சிதம்பரத்தில் வீட்டுமனை வழங்க கோரி நரிக்குறவர் மக்கள்சப்-கலெக்டரிடம் மனு

சுமார் 35-க்கும் நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக சாலையோரம் வசித்து வருகிறோம். மேற்படி நாங்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றோம்.
 சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த நரிக்குறவர் இன மக்களை படத்தில் காணலாம்.
 சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த நரிக்குறவர் இன மக்களை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

சிதம்பரம் அருகே லால்புரம் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் வீட்டு மனை வழங்க கோரி சேகர் தலைமையில் சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.

மனுவில் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பஞ்சாயத்து உட்பட்ட பகுதியில் சுமார் 35-க்கும் நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக சாலையோரம் வசித்து வருகிறோம். எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளது. ஆனால் எங்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லை. மேற்படி நாங்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com