என் மலர்
- கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை ஓரத்தில் நின்று போராட்டம் நடத்துமாறு கூறினார்கள்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடிந்து 13 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும். கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார மருத்துவ மனையில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்காணம் அம்பேத்கர் சிலை அருகில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் காளியம்மாள் தலைமை தாங்கினார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை ஓரத்தில் நின்று போராட்டம் நடத்துமாறு கூறினார்கள். மேலும், அங்கு வந்த மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் நாம் தமிழர் கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
- வண்டிப்பாளையம் ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகின்றேன்.
- கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்னாள் கவுன்சிலர் நக்கீரன் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வண்டிப்பாளையம் ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகின்றேன். இந்நிலையில் கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னிடம் பணம் கேட்டு கடையை உடைத்து விடுவதாக மிரட்டல் விடுத்து கடையை பூட்டி சென்றனர். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது, அவர்கள் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். எனவே கடையை தடையின்றி நடத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
- விக்கி என்பவர் திடீரென்று சுவேதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
- போலீசார் விக்கி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் சுவேதா (வயது 22). இவர் தனது வீட்டின் முன்பு இருக்கும் குடிநீர் குழாயில் குடிநீர் பிடிப்பதற்காக சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விக்கி என்பவர் திடீரென்று சுவேதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஸ்வேதா தனது வீட்டிற்கு சென்று உள்ளார். இதனை தொடர்ந்து விக்கி சுவேதா வீட்டிற்குள் அத்துமீறி சென்று அவரை தாக்கி மானபங்கம் படுத்தி கொலை மிரட்டல் விடுத்து மேலும் வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விக்கி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கள்ள சாராயம் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக 7 தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
- கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கடந்த 13 -ம் தேதி 50-க்கு மேற்பட்டோர் கள்ளசாராயம் குடித்தனர். இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரில் வந்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கள்ளசாராயம் விற்பனை செய்யப்படுகிறதா? மது பாட்டில்கள், சாராயம் உள்ளிட்டவைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக 7 தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது 293 லிட்டர் சாராயம், 229 மது பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் 38 வழக்கு பதிவு செய்து 38 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது மட்டுமின்றி கடலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் கடத்தி வரும் நபர்கள் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அதிர்ச்சிடைந்த அருண்குமார் காரை தேடியும் கிடைக்கவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அப்பர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். (வயது 40). இவர் தனது வீட்டு முன்பு காரை நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த அருண்குமார் காரை தேடினார். இருந்த போதும் கார் கிடைக்கவில்லை.
காரை மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரிய வந்தது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
- குற்றசம்பவத்தில் ஈடுப ட்டால் குண்டாஸ் பாயும் என உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை- திருச்சி மெயின் ரோட்டில் கஞ்சா விற்பதாக உளுந்தூ ர்பேட்டை உட்கோ ட்டை டிஎஸ்பி மகேசுக்கு கிடைத்த ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வா ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவரை மடக்கி பிடித்து போலீசார் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர். மேலும் இதேபோல் இடைக்கால் பகுதியில் கள்ளத்தனமாக பூ மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த பிரியதர்ஷினி இளம் ஆசிரியர் கோட்டை பகுதியில் எரியூர் கிராம த்தைச் சேர்ந்தவர் சின்ன ப்பையன் நம்பிக்கை மேரி திடீர்குப்பம் ராஜா ஆகியோர்களை கைது செய்தனர். மேலும் இந்த குற்றசம்பவத்தில் ஈடுப ட்டால் குண்டாஸ் பாயும் என உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தெரிவித்தார்.
- சுமார் 35-க்கும் நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக சாலையோரம் வசித்து வருகிறோம்.
- மேற்படி நாங்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றோம்.
கடலூர்:
சிதம்பரம் அருகே லால்புரம் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் வீட்டு மனை வழங்க கோரி சேகர் தலைமையில் சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.
மனுவில் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பஞ்சாயத்து உட்பட்ட பகுதியில் சுமார் 35-க்கும் நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக சாலையோரம் வசித்து வருகிறோம். எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளது. ஆனால் எங்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லை. மேற்படி நாங்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.
- பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊதிய உயர்வு வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல் லூர் அருகே உள்ள பெரிய செவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊதிய உயர்வு வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பாக அண்ணா தொழிற் சங்க தலைவரும். கூட்டமைப்பு செயலாளருமான பழனி தலைமையில் கூட்டமைப்பு தலைவர் தங்கவேல் முன்னிலையில் ஊதிய உயர்வு வழங்க கோரி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பப் பட்டன. இதில் பணியாளர் சங்கம் பொறுப்பாளர் முரளி, அண்ணா தொழிற் சங்க செயலாளர் திருவேங்கடம், பா.ம.க. செயலாளர் பழனிவேல், அம்பேத்கார் இயக்கம் செயலாளர் ஆறுமுகம் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது.
- சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலாவாக வந்து தீக்குழி நடைபெற்ற இடத்தின் முன்பு நிறைவு பெற்றது.
தொடர்ந்து, திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தீக்குழியில் இறங்கி மாரியம்மனை வழிபட்டனர். சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். விழாவில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.
- போலீசார் நெடுமானூர், விரியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 287 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஜெயமணி மற்றும் போலீசார் சேஷசமுத்திரம், தியாகராஜபுரம், சிவபுரம், நெடுமானூர், விரியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்(வயது 42), சுப்பிரமணி்(43), தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன்(45), கோபால் (48), நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு(37), திருமுருகன்(32), சிவபுரம் கிராமம் பச்சையப்பன்(36), விரியூர் கிராமம் டேவிட்ஆனந்தராஜ்(41) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 287 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- வல்லம் ஏரிக்கரைக்கு அகிலன் தனது நண் பர்களுடன் வந்தார்.
- ரூ. ஆயிரம் பணத்ைதயும், செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே மானடிக்குப் பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி மகன் கலைமகன் (27).இவர் தனது நண்பர்களுடன்வல்லம் ஏரிக்கரையில் நேற்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது கலைமகன் தனது செல்போனில் நெய்வேலி வட்டம் 3-ஐ சேர்ந்த அகிலன் (23) என்பவருடன், நெய்வேலி வடக்குத்து ரவுடியான கோபியுடன் நீபேச் கூடாது என எச்சரித்தார். அதற்கு அவர் ஏன் பேசக்கூடாது, நீ எங்கு இருக்கிறாய் என கேட்டு வல்லம் ஏரிக்கரைக்கு அகிலன் தனது நண்பர்களுடன் வந்தார்.
அப் போது ஏற்பட்ட தகராறில் கத்தி, வீச்சரிவாள் போன்றஆயுதங்களால் சரமாரியாக கலைமகனை வெட்டினர். பின்னர் அவரிடம் இருந்த அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் காயம்அடைந்தவரை மீட்டு கடலூர் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். இது பற்றிதகவல்அறிந்ததும்காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்மற்றும்போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் செல்போன் மூலம் பேசி முந்திரிதோப்பில் மறைந்து இருந்த அகிலன் (23), அவரது நண்பர் பொறி யாளர் வட்டம் 10-ஐ சேர்ந்த தமிழ் அரசன் (29) ஆகிய இருவரையும் கைது செய்து பணம், செல்போனை பறி முதல் செய்தனர்.
- திருவெண்ணைநல்லூர் அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- ஊராட்சி செயலராக கணேசமூர்த்தி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெண்ணைவலம் ஊராட்சி செயலராக கணேசமூர்த்தி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவரால் ஊர் மக்களுக்கு நல்லது நடைபெறவில்லை எனக் கூறியும் இவரை மாற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து இன்று காலை10 மணிக்கு கடலூர்- சித்தூர் சாலையில் ஊராட்சி மன்ற துைணத் தலைவர், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி திருவெண்ைண நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபால கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஊராட்சி செயலாளரை உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.







