என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
மிஸ்டிக் ப்ளூ, வேவ் க்ரீன் வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போனை விவோ இந்தியா இ-ஸ்டோரில் வாங்கலாம்.
விவோ நிறுவனம் புதிய ஒய்15எஸ் ஸ்மார்ட்போனை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டிருக்கும். மேலும் ஃபன்டச் ஓ.எஸ் 11.1-ஐ கொண்டிருக்கும். இந்த போனில் 6.5 இன்ச் ஹெச்.டி+ (720x1,600 பிக்ஸல்கள்) 20:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ கொண்ட ஐபிஎஸ் டிஸ்பிளே, octa-core MediaTek Helio P35 SoC பிராசஸர், ஆகியவற்றை கொண்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை 2 பின்பக்க கேமராக்களை கொண்டுள்ள இந்த போனில், f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சாரும், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் சென்சாரும் இடம்பெற்றுள்ளன. மேலும் 8 எம்.பி செல்ஃபி கேமரா f/2.0 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போனில் பக்கவாட்டில் பிங்கர்பிரிண்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதில் 5,000mAh பேட்டரியும், 10W சார்ஜிங் வசதியும் தரப்பட்டுள்ளன.
இதன் 3ஜிபி ரேம்+ 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.10,990-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மிஸ்டிக் ப்ளூ, வேவ் க்ரீன் வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போனை விவோ இந்தியா இ-ஸ்டோரில் வாங்கலாம்.
இந்த இயர்போன் ஒரு சார்ஜிற்கு 18 மணி நேரம் பேட்டரி லைஃபை வழங்குகிறது.
ரியல்மி நிறுவனத்தின் பார்னர் பிராண்டான டிஜோ புதிய ப்ளூடூத் இயர்போன்களை வரும் பிப்ரவரி 21-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.
நெக்பேண்ட் ஸ்டலில் வெளியாகும் இந்த இயர்போனுக்கு டிஜோ ஒயர்லெஸ் பவர் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இயர்போனில் 11.2m ஆடியோ டிரைவர், பேஸ் பூஸ்ட் பிளஸ் அலாகரித்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இரண்டு இயர்பட்களில் காந்தம் தரப்பட்டுள்ளன. இதன்மூலம் இயர்பட்களை இணைத்தால் ஹெட்போன்ஸ் ஆஃப் ஆகிவிடும். இரண்டு இயர்பட்களையும் பிரித்தால் ஆன் ஆகிவிடும்.

இந்த இயர்போன் 5.2 ப்ளூடூத் கொண்டுள்ளது. மேலும் இதில் தரப்பட்டுள்ள கேம் மோடில் 88ms லேடன்ஸி வரை அட்ஜஸ்ட் செய்ய முடியும். மேலும் இதில் உள்ள நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் மூலம் நாம் போன் பேசும்போதும் மிகத் தெளிவான சத்தத்தை கேட்க முடியும்.
இந்த இயர்போனை ரியல்மி லிங்க் செயலியுடன் இணைத்துகொள்ள முடியும். இந்த இயர்போன் முழுதாக சார்ஜ் ஏறுவதற்கு 2 மணி நேரம் ஆகும். 10 நிமிட சார்ஜில் 2 மணி நேரம் பிளேபேக் நேரத்தை வழங்கும்.
மேலும் இந்த இயர்போன் ஒரு சார்ஜிற்கு 18 மணி நேரம் பேட்டரி லைஃபை வழங்குகிறது.
இதன் விலை ரூ.2,499-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும் நிலையில் இந்த ஆண்டு ஐபோன் 14 ப்ரோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஐபோன் 13 சீரிஸ் பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தாலும் அதன் விலை மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிடவுள்ள ஐபோன் 14 ப்ரோ குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி வர இருக்கும் ஐபோன் 14 ப்ரோ மாடல் 8ஜிபி ரேமை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 13 ப்ரோ மேக்ஸில் 6ஜிபி ரேம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.
மேலும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13-ன் தேவை சந்தையில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் உற்பத்தியில் 1 கோடி யூனிட்டுகளை குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பதில் ஐபோன் 14 உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை எடுத்து வருவதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஐபோன் 14 ப்ரோ வெளி வந்தால் பிப்ரவரி 9-ம் தேதி வெளியான சாம்சங் கேலக்ஸி 22 மற்றும் கேலக்ஸி 22+ ஆகிய போன்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக் கணினிகள் ஸ்லீப் மோடில் இருந்தாலும் விரைவாக சார்ஜ் குறைவதாக புகார்கள் எழுந்தன.
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் கணினிகளாக ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கணினிகள் இருக்கின்றன. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் மேக் கணினிகளுக்கு மேக்ஓஎஸ் 12.2-ஐ இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்தது.
இந்த ஓ.எஸ்ஸில் பல்வேறு பலன்கள் இருந்தாலும் மேக் கணினிகளை ப்ளூடூத்துடன் இணைத்தால் விரைவாக சார்ஜ் குறைவதாக புகார்கள் எழுந்தன. மேலும் கணினிகளை ஸ்லீப் மோடில் வைத்திருந்தாலும் வேகமாக சார்ஜ் குறைவதாக கூறப்பட்டது. முதலில் ப்ளூடூத்தில் தான் பிரச்சனை இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில், புதிதாக வந்த ஓ.எஸ் தான் அதற்கு காரணம் என தெரிய வந்தது.

இதையடுத்து ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு புதிய மேக் 12.2.1 வெர்ஷன் ஓ.எஸ்-ஸை வெளியிட்டுள்ளது. இந்த ஓ.எஸ்.எஸை இன்ஸ்டால் செய்தால் பேட்டரி விரைவாக குறையும் பிரச்சனை தீர்ந்து, சார்ஜ் நீடித்து நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட்டுடன் புதிய செக்யூரிட்டி அப்டேட்டுகளும், மேக் பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்யும் அப்டேட்டும் இடைம்பெறும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டரின் புதிய அப்டேட்டில் மேசேஜ்களை எளிதாக தேடி படிப்பது தொடர்பான அம்சம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி ட்விட்டர் பயனார்கள்கள் இனி டைரக்ட் மெசேஜ்களையும் “பின்” செய்துகொள்ள முடியும். இதற்கு முன் டெக்ஸ்ட் உரையாடல்களை மட்டுமே ட்விட்டரில் பின் செய்யும்படி இருந்தது. இனி நேரடியாக இன்பாக்ஸிற்கு வரும் மெசேஜ் உரையாடல்களையும் பின் செய்ய முடியும். 6 திரெட்டுகள் வரை பின் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நமக்கு தேவையான மேசேஜ்களை தேடாமல் இனி ஈசியாக படிக்க முடியும். அனைத்து வித ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கும் இந்த அம்சம் புதிய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன் பெற்றிருக்க வேண்டியது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய போனில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
பிரபல மொபைல் நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் இந்த போனில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.
இந்த போனில் MediaTek's Helio G37 SoC மதர்போர்ட் இடம்பெறுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் மோட்டோ ஜி22-ல் 6.5" 720x1600 90 Hz IPS LCD டச் ஸ்க்ரீன், f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் பின்புற பிரைமரி கேமரா, f/2.2 லென்சில் 118 டிகிரி வசதி கொண்ட 8 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார், 2 மெகா பிக்ஸல் மேக்ரோ கேமரா அல்லது டெப்த் சென்சார், 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 5000 mAh பேட்டரி, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்ஸில் இயங்கும் இந்த போன் ஒயிட், ஐஸ்பெர்க் ப்ளூ, காஸ்மிக் பிளாக் ஆகிய நிறங்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதன்விலை இந்திய மதிப்பில் ரூ.17,500-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சில வாரங்களில் இதன் அறிமுக தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் ரீசார்ஜ் திட்டங்கள் விலை உயர்த்தப்பட்ட நிலையில் ரூ.200-க்கும் குறைவான விலையில் உள்ள திட்டங்களை பார்க்கலாம்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் உபயோகமும், இண்டர்நெட் உபயோகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல தொலை தொடர்பு நிறுவனங்களும் புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன.
கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, விஐ ஆகிய நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இருப்பினும் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில், ரூ.200-க்கும் குறைவான பட்ஜெட் விலையில் சில திட்டங்களும் உள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனம் ரூ.200-க்கும் குறைவான விலையில் 3 ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. இதன்படி ரூ.99-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 200 எம்.பி டேட்டா வழங்கப்படும். அழைப்புகள் இந்த திட்டத்தில் இலவசம் கிடையாது. ஒரு நொடிக்கு ஒரு பைசா வசூலிக்கப்படும். லோக்கல் எஸ்.எம்.எஸ்-க்கு ஒரு ரூபாயும், எஸ்.டி.டி எஸ்.எம்.எஸ்-க்கு ரூ.1.50ம் வசூலிக்கப்படும்.
அடுத்ததாக ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தையும் ஏர்டெல் வழங்குகிறது. இதில் அன்லிமிட்டெட் அழைப்புகள், மொத்தமாக 1 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ்கள் 24 நாட்களுக்கு வழங்கப்படும். அதேபோன்றும் 30 நாட்களுக்கு அமேசான் பிரைமின் மொபைல் எடிஷன் ட்ரெயில், இலவச ஹெலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் ஆகியவை வழங்கப்படும்.
ரூ.179 ரீசார்ஜ் திட்டத்திற்கு மொத்தமாக 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ்கள், அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 30 நாட்களுக்கு அமேசான் பிரைமின் மொபைல் எடிஷன் ட்ரெயில், இலவச ஹெலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் ஆகியவையும் தரப்படுகின்றன.

ஜியோவை பொறுத்தவரை 3 ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.200-க்கு கீழ் இருக்கின்றன. ரூ.149 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 20 நாட்களுக்கு வழங்கப்படும். அதேபோன்று ரூ.179 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 24 நாட்களுக்கு வழங்கப்படும்.
இதேபோன்று ரூ.119-க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 14 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் ஆகிய சேவைகளும் வழங்கப்படுகின்றன.

வி.ஐ வாடிக்கையாளர்களுக்கு 4 ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.200-க்கும் கீழ் வழங்கப்படுகின்றன. இதன்படி ரூ.155-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் அழைப்புகள், 300 எஸ்.எம்.எஸ், 1 ஜிபி டேட்டா ஆகியவை 24 நாட்களுக்கு வழங்கப்படும்.
அதேபோன்று ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்தால் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் தரப்படும். இந்த திட்டத்தில் இலவச எஸ்.எம்.எஸ்கள் கிடையாது. ரூ.199 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 18 நாட்களுக்கு வழங்கப்படும். ரூ.179-க்கு அன்லிமிடெட் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்.எம்.எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படும்.
இத்துடன் வி.ஐ மூவிஸ், டிவி ஆகிய சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
புதிய புதிய அப்டேட்களை தொடர்ந்து வழங்கும் வாட்ஸ்அப், தற்போது மிகவும் பயனுள்ள அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. பயனர்கள் எளிய வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது.
இந்த வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்கள் குரல்களிலேயே தகவல்களை பதிவு செய்து அனுப்பும் வாய்ஸ் மெசேஜ் வசதியும் உள்ளது. இந்நிலையில் இந்த வாய்ஸ் மெசேஜ் அம்சத்தில் புதிய பயனுள்ள மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக வாட்ஸ்அப்பில் யாராவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால் அவருடைய பெயரை கிளிக் செய்து, சேட் விண்டோவில் தான் அவர் அனுப்பிய மெசேஜ்ஜை பார்க்க முடியும். ஒருவருடைய சாட் விண்டோவில் இருந்து வெளியே வந்துவிட்டால் வாய்ஸ் மெசேஜ் தானாக நின்றுவிடும்.

இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் நாம் வாய்ஸ் மெசேஜ்ஜை பிளே செய்துவிட்டு, சேட் விண்டோவில் இருந்து வெளியே வந்தாலும் பின்புறத்தில் வாய்ஸ் பிளே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஆடியோ ஃபைல்களையும் பிளே செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் தற்போது ஆப்பிள் ஐபோனுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஐ.ஓஎஸ் வெர்சன் 22.4.75 வைத்திருப்பவர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். ஒருவருடைய வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்டுக்கொண்டே பிறரிடம் சேட் செய்வதற்கு வசதியாக இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எப்போது தரப்படும் என தகவல் வெளியாகவில்லை. அதேபோன்று வாட்ஸ் ஆப் வெப்பிலும் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியாது.
இந்த போனை பிளிப்கார்ட் தளத்தில் ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி கார்டுகளை கொண்டு வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும்.
ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இந்த போன் கடந்த ஆண்டு வெளியான ரெனோ 6 போனின் மேம்பட்ட வடிவம் என கூறப்பட்டுள்ளது.
இந்த போனில் 6.43 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ AMOLED டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் மீடியாடெக் டைமன்சிட்டி 900 SoC பிராசஸரை கொண்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, பின்பக்கம் மூன்று கேமராக்கள் தரப்பட்டுள்ளன. அதில் 64 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் வைட் ஆங்கிள் சென்சார், 2 மெகா பிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

4500 mAh திறன் கொண்ட பேட்டரி, 65W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங், டைப் சி சார்ஜிங் போர்ட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இந்த போனில் உள்ளன.
8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்ற ஒரே வேரியண்டில் வரும் இந்த போனின் விலை ரூ. 28,999 ஆகும்.
இந்தபோன் ஸ்டாரி பிளாக், ஸ்டார்நெய்ல்ஸ் ப்ளூ ஆகிய வண்ணங்களில் விற்பனை ஆகிறது.
இந்த போனை பிளிப்கார்ட் தளத்தில் ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி கார்டுகளை கொண்டு வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று மதியம் 2 மணிக்கு சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் இன்று சாம்சங் கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22+, கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்22-ல் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இது 48–120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்குகிறது. இந்த டிஸ்பிளேவை பாதுகாக்க கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பேனல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது 4nm octa-core Snapdragon 8 Gen 1 SoC பிராசஸர் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்ஸில் இயங்குகிறது.
கேமராவை பொறுத்தவரை 3 பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் f/1.8 வைட் ஆங்கில் லென்ஸ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலிஷேசன் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா ஒயிட் ஷூட்ட, 10 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு f/2.2 லென்ஸ் கொண்ட 10 மெகாபிக்ஸல் செல்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் 5ஜி, 4ஜி எல்.டி.இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், டைப் சி யூஎஸ்பி போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன.
சென்சார் போர்டில் ஆக்ஸலரோமீட்டர், ஆம்பியன் லைட், பேரோமீட்டர், கைரோ, ஹால், மேக்னெட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி68 தூசு மற்றும் வாட்டர் ரெசிஸ்டெண்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த போனில் 3,700mAh பேட்டரி, 25W ஒயர் சார்ஜர், 15W ஒயர்லெஸ் சார்ஜிங் தரப்பட்டுள்ளது.
இதன் விலையை பொறுத்தவரை 8 ஜிபி ரேம்+ 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.72,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22+, கேலக்ஸி எஸ்22 கொண்டுள்ள அதே அம்சங்களை கொண்டுள்ளது. கூடுதலாக இந்த போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் Wi-Fi 6E மற்றும் அல்ட்ரா வைட்பேண்ட் சப்போர்ட்டுடன் வருகிறது. இதில் 4,500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 45W ஒயர் சார்ஜிங், 15W ஒயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒயர்லெஸ் பவர் ஷேர் சப்போர்ட்டையும் வழங்குகிறது.
இதன் 8ஜிபி ரேம்+128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.84,999-ஆகவும், 8ஜிபி ரேம்+ 256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.88,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா போனில் 6.8 இன்ச் Edge QHD+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே தரப்பட்டுள்ளது. இதன் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் 1–120Hz-ஆகவும், டச் சாம்பிளிங் ரேட் 240Hz-ஆகவும் இருக்கிறது. இது Snapdragon 8 Gen 1 SoC பிராசஸர், ஆண்ட்ராய்டு 12, One UI 4.1-ல் இயங்குகிறது.
கேமராவை பொறுத்தவரை இதில் பின்பக்கம் 4 கேமரா செட் அப் வழங்கப்பட்டுள்ளது. இது f/1.8 லென்சுடன் 108 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 12 மெகாபிக்ஸச்ல் அல்ட்ரா வைட் ஷூட்டர், 3x ஆப்டிக்கல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்ஸல் டெலி போட்டோ ஷூட்டர் மற்றும் 10x ஆப்டிக்கல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிபோட்டோ ஷூட்டர் லென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு 40 மெகாபிக்ஸல் செல்பி கேமரா f/2.2 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, 5.2 வெர்ஷன் ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், சி டைப் யூஎஸ்பி போர்ட், ஆன் போர்ட் சென்சாரில் ஆக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், பேரோ மீட்டர், கைரோ, ஹால், மேக்னெட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார், எஸ் பென் ஸ்டைலெஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
5000mAh பேட்டரி சப்போர்ட் கொண்ட இந்த போனில் 45W ஒயர் சார்ஜிங்கும், 15W ஒயர்லெஸ் சார்ஜிங்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 12ஜிபி ரேம்+256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.1,09,999-ஆகவும், 12ஜிபி + 512ஜிபி வேரியண்டின் விலை ரூ.1,18,999-ஆகவும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய கலைஞர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்கள், கைத்தறி பொருள்களுக்கு அமேசான் தளத்தில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இ-காமெர்ஸ் நிறுவனமான அமேசான் இந்திய பொருட்களை விற்பதற்கு என்று தனி பக்கத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக அமேசான் தளத்தில் ஓடிஓபி( ODOP- One district One product) என்று பொருட்கள் தனியாக பட்டியலிடப்பட்டு விற்கப்படுகின்றன.
இந்திய அரசின் இன்வெஸ்ட் இந்தியா, இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் அசோசியஷன் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து அமேசான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது.
இதுகுறித்து அமேசான் இந்தியா கூறியதாவது:-
இந்தியா முழுவதும் மூலை முடுக்குகளில் இருந்து உள்ளூர் தயாரிப்பு பொருட்கள், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்துவதற்கும், சிறு குறு தொழில்கள் செய்யும் உற்பத்தியாளர்கள், குடிசைத் தொழில் செய்பவர்களுக்கும் இந்த தளம் பக்கபலமாக இருக்கும்.
இந்திய கலைஞர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்கள், கைத்தறி பொருள்களுக்கு அமேசான் தளத்தில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்திய தயாரிப்புகள் மீது அதீத காதல் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் அவர்கள் விரும்பிய அனைத்து பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்திய கலாச்சாரம் பாரம்பரியம் கொண்டது. அதனால் இந்திய பொருள்களுடன் அதன் தயாரிப்பு முறை, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றையும் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பொருள்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசின் முயற்சியை நாங்கள் முன்னெடுப்பது மூலமாக பொருளாதார வளர்ச்சி வேகம் அடையும். வேலைவாய்ப்பு உருவாகும் என்பதோடு, ஊரக குடிசைத் தொழில் நல்ல வளர்ச்சியைக் காணும். இது எங்களுக்கும் மகிழ்ச்சி அளிக்ககூடியது.
இவ்வாறு அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 11 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிட்டதட்ட 1.3 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக ட்ராய் அமைப்பு அறிவித்துள்ளது.
அதே மாதத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 11 லட்சம் புதிய வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 4 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. வோடஃபோன்- ஐடியா நிறுவனம் கடந்த டிசம்பரில் 16 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை ஏற்றியதே வாடிக்கையாளர் இழப்புக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறைந்த ஊதியம் வாங்கும் வாடிக்கையாளர்களே பி.எஸ்.என்.எல் நோக்கி தள்ளப்பட்டுள்ளனர்.
சந்தை பங்குகளை பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ 36 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ஏர்டெல் 30.81 சதவீத பங்குகளையும், வோடபோன் 23 சதவீத பங்குகளையும், பி.எஸ்.என்.எல் 9.90 சதவீத பங்குகளையும், எம்.டி.என்.எல் 0.28 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.
1.3 கோடி வாடிக்கையாளர்களை இழந்தாலும் 36.4 கோடி ஆக்டிவ் வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதலிடத்தில் தான் உள்ளது. ஏர்டெல் 34.8 கோடி வாடிக்கையாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.






