search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mercedes Benz EQB"

    • மெர்சிடிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் மெர்சிடிஸ் அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடல் ஆகும்.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய EQB மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் EQC காரின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இது இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் மாடலாக அறிமுகமாக இருக்கிறது.

    மெர்சிடிஸ் நிறுவனத்தின் GLB எஸ்.யு.வி.-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய EQB மாடலில் எலெக்ட்ரிக் வாகனத்திற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான வீல்கள் மற்றும் பின்புற டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பின்புறம் ஃபுல்-விட்த் லைட் பார் உள்ளது.


    இந்த கார் 250, 300 மற்றும் 350 என மூன்று வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் 300 மற்றும் 350 மாடல்களில் ஆல் வீல் டிரைவ் வசதி மற்றும் ஒவ்வொரு ஆக்சில்களிலும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் EQB 250 மாடல் ஒற்றை மோட்டார் செட்டப், 188 ஹெச்.பி. பவர், 385 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் கொண்டுள்ளது.

    300 மற்றும் 350 மாடல்களின் ஆல் வீல் டிரைவ் மாடல்களில் உள்ள மோட்டார் 225 ஹெச்.பி பவர், 390 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மூன்று வேரியண்ட்களிலும் 66.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இவற்றில் எந்த வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    ×