search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    மோட்டோ ஜி22 (கோப்பு புகைப்படம்)
    X
    மோட்டோ ஜி22 (கோப்பு புகைப்படம்)

    50 மெகாபிக்ஸல் கேமராவுடன் புதிய மோட்டோ ஜி22- கசிந்த தகவல்

    மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய போனில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
    பிரபல மொபைல் நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் இந்த போனில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன. 

    இந்த போனில் MediaTek's Helio G37 SoC மதர்போர்ட் இடம்பெறுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் மோட்டோ ஜி22-ல் 6.5" 720x1600 90 Hz IPS LCD டச் ஸ்க்ரீன்,  f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் பின்புற பிரைமரி கேமரா, f/2.2 லென்சில் 118 டிகிரி வசதி கொண்ட 8 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார், 2 மெகா பிக்ஸல் மேக்ரோ கேமரா அல்லது டெப்த் சென்சார், 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் 5000 mAh பேட்டரி, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.  ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்ஸில் இயங்கும் இந்த போன் ஒயிட், ஐஸ்பெர்க் ப்ளூ, காஸ்மிக் பிளாக் ஆகிய நிறங்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

    இதன்விலை இந்திய மதிப்பில் ரூ.17,500-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த சில வாரங்களில் இதன் அறிமுக தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×