திருப்பாதிரிப்புலியூரில் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் திருட்டு

அதிர்ச்சிடைந்த அருண்குமார் காரை தேடியும் கிடைக்கவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பாதிரிப்புலியூரில் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் திருட்டு
Published on

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அப்பர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். (வயது 40). இவர் தனது வீட்டு முன்பு காரை நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த அருண்குமார் காரை தேடினார். இருந்த போதும் கார் கிடைக்கவில்லை.

காரை மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரிய வந்தது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com