என் மலர்

  ஆட்டோ டிப்ஸ்

  நாட்டின் முதல் 150 கிலோவாட் பாஸ்ட் சார்ஜர் நிறுவி அசத்திய கியா இந்தியா
  X

  நாட்டின் முதல் 150 கிலோவாட் பாஸ்ட் சார்ஜர் நிறுவி அசத்திய கியா இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கியா இந்தியா நிறுவனம் எலெட்ரிக் வாகனங்களுக்கான பாஸ்ட் சார்ஜர்களை இன்ஸ்டால் செய்ய துவங்கி இருக்கிறது.
  • சமீபத்தில் தான் கியா நிறுவனம் EV6 எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது.

  கியா இந்தியா நிறுவனம் நாட்டின் முதல் 150 கிலோவாட் ஹவர் பாஸ்ட் சார்ஜரை குருகிராமில் உள்ள திங்ரா கியா விற்பனை மையத்தில் அமைத்து இருக்கிறது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கு கியா இந்தியா அடித்தளம் இட்டுள்ளது. நாடு முழுக்க இதே போன்றே சார்ஜிங் மையங்களை அமைக்க கியா இந்தியா முடிவு செய்து இருக்கிறது.


  புதிய 150 கிலோவாட் ஹவர் சார்ஜர் கொண்டு கார்களை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 42 நிமிடங்களே ஆகும். வாடிக்கையாளர்கள் குருகிராமில் உள்ள விற்பனை மையம் சென்று பயன்பாட்டுக்கு ஏற்ற கட்டணம் செலுத்தி பாஸ்ட் சார்ஜரை பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்த மாதத்திற்குள் நாடு முழுக்க 15 பாஸ்ட் சார்ஜர்களை அமைக்க கியா இந்தியா முடிவு செய்துள்ளது.

  சமீபத்தில் தான் இந்திய சந்தைக்கான முதல் முழு எலெக்ட்ரிக் மாடலாக கியா EV6 காரை கியா நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த மாடல் எலெக்ட்ரிக் குளோபல் மாட்யுலர் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கியா EV6 மாடலின் விலை ரூ. 59 லட்சத்து 95 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 528 கி.மீ. வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

  Next Story
  ×