என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 192 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்கள் எடுத்து வென்றது.

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.

    கனிகா அஜா 35 ரன்னும், பெத் மூனி 33 ரன்னும் எடுத்தனர். ஜார்ஜியா வேரம் 43 ரன்னும், பார்தி புல்மாலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அமன்ஜோத் கவுர் அதிரடியாக ஆடி 26 பந்தில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    4வது விக்கெட்டுக்கு ஹர்மன்பிரீத் கவுருடன் நிகோலா கேரி இணைந்து பொறுப்புடன் ஆடி ரன்களைக் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், மும்பை அணி 19.3 ஓவரில் 193 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது. ஹர்மன்பிரீத் கவுர் 71 ரன்னும், நிகோலா கேரி 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • பஞ்சாப் அணி 345 ரன்கள் குவித்தது.
    • மத்திய பிரதேசம் 162 ரன்னில் சுருண்டு படுதோல்வி.

    விஜய் ஹசாரே டிராபியில் இன்று இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு அரையிறுதியில் (3-வது காலிறுதி) பஞ்சாப்- மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முதல் மூன்று வீரர்களான ஹர்னூர் சிங் (51), பிரப்சிம்ரன் சிங் (88), அன்மோல்ப்ரீத் சிங் (70) ஆகியோர் அரைசதம் அடித்தனர். 5-வது வீரராக களம் இறங்கிய நேஹல் வதேராவும் அரைசதம் (38 பந்தில் 56 ரன்கள்) அடிக்க பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்தது.

    பின்னர் 346 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேச அணி களம் இறங்கியது. பஞ்சாப் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மத்திய பிரதேசம் 162 ரன்னில் சுருண்டது. இதனால் 183 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. ரஜத் படிதர் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் அணி சார்பில் சன்வீர் சிங் 3 விக்கெட்டும் குர்னூர் பிரார், ராமன்தீப் சிங், கிரிஷ் பகத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    மற்றொரு காலிறுதியில் (4-வது காலிறுதி) விதர்பா- டெல்லி அணிகள் மோதின. முதலில் விளையாடிய விதர்பா 300 ரன்கள் குவித்தது தொடக்க வீரர் அதர்வா டைடு 62 ரன்கள் சேர்த்தார். 5-வது வீரராக களம் இறங்கிய யாஷ் ரதோட் 86 ரன்கள் விளாசினார். டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா, நவ்தீப் சைனி, பிரின்ஸ் யாதவ், நிதிஷ் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 301 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி, 224 ரன்னில் சுருண்டது. இதனால் விதர்பா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விதர்பா அணியின் நிச்சிகெட் 4 விக்கெட்டும், ஹர்ஷ் துபே 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஏற்கனவே சவுராஷ்டிரா, கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நாளை நடைபெறும் அரையிறுதியில் கர்நாடகா- விதர்பா அணிகளும், 16-ந்தேதி நடைபெறும் அரையிறுதியில் சவுராஷ்டிரா- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் பலியாகினர்.
    • இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற தடை விதிக்கப்பட்டது.

    பெங்களூர்:

    நடப்பு ஐபிஎல் சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மறுநாள் பெங்களூரில் வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர். இதையடுத்து பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை.

    ஓய்வு பெற்ற கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அரசுக்கு அளித்த அறிக்கையில் பெங்களூர் மைதானத்தில் ஏற்பட்ட இடநெருக்கடி தான் 11 பேர் பலியாக முக்கிய காரணம் என்று கூறினார். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற தடை விதிக்கப்பட்டது.

    இதனால் வரும் ஐபிஎல் போட்டியில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி விளையாடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் ஐபிஎல்லில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி இந்த முறை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு குறைவு என்ற தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்துக்கு பதில் ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட்டாக நவி மும்பை அல்லது ராய்ப்பூர் மாறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    ஐபிஎல் போட்டி நெருங்கி வரும் நிலையில் தற்போது வரை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் போட்டிகளை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    • டி20 உலக கோப்பையில் தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
    • இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது.

    புதுடெல்லி:

    வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் எதிரொலியாக ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக டி20 உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.

    இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து ஐ.சி.சி. இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

    இதற்கிடையே வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு ஏற்றவாறு சென்னை, திருவனந்தபுரம் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த அணி கொல்கத்தாவில் 3 போட்டியிலும், மும்பையில் ஒரு ஆட்டத்திலும் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) செயலாளர் சைகியா கூறியதாவது:-

    வங்கதேசப் போட்டிகளை சென்னைக்கோ அல்லது வேறு இடத்துக்கோ மாற்றுவது குறித்த எந்த தகவலும் பி.சி.சி.ஐ.க்கு வரவில்லை. இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இது ஐ.சி.சி. மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இடையேயான தகவல் பரிமாற்ற விஷயமாகும்.

    ஏனெனில் ஐ.சி.சி.தான் ஆளும் அமைப்பு. இடமாற்றம் குறித்த முடிவை ஐ.சி.சி. எங்களுக்குத் தெரிவித்தால், பி.சி.சி.ஐ., தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். தற்போது எங்களுக்கு அத்தகைய தகவல் எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல்போட்டி வதோதராவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு 301 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவரில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் 93 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதன்மூலம் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். விராட் 71 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். முதல் இடத்தில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் 75 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

    3 முதல் 5 இடங்கள் முறையே இலங்கை வீரர் ஜெயசூர்யா (58), தென் ஆப்பிரிக்கா வீரர் கல்லீஸ் (57) இலங்கை வீரர் சங்ககாரா (50) ஆகியோர் உள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்தப்படியாக விராட் கோலி 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி அலிசா ஹீலி.
    • இளம் வீராங்கனைகளுக்கு வழிவிட நினைப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி. இவர் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி ஆவார். இவர் ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். மெக் லானிங்கின் ஓய்வுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று அணியை வழிநடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அலிசா ஹீலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. அந்த தொடருக்குப் பிறகு ஓய்வு பெற உள்ளார். தனது போட்டித்தன்மை சற்று குறைந்துவிட்டதாக உணர்வதாலும், இளம் வீராங்கனைகளுக்கு வழிவிட நினைப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    35 வயதாகும் அலிசா மார்ச் 6 முதல் 9 வரை பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அவரது கடைசி சர்வதேச ஆட்டமாக இருக்கும்.

    தனது 15 ஆண்டுகால வாழ்க்கையில், 7,000-க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்கள் மற்றும் 275 விக்கெட் கீப்பிங் டிஸ்மிசல்களை செய்துள்ளார். மேலும், 8 உலகக் கோப்பை பட்டங்களை வென்ற அணியின் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.

    மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளில் ஒருவர். இவர் 2022 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 170 ரன்கள் குவித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது.
    • ஒரு ஆல்-ரவுண்டராக 8-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தின் விருப்பம்.

    வதோதராவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 301 ரன் இலக்கை இந்திய அணி 49 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 2 விக்கெட் வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 29 ரன்கள் விளாசி (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

    பின்னர் டெல்லியைச் சேர்ந்த 24 வயதான ஹர்ஷித் ராணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபடுவது எனது கடமையாகும். வலை பயிற்சியின் போது பேட்டிங்கிலும் கவனம் செலுத்துகிறேன். இது தன்னம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். இந்த ஆட்டத்தில் நான் பேட்டிங் செய்ய களம் கண்ட போது, லோகேஷ் ராகுல் மிகவும் உதவிகரமாக இருந்தார். அதனால் நன்றாக கவனம் செலுத்தி ரன்கள் திரட்டினேன்.

    ஒரு ஆல்-ரவுண்டராக 8-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தின் விருப்பம். அதனால் தான் வலைபயிற்சியில் என்னால் எவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமோ அதில் நான் கவனம் செலுத்துகிறேன். தேவைப்படும் போதெல்லாம் அணியின் பின்வரிசையில் என்னால் 30 முதல் 40 ரன்கள் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். என்னால் இதை செய்ய முடியும் என்று அணியும் நம்புகிறது.

    விராட் கோலி களத்தில் நின்றது வரை 5-6 ஓவர்கள் முன்கூட்டியே ஆட்டம் முடிந்து விடும் போல் தோன்றியது. ஆனால் அவர் வெளியேறியதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. கிரிக்கெட்டில் எதையும் கணிக்க முடியாது. எந்த நேரத்திலும் மாறும்.

    ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் புதிய பந்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதற்கு தடுமாறுகிறார்களா? என கேட்கிறீர்கள். நீங்கள் என்ன கிரிக்கெட்டை பார்க்கிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் கூட முகமது சிராஜ் உண்மையிலேயே அருமையாக பந்து வீசினார்.

    புதிய பந்தில் நாங்கள் அதிகமான ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்தினோம். கிரிக்கெட்டில் இது போல் நடப்பது சகஜம். ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுக்காவிட்டால், மிடில் வரிசையில் விக்கெட்டுகளை சாய்ப்போம். அதைத் தான் நாங்கள் செய்தோம். ஒரு நாள் கிரிக்கெட்டில் வெவ்வேறு கட்டங்கள் உள்ளன. ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. பெரிய அளவில் பவுன்ஸ் ஆகவில்லை.

    இவ்வாறு ஹர்ஷித் ராணா கூறினார்.

    • உ.பி. வாரியர்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
    • கிரேஸ் ஹாரிஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 5வது லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    உ.பி. வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மேக் லென்னிங் , ஹெர்லின் டியோல் களமிறங்கினர்.

    லென்னிங் 14 ரன்னிலும், டியோல் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த லிட்ச்பில்ட் 20 ரன்கள் , கிரன் 5 ரன்கள் எடுத்தனர். ஷிராவத் டக் அவுட் ஆனார்.

    பின்னர் களமிறங்கிய டெண்ட்ரா , தீப்தி சர்மாவுடன் ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்தது.

    20 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.

    144 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் கிரேஸ் ஹாரிஸ் களமிறங்கினர்.

    கிரேஸ் ஹாரிஸ் 22 பந்துகளில் அரைசதமும் 40 பந்துகளில் 85 ரன்களும் அடித்து ஷிகா பாண்டேவிடம் பந்தில் அவுட் ஆனார். மந்தனா ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் குவித்தார்.

    இறுதியில் 12.1 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது.

    • தவான் முன்னதாக 2012-ல் ஆயிஷா முகர்ஜியை மணந்தார்
    • கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் பிரிந்த இவர்களுக்கு, அக்டோபர் 2023-ல் டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனை பிப்ரவரி மாதம் திருமணம் செய்யவுள்ளார். இந்தத் திருமணம் டெல்லி-என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தனியார் நிகழ்வாக நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பல ஆண்டுகளுக்கு முன் துபாயில் சந்தித்த இவர்களுக்கு இடையே முதலில் நட்புறவு மலர்ந்து, பின்னர் காதலாக மாறியது. 2025 மே மாதம் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

    சோஃபி ஷைன், அமெரிக்காவைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான 'நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷன்'-இல் இரண்டாம் துணைத் தலைவர். மேலும், ஷிகர் தவானின் 'டா ஒன் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் தொண்டுப் பிரிவான 'ஷிகர் தவான் ஃபவுண்டேஷன்' அமைப்பின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

    தவான் முன்னதாக 2012-ல் ஆயிஷா முகர்ஜியை மணந்தார். இவர்களுக்கு சோராவர் என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் பிரிந்த இவர்களுக்கு, அக்டோபர் 2023-ல் டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். இருவரும் தங்கள் நிச்சயதார்த்தத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் அறிவித்துள்ளனர்.  

    • 18 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்திருந்தது.
    • இறுதியில் மெல்போர்ன் அணி 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது. இதில் இன்று மெல்போர்ன் ரெனெகேட்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் கான் 46 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்நிலையில் 4-வது பேட்டராக களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் ரன்களை குவிக்க தடுமாறினார். 18 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரிஸ்வானை வெளியேறுமாறு அணியின் கேப்டன் கை சைகை காட்டி அழைத்தார். இதனையடுத்து ரிஸ்வான் வெளியேறினார்.

    இறுதியில் மெல்ர்போன் அணி 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது. குறிப்பாக அவர் வெளியேறியதையடுத்து கடைசி 2 ஓவரில் அந்த 16 ரன்கள் எடுத்தது. இது தொடர்பான நெட்டிசன்கள் பாகிஸ்தான் வீரர்களை அசிங்கப்படுத்தும் செயல் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை வகிக்கிறது.
    • 2-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 300 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 306 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் 300 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் அதிக முறை 300+ ரன்களை சேசிங் செய்த அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்துள்ளது.

    இந்திய அணி இதுவரை 20 முறை 300+ ரன்களை சேசிங் செய்து யாரும் தொடமுடியாத இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து (15 முறை) அணி உள்ளது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா (14), பாகிஸ்தான் (12), இலங்கை (11), நியூசிலாந்து (11) ஆகிய அணிகள் உள்ளன.

    • விராட் கோலி போன்று கிரிக்கெட் மீதான தீராத வேட்கை கொண்ட ஒரு வீரரை நான் பார்த்ததில்லை.
    • அவரை போன்று மிகவும் கடினமாக பயிற்சி மேற்கொள்ளும் வீரர் யாரும் இல்லை.

    கேப்டவுன்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு அளித்த ஒரு பேட்டியில், 'விராட் கோலி போன்று கிரிக்கெட் மீதான தீராத வேட்கை கொண்ட ஒரு வீரரை நான் பார்த்ததில்லை. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

    வீரர்களின் ஓய்வறையில் அவரிடம் ஒரு சாம்பியன் பயிற்சியாளராக இருப்பது பற்றி அடிக்கடி (ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த சமயத்தில்) உரையாடி இருக்கிறேன்.

    அவரை போன்று மிகவும் கடினமாக பயிற்சி மேற்கொள்ளும் வீரர் யாரும் இல்லை. அவர் ஒரு எந்திரம் போன்றவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஆட்டத்தை நான் தவற விடுகிறேன்.

    டெஸ்டில் இருந்து அவர் சீக்கிரமாக ஓய்வு பெற்று விட்டதாக நினைக்கிறேன். அதே சமயம் அடுத்த ஆண்டு நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி களத்தில் நாம் அவரை பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை' என்றார்.

    ×