என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டோ"

    • மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் உடன் வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் வசதி கொண்டிருக்கும்.

    மோட்டோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஜி86 பவர் மாடலுக்குப் பிறகு, நவம்பர் 5 ஆம் தேதி மோட்டோ நிறுவனம் ஜி பவர் சீரிசில் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனாக ஜி67 பவர் என்ற மாடல் அறிமுகம் செய்யப்படுவதாக மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    புதிய ஸ்மார்ட்போனில் 7000mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி வழங்குவதை மோட்டோரோலா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 58 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். புகைப்படங்கள் எடுக்க 50MP சோனி LYT-600 சென்சார், 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் அனைத்து கேமராக்களிலும் 4K ரெக்கார்டிங் வசதி, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் ஸ்கிரீன் பாதுகாப்பிற்காக இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு மற்றும் MIL-810H சான்றிதழுடன் இராணுவ தரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP64 சான்றுடன் வர இருக்கிறது. மேலும் 6.7-இன்ச் FHD+ 120Hz ஸ்கிரீன் கொண்டுள்ளது. இத்துடன் 3 பேன்டோன் சார்ந்த நிறங்களல் வீகன் லெதர் ஃபினிஷுடன் வரும். மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் வசதி கொண்டிருக்கும்.

    மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் உடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனிற்கு விரைவில் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வழங்குவதை மோட்டோரோலா உறுதிப்படுத்தி உள்ளது.

    அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், மோட்டோரோலா இந்தியா வலைத்தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும். அடுத்த வாரம் போன் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும்போது இதன் விலையை தெரிந்துகொள்ளலாம்.

    • மோட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள புதிய ஃபிளாக்‌ஷிப்போனின் பெயர் மோட்டோ X30 ப்ரோ என பெயரிடப்பட்டு உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.

    மோட்டோ நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்‌ஷிப் போனை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள புதிய ஃபிளாக்‌ஷிப்போனின் பெயர் மோட்டோ X30 ப்ரோ என பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே அதன் கேமரா தான் என கூறப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் 200 மெகாபிக்சல் கேமரா இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 200 மெகாபிக்சல் கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்கிற பெருமையை இந்த மோட்டோ X30 ப்ரோ பெற உள்ளது.


    இந்த ஸ்மார்ட்போன் 6.73 இன்ச் pOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸரும் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 4,500 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரியும், 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.

    ×