கடலூரில் முன்னாள் கவுன்சிலருக்கு மிரட்டல்

வண்டிப்பாளையம் ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகின்றேன். கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர்.
கடலூரில் முன்னாள் கவுன்சிலருக்கு மிரட்டல்
Published on

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்னாள் கவுன்சிலர் நக்கீரன் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வண்டிப்பாளையம் ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகின்றேன். இந்நிலையில் கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னிடம் பணம் கேட்டு கடையை உடைத்து விடுவதாக மிரட்டல் விடுத்து கடையை பூட்டி சென்றனர். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது, அவர்கள் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். எனவே கடையை தடையின்றி நடத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com