என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இந்த போனின் அறிமுக நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு மோட்டோ யூடியூப் சேனலிலில் ஒளிபரப்பப்படும்.
    மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

    இந்த போனில் 6.7-inch FHD+ AMOLED டிஸ்பிளே 144Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் HDR10+ சப்போர்ட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் Qualcomm Snapdragon 8 Gen 1 SoC பிராசஸருடன், 8 ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128 ஜிபி யூ.எஃப்.எஸ் 3.1 மெமரியுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த போனில் பின்பக்கம் மூன்று கேமராக்கள் வழங்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. 50 மெகா பிக்ஸல் OmniVision OV50A40 பிரைமரி சென்சார், 50 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார், செஃல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 60 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 5000 mAh பேட்டரி, 68W அதிவேக சார்ஜிங், வைஃபை 6இ உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுவதாக கூறப்பட்டிருக்கும் இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.50,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த போனின் அறிமுக நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு மோட்டோ யூடியூப் சேனலிலில் ஒளிபரப்பப்படும்.
    இந்த டி-சர்ட்டுகள் ரூ.699 விலையில் எம்.ஐ இணையதளத்தில் கிடைக்கின்றன.
    ஜியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வைரஸ் எதிர்ப்பு டி-சர்ட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த டி-சர்ட்டுகளுக்கு ஜியோமி ஃபெர்பாமன்ஸ் டி சர்ட் என பெயரிடப்பட்டுள்ளது.

    ஆன்டி- மைக்ரோபியல் துணியால் செய்யப்பட்டுள்ள இந்த டி-சர்ட் வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளை அண்டவிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டி- சர்ட் புற ஊதா கதிர்களை தடுக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது.

    இந்த ஆன்டி- மைக்ரோபியல் டி-சர்ட்டை ஒருமுறைக்கு மேல் கழுவினாலும் இதன் ஆற்றல் குறையாது. டி-சர்ட்டின் உள்ளேயும் வெளியேயும் 2 டிகிரி வெப்பநிலை வேறுபாடு இருக்கும். இதனால் இந்த டி-சர்ட்டை அணிந்து வெளியில் விளையாடுவது பாதுகாப்பானது என கூறப்பட்டுள்ளது.

    ஜியோமி ஃபெர்பாமன்ஸ் டி சர்ட்

    கொரோனா காலக்கட்டத்தில் இந்த டி-ஷர்ட்டுகள் மக்களை பாதுகாக்க உதவும் என ஜியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த டி-சர்ட்டுகள் 4 அளவுகளில் வருகின்றன. இதன் உண்மை விலை ரூ.1,499 என்றும், சலுகை விலையில் ரூ.699-க்கு கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த டி-சர்ட்டுகளை மக்கள் எம்.ஐ இணையதளம் மூலம் ஆர்டர் செய்யலாம். 

    2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் பயனர்கள் செலவிடும் நேரத்தை கணக்கிட்டு கட்டுப்படுத்துவதற்காக ‘டெய்லி லிமிட்’ என்ற அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.
    உலக அளவில் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. 

    இது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதற்காக பயன்படுத்தப்படும் செயலி என்பதால் பிற சமூக வலைதளங்களை விட அதிகம் பயனர்களை ஈர்க்கிறது. இதனால் பலரும் இன்ஸ்டாகிராம் செயலிக்கு அடிமையாகி அத்தளத்தில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் 2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் பயனர்கள் செலவிடும் நேரத்தை கணக்கிட்டு கட்டுப்படுத்துவதற்காக ‘டெய்லி லிமிட்’ என்ற அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.

    இன்ஸ்டாகிராம் டெய்லி லிமிட் அம்சம்

    இதில் சென்று பயனர்கள் தங்களுக்கான செலவிடும் நேரத்தை தேர்வு செய்துகொள்ளலாம். அந்த நேரத்தை பயனர்கள் எட்டியவுடன் தானாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.

    குறைந்தது 10 நிமிடத்தில் இருந்து இந்த ‘டெய்லி லிமிட்’ நேரத்தை தேர்வு செய்யலாம் இருந்த நிலையில், தற்போது குறைந்தபட்ச நேரம் 30 நிமிடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    இனி இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களுக்கான டெய்லி லிமிட் நேரத்தை 30 நிமிடங்கள், 45 நிமிடங்கள், ஒரு மணி நேரம், 2 மணி நேரம், 3 மணி நேரம் என வைத்துக்கொள்ளலாம்.
    இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் மூலம் நாம் கேம் உலகை நிஜ உலகு போல துல்லியமாக உணர முடியும்.
    சோனி நிறுவனம் புதிய பிளே ஸ்டேஷன் 5-க்கான வி.ஆர் 2 சாதனத்தின் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளது. இதில் வி.ஆர் 2 ஹெட்செட் மற்றும் வி.ஆர்.2 கேமிங் கண்ட்ரோலர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    இதுகுறித்து அந்நிறுவனம் கூறியதாவது:

    பிளே ஸ்டேஷன் வி.ஆர்-ன் ஹெட்செட் அதிக எடை இல்லாமல் சரியான கனத்தை கொண்டிருந்தது. அதில் வழங்கப்பட்டுள்ள ஹெட்பேன்ட் நாம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் இருந்தது. அதனால் மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது. அதே வகையில் வி.ஆர் 2-ன் ஹெட்செட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பிளே ஸ்டேஷன் வி.ஆர் 2

    இதில் வழங்கப்பட்டுள்ள ஸ்கோப் டிஸ்பிளேவை நம் முகத்தில் இருந்து விரும்பிய தூரத்தில் வைத்துகொள்ள உதவும். அதேபோன்று இதில் தரப்பட்டுள்ள ஸ்டீரியோ ஹெட்போன்களும் சிறந்த அனுபவத்தை தரும்.  ஹெட்செட்டின் லென்ஸ்களில் காற்றோட்டம் இருக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. 

    இந்த சாதனம் OLED டிஸ்பிளே, 4 கே ஹெச்.டி.ஆர் ரெஷலியூஷன் கொண்டு, 110 டிகிரி ஃபீல்ட் ஆப் வியூவில் வரும். பயனர்கள் 120Hz ஃப்ரேம் ரேட்டில், ஒவ்வொரு கண்ணுக்கும் 2000×2040 டிஸ்பிளே ரெஷலியூஷனை பெறுவர். 

    இதன் ஹெட் செட் பயனர்களின் கண்களை ட்ராக் செய்யும் டெக்னாலஜியுடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேம் உலகு மற்றும் கதாபாத்திரங்களை நிஜ உலகை போன்றே துல்லியமாக உணர முடியும்.

    இவ்வாறு சோனி தெரிவித்துள்ளது.

    இந்த பிளே ஸ்டேஷன் வி.ஆர் 2-ன் விலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
    ஐபோன் 13 மாடல்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டாலும், ஐபோன் 13 மினிக்கு விலை குறைப்பு செய்யப்படவில்லை.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு இந்தியாவில் இன்று விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு அமேசான் தளத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13-ன் பேஸ் மாடல் ரூ.79,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.5000 விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.74,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோன்று ஐபோன் 13-ன் 256 ஜிபி வேரியண்டின் விலையும் ரூ. 89,900-ல் இருந்து ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.84,900-க்கும், 512 ஜிபி வேரியண்டின் விலை ரூ.1,09,900-ல் இருந்து விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.1,04,900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஐபோன் 13 போன்

    இது தவிர ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி ஐபோனை வாங்குபவர்களுக்கு ரூ.6,000 உடனடி கேஷ்பேக் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

    ஐபோன் 13 மாடல்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டாலும், ஐபோன் 13 மினிக்கு விலை குறைப்பு செய்யப்படவில்லை. மேலும் இந்த விலை குறைப்பு எத்தனை நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படவில்லை.
    பிற நிறுவனங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை மட்டுமே இலவசமாக வழங்கும் நிலையில் ஜியோ பிரீமியம் சந்தாவை இலவசமாக வழங்குகிறது.
    ஜியோ நிறுவனம் 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1499 மதிப்புள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    இதன்படி ஜியோவின் ரூ.1499 புதிய திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 மெசேஜ்கள், ஜியோ செயலிகளுக்கான இலவச சந்தாக்கள் 84 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவும் 84 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியத்தை தனியாக வாங்கினாலே ரூ.1,499 வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம்

    இதேபோன்று மற்றொரு ரீசார்ஜ் திட்டமான ரூ.4199-ல் தினசரி 4ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்.கள், அனைத்து ஜியோ செயலிகளுக்குமான சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படும். இத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவும் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் ஒரு 365 நாட்களுக்கு வழங்கப்படும்.

    ஜியோ நிறுவனம் மட்டுமே டிஸ்னி+ ஹாட்ஸ் ஸ்டார் பிரீமியம் சந்தாவை தனது ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இலவசமாக வழங்குகிறது. பிற நிறுவனங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை மட்டுமே மட்டுமே வழங்குகின்றன. 
    இந்த புதிய போன்கள் மார்ச் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    ஜியோமி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ+ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த டீசர் ஒன்றை  ஜியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியான தகவலின்படி, ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி போன் 6.67 FHD+ AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனில் 16 எம்பி முன்பக்க கேமரா சென்சார், பின்புறத்தில் மூன்று கேமராக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    இதில் 108 எம்.பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் இடம்பெறலாம் என்றும், இந்த போனில் ஸ்னேப்டிராகன் 695 சிப்செட், 8ஜிபி LPDDR4X ரேம், UFS 2.2 இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட 128 ஜிபி மெமரி தரப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த போனில் 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் தரப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 11 ப்ரோ போனை பொறுத்தவரை, 6.67 FHD+ AMOLED டிஸ்பிளே 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படலாம், ஆனால் இந்த போன் MediaTek Helio G96 chipset-ல் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை பின்பக்கம் 108 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி சென்சார் கொண்ட 2 கேமராக்கள் என 4 கேமராக்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த இரு போன்களும் மார்ச் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    சமீபத்தில் ஃபேஸ்புக் பயனர்கள் பலர் டிக்டாக்கில் இணைந்தனர். அவர்களை மீண்டும் பெறுவதற்கு ஃபேஸ்புக் முயற்சி செய்து வருகிறது.
    மெட்டா நிறுவனம் இன்று முதல் ஃபேஸ்புக் ரீல்ஸ் சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த ரீல்ஸ் சேவை இன்று முதல் பேஸ்புக் செயலியிலும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 150 நாடுகளில் இந்த பேஸ்புக் ரீல்ஸ் சேவை அறிமுகமாகியுள்ளது. 

    இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், ரீல்ஸ் வகை வீடியோக்கள் இன்று உலகம் முழுவதும் பெரும் வளர்ச்சியை கண்டு வருகின்றன. இதையடுத்து இன்று முதல் ரீல்ஸ் சேவை பேஸ்புக்கிலும் கிடைக்கும் என கூறினார்.

    மெட்டா நிறுவனம் ரீல்ஸ் வீடியோவை உருவாக்குபவர்களுக்காக புதிய எடிட்டிங் சேவையையும் வழங்குகிறது. இதில் ரீமிக்ஸ், டிராஃப்ட், வீடியோ கிளிப்பிங் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். 

    இதுகுறித்து பேஸ்புக் கூறுகையில், இந்த ரீமிக்ஸ் அம்சத்தின் மூலம் பயனர்கள் புதிய ரீல்ஸ் வீடியோக்களையும் உருவாக்கலாம், அதேசமயம் ஏற்கனவே பகிரப்பட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் எடிட் செய்யலாம். டிராப்ட் அம்சத்தில் ரீல் வீடியோக்களை பயனர்கள் சேகரித்து வைக்கலாம். வீடியோ கிளிப்பிங் அம்சத்தில் நீளமான வீடியோக்களை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் 60 நொடிகளுக்கு ரீல் வீடியோக்களை உருவாக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.  பேஸ்புக்கில் ஸ்டோரிஸ், வாட்ச், நியூஸ் ஃபீட் ஆகிய இடங்களில் ரீல்ஸ் சேவை காண கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிக்டாக் பேஸ்புக்


    இது தவிர மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் ரீல் வீடியோ உருவாக்குபவர்களுக்கு மானிடைசேஷன் அம்சத்தையும் வழங்கியுள்ளது. இதன்மூலம் ரீல்ஸ் வீடியோ உருவாக்குபவர்கள் வருமானமும் பெறலாம்.

    தகுதியான நாடுகளில் இருந்து வரும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு சிறப்பு தொகை வழங்குவதற்காக ரூ.26 லட்சம் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரீல்ஸ் மூலம் பல்வேறு வகையில் விளம்பரம் செய்யும் செயல்பாட்டையும் பேஸ்புக் சோதனை செய்து வருகிறது.

    இந்த ரீல்ஸ் சேவையை ஃபேஸ்புக் அறிமுகம் செய்வதற்கு காரணம் அதன் தினசரி பயனர்கள் சமீபத்தில் குறைந்ததே என கூறப்படுகிறது. பேஸ்புக்கிற்கு கடும் போட்டியாக டிக்டாக் நிறுவனம் நிலவி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் டிக்டாக் அதீத வளர்ச்சியை சந்தித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயனர்கள் டிக்டாக்கில் இணைந்து வருகின்றனர். 

    இதனால் டிக்டாக் போலவே உள்ள ரீல்ஸ் சேவையை பேஸ்புக்கிலும் அறிமுகம் செய்வதற்கான சூழ்நிலையில் அந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தான் இழந்த பயனர்களை மீண்டும் பெறலாம் என பேஸ்புக் நம்பி வருகிறது.
    கடந்த வாரம் வெளியான ரியல்மி 9 ப்ரோ 5ஜி போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
    ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

    ரியல்மி 9 ப்ரோ 5ஜி போனில் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி+ எல்.சி.டி பேனல், 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் அமைந்துள்ளது. மேலும் இந்த போனில் octa-core Qualcomm Snapdragon 695 SoC, Adreno 619 GPU பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த போன் ஆண்ட்ராய்டு 12, ரியல்மி யு.ஐ. 3.0 இயங்குதளத்தில் இயங்குகிறது.

    கேமராவை பொறுத்தவரை 3 பின்புற கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் f1.79 அபார்சர் லென்ஸ் கொண்ட 64 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸல் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகா பிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் லென்ஸ் ஆகியவை அமைந்துள்ளன.

    செல்ஃபி மற்றும் வீடியோ சாட்டுகளுக்கு 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா முன்பகுதியில் அமைந்துள்ளது.

    ரியல்மி 9 ப்ரோ

    மேலும் இந்த போனில் 5.2 ப்ளுடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், டைப் சி யூ.எஸ்.பி, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜேக், பக்கவாட்டில் அமைந்துள்ள கைரேகை சென்சார், 5000mAh பேட்டரி, 33W டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த போனின் 6ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.17,999-ஆகவும், 8ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.20,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய அறிமுக சலுகையாக ஹெச்.டி.எப்.சி கார்ட் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.2000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    ஃபிளிப்கார்டில் இன்று நடைபெறும் எலக்ட்ரானிக்ஸ் டே விற்பனையில் இந்த சிறப்பு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
    ஃபிளிப்கார்ட்டின் எலக்ட்ரானிக்ஸ் டே விற்பனை இன்று நடைபெறுகிறது. இதில் தாம்ஸன் மற்றும் ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் தாம்ஸன் வாஷிங் மெஷின்களுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி ப்ளூபங்க்ட்  ஸ்மார்ட் டிவிகளுக்கு ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 32 இன்ச் ப்ளூபங்க்ட்  சைபர் சவுண்ட் ஸ்மார்ட் டிவிக்கு ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கும், ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 42 இன்ச் ஸ்மார்ட் டிவி ஃப்ள் ஹெச்.டி டிஸ்ப்ளே, 40W ஸ்பீக்கர்கள் உள்ள டிவி ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.19,999-க்கும், 43 இன்ச் ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவி ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.27,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தாம்ஸன் ஸ்மார்ட் டிவி மற்றும் வாஷிங் மெஷின்

    இன்றைய எலக்ட்ரானிக் டே விற்பனையில் ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவிக்களை ஐசிஐசிஐ கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உண்டு.

    இதேபோல தாம்ஸன் ஸ்மார்ட் டிவிகள் ரூ.5000 வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளன. தாம்ஸனின் பாத், ஓத் ப்ரோ, ஓத் ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட டிவிகளுக்கு தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தாம்ஸன் டிவிகளின் விலை ரூ.8,499-ல் இருந்து தொடங்குகிறது.

    தாம்ஸனின் செமி மற்றும் ஃபுள்ளி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்களுக்கு ரூ.1,500 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

    தாம்ஸன் வாஷிங் மெஷனின்களின் விலை ரூ.5,490-ல் இருந்து தொடங்குகிறது.
    இந்த லேப்டாப் சீனாவில் வெளியான ரியல்மி புக் மேம்படுத்தப்பட்ட வடிவத்தின் புதிய டிசைனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் புதிய லேப்டாப்பை வரும் ஏப்ரம் மாதம் வெளியிடவுள்ளது. இந்த லேப்டாப்பிற்கு ’புக் பிரைம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய லேப்டாப் சீனாவில் ஜனவரியில் வெளியான ரியல்மி புக் மேம்படுத்தப்பட்ட வடிவத்தின் புதிய டிசைனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த லேப்டாப்பில் 11th Gen Intel Core H-series பிராசஸர் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும் என்றும், இந்த லேப்டாப்பின் விலை சராசரியாக இந்திய மதிப்பில் ரூ.55,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரியல்மி புக் பிரைம்

    ரியல்மி புக் மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் 16 ஜிபி LPDDR4x dual-channel ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருந்தது. மேலும் 2கே ரெஷலியூஷன் கொண்ட 14 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே, 100 சதவித sRGB colour gamut, 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோவை கொண்டிருந்தது. 

    இதில் 11th Gen Intel Core i5-11320H processor, இன்டெல் ஷார்ப் எக்ஸ் கிராபிக்ஸ் வழங்கப்பட்டிருந்தது.  இந்த லேப்டாப்பில் விண்டோஸ் 11 ஓ.எஸ், 54Whr பேட்டரி, 65W அதிவேக சார்ஜிங் டெக்னாலஜி ஆகியவை வழங்கப்பட்டிருந்தது.

    இந்த லேப்டாப்பில் உள்ள வேபர் சேம்பர் கூலிங் அமைப்பு, டிடிஎஸ் ஆடியோஒ தொழில்நுட்பம், டூயல் மைக்குகள், 720 ஹெச்.டி வெப் கேம், பேக்லிட் கீபோர்ட், ஃபிங்கர் பிரிண்ட் பட்டன் ஆகியவை வழங்கப்பட்டிருந்தது.

    இதே அம்சங்கள் தான் புதிய ரியல்மி புக் பிரைமில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த இயர்போன் 2020-ம் ஆண்டு வெளியான புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z-க்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z2 இயர்போன்ஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெக்பேண்ட் ஸ்டைலில் வெளியாகும் இந்த இயர்போன் 2020-ம் ஆண்டு வெளியான புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z-க்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

    அடுத்த மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த புல்லட் இயர்போன் குறித்த பிற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. 

    இதில் ப்ளூடூத் v5.0 கனெக்டிவிட்டி அம்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z இயர்போனின் விலை இந்தியாவில் ரூ.1,999-ஆக அறிமுகம் ஆன நிலையில், இந்த புதிய இயர்போனின் விலை ரூ.2,5000-க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×