search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tata nexon ev"

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நெக்சான் EV சீரிசில் புதிதாக நெக்சான் EV மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.
    • நெக்சான் EV மேக்ஸ் உடன் ஸ்டாண்டர்டு நெக்சான் EV மாடலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், நெக்சான் EV மாடலின் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    விலை உயர்வுக்கு பின் இந்திய சந்தையில் நெக்சான் EV மேக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. நெக்சான் EV மேக்ஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 84 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி உள்ளது.


    இதே போன்று நெக்சான் EV பேஸ் மாடல் துவக்க விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம் எந மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 45 ஆயிரம் அதிகம் ஆகும். இதன் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 35 ஆயிரம் அதிகரித்து தற்போது ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் என மாறி இருக்கிறது.

    முன்னதாக இந்திய சந்தையில் பயணிகள் வாகன விலையை 0.55 சதவீதம் உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. விலை உயர்வு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கும் பொருந்தும். 

    • இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் டாடா நெக்சான் EV.
    • சமீபத்தில் இந்த மாடல் தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    மும்பையில் சில தினங்களுக்கு ஏற்பட்ட எலெக்ட்ரிக் வாகன விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மும்பையில் டாடா நெக்சான் EV மாடல் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்த உத்தரவிடும் முன்பே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    டாடா நெக்சான் EV மாடல் தீப்பிடித்து எரியும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பங்குதாரர்கள் வலியுறுத்தினர்.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், நெக்சான் EV தீப்பிடித்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய தீ விபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, இந்திய அறிவியல் கழகம் மற்றும் கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சம்பவம் பற்றி முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நிறைவு பெற்றதும், தீ விபத்துக்கான காரணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். எங்களின் வாகனங்கள் மற்றும் அவற்றை பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்," என தெரிவித்து இருக்கிறது.

    ×