என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.
    • 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு தற்போது ரூ.1,800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அங்குள்ள பரத்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹூமாயூன் கபீர். இவர் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.

    இதைதொடர்ந்து அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'சஸ்பெண்டு' செய்தது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.

    இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தவாறு ஹூமாயின் கபீர் மேற்குவங்காளத்தில் பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இந்நிலையில் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய கேசவ் பிரசாத் மௌரியா, "மசூதி கட்டுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும், பாபரின் பெயரில் யாராவது மசூதி கட்டினால், அதை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அது உடனடியாக இடிக்கப்படுவதை உறுதி செய்வோம்" என்று மிரட்டல் விடுத்தார்.

    முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து அமைப்பினரால் 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு தற்போது ரூ.1,800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
    • லடாக்கில் உள்ள தர்புக்-ஷியோக்-தௌலத் பேக் ஓல்டி சாலையில் உள்ள KM-120 போஸ்டுக்கு அருகில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.

    இந்நிலையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஒரு போர் நினைவுச்சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

    இது உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள போர் நினைவுச்சின்னம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

    உலகின் மிகக் கடினமான பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை, குறைந்த ஆக்ஸிஜன் அளவு கொண்ட இயற்கை சூழலில் அமைந்துள்ள இராணுவப் மண்டலங்களில் ஒன்றான லடாக்கில் உள்ள தர்புக்-ஷியோக்-தௌலத் பேக் ஓல்டி சாலையில் உள்ள KM-120 போஸ்டுக்கு அருகில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.

    தியாகம் மற்றும் வீரத்தை குறிக்கும் வகையில் சிவப்பு மற்றும் வெள்ளை கிரானைட்டால் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம்  திரிசூலம் வடிவத்தில் உள்ளது.

    நினைவுச்சின்னத்தைச் சுற்றி, கால்வான் பள்ளத்தாக்கின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களைக் குறிக்கும் 20 வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

    இந்த போர் நினைவு வளாகத்தில் கல்வான் மோதல், லடாக்கின் இராணுவ வரலாறு அகியவற்றை காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் மற்றும் டிஜிட்டல் கேலரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 

    • இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது.
    • முன்னா கானின் மகன் ஷஹாத் (17) படுகாயமடைந்தார்.

    உத்தர பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள உமை ஆசாத்நகர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

    இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது துப்பாக்கி வெடித்தது.இதில் அசாதுதீனின் மகன் சுஹைல் (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னா கானின் மகன் ஷஹாத் (17) படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

    துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடும் போது இந்த சம்பவம் நடந்ததாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த கூடுதல் எஸ்பி ஸ்வேதாம்ப பாண்டே தெரிவித்தார். ஆனால் சரியான காரணம் மற்றும் யார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது விசாரணைக்குப் பிறகுதான் உறுதிப்படுத்தப்பட முடியும் என்றார். 

    • நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.
    • லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் நிதிஷ் குமார் இடம்பிடித்து உள்ளார்.

    நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார். கடந்த 2005 இல் 20 வருடங்களாக அவர் அந்த பதவியில் நீடித்து வருகிறார்.

    இந்நிலையில் லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் நிதிஷ் குமார் இடம்பிடித்து உள்ளார்.

    சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ் குமார பெயர் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார் என ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

    நிதிஷ் குமார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவாக அல்லாமல் எம்எல்சியாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.
    • தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.

    பக்தர்கள் வருகையை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள மரங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு அவ்வாறு அலங்காரம் செய்யப்பட்ட ஆலமரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து சிதறி ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.

    தகவலறிந்து  தீயணைப்பு வீரர்கள் மற்றும் சன்னிதான தீயணைப்பு படை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை பரவ விடாமல் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். இந்த சம்பவத்தால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் எனக்கூறி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 3 வழக்கு.
    • சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி இருந்தார்கள்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதானசவுதா முன்பு பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது.

    இதில், கலந்துகொள்ள ஆர்.சி.பி. ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி இருந்தார்கள். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்திற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் எனக்கூறி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவாகின.

    இந்த விவகாரத்தில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார். ஆனால் அரசின் அலட்சியமே 11 பேர் சாவுக்கு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்," ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம். சின்னசாமி மைதானத்தின் பெயரைப் பாதுகாப்போம், மாற்றாக ஒரு புதிய கிரிக்கெட் மைதானத்தையும் கட்டுவோம்" என்றார்.

    • உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்து செய்தது.
    • பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டது.

    இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 4 நாட்களாக விமான சேவைகளை நிறைவேற்றுவதில் சொதப்பி வருகிறது. மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வருகிறது.

    உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்துசெய்தது. சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.

    இதைதொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமான கட்டணம் தானாகவே திருப்பிச் செலுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது.

    டிசம்பர் 5 முதல் 15ம் தேதி வரை பயணிகள் டிக்கெட் ரத்து செய்தல் அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டது.

    இந்நிலையில், இண்டிகோ விமான சேவைகள் வரும் டிச.10ம் தேதிக்குள் வழக்கம்போல இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    சேவைகள் முழுமையாக சரியாக 2026 பிப்.10 வரை ஆகும் என முன்னர் தெரிவித்திருந்த நிலையில், விரைவில் சரியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் சுமார் 650 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஹூமாயூன் கபீரரை ‘சஸ்பெண்டு’ செய்தது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அங்குள்ள பரத்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹூமாயூன் கபீர். இவர் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.

    இதைதொடர்ந்து அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'சஸ்பெண்டு' செய்தது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.

    இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தவாறு ஹூமாயின் கபீர் மேற்குவங்காளத்தில் பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டுவது அரசியலமைப்புக்கு முரணானது எதுவும் இல்லை. வழிபாட்டு தலத்தை கட்டுவது அரசியலமைப்பு உரிமை. பாபர் மசூதி கட்டப்படும்.

    33 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் இதயங்களில் ஒரு ஆழமான காயம் ஏற்பட்டது. தற்போது அந்த காயத்துக்கு ஒரு சிறிய தைலம் பூசுகிறோம்.

    பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டப்போவதாக அறிவித்த போது எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. இந்த நாட்டில் 40 கோடி முஸ்லிம்களும், மேற்கு வங்காளத்தில் 4 கோடி முஸ்லிம்களும் உள்ளனர். இங்கே ஒரு மசூதியை கட்ட முடியாதா? பாபர் மசூதி எனது திட்டம் மட்டுமல்ல. மாநில நிர்வாகமும், திரிணாமுல் காங்கிரசும் இதில் ஈடுபட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாட்னாவின் முக்கிய பகுதியான மொகாமாவில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிலம் 99 ஆண்டுகளுக்கு ரூ. 1 என்ற குத்தகை வாடகையுடன் வழங்கப்பட்டுள்ளது.
    • பீகார் மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநருடன், திருப்பதி தேவஸ்தான குழு விரைவில் பேச்சுவார்த்தை

    பீகாரின் தலைநகரான பாட்னாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் (ஏழுமலையான் கோயில்) கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது அம்மாநில அரசு. பீகார் தலைமைச் செயலாளர் பிரத்யா அம்ரித், திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில், இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

    பாட்னாவில் முக்கிய பகுதியான மொகாமா பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிலம் 99 ஆண்டுகளுக்கு ரூ. 1 என்ற குத்தகை வாடகையுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் என். லோகேஷ் ஆகியோர் அன்புடன் வரவேற்றுள்ளனர். பாட்னாவில் ஏழுமலையான் கோயில் கட்ட ஒப்புக்கொண்டதற்கு தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு மகிழ்ச்சி தெரிவித்தார்.

    இந்த நடவடிக்கை பீகார் அரசின் கலாச்சார உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றார். மேலும் கோயில் கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிடவும், செயல்படுத்தவும் பீகார் மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநருடன், திருப்பதி தேவஸ்தான குழு விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும் தெரிவித்தார்.  

    • உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
    • சிலிண்டர் வெடித்ததில் 10-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதமாயின.

    கோவா:

    கோவா அர்போரா கடற்கரையில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் சிலிண்டர் வெடித்ததில் 10-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதமாயின.

    இந்த நிலையில், கோவா தீவிபத்து குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவா அர்போராவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல், ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தீவிபத்து குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்திடம் கேட்டறிந்தேன். காயமடைந்தோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். 

    • இரவு உணவில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவு.
    • சில நேரங்களில் கிலோ ரூ. 50,000 ஐ கூட தாண்டும்.

    இந்தியாவிற்கு வருகை தந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமாண்டமான இரவு உணவு விருந்து அளித்தார்.

    இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் இரு நாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு உணவில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவு. இந்த மெனுவில் சிறப்பு ஈர்ப்பாக காஷ்மீர் உணவான 'குச்சி தூன் செடின்' இருந்தது.

    இது மிகவும் விலையுயர்ந்த 'Gucci ' காளான்களால் தயாரிக்கப்படுகிறது. சந்தையில் அவற்றின் விலை ஒரு கிலோவுக்கு சுமார் ரூ. 35,000 முதல் ரூ. 40,000 வரை உள்ளது.

    குச்சி காளான்கள் மிகவும் அரிதானவை என்பதால் இந்த விலை. அவை ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இமயமலைப் பகுதிகளில் மட்டுமே வளரும்.

    பனி உருகிய பிறகு, தனித்துவமான மண் மற்றும் வெப்பநிலை நிலைகளில் வசந்த காலத்தில் மட்டுமே அவை இயற்கையாக வளரும். சில நேரங்களில் காட்டுத் தீக்குப் பிறகும் அவை முளைக்கின்றன.

    இந்த காளான்களை சேகரிப்பதும் மிகவும் கடினமான பணியாகும். உள்ளூர்வாசிகள் மலைகளின் கரடுமுரடான நிலப்பரப்பில் பல வாரங்கள் பயணித்து அவற்றை சேகரிப்பர். சில நேரங்களில் கிலோ ரூ. 50,000 ஐ கூட தாண்டும்.

    குச்சி புலாவ், யக்னி மற்றும் ரோகன் ஜோஷ் போன்ற பாரம்பரிய காஷ்மீரி உணவுகளைத் தயாரிக்கவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.   

    • SIR படிவத்தில் போது தவறான தகவல்களை வழங்கியதற்காக நாட்டிலேயே முதல் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • BNS சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31 இன் கீழ் FIR பதிவு செய்துள்ளனர்.

    பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு மேற்குவங்கம், கேரளா, உத்தரப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் SIR படிவங்களில் தவறான தகவல்களை வழங்கியதற்காக உத்தரபிரதேச காவல்துறை நூர்ஜகான் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

    ராம்பூரில் வசிக்கும் நூர்ஜஹான் உடைய இரண்டு மகன்கள் ஆமிர் கான் மற்றும் டேனிஷ் கான் ஆகியோர் நீண்ட காலமாக துபாய் மற்றும் குவைத்தில் வசித்து வருகின்றனர்.

    ஆனால் SIR படிவத்தில் நூர்ஜஹான் தனது மகன்கள் ராம்பூரில் வசிப்பதாக குறிப்பிட்டு போலி கையொப்பங்களுடன் கூடிய ஆவணங்களை பூத்-லெவல் அதிகாரியிடம் சமர்ப்பித்திருந்தது கண்டறியப்பட்டது.

    SIR படிவத்தை டிஜிட்டல் முறைக்கு பதிவேற்றம் செய்யும்போது நூர்ஜஹான் அளித்த தகவல் தவறானது என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். அவர் தனது மகன்களின் கையொப்பங்களை போலியாக இட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

    இந்த சூழலில், ராம்பூர் தேர்தல் மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் நூர்ஜஹான் மீது போலீசார் BNS சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31 இன் கீழ் FIR பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் SIR படிவத்தில் போது தவறான தகவல்களை வழங்கியதற்காக நாட்டிலேயே முதல் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×