என் மலர்
- வார்த்தைகளால் சுகாதார ஊழியர்களை திட்டினாலும் தண்டனை உறுதியாகும்.
- ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
திருவனந்தபுரம் :
கேரளாவில் கொட்டாரக்கரை அரசு ஆஸ்பத்திரியில், டாக்டர் வந்தனா தாஸ், சிகிச்சைக்கு வந்த கைதியால் கத்தரியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 2012-ம் ஆண்டின் கேரள சுகாதாரத்துறை பாதுகாப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று மந்திரி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மருத்துவத் துறையின் முழு பாதுகாப்புக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
புதிய சட்ட திருத்த மசோதா குறித்து கேரள சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய சட்ட திருத்த மசோதா மூலம், சுகாதாரத்துறையில் உள்ள டாக்டர்கள் உள்பட அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆஸ்பத்திரிகள், சுகாதார மையங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆஸ்பத்திரிகளில் அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. கொலை தொடர்பான குற்றங்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வார்த்தைகளால் சுகாதார ஊழியர்களை திட்டினாலும் தண்டனை உறுதியாகும். டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்கள் ஆகியோர் மட்டுமின்றி ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உதவியாளர்கள், சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் இந்த புதிய சட்ட திருத்தத்தின் கீழ் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
இந்த சட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சம்பவம் நடந்த 1 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். சுகாதாரத்துறையினருக்கு எதிரான குற்றங்களுக்கு, சிறை தண்டனை மட்டுமின்றி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.
டாக்டர்கள், ஊழியர்களை தாக்குபவர்களுக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனையுடன், ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மந்திரிசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கவர்னரின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைக்கப்படும். கவர்னரின் அங்கீகாரம் கிடைத்த பின், சட்டசபை கூட்டத்தில் சுகாதாரத்துறை தொடர்பான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
- இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
புதுடெல்லி :
மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக 'நிதி ஆயோக்' என்ற அமைப்பினை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். துணைத்தலைவராக சுமன் பெரி இருக்கிறார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, இது பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி நடைபெற்றது.
இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம், வரும் 27-ந் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மாநிலங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கு இலக்கு வைத்து பாடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது.
- சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரி நடப்பு ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவானது.
சென்னை :
தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் உக்கிரமாகி வருகிறது. அதிலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 19 இடங்களில் வெயில் சதம் அடித்தது.
அதிலும் சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரி நடப்பு ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவானது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
5-வது நாளாக நேற்றும் சில இடங்களில் வெயில் உக்கிரமாக இருந்தது. 13 இடங்களில் 100 டிகிரியை வெயில் அளவு கடந்து இருந்த நிலையில், அதிகபட்சமாக வேலூரில் 106.88 டிகிரி பதிவானது.
ஊட்டி, தூத்துக்குடி, சென்னை நுங்கம்பாக்கத்தை தவிர மற்ற இடங்களில் இயல்பான அளவைவிட 1 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதிகமாக கரூரில் 5.2 டிகிரி வெயில் இயல்பை காட்டிலும் அதிகமாக கொளுத்தியது.
இந்த நிலையில் இன்றும் (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி பதிவான வெயில் அளவு வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கம் - -98.78 டிகிரி(37.1 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் - -102.92 டிகிரி(39.4 செல்சியஸ்)
கோவை - 98.96 டிகிரி (37.2 செல்சியஸ்)
கடலூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)
தர்மபுரி - 99.86 டிகிரி (37.7 செல்சியஸ்)
ஈரோடு - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)
கன்னியாகுமரி - 94.64 டிகிரி (34.8 செல்சியஸ்)
கரூர் - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)
கொடைக்கானல் - 70.88 டிகிரி (21.6 செல்சியஸ்)
மதுரை நகரம் - 104.72 டிகிரி (40.4 செல்சியஸ்)
மதுரை விமான நிலையம்-104 டிகிரி(40 செல்சியஸ்)
நாகை - 99.14 டிகிரி (37.3 செல்சியஸ்)
நாமக்கல் - 98.6 டிகிரி (37.7 செல்சியஸ்)
பாளையங்கோட்டை - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
பரங்கிப்பேட்டை - 105.26 டிகிரி (40.7 செல்சியஸ்)
சேலம் - 99.86 டிகிரி (37.7 செல்சியஸ்)
தஞ்சை - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
திருப்பத்தூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
திருச்சி - 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்)
திருத்தணி - 106.7 டிகிரி (41.5 செல்சியஸ்)
தூத்துக்குடி - 93.2 டிகிரி (34 செல்சியஸ்)
ஊட்டி - 69.26 டிகிரி (20.7 செல்சியஸ்)
வால்பாறை - 83.3 டிகிரி (28.5 செல்சியஸ்)
வேலூர் - 106.88 டிகிரி (41.6 செல்சியஸ்)
- காரைக்குடி கொப்புடையம்மன் தெப்பல் உற்சவம்.
- திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். காரைக்குடி கொப்புடையம்மன் தெப்பல் உற்சவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருப்போரூர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். அஹோபில மடம் ஸ்ரீமத் 39-வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கரின் திருநட்சத்திர வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி, தக்கோலம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-4 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி இரவு 10.08 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: அசுவினி காலை 7.50 மணி வரை பிறகு பரணி
யோகம்: அமர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணிமுதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-பணிவு
ரிஷபம்-ஆதாயம்
மிதுனம்-சாந்தம்
கடகம்-கண்ணியம்
சிம்மம்-கடமை
கன்னி-உழைப்பு
துலாம்- பாசம்
விருச்சிகம்-பரிசு
தனுசு- ஆர்வம்
மகரம்-உறுதி
கும்பம்-திடம்
மீனம்-இன்பம்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- கோடையில் உடல் வறட்சியை தவிர்க்க நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
- வெள்ளரிக்காயில் அதிகமான அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1 (வேண்டுமென்றால்)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கருப்பு உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெள்ளரிக்காயை தோல் சீவி, பின் அதனை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை துருவியது போல் நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் ஒரு பௌலில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, சாட் மசாலா, மிளகு தூள் மற்றும் கருப்பு உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது நொடியில் வெள்ளரிக்காய் சாலட் ரெடி!!!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த நேரத்திற்கு ‘சரஸ்வதி யாமம்’ என்ற பெயரும் உண்டு.
- இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முகூர்த்தம்.
காலை 4 மணி முதல் 6.30 மணி வரையான நேரத்தை, பிரம்ம முகூர்த்தம் என்பார்கள். பிரம்மனுடைய மனைவி சரஸ்வதி தேவி, கண்விழித்து செயல்படும் நேரம் இந்த பிரம்ம முகூர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த நேரத்திற்கு 'சரஸ்வதி யாமம்' என்ற பெயரும் உண்டு. மனதின் பிரச்சினைகளை அகற்றவும், இறைவனின் அன்பில் மனதை நிலைநிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முகூர்த்தம். இந்த நேரத்தில் சிவபெருமானை நினைத்து வழிபட்டு, பல அற்புத வரங்களை பிரம்மதேவன் பெற்றதால், இதற்கு 'பிரம்ம முகூர்த்தம்' என்ற பெயர் வந்தது.
இந்த நேரத்தில் நாமும் கண்விழித்து நீராடி, காரியங்களைத் தொடங்குவது வெற்றியாகவே முடியும். நீராட முடியாதவர்கள், பல் துலக்கி, கை, கால்களை மட்டுமாவது சுத்தப்படுத்திக்கொள்ளலாம். பிரம்ம முகூர்த்தத்தைப் பற்றி மேலும் சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
* சூரியன் உதிப்பதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகிறது.
* பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது, வீட்டு கிரஹப்பிரவேசம் செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெற்றால், அங்கு அசுபத் தன்மை இருக்காது. சுபத் தன்மை மட்டுமே ஏற்படும்.
* பிரம்ம முகூர்த்தம் எனப்படும், அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான்.
* பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து நீராடி, இறைவழிபாட்டைச் செய்ய வேண்டும். பிறகு மற்ற காரியங்களைச் செய்யத் தொடங்கினால், அன்றைய தினம் உள்ளம் உற்சாகத்துடன் செயல்படும்.
* பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சவுபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.
- மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.
- பக்கவாதம் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் இவற்றை பின்பற்ற வேண்டும்...
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக அளவில் சர்க்கரையின் அளவு இருந்தால் ஏன் பக்கவாதம் ஏற்படுகிறது? அதற்கான சரியான காரணம் என்ன? அதை தடுப்பதற்கான வழிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் பக்கவாத நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாவது கீழ்கண்ட காரணங்களால் என கண்டறியப்பட்டுள்ளது.
1) நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாத போது உடலில் உள்ள ரத்த நாளங்களில் அழற்சி (இன்பளமேஷன்) ஏற்பட்டு, ரத்த நாளங்கள் பாதிப்படைகின்றது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.
2) பாதிப்படைந்த ரத்த நாளங்களில், தமனிக்குழாய் தடிப்பு (அதிரோஸ்கிலோரிடக் பிளேக்) ஏற்பட்டு ரத்த நாளங்களில் அடைப்பு உருவாகிறது. இது மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை குறைத்து பக்கவாதத்தை ஏற்படுத்துகின்றது.
3) பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதலாக இருதய நோய், அதிக கொலஸ்ட்ரால், சிறுநீரக பாதிப்பு, ரத்த கொதிப்பு, உடல் பருமன் போன்றவையும் இருப்பதால் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாகிறது.
பக்கவாதம் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் இவற்றை பின்பற்ற வேண்டும்:
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்தல், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்தல், புகை பிடித்தல் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிதல், உடல் எடை குறைத்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த பால், மீன் அல்லது கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளை போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல்.
- தொடரும் கடன் பிரச்சினைக்கு முன்னோர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும்.
- பாதிப்பு என்பது ஏதாவது ஒரு கால கட்டத்தில் வெளிப்பட்டே தீரும்.
பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் வீடு, வாகன யோகம் போன்ற சுப பலன்கள் எளிதில் நடக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. தொடரும் கடன் பிரச்சினைக்கு முன்னோர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் இந்த தோஷம் ஏற்படும் என்பது தவறான கருத்து. ஒரு தாய், தந்தைக்கு பிறந்த 4 ஆண்கள் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டும் பித்ரு தோஷ தாக்கம் அதிகமாக இருக்கும். முன்னோர்களின் மரபணு சம்பந்தம் ஒருவரின் உடலில் எந்த அளவு இருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போல் பித்ரு தோஷ தாக்கத்தின் வலிமையில் மாற்றம் ஏற்படும்.
ஆனால் பாதிப்பு என்பது ஏதாவது ஒரு கால கட்டத்தில் வெளிப்பட்டே தீரும். நம் அண்ணன் கஷ்டப்படுகிறான், தம்பி கஷ்டப்படுகிறான். நாம் நிறைய புண்ணியம் பண்ணி இருக்கிறோம். அதனால் நன்றாக இருக்கிறோம் என்று யாரும் நினைத்து விட முடியாது. அந்த பிறவிக்குள் ஏதாவது ஒரு கால கட்டத்திற்குள் நிச்சயம் பாதிப்பு உண்டு. அவர் பாதிக்கப்படவில்லை என்றால் அவரின் வாரிசுகள் பல மடங்காக பாதிக்கப்படுகிறார்கள்.
வசதிகள் கொட்டி கிடக்கும். ஆனால் அதை அனுபவிக்க பாக்கியமற்ற வாரிசுகள் உருவாகும். கொடுத்து கெடுக்கும் யோகம். இதுவும் ஒரு வகையான பித்ரு தோஷம். நமக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது என்று யாரும் வருந்த வேண்டாம். ஒரே தாயின் வயிற்றில் உருவாகிய வாரிசுகளுக்கு பாதிப்பு ஏற்படும். காலம் மட்டும் மாறுபடும்.
ஒரு மனிதன் தந்தை வழி மூதாதையர் 6 பேர்,தாய் வழி மூதாதையர் 6 பேர் என மொத்தம் 12 பேருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
முறையான பித்ரு பூஜை ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் நிச்சயம் அகற்றி விடும். ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை பரிகாரங்களை செய்பவர்கள், தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் தொடர் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். எனவே, மகாளய பட்சம் அன்று பித்ரு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தால் புண்ணிய பலன் தலைமுறைக்கு வந்து சேரும்.
- கருவுற்றிருக்கும் பெண்கள் பலாப்பழத்தை தவிர்க்க வேண்டும்.
- முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு பழம்.
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு பழம். பலாப்பழ சுளையின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் அதில் இருக்கும் வைட்டமின் ஏ (கரோட்டினாய்ட்ஸ்). ஒரு கப் பலாப்பழத் துண்டுகளில் 143 கலோரிகள், 35 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் புரதச்சத்து, 3 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.
இதில் மிக அதிகமான அளவு வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி இருக்கிறது. பலாப்பழத்தின் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) 60 ஆகும். இது ஒரு மிதமான கிளைசிமிக் இன்டெக்ஸ் அளவாகும். பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட் மிக அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.
இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் (446 கிராம்) சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் பலாப்பழத்தின் கொட்டை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பலாப்பழம் மாவை சாப்பிடலாம்.
ஏனெனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் எபாக்சைடு, பிளாவினாய்ட்ஸ், பைட்டோஸ்டிரால்ஸ் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் பீட்டா செல்களை இன்சுலின் சுரக்கச் செய்து சர்க்கரை அளவை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பலாப்பழம் கர்ப்பப்பை சுருக்குதலை ஏற்படுத்திக் கருச்சிதைவை உண்டாக்கலாம். அதனால் கருவுற்றிருக்கும் பெண்கள் பலாப்பழத்தை தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- தெப்போற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- 4-ந் தேதி கருட வாகன சேவை நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி வரை 5 தெப்போற்சவம் நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பத்மசரோவரத்தில் தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். தெப்போற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு எல்லா துக்கங்களும் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
முதல் நாளான 31-ந் தேதி ருக்மணி, சத்யபாமாவுடன் கிருஷ்ணசுவாமி, இரண்டாம் நாள் சுந்தரராஜசுவாமி, கடைசி மூன்று நாட்கள் பத்மாவதி தாயார் ஆகியோர் தெப்பத்தில் உலா வருவார்கள். இதனை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக நீரடா மண்டபத்தில் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. வருகிற 3-ந் தேதி இரவு 8 மணிக்கு தாயாருக்கு கஜவாகன சேவையும், 4-ந் தேதி இரவு 8 மணிக்கு கருட வாகன சேவையும் நடக்கிறது. தெப்போற்சவம் முடிந்து தினமும் கோவில் வீதிகளில் தாயார் ஊர்வலம் நடைபெறும்.
தெப்போற்சவத்தையொட்டி 5 நாட்களுக்கு கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து செய்யப்பட்டது.
- கொடை விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
- 20-ந்தேதி சாமிமார்கள் ஊர் சுற்றிவரும் நிகழ்ச்சி நடக்கிறது.
தேரூர், மகாராஜபுரம் சந்தனமாரியம்மன் வங்காரமாடசாமி கோவில் கொடை விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. நாளை இரவு 7 மணிக்கு வில்லிசை, 12.30 மணிக்கு குடியழைப்பு நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கும்பம் தரித்து வருதல், 11 மணிக்கு களபம் சாற்றுதல், அபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 2 மணிக்கு சமபந்தி விருந்து, நள்ளிரவு 1.30 மணிக்கு நீராட செல்லுதல், 2 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
20-ந் தேதி மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், பகல் 1.30 மணிக்கு பூ படைப்பு, உச்சி கொடை, மாலை 5 மணிக்கு சாமிமார்கள் ஊர் சுற்றிவரும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
- இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
- திருமுறைத் தலங்களின் பட்டியலில் 24-வது திருமுறை தலமாகத் திகழ்கிறது இந்த கோவில்.
கபாலீஸ்வரர் திருமாலை
மூலப் பரம் பொருளே முக்கண்படைத்த முழு முதல்வன்
ஆலக் கணத்தியுள் ஞான சம்பந்தர் அருள் மொழியிற்
சாலப் புகுந்தவன் பூங்கோதை வாழ்வு தழைவித்தவன்
காலக் கடவுள் மயிலா புரியிற் கபாலியன்றே
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீசுவரர் கோவில் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
மயிலாப்பூர் பகுதியில் மயிலாப்பூர் காரணீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோவில், மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோவில், மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோவில், மயிலாப்பூர் வாலீசுவரர் கோவில், மயிலாப்பூர் மல்லீசுவரர் கோவில். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் எனப்படுகின்ற சப்த சிவத்தலங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் தரிசிக்கலாம் என்பர். இவை ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்துள்ளன.
இவற்றைச் சப்த ரிசிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கவுதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர். இந்த சப்த ஸ்தான சிவாலயங்களின் வரிசையில் ஒரு சிவாலயமாக கபாலீஸ்வரர் கோவில் சிறப்பு பெற்றுள்ளது.
இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது.
இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ள பகுதி மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை ஆண்ட பல்லவர் காலத்தில் சைவ சமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையில் இருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோவில் கட்டப்பட்டது.
திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலே, சிவனேசர் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார்.
சம்பந்தர் மயிலாப்பூர் வந்த போது, சிவனேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப்பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோவிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைய கபாலீசுவரர் கோவிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோவில் இருப்பதைக் காணமுடியும்.
திருமுறைத் தலங்களின் பட்டியலில் 24-வது திருமுறை தலமாகத் திகழ்கிறது இந்த கோவில். திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய நாயன்மார்களின் பாடல் பெற்ற திருத்தலம் இது. பெரிய புராணம் போன்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்திற்கான திருப்புகழ் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் அவதரித்த திருத்தலம் இது.
பார்வதி அன்னை சிவபெருமானை நோக்கி, மயில் வடிவில் இருந்த நான் உங்களை வழிபட்ட இத்தலத்திற்கு மயிலாபுரி என்கிற பெயர் வரவேண்டும். மயில் வடிவில் இருந்து இங்கே நான் ஏற்படுத்திய தீர்த்தத்திற்கு மயில் தீர்த்தம் என்கிற பெயர் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் இத்தலத்திற்கு மயிலாபுரி என்கிற பெயர் வந்தது. மயிலாப்பூர் என்றாகி, மயிலை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. பண்டைய புராண வரலாறுகளில் ஒன்று சிவன் பிரம்மாவை சபித்தது.
பிரம்மாவிற்குக் கோவில் கிடையாது என்றும், பிரம்மனுக்கு உதவியாகப் பொய்ச் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜையில் சேர்க்கக்கூடாது என்றும் கூறிய சிவபெருமான். பைரவரை உருவாக்கி பிரம்மாவின் ஒரு சிரத்தை கொய்யச் சொன்னார். அதனால் ஐந்து தலைகள் பெற்றிருந்த பிரம்மா, நான்கு தலை கொண்டவராக ஆனார். அதன்பிறகு விமோசனம் வேண்டி சிவபெருமானைப் பிரம்மா வழிபட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
இங்கே சிவபெருமானை வழிபட்டு நான்காவது தலையை பெற்றார் பிரம்மா. நான்முகனான பிரம்மா, சிவபெருமானை நோக்கி, இத்தலத்தில் நான் உங்களை வணங்கியதாலும், நீங்கள் பிரம்ம கபாலம் ஏந்தியதாலும் இனி இத்தலத்திற்குப் பிரம்ம கபாலீஸ்வரம் என்றும், உங்களுக்கு கபாலீஸ்வரர் என்கிற பெயரும் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்படியே ஆகட்டும் என்று சிவபெருமான் அருளினார். இத்தலத்தில் பிரம்மாவை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். இத்தலத்தில் சிவபெருமானை வேதங்கள் வணங்கின. ராமபிரான் ஜடாயுவிற்கு இறுதி கடமைகளைச் செய்த பின்பு, இங்கே வந்து கபாலீஸ்வரரை வணங்கினார். ராமபிரான் முடிசூட்டிக் கொண்ட பின்பு மீண்டும் இங்கே வந்து ஐப்பசி திருவோண விழாவில் கலந்துகொண்டு வழிபட்டார்.
முருகப்பெருமான் தாய் தந்தையரை வழிபட்டு பேறு பெற்றதால் சிங்காரவேலர் என்று போற்றப்படுவது போன்று, எண்ணற்ற சிறப்புகள் இத்தலத்திற்கு உள்ளன. இத்தலத்தில் அருள்கின்ற ஸ்ரீ கற்பகாம்பாள் அன்னை, நாம் கேட்டவைகளை கொடுப்பதோடு, கேட்க மறந்தவைகளையும் கொடுக்கிறாள்.
இக்கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர விழாவில் அறுபத்து மூவர் விழா சிறப்பானது.
அதிலும் நாளை நடைபெறும் அறுபத்து மூவர் வீதி உலா மிக, மிக கோலாகலமானது. ஒரு முறை நேரில் அதை பார்த்து அனுபவித்தால் தான் அந்த மகிமை உங்களுக்கு புரியும்.







