என் மலர்

  நீங்கள் தேடியது "camry"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
  • இந்த முறை மூன்று கார்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

  டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த முறை கார் மாடல்கள் விலை ரூ. 27 ஆயிரத்தில் துவங்கி ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.


  டொயோட்டா வெல்பயர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. பார்ச்சூனர் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. டொயோட்டா கேம்ரி மாடலின் விலை ரூ. 90 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த மாடல் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது.

  இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு ரூ. 86 ஆயிரம் வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தான் டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. வரும் மாதங்களில் இது பற்றிய தகவல் வெளியாகும்.

  ×