என் மலர்
நீங்கள் தேடியது "ஆலன் டொனால்டு"
- விராட் கோலி போன்று கிரிக்கெட் மீதான தீராத வேட்கை கொண்ட ஒரு வீரரை நான் பார்த்ததில்லை.
- அவரை போன்று மிகவும் கடினமாக பயிற்சி மேற்கொள்ளும் வீரர் யாரும் இல்லை.
கேப்டவுன்:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு அளித்த ஒரு பேட்டியில், 'விராட் கோலி போன்று கிரிக்கெட் மீதான தீராத வேட்கை கொண்ட ஒரு வீரரை நான் பார்த்ததில்லை. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.
வீரர்களின் ஓய்வறையில் அவரிடம் ஒரு சாம்பியன் பயிற்சியாளராக இருப்பது பற்றி அடிக்கடி (ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த சமயத்தில்) உரையாடி இருக்கிறேன்.
அவரை போன்று மிகவும் கடினமாக பயிற்சி மேற்கொள்ளும் வீரர் யாரும் இல்லை. அவர் ஒரு எந்திரம் போன்றவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஆட்டத்தை நான் தவற விடுகிறேன்.
டெஸ்டில் இருந்து அவர் சீக்கிரமாக ஓய்வு பெற்று விட்டதாக நினைக்கிறேன். அதே சமயம் அடுத்த ஆண்டு நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி களத்தில் நாம் அவரை பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை' என்றார்.
- இந்திய வீரர்கள் விளையாடினால் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடர் மிகவும் பிரபலமடைந்துவிடும்.
- ஒரு அணிக்கு இரண்டு இந்திய வீரர்கள் விளையாடினாலே இந்த தொடர் மிகவும் பிரபலமாகிவிடும்.
கேப்டவுன்:
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3-வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 8-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் இந்தியாவின் விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் கலந்து கொள்வதை பார்க்க விரும்புவதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
எந்த இந்திய வீரர் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் எனக் கூறுவதில் எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. பேட்ஸ்மேன் என எடுத்துக் கொண்டால், விராட் கோலி தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில், 100 சதவிகிதம் பும்ரா விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.
இந்திய வீரர்கள் பலரும் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடத் தொடங்கினால், இந்த தொடர் மிகவும் பிரபலமடைந்துவிடும். ஒரு அணிக்கு இரண்டு இந்திய வீரர்கள் விளையாடினாலே இந்த தொடர் மிகவும் பிரபலமாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.






