search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahindra eXUV400"

    • மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் தனி கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.
    • எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட் பற்றிய அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிட மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் eXUV400 இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த மாடல் 2022 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மேலும் 2027 வாக்கில் 20 முதல் 30 சதவீத எஸ்யுவி-க்கள் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும்.


    புதிய மஹிந்திரா eXUV400 மாடல் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. இதே நிகழ்வில் மஹிந்திரா நிறுவனம் முதல் முறையாக எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களை முதல் முறையாக அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.க்கள், 2026-க்குள் ஒன்பது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதாக மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    அந்த வகையில் ஒன்பது புது எலெக்ட்ரிக் கார் மாடல்களில் முதல் மாடல் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புதிய மஹிந்திரா eXUV400 மாடல் 4.2 மீட்டர்கள் நீளமாக உள்ளது. இதன் டிசைன் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட eXUV300 போன்றே காட்சியளிக்கிறது. 

    ×