search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் 27-ந்தேதி நிதி ஆயோக் கூட்டம்
    X

    பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் 27-ந்தேதி 'நிதி ஆயோக்' கூட்டம்

    • இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
    • இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

    புதுடெல்லி :

    மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக 'நிதி ஆயோக்' என்ற அமைப்பினை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். துணைத்தலைவராக சுமன் பெரி இருக்கிறார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, இது பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி நடைபெற்றது.

    இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம், வரும் 27-ந் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மாநிலங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கு இலக்கு வைத்து பாடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×