளது. சார்ஜிங் நிலையத்தில் உங்கள் கார்களை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- 8 ஆண்டு அல்லது 1.6 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை வாரண்டி வழங்கப்பட்டிருந்தது.
- டாடா இ.வி. வைத்திருப்போர் புதிய நெக்சான் இ.வி. 45 அல்லது கர்வ் இ.வி. வாங்கினால் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி சலுகை உண்டு.
டாடா நிறுவனம் நெக்சான் 45 மற்றும் கர்வ் ஆகிய எலெக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்தியுள்ளது. தற்போது இவற்றின் பேட்டரிகளுக்கு 15 ஆண்டு அல்லது வரம்பற்ற கிலோ மீட்டர்கள் வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. வாழ்நாள் கால வாரண்டி என்பது வாகனம் பதிவு செய்யப்பட்டதில் இருந்து 15 ஆண்டுகள் என கணக்கில் கொள்ளப்படும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு முன்பு 8 ஆண்டு அல்லது 1.6 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை வாரண்டி வழங்கப்பட்டிருந்தது. புதிதாக டாடா இ.வி. வாங்குவோருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என கூறப்படுகிறது.
இது தவிர, லாயல்டி போனசாக டாடா இ.வி. வைத்திருப்போர் புதிய நெக்சான் இ.வி. 45 அல்லது கர்வ் இ.வி. வாங்கினால் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி சலுகை உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது. தொடக்க ஷோரூம் விலையாக டாடா கர்வ் சுமார் ரூ.17.49 லட்சம் எனவும், நெக்சான் இ.வி. சுமார் ரூ.12.49 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.
- இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 59.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்தது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம்.
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது.
மும்பை மேற்கு குர்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூமை இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 59.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
- ஹூண்டாய் ஆரா S AMT 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
- இது 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தனது என்ட்ரி லெவல் செடான் மாடல் ஹூண்டாய் ஆரா புதிய வேரியண்ட் -S AMT-ஐ அறிவித்துள்ளது. இந்த புதிய வேரியண்ட் மூலம், ஹூண்டாய் நிறுவனம் அதன் மேம்பட்ட AMT தொழில்நுட்பத்தை பரந்த வாடிக்கையாளர் தளத்திற்கு அணுகக்கூடியதாக இருக்கும் என்று கூறுகிறது.
இளம் இந்திய வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வேரியண்ட் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், மலிவு விலை செடானில் ஸ்டைல், வசதி மற்றும் சௌகரியத்தின் சரியான கலவையை வழங்குவதாகவும் ஹூண்டாய் கூறுகிறது.
புதிய வேரியண்ட் அறிமுகம் குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் முழுநேர இயக்குநரும் தலைமை இயக்க அதிகாரியுமான தருண் கார்க் கூறுகையில், "ஹூண்டாய் நிறுவனத்தில், பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் மொபிலிட்டியை அணுகக்கூடியதாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஹூண்டாய் AURA S AMT-யில் மேம்பட்ட AMT டிரான்ஸ்மிஷனை அறிமுகப்படுத்துவது, தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்க செய்வதும் வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்துவதற்கும் எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கிறது.
இந்த அறிமுகத்தின் மூலம், மலிவு விலையில் உயர்ந்த சௌகரியம், பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் வசதியை என்ட்ரி லெவல் பிரிவிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்," என்றார்
ஹூண்டாய் ஆரா S AMT 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது முறையே 83 hp பவர் மற்றும் 113.8 Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
மேலும், புதிய ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்டில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC), LED டே-லைட் ரன்னிங் லேம்ப்கள் (DRLs), 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, எலெக்ட்ரிக் ஃபோல்டிங் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்களுடன் கூடிய வெளிப்புற ரியர் வியூ மிரர் மற்றும் பல அம்சங்கள் உள்ளன.
இந்த அம்சங்களைத் தவிர, பின்புறம் மையத்தில் ஆர்ம்ரெஸ்ட், முன் மற்றும் பின்புறத்தில் 12-V சார்ஜிங் போர்ட்கள், USB மற்றும் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய 2-DIN ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங்-மவுண்டட் ஆடியோ கண்ட்ரோல்கள், 4 ஸ்பீக்கர்கள் மற்றும் பவர் விண்டோக்கள் போன்ற உட்புற அம்சங்களும் இதில் அடங்கும்.
ஹூண்டாய் ஆரா S AMT ரூ.8,07,700 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்போது மொத்தம் ஆறு வேரியண்ட்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் ஆரா மாடல் விலை ரூ.6.48 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
- மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் S மாடலுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.
- AX3 இன் மீதமுள்ள மாடல்களுக்கு ரூ. 30,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போதுள்ள தயாரிப்பு மாடல்களின் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க மஹிந்திரா முயற்சி செய்து வருகிறது. இதற்காக வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனம் பல புதிய கான்செப்ட் மாடல்களை வெளியிட உள்ளது.
மஹிந்திரா தற்போது ஸ்கார்பியோ N, XUV700 மற்றும் பல மாடல்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இவை ஜூலை மாத இறுதி வரை வழங்கப்படும். இந்த சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை ஒவ்வொரு நகரம் மற்றும் டீலர்ஷிப்களைப் பொறுத்து மாறுபடலாம்.
மஹிந்திரா ஸ்கார்பியோ:
மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் S மாடலுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. அதே நேரத்தில் S11 வேரியண்டிற்கு ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளாக் எடிஷன் ஸ்கார்பியோ N Z8 மற்றும் Z8 L மாடலுக்கு ரூ. 40,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மலிவு விலை வேரியண்ட்களைத் தேடும் வாடிக்கையாளர்கள் Z4 மற்றும் Z6 வேரியண்ட்களில் ரூ. 30,000 வரை தள்ளுபடி பெற முடியும்.
மஹிந்திரா XUV700:

மஹிந்திரா XUV700 AX5 மற்றும் AX5 S வேரியண்ட்களுக்கு ஜூலை 2025 மாதத்தில் ரூ. 30,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், AX3 இன் மீதமுள்ள மாடல்களுக்கு ரூ. 30,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மஹிந்திரா XUV400:
மஹிந்திரா நிறுவனம் XUV400 மாடலுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகிறது. ஜூலை 2025 இல் மஹிந்திரா XUV400 EL Pro வேரியண்டிற்கு வாடிக்கையாளர்கள் ரூ. 2.5 லட்சம் வரையிலான சலுகைகளைப் பெறலாம்.
மஹிந்திரா XUV 3XO:
மஹிந்திரா XUV 3XO AX5 பெட்ரோல் மேனுவல் மற்றும் AX 5L வேரியண்ட்களுக்கு ரூ. 50,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- புதிய பிளாக் சைடு சில்ஸ் மற்றும் பின்புற முனையில் புதிய பம்பர் வழங்கப்படுகிறது.
- கார் அதிகபட்சம் மணிக்கு 257 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது.
புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் ஐயோனிக் 6 இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது. இருப்பினும், அந்த நேரத்தில் வரவிருக்கும் N மாறுபாட்டின் விவரங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. 2026 ஹூண்டாய் ஐயோனிக் 6 N மாடலின் டீசர்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய எலெக்ட்ரிக் மாடலை ஹூண்டாய் நிறுவனம் "குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு" நிகழ்வில் வைத்து அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.
தோற்றத்தின் அடிப்படையில், 2026 ஹூண்டாய் ஐயோனிக் 6 N, ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஐயோனிக் 6 மாடலை போன்ற தோற்றம் மற்றும் வடிவமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதில் புதிய நேர்த்தியான ஹெட்லைட்களும் அடங்கும். இந்த மாடலில் புதிதாக N பேட்ஜுடன், இப்போது அகலமான ஃபெண்டர்கள் மற்றும் ஸ்வான் நெக் பின்புற இறக்கை பெறுகிறது.
புதிய பிளாக் சைடு சில்ஸ் மற்றும் பின்புற முனையில் புதிய பம்பர் வழங்கப்படுகிறது. ஆக்ரோஷமான தோற்றத்திற்கு மேலும் வலுசேர்க்க, ஃபெண்டர்கள் விரிவடைந்துள்ளன. இவற்றுடன் பெர்ஃபாமன்ஸ் ப்ளூ பேர்ல் ஷேடோ ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
ஹூண்டாய் ஐயோனிக் 5 N உடன் அதன் பவர்டிரெய்னைப் பகிர்ந்து கொள்ளும் இந்த கார், ஆல்-வீல்-டிரைவ் பவர்டிரெய்ன் மற்றும் 601 hp பவர் வெளிப்படுத்துகிறது. இது போதாது என்றால், காரில் N க்ரின் பூஸ்ட் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இது 84 kWh பேட்டரி பேக்கிலிருந்து அதிக திறனை உறிஞ்சும் அதே வேளையில் 10 வினாடிகளுக்கு 641 hp ஆக வெளியீட்டை அதிகரிக்கிறது. பயன்படுத்தப்படும்போது, இந்த செடான் 3.2 வினாடிகளில் நின்றுகொண்டிருக்கும் நிலையிலிருந்து மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை அடைகிறது. இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 257 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது. 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி பேட்டரியை 18 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
வேகத்தைக் கட்டுப்படுத்த, ஹூண்டாய் ஐயோனிக் 6 N நான்கு-பிஸ்டன் முன் காலிப்பர்களையும், பின்புறத்தில் முறையே 15.7 மற்றும் 14.1-இன்ச் ரோட்டர்களுடன் கூடிய ஒற்றை-பிஸ்டன் யூனிட்டையும் பெறுகிறது.
- 15 ஆண்டுகளுக்கு இந்த பேட்டரி வாரண்டி செல்லுபடியாகும்.
- ஏற்கனேவே இந்த கார்களை வாங்கியவர்களுக்கும் இந்த வாரன்டி பொருந்தும்.
டாடா Curvv மற்றும் நெக்ஸான் EV கார்களுக்கு லைப் டைம் பேட்டரி வாரண்டியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது கார் ரெஜிஸ்டர் செய்த நாளில் இருந்து 15 ஆண்டுகளுக்கு இந்த பேட்டரி வாரண்டி செல்லுபடியாகும். 15 ஆண்டுகளுக்குள் எத்தனை கிமீ ஓட்டியிருந்தாலும் இந்த வாரன்டி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை இனிமேல் புதிதாக இந்த கார் வாங்குபவர்களுக்கு மட்டும் இல்லாமல் ஏற்கனேவே இந்த கார்களை வாங்கியவர்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் EV சந்தை மற்றும் EV கார்களின் மறு விற்பனையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.






