என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
இந்த டேப்லெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.10,000 கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்8, கேலக்ஸி டேப் எஸ்8+ மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா ஆகிய டேப்லெட்டுகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 One UI 4-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்ஸில் இயங்கும். இதில் WQXGA (2,560x1,600 pixels) LTPS TFT டிஸ்பிளே, 276ppi பிக்ஸல் டென்சிட்டி, 120Hz ரெப்ரெஷ் ரேட் வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் 4nm octa-core SoC, Qualcomm Snapdragon 8 Gen 1 SoC பிராசஸரை கொண்டுள்ளது.
மேலும் இந்த டேப்லெட்டின் பின்புறத்தில் 13 எம்.பி ஆட்டோ போகஸ் கேமரா, 6 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, முன்புறத்தில் 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளன. இதில் 11,200 mAh பேட்டரி, 45W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி தரப்பட்டுள்ளன. இந்த டேப் கிராபைட் கலர் வேரியண்டில் மட்டும் வருகிறது.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த டேப்பின் வைஃபை மாடல் ரூ.58,999-ஆகவும், 5ஜி வேரியண்டின் விலை ரூ.70,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ டேப்லெட்டில் 12.4-inch WQXGA+ (2,800x1,752 pixels) Super AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது 266ppi பிக்ஸல் டென்சிட்டி 120Hz ரெப்ரெஷ் ரேட் வரை வழங்குகிறது. இதில் Qualcomm Snapdragon 8 Gen 1 SoC பிராசஸர் தரப்பட்டுள்ளது.
இந்த டேப்லெட்டிலும் 13 எம்.பி ஆட்டோ போகஸ் மற்றும் 6 எம்பி அல்ட்ரா வைட் கேமராக்கள் பின்புறத்திலும், முன்புறத்தில் 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளன.
இதில் 10,090mAh பேட்டரி, சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 சப்போர்ட் (45W வரை), டிஸ்பிளேக்கு கீழ் பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்டவை தரப்பட்டுள்ளன.
இந்த டேப்லெட் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது. இதன் வைஃபை மாடல் ரூ.74,999-ஆகவும், 5ஜி மாடல் ரூ.87,999-ஆகவும் இருக்கிறது.
எஸ்8 சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா டேப்லெட்டில் 14.6-inch WQXGA+ (2,960x1,848 pixels) Super AMOLED டிஸ்பிளே, 240ppi பிக்ஸல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட்டிலும் 13 எம்.பி ஆட்டோ போகஸ் மற்றும் 6 எம்பி அல்ட்ரா வைட் கேமராக்கள் பின்புறத்திலும், முன்புறத்தில் 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளன.
இதில் ஏ.கே.ஜியால் டியூன் செய்யப்பட்ட குவாட் ஸ்டிரியோ ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. டோல்மி அட்மோஸ் சப்போர்ட் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப் 3 மைக்ரோபோன்களை கொண்டுள்ளது. 11,200mAh பேட்டரிம், சூப்பர் பாஸ்ட் சார்ஜ் 2.0 சப்போர்ட் கொண்டுள்ள இந்த டேப்பின் வைஃபை மாடலின் விலை ரூ.1,08,999-ஆகவும், 5ஜி வேரியண்டின் விலை ரூ.1,22,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த டேப்லெட்டுகளின் முன்பதிவு வரும் நாளை முதல் மார்ச் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவற்றை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.22,999 மதிப்புள்ள கீபோர்ட் கவர் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா டேப்பை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.10000 கேஷ்பேக் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ் முன்பதிவு செய்பவர்கள் ரூ.8000 கேஷ்பேக் பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சாதனங்கள் வரும் மார்ச், மே, ஜூன் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு பல சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. அவற்றில் 4 புதிய மேக் சாதனங்களும் அறிமுகமாகவுள்ளன.
இதுகுறித்து வெளியான தகவலில், அந்நிறுவனம் 13 இன்ச் கொண்ட மேக்புக் ப்ரோ, மேக் மினி, 24 இன்ச் ஐமேக் மற்றும் ரீடிசைன் செய்யப்பட்ட மேக்புக் ஏர் உள்ளிட்ட சாதனங்ளை அறிமுகம் செய்யவுள்ளது. இவை அனைத்திலும் எம்2 சிப் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் சொந்த சிப்பை புதிய சாதனங்களில் பயன்படுத்துவது மூலம் இன்டெல் சிப் கொண்ட சாதனங்களில் இருந்து தொடர்ந்து தன்னை வேறுபடுத்தி காட்டி வருகிறது. எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட் கொண்ட ஐமேக் ப்ரோ கணினிகள் 27 இன்ச் ஐமேக் ப்ரோ மற்றும் சிறிய மேக்ப்ரோ கணினிகளால் மாற்றம் செய்யப்ப்படவுள்ளன. இந்த புதிய ஐமேக் ப்ரோவில் 2 அல்லது 4 எம்1 மேக்ஸ் சிப்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
மேக் மினி மாடல், எம்1 ப்ரோ கணினியால் மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் எம்2 சிப் கொண்ட ஆரம்ப நிலை மேக்புக் ப்ரோவையும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மாடல் நவம்பர் 2020-ல் வெளியாகி தற்போது பயன்பாட்டில் உள்ள எம்1 மாடலை மாற்றம் செய்யும் என கூறப்படுகிறது.
இந்த புதிய சாதனங்கள் வரும் மார்ச், மே, ஜூன் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் டி.சி.எஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை நாடு முழுவதும் வழங்கப்போகிறது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வரும் சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி சேவை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல்லின் நுகர்வோர் இயக்க இயக்குனர்
சுஷில் குமார் மிஸ்ரா கூறியிருப்பதாவது:-
பி.எஸ்.என்.எல் நிறுவனம் டி.எஸ்.எஸ் நிறுவனத்தை தொழில்நுட்ப பங்குதாரராக கொண்டு 4ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக 4ஜி சேவைக்கு உள்நாட்டு தொழில்நுட்பம் பயன்படவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1 லட்சம் தொலைத்தொடர்பு டவர்கள் நிறுவப்படவுள்ளன.

பீகாரில் மட்டும் 4000 டெலிகாம் டவர்கள் நிறுவப்படும். ஸ்மார்ட் ட்வர்கள்களுக்கு பதிலாக பி.எஸ்.என்.எல் மோனோபோல்களை பயன்படுத்தவுள்ளது. இது குறைந்த விலையில் அதிக பயன் தரக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறு சுஷில் குமார் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்த நிதியாண்டில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பி.எஸ்.என்.எல் மிக தாமதமாக 4ஜி சேவையை அறிமுகம் செய்கிறது. இருந்தாலும் இதன்மூலம் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது சில குறிப்பிட்ட சர்க்கிள்களில் மட்டும் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 5 வகை ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் இலவச ஓடிடி சந்தாக்கள் வழங்கப்படுகின்றன.
ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் இலவச ஓடிடி சந்தாக்களை வழங்கி வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
இதன்படி ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு மாதம் 75ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த டேட்டா முடிவடைந்த பிறகு 1 ஜிபி ரூ.10-க்குப் பெறலாம். 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் செய்துகொள்ளலாம்.
இதை தொடர்ந்து ஜியோ நிறுவனம் ரூ.599-க்கு போஸ்ட் பெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இதில் 100 ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு வழங்கப்படும். மற்றும் 200 ஜிபி டேட்டாவை ரோல் ஓவர் செய்ய முடியும். 100 ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 1 ஜிபி ரூ.10-க்கு பெறலாம்.
ஜியோ ரூ.799 ரீசார்ஜ் திட்டத்தில் மாதம் 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி ரோல் ஓவர் டேட்டா வழங்கப்படும்.

ஜியோ ரூ.999 ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 200 ஜிபி டேட்டா, 500 ஜிபி ரோல் ஓவர் டேட்டா வழங்கப்படும்.
ஜியோ ரூ.1,499 திட்டத்தில் 300 ஜிபி டேட்டா, 500 ஜிபி ரோல் ஓவர் டேட்டா வழங்கப்படும்.
மேற்கூறிய திட்டங்களுடன் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவி, மூவிஸ் உள்ளிட்டவையின் சந்தாக்கள் இலவசமாக வழங்கப்படும்.
இந்த ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியை இன்று மதியம் 12 மணிக்கு விவோ யூடியூப் சேனலில் காணலாம்.
விவோ நிறுவனம் புதிய விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனை இன்று மதியம் அறிமுகம் செய்யவுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, இந்த போனில் 6.44-inch full-HD+ (1,080x2,400 pixels) AMOLED display தரப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் MediaTek Dimensity 810 SoC பிராசஸர், 50 மெகாபிக்ஸல், 8 மெகா பிக்ஸல், 2 மெகாபிக்ஸல்களில் வைட் ஆங்கிள், அல்ட்ரா வைட் ஆங்கிள், சூப்பர் மேக்ரோ சென்சார் கொண்ட 3 கேமராக்கள் இதில் இடம்பெற்றிருக்கும்.
44 மெகாபிக்ஸல் செல்பி கேமரா, 4,050mAh பேட்டரி 44W அதிவேக சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் இதில் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் வழங்கப்பட்டிருக்கும் இந்த போனின் விலை ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000-க்குள் இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்சியை இன்று மதியம் 12 மணிக்கு விவோ யூடியூப் சேனலில் காணலாம்.
இந்த போனை ஹெச்.டி.எப்.சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு அறிமுக சலுகையாக ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி மாடலில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி+, Super AMOLED டிஸ்பிளே, 20:9 aspect ratio, 90Hz ரெப்ரெஷ் ரேட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. டிஸ்பிளேவிற்கு 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. டிஸ்பிளேயின் டச் சாம்பிளிங் ரேட் 180Hz -ஆக இருக்கிறது.
இந்த போன் octa-core MediaTek Dimensity 920 SoC, Mali-G68 MC4 GPU-ல் இயங்குகிறது.
இந்த போனில் 3 பிக்பக்க கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் சோனி IMX766 சென்சார், f/2.2 அபார்ச்சரில், 8 மெகாபிக்ஸல் சோனி IMX355 சென்சார் கொண்ட அல்ட்ரா-ஒயிட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் தரப்பட்டுள்ளன.
இந்த போனின் பிரைமரி கேமரா சென்சாரில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பம் துல்லியமாக ஒளியை உள்வாங்கும் திறன் கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள நாய்ஸ் ரெடக்ஷன் இன்ஜின் 3.0 புகைப்படங்களில் ஏற்படும் நாய்ஸ்களை குறைக்கூடியது.
முன்பக்க கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல், f/2.4 அபார்ச்சர் லென்ஸ் கொண்ட சோனி IMX471 செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் ஆக்ஸெலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப், மேக்னெட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இதில் உள்ள ஹார்ட் ரேட் சென்சார் மூலம் இதய துடிப்பை அளவிட முடியும். சாதாரணமாக நாம் இருக்கும்போது உள்ள இதய துடிப்பு, உடற்பயிற்சி, ஓய்வு, கவலை, முழு ஆற்றல், தூங்காமல் இருக்கும்போது நம் இதயதுடிப்பு எவ்வாறு இருக்கும் என்பதையும் நாம் இதில் அறிய முடியும்.
இந்த போனின் 6ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.24,999-ஆகவும், 8 ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.26,999-ஆகவும், 8ஜிபி ரேம்+256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.28,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹெச்.டி.எப்.சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்குபவர்களுக்கு அறிமுக சலுகையாக ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு பயன்தரக்கூடிய புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் குறுந்தகவல் பகிரும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இதில் தரப்பட்டுள்ள எளிமையான அம்சங்கள் வாட்ஸ்அப்பை அனைவரும் விரும்பும் வகையில் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் தவிர புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும் அனுப்ப முடியும்.
வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் புகைப்படங்கள், டேட்டாவை குறைப்பதற்காக குறைந்த தரத்திற்கு கம்பரஸ் செய்தே அனுப்பப்படும். அதிக தரம் கொண்ட புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்றால் அவற்றை டாக்குமெண்டாக அனுப்ப வேண்டும்.

அவ்வாறு டாக்குமெண்டாக அனுப்பும்போது அவற்றில் பெயர் மட்டுமே காட்டப்படும். அதை டவுன்லோட் செய்தால் மட்டுமே அது என்ன புகைப்படம் என நமக்கு தெரிய வரும். இதனை தவிர்ப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய “ப்ரிவீவ்” என்ற அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம் நாம் டாகுமெண்ட்டை அனுப்பும்போது அதன் குறைந்த தரத்திலான பிரிவீவ் படத்தையும் அனுப்பலாம். இதன்மூலம் அந்த டாக்குமெண்ட் எதை பற்றியது என்பதை தெரிந்துகொள்ளமுடியும்.
இந்த அம்சத்தை புகைப்படங்கள் மட்டுமின்றி அனைத்து டாக்குமெண்டுகளுக்கும் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப்பில் லிங்க்கை பகிரும்போதும் இந்த ப்ரிவீவ் அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு தரப்பட்டுள்ளது.
வைஃபை 6 தொழில்நுட்பமே இன்னும் பரவலாகாத நிலையில் வைஃபை 7-க்கான பரிசோதனையை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
குவால்காம் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான வைஃபை 7 பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த வைஃபை 7-ஐ கொண்டு குறைந்த லேட்டன்ஸியில் உட்சபட்ச வேகத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளது.
இதேபோன்று மீடியா டெக் நிறுவனம், முதல் சோதனை வைஃபை 7 தொழில்நுட்பத்தை அறிவித்துள்ளது. தொடக்கம் முதலே வைஃபை 7 தொழில்நுட்ப சோதனையில் ஈடுபட்டு வரும் மீடியா டெக் நிறுவனம் 2023-ம் ஆண்டு முதல் அந்த தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்தபோவதாக அறிவித்துள்ளது.
இந்த வைஃபை 7-ன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி இந்த வைஃபை 7 தொழில்நுட்பம் உட்சபட்ச வேகத்தையும், குறைந்த லேடன்சியையும், நிலையான இணைப்பையும் உறுதி செய்யும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் உள்ள வைஃபை போன்று இல்லாமல் வைஃபை 7, 2.4GHz, 5GHz மற்றும் 6GHz என மூன்று ஃப்ரீக்வன்சி பேண்டுகளை வழங்குகிறது. இதனை நாம் தண்டர்போல்ட் 3 போர்ட் வழங்கும் வேகத்துடன் ஒப்பிட முடியும்.
வைஃபை 7 தொழில்நுட்பம் 3 ஃபிரிக்வன்ஸி பேண்டுகளையும் சிறப்பாக பயன்படுத்தும். ஒரே நேரத்தில் 2 ஃபிரிக்வன்ஸிகளிலும் இயங்ககூடியது. இதன் பேண்ட்வித் 320 MHz வரை விரிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிவேக வைஃபை 7 மூலம் மெட்டாவெர்ஸ், சோசியல் கேமிங், கிளவுட் கம்ப்யூட்டிங், மெய்நிகர் அனுபவம், தொழிற்சாலைக்கான ஐ.ஓ.டி, வீடியோ ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட பல பலன்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து புதிய டிஜிட்டல் சாதனங்களை அறிமுகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ நிறுவனம் தனது முதல் டேப்லெட் சாதனத்தை வரும் பிப்ரவரி 24-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லட்டிற்கு ‘ஒப்போ பேட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒப்போ பேட் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் என கூறப்படுகிறது.
மேலும் வெளியான தகவலின்படி இந்த ஒப்போ பேடில் கலர் ஓஎஸ் 12 நிறுவப்பட்டிருக்கும். டாக், டெஸ்க்டாப் விட்ஜெட்ஸ், ஷார்ட்கட்ஸ் போன்றவையும் இந்த ஓஎஸ்ஸில் இடம்பெற்றிருக்கும்.
இந்த டேப் 11 இன்ச் அளவில் 2560x1600 பிக்சல் ரெஷலியூஷனுடன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வெளியாகவுள்ளது. இதன் டைமென்ஷன் 252x165x6.5mm-ஆக இருக்கும். மேலும் இந்த ஒப்போ பேடில் Snapdragon 870 chipset, 6 ஜிபி ரேம், 8360 mAh பேட்டரி, 33W வேகமான சார்ஜிங் ஆகிய வசதியும் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
இதன் விலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பிராட்பேண்டை விட மொபைல் இண்டர்நெட் தான் இந்தியர்கள் அதிகம் பேர் ஆன்லைனில் இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் டிஜிட்டல் சூழல் மெட்டாவெர்ஸ் மெய்நிகர் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்கிறது. இதன் மூலம் அடுத்த 10 வருடங்களில் உலகம் முழுவதும் டேட்டா பயன்பாடு 20 மடங்கு வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் பெரிதாக பயன் அடையும், பல மடங்கு லாபத்தை ஈட்டும் என கிரெடிட் சூசே எனப்படும் சர்வதேச முதலீட்டு வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது இண்டர்நெட்டில் 80 சதவீதம் டிராபிக் வீடியோக்களை நோக்கியே செல்கிறது. மேலும் வருடத்திற்கு 30 சதவீதம் வேகத்தில் இது வளர்ந்து வருகிறது. இந்நிலையில் மெட்டாவெர்ஸ் முழு பயன்பாட்டில் வரும் போது மேலும் 37 சதவீத வளர்ச்சி அதிகரிக்கும். இதன்மூலம் அடுத்த 10 வருடங்களில் டேட்டா பயன்பாடு 20 மடங்கு உயரும்.
மெட்டாவெர்ஸ் பயனர்களின் பார்வை நேரத்தையும், பேண்ட்வித் நுகர்வையும் அதிகமாக எடுத்துக்கொள்ளும்.

விரைவில் மெட்டாவெர்ஸ் பயன்பாட்டிற்காக மெய்நிகர் தொழில்நுட்பம், மிகை மெய் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடையும். 5ஜி தொழில்நுட்பம் மெட்டாவெர்ஸ் சூழலுக்கு உதவும். ஆனால் 6ஜி தொழில்நுட்பம் தான் மெட்டாவெர்ஸை வளர்ச்சியடைய வைக்கும்.
விரைவில் மெட்டாவெர்ஸின் கேமிங் அதிக அளவில் பிரபலமாகும். இந்தியா கேமிங்கின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள், 4ஜி தொழில்நுட்பத்தால் இந்தியர்கள் மொபைல் கேம் நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். பிராட்பேண்டை விட மொபைல் இண்டர்நெட் தான் இந்தியர்கள் அதிகம் பேர் ஆன்லைனில் இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது. எதிர்காலத்தில் ஆன்லைன் கேம்களின் வளர்ச்சி அதிகரிக்கும்போது இந்திய மக்கள் அதிகம் இண்டர்நெட்டை செலவிடுவர்.
இதில் மெட்டாவெர்ஸும் வரும்போது இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல்லும், ஜியோவும் தான் மக்களுக்கு மொபைல் இண்டர்நெட் வழங்குவதில் அதிகம் ஈடுபடும். இதனால் அதன் வளர்ச்சியும், லாபமும் நினைக்கமுடியாததாக இருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் சாதனங்கள் பார்ப்பதற்கு ஸ்டைலாகவும், அதேசமயம் அதிக விலை கொண்டதாகவும் இருக்கிறது.
உலகின் மிக பிரபலமான நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், மேக் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை வெளியிட்டு ஆயிரம் கோடிகளில் லாபம் ஈட்டி வருகிறது. ஆப்பிள் பிராண்டிற்கு என்றே தனி மதிப்பு இருக்கிறது. ஆப்பிள் சாதனங்கள் பார்ப்பதற்கு ஸ்டைலாகவும், அதேசமயம் அதிக விலை கொண்டதாகவும் இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் வெளியாகும் ஆப்பிள் ஐபோனை வாங்குவதற்கு கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். சிலர் சிறுநீரகத்தை விற்று ஆப்பிள் போனை வாங்குவதையும் செய்திகளில் நாம் காண்கிறோம். இந்நிலையில் ஏன் மக்கள் ஐபோனுக்காக கைகளையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று உலக கோடீஸ்வர்களில் ஒருவரான சார்லி மங்கர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறிவதாவது:-
ஆப்பிள் நிறுவனத்தின் பலம் என்ன என்பதை அதன்மீது மக்கள் வைத்திருக்கும் விருப்பதை பார்த்தாலே தெரியும். என்னுடைய கோடிக்கணக்கான நண்பர்கள் ஐபோன் வாங்குவதற்காக தங்களுடைய கைகளை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள். அது போன்ற ஒரு நிலையில் ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. இதற்கு காரணம் அந்த நிறுவனத்தின் நிர்வாகம் தான்.

மிகவும் சிறந்தமுறையில் நிர்வாகத்தில் ஈடுபடுவதால் தான் விற்பனை ஏனியில் ஆப்பிள் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றும், செமிக்கண்டெக்டர்கள் பற்றாக்குறையும் கூட ஆப்பிளின் வளர்ச்சியை பாதிக்கவில்லை. இந்த வருடமும் ஆப்பிள் ஆர்வத்தை தூண்டும் பல சாதனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு சார்லி மங்கர் தெரிவித்தார்.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மூலம் சுமார் ரூ.336 கோடி லாபத்தை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது.
ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி கே50 கேமிங் ஸ்மார்ட்போனை சீனாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து விற்பனைக்கு வந்த இந்த போன் முதல் விற்பனையில், வெறும் ஒரு நிமிடத்திலேயே 70,000 யூனிட்டுகளுக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.336 கோடி லாபத்தை ரெட்மி நிறுவனம் ஈட்டியுள்ளது. இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.39,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனில் 6.67-inch OLED display FHD+ ரெஷொலியூசனுடன் 120Hz ரெப்ரெஷ்ரேட், 480Hz சாம்பிளிங் ரேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே HDR 10+ மற்றும் MEMC ஆதரவுடன் DCI-P3 color gamut-ஐ தருகிறது. இந்த போன் Snapdragon 8 Gen1 chipset-ஐ கொண்டுள்ளது. எவ்வளவு தான் கேம் ஆடினாலும் சூடாகாமல் குளிர்ச்சியுடன் வைத்திருக்க இதில் உள்ள பெரிய VC chamber உதவுகிறது.

இந்த போன் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜை கொம்ண்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக 4,700mAh பேட்டரி 120W அதிவேக சார்ஜிங் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெறும் 17 நிமிடங்களில் இதன் சார்ஜ் 0 சதவீதத்தில் இருந்து 100 சதவீதத்தை எட்டிவிடும். இந்த போனில் 3 பின்பக்க கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 64MP Sony IMX686 பிரைமரி கேமரா, 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் டெலி மேக்ரோ சென்சார், 20 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.






