என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நெக்சான் EV சீரிசில் புதிதாக நெக்சான் EV மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.
- நெக்சான் EV மேக்ஸ் உடன் ஸ்டாண்டர்டு நெக்சான் EV மாடலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், நெக்சான் EV மாடலின் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வுக்கு பின் இந்திய சந்தையில் நெக்சான் EV மேக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. நெக்சான் EV மேக்ஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 84 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி உள்ளது.

இதே போன்று நெக்சான் EV பேஸ் மாடல் துவக்க விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம் எந மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 45 ஆயிரம் அதிகம் ஆகும். இதன் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 35 ஆயிரம் அதிகரித்து தற்போது ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் என மாறி இருக்கிறது.
முன்னதாக இந்திய சந்தையில் பயணிகள் வாகன விலையை 0.55 சதவீதம் உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. விலை உயர்வு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.
- இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிதாக வாங்க முடியாத கார் மாடல்கள் பட்டியலை பார்ப்போம்.
- இவற்றை பயன்படுத்திய கார் சந்தையில் மட்டுமே வாங்கிட முடியும்.
கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு தலைசிறந்த கார் மாடல்களின் விற்பனை சத்தமின்றி நிறுத்தப்பட்டு விட்டன. இன்றும் அமோக வரவேற்பை பெறக் கூடிய சில மாடல்கள் பல்வேறு காரணங்களால் சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சமீபத்திய புகை விதிகள், உற்பத்தியாளரால் தொடர்ந்து விற்பனை செய்ய முடியாத நிலை என ஏராளமான காரணங்கள் இதற்கு உள்ளன. அந்த வகையில், தற்போது பயன்படுத்திய கார் சந்தையில் மட்டுமே கிடைக்கும் டாப் 5 மாடல்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா டீசல்: இந்த மாடல் இந்திய சந்தையில் பிரபலமான சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி.-யாக இருந்தது. இதில் வழங்கப்பட்டு இருந்து 1.3 லிட்டர் DDIS என்ஜின் இந்த மாடல் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்த மாடல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷில் மட்டுமே கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி: பட்ஜெட் விலையில் அதிக பெர்பார்மன்ஸ் கொண்ட கார் வேண்டுமெனில் சிந்திக்காமல் தேர்வு செய்யக் கூடிய மாடல் இது. இந்த மாடல் DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. தற்போதைய புது மாடல்களில் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
ஹோண்டா சிவிக்: பழைய தலைமுறை சிவிக் மாடல் பயன்படுத்திய கார் மாடல்கள் சந்தையில் பிரபலமான மாடல்களில் ஒன்று ஆகும். புது தலைமுறை மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், ஹோண்டா நிறுவனத்தின் ப்ரோடக்ஷன் யுத்தி காரணமாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.

ரெனால்ட் டஸ்டர் டீசல்: தற்போது பயன்படுத்திய கார் மாடல்கள் சந்தையில் கிடைக்கும் சிறந்த காம்பேக்ட் டீசல் எஸ்.யு.வி. மாடல்களில் ரெனால்ட் டஸ்டர் ஒன்றாகும். இதில் உள்ள என்ஜின் 84 ஹெச்.பி. மற்றும் 108 ஹெச்.பி. என இருவித டியூனிங்கில் வழங்கப்படுகிறது.
மாருதி எஸ் கிராஸ் 1.6: காம்பேக்ட் கிராஸ்ஓவர் அல்லது எஸ்.யு.வி. பிரிவில் ராசியற்ற மாடலாக இது குறிப்பிட முடியும். இதில் உள்ள 1.6 லிட்டர் DDIS 320 டீசல் என்ஜின் தலைசிறந்த செயல்திறன் கொண்டது ஆகும். மேலும் இந்த மாடலின் விலை ரூ. 5.5 லட்சத்தில் இருந்தே கிடைக்கிறது.
- மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் XUV700 மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
- புதிய XUV700 யூனிட்களில் பிழை கண்டறியப்பட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் நடவடிக்கை குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. மஹிந்திரா தனது XUV700 மாடல்களை ரிகால் செய்வது இதுவே முதல் முறை ஆகும்.
தற்போதைய தகவல்களின் படி ஆல் வீல் டிரைவ் வசதி கொண்ட மஹிந்திரா XUV700 டீசல் வேரியண்ட் மட்டுமே ரிகால் செய்யப்படுகிறது. மஹிந்திரா XUV700 AT AWD 7 STR மற்றும் AX 7 AT AWD லக்சரி பேக் 7 STR வேரியண்ட்கள் மட்டும் ரிகால் செய்யப்பட்டு இருக்கிறது. ரிகால் செய்யப்படும் மாடல்களில் என்ஜினை பின்புற ஆக்சிலுடன் இணைக்கும் ப்ரோபெல்லர் ஷாப்ட்-இல் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்துவோர் அருகாமையில் உள்ள சர்வீஸ் மையம் சென்று தங்களின் காரை சரி செய்து கொள்ள முடியும். இந்த பிரச்சினையில் எத்தனை மஹிந்திரா XUV700 யூனிட்கள் பாதிக்கப்பட்டு உள்ளன என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த பிரச்சினை காரணமாக இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது.
கடந்த மாதம் தான் மஹிந்திரா நிறுவனம் 30 ஆயிரம் மஹிந்திரா XUV700 யூனிட்களை வினியோகம் செய்தது. தற்போதைய சிப்செட் குறைபாடு காலக்கட்டத்தில் இத்தனை யூனிட்கள் ஒரே மாதத்தில் வினியோகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இன்னும் 78 ஆயிரம் XUV700 யூனிட்களை வினியோகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது.
- டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் பயன்படுத்திய கார் மாடல்கள் விற்பனை துறையில் களமிறங்கியது.
- முதற்கட்டமாக பெங்களூரு நகரில் பயன்படுத்திய கார் விற்பனை மையம் திறக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து ஆட்டோமொபைல் சந்தை மெல்ல மீண்டு வருகிறது. பல்வேறு வாகன உற்பத்தியாளர்கள் பயன்படுத்திய கார் விற்பனை துறையில் கதவனம் செலுத்த துவங்கி உள்ளனர். இந்த வரிசையில், பயன்படுத்திய கார் விற்பனையில் இருந்து லாபம் ஈட்ட டொயோட்டா நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் கிர்லோஸ்கர் குழுமம் - டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் கூட்டணி அமைந்து உள்ளன. இந்த கூட்டணியின் கீழ் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்ய டொயோட்டா நிறுவனம் முடிவு செய்து உள்ளது. முன்னதாக பயன்படுத்திய கார் விற்பனை பிரிவில் களமிறங்கு வதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்து இருந்தது.
இந்த வரிசையில், தான் தற்போது பெங்களூரு நகரில் டொயோட்டா யூஸ்டு கார் அவுட்லெட்-ஐ (TUCO) டொயோட்டா நிறுவனம் துவங்கி இருக்கிறது. புதிய விற்பனையகத்தின் மூலம் நாடு முழுக்க டொயோட்டா வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான மற்றும் நம்பத்தகுந்த பயன்படுத்திய கார் சந்தையை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது வர்த்தக வாகனங்கள் விலையை உயர்த்தியது.
- தற்போது பயணிகள் வாகன விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை 0.55 சதவீதம் விலை உயர்த்தப்படுகிறது. கார் மாடல், வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு வேறுபடும். ஒவ்வொரு மாடலின் விலை எந்த அளவுக்கு மாறும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

"உற்பத்தி செலவீனங்களை எதிர்கொள்ள பல்வேறு முயற்சிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. எனினும், தொடர்ச்சியான பாதிப்புகளால், விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன பிரிவில் கடந்த மாதம் மட்டும் 45 ஆயிரத்து 197 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இவற்றில் 3 ஆயிரத்து 507 யூனிட்கள் எலெக்ட்ரிக் மாடல்கள் ஆகும். டாடா டியாகோ, டாடா டிகோர், டாடா அல்ட்ரோஸ், டாடா நெக்சான், டாடா பன்ச், டாடா ஹேரியர் மற்றும் டாடா சஃபாரி போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது.
- மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் தனி கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.
- எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட் பற்றிய அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிட மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் eXUV400 இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த மாடல் 2022 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மேலும் 2027 வாக்கில் 20 முதல் 30 சதவீத எஸ்யுவி-க்கள் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும்.

புதிய மஹிந்திரா eXUV400 மாடல் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. இதே நிகழ்வில் மஹிந்திரா நிறுவனம் முதல் முறையாக எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களை முதல் முறையாக அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.க்கள், 2026-க்குள் ஒன்பது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதாக மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அந்த வகையில் ஒன்பது புது எலெக்ட்ரிக் கார் மாடல்களில் முதல் மாடல் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புதிய மஹிந்திரா eXUV400 மாடல் 4.2 மீட்டர்கள் நீளமாக உள்ளது. இதன் டிசைன் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட eXUV300 போன்றே காட்சியளிக்கிறது.
- ஹூண்டாய் நிறுவனம் விரைவில் புது N பிராண்டு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த மாடல்களுக்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் ஜூலை 15, 2022 அன்று N தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த நாளில் மூன்று புதிய N மாடல்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. முன்னதாக மூன்று N மாடல்களுக்கான டீசர்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

டீசர்களின் படி முதல் கார் லோ-ஸ்லங் ஸ்போர்ட்ஸ் கூப் மாடலாகவும், மற்றொரு மாடல் எலெக்ட்ரிக் வாகன ரேசிங் மாடலாகவும் மூன்றாவது மாடல் ஐயோனிக் 6N என்றும் தெரியவந்துள்ளது. லோ-ஸ்லங் ஸ்போர்ட்ஸ் கார் கூப் மாடல் போன்று காட்சி அளிக்கிறது.
இரண்டாவது கார் ஐயோனிக் 5 ஆக இருக்கும் என தெரிகிறது. இந்த டீசரில் தெளிவற்ற படம் இடம்பெற்று உள்ளது. எனினும், இதில் நீள நிற N சிக்னேச்சர் மற்றும் பிளாக் அக்செண்ட்கள் மட்டும் தெரிகிறது. கடைசி டீசரில் இருப்பது மட்டும் ஐயோனிக் 6 மாடல் ஓரளவு தெளிவாக அறிய முடிகிறது. இது பற்றிய முழு விவரங்கள் ஜூலை 15 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.
- மெர்சிடிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புது எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் மெர்சிடிஸ் அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடல் ஆகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய EQB மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் EQC காரின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இது இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் மாடலாக அறிமுகமாக இருக்கிறது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் GLB எஸ்.யு.வி.-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய EQB மாடலில் எலெக்ட்ரிக் வாகனத்திற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான வீல்கள் மற்றும் பின்புற டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பின்புறம் ஃபுல்-விட்த் லைட் பார் உள்ளது.

இந்த கார் 250, 300 மற்றும் 350 என மூன்று வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் 300 மற்றும் 350 மாடல்களில் ஆல் வீல் டிரைவ் வசதி மற்றும் ஒவ்வொரு ஆக்சில்களிலும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் EQB 250 மாடல் ஒற்றை மோட்டார் செட்டப், 188 ஹெச்.பி. பவர், 385 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் கொண்டுள்ளது.
300 மற்றும் 350 மாடல்களின் ஆல் வீல் டிரைவ் மாடல்களில் உள்ள மோட்டார் 225 ஹெச்.பி பவர், 390 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மூன்று வேரியண்ட்களிலும் 66.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இவற்றில் எந்த வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
- கியா இந்தியா நிறுவனம் எலெட்ரிக் வாகனங்களுக்கான பாஸ்ட் சார்ஜர்களை இன்ஸ்டால் செய்ய துவங்கி இருக்கிறது.
- சமீபத்தில் தான் கியா நிறுவனம் EV6 எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது.
கியா இந்தியா நிறுவனம் நாட்டின் முதல் 150 கிலோவாட் ஹவர் பாஸ்ட் சார்ஜரை குருகிராமில் உள்ள திங்ரா கியா விற்பனை மையத்தில் அமைத்து இருக்கிறது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கு கியா இந்தியா அடித்தளம் இட்டுள்ளது. நாடு முழுக்க இதே போன்றே சார்ஜிங் மையங்களை அமைக்க கியா இந்தியா முடிவு செய்து இருக்கிறது.

புதிய 150 கிலோவாட் ஹவர் சார்ஜர் கொண்டு கார்களை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 42 நிமிடங்களே ஆகும். வாடிக்கையாளர்கள் குருகிராமில் உள்ள விற்பனை மையம் சென்று பயன்பாட்டுக்கு ஏற்ற கட்டணம் செலுத்தி பாஸ்ட் சார்ஜரை பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்த மாதத்திற்குள் நாடு முழுக்க 15 பாஸ்ட் சார்ஜர்களை அமைக்க கியா இந்தியா முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் தான் இந்திய சந்தைக்கான முதல் முழு எலெக்ட்ரிக் மாடலாக கியா EV6 காரை கியா நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த மாடல் எலெக்ட்ரிக் குளோபல் மாட்யுலர் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கியா EV6 மாடலின் விலை ரூ. 59 லட்சத்து 95 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 528 கி.மீ. வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கிறது.
- டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
- இந்த முறை மூன்று கார்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த முறை கார் மாடல்கள் விலை ரூ. 27 ஆயிரத்தில் துவங்கி ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா வெல்பயர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. பார்ச்சூனர் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. டொயோட்டா கேம்ரி மாடலின் விலை ரூ. 90 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த மாடல் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது.
இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு ரூ. 86 ஆயிரம் வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தான் டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. வரும் மாதங்களில் இது பற்றிய தகவல் வெளியாகும்.
- யமஹா நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மைலேஜ் சேன்ஜ் நிகழ்வை நடத்தியது.
- இதில் மொத்தம் நூறு வாடிக்கையாள்கள் கலந்து கொண்டனர்.
யமஹா நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் ரேன்ஜ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மைலேஜ் சேலன்ஜ் ஆக்டிவிட்டி பெயரில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் நூறு யமஹா வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய சந்தையில் யமஹா நிறுவனத்தின் 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்களின் கீழ் பசினோ 125 Fi ஹைப்ரிட், ரே ZR 125 Fi ஹைப்ரிட் மற்றும் ஸ்டிரீட் ரேலி 125 Fi ஹைப்ரிட் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மைலேஜ் சேலன்ஜ் நிகழ்ச்சி தொடங்கும் முன் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர் பயன்பாடு பற்றி செய்யக் கூடிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள் விவரிக்கப்ட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கும் இலவச வாட்டர் வாஷ், பத்து பாயிண்ட் வாகன செக்கப் உள்ளிட்டவை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. கலந்து கொண்டவர்களில் அதிக மைலேஜ் பெற்று அகத்திய ஐந்து வெற்றியாளர்கல் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் மற்றும் கிப்ட் கார்டுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கலந்து கொண்டு அதிக மைலேஜ் பெற்று முதலிடம் பெற்றவர் தனது ஹைப்ரிட் ஸ்கூட்டர் கொண்டு 105.9 கி.மீ. மைலேஜ் பதிவு செய்து இருந்தார். இவரை தொடர்ந்து மற்ற நான்கு இடங்களை பிடித்தவர்கள் முறையே 97.86 கி.மீ., 97.56 கி.மீ, 96.69 கி.மீ மற்றும் 96.3 கி.மீ. மைலேஜ் பெற்றனர்.
- யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் மைல்கல் கொண்டாடி இருக்கிறது.
- யமஹா தினத்திற்கான உலகளாவிய தீம் "புதிய யுகத்தில் உறவுகள்" என்பதாகும்.
1955 ஆம் ஆண் டு ஜூலை 1 ஆம் தேதி (ஜப்பான்), யமஹா மோட்டார் கம்பெனி லிமிடெட் தொடங்கப்பட்டது, அதன் முதல் தயாரிப்பு மாடலான YA-1 இல் தொடங்கி, அற்புதமான, ஸ்டைலன மற்றும் ஸ்மார்ட்டி தயாரிப்புகளை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் பணக்கார பந்தய வரலாறு, புதுமைகள் மற்றும் அர்ப்பணிப்பு நிரம்பிய 67 வருட பயணத்தை இன்று நிறைவு செய்கிறது.
உலகெங்கிலும் உள்ள யமஹா ஊழியர்கள் பிராண்டின் மீது சிறந்த புரிதலையும், பாசத்தையும் பெற ஊக்குவிக்கும் நோக்கத்துடன் "யமஹா தினம்" என்றும் அதழக்கப்படும் இந்த அடித்தள நாள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் "யமஹாவின் தனித்துவமான பாணியை" வெளிப்படுத்துகிறது.
முக்கியமான மைல்கல்லை நினைவுகூரும் வகையில், யமஹா மோட்டார் இந்தியா (YMI) குழுமம் அதன் தாய் நிறுவனத்தின் 67வது ஆண்டு விழாவை சென்னையில் உள்ள YMI கார்ப்பரேட் அலுவலகத்திலும், காஞ்சிபுரம் மற்றும் சூரஜ்பூரில் உள்ள தொழிற்சாலை போன்ற இடங்களிலும் கொண்டாடியது. '
நிகழ்ச்சியில் பேசிய யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் திரு. ஈஷின் சிஹானா, "67வது யமஹா தினத்திற்கான உலகளாவிய தீம் "புதிய யுகத்தில் உறவுகள்" என்பதாகும். ஊழியர்கள், டீலர்கள், சப்ளையர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும்ச மூகம் ஆகிய அனைத்து பங்குதாரர்களுடனும் இதணந்திருப்பதற்கும் உறுதியான பிணைப்பு உருவாக்குவதற்கும் வழிகாட்டியதால், நாங்கள் எப்போதும் போற்றும் முக்கிய முதன்மைகளில் 'தடஸ் ' ஒன்றாகும்.
தனிமனித மற்றும் சமூக விலகல் காரணமாக மனித தொடர்பு காணாமல் போனதால், மனித இணைப்பில் ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கியது. மனித தொடர்பு என்பது மனித தொடர்புகளின் அடித்தளம், மேலும் மனித தொடுதல் மூலம் வலுவான உறவுகளை உருவாக்குவதன் மூலம் இந்த நிகழ்தவ நாங்கள் கொண்டாடுகிறோம். என தெரிவித்தார்.






