search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "e-commerce"

    • 1 வருடத்திற்கும் மேலாக பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன
    • திறன் அடிப்படையிலான தரவரிசை பட்டியலில் கீழே உள்ளவர்கள் நீக்கப்படுவார்கள்

    2020 கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொடங்கிய பொருளாதார மந்தநிலை நாளுக்கு நாள் மோசமடைவதால் உலகெங்கிலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இணையவழி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

    அதனால் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக அத்துறையில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரூவை மையமாக கொண்டு செயல்படும் பிரபல இணையதள வர்த்தக நிறுவனம், ஃப்ளிப்கார்ட் (Flipkart).

    2007ல் புத்தகங்களை இணையவழியில் விற்பதற்காக தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட், பிறகு நுகர்வோர் மின்னணு சாதனங்கள், நவீன ஆடைகள், அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை இணையதளத்தின் மூலம் விற்பனை செய்து, பெரும் லாபம் ஈட்டி வந்தது.

    இதே துறையில் உள்ள அமெரிக்காவை மையமாக கொண்ட புகழ் பெற்ற அமேசான் நிறுவனத்திற்கு ஃப்ளிப்கார்ட் போட்டியாக இயங்கி வருகிறது.

    2018ல் அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு முன்னணி மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை நிறுவனமான வால்மார்ட் (Walmart), ஃப்ளிப்கார்ட் நிறுவன பங்குகளில் 77 சதவீதத்தை விலைக்கு வாங்கியது.

    2022-23 நிதியாண்டில் ஃப்ளிப்கார்ட் ரூ.4,890 கோடி நஷ்டத்தை சந்தித்ததாக 2023 அக்டோபர் மாதம் தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், திறன் அடிப்படையில் தரவரிசை ஏற்படுத்தி அப்பட்டியலில் கீழே உள்ள சுமார் 7 சதவீதம் வரை பணியாளர்களை நீக்க ஃப்ளிப்கார்ட் முடிவு செய்துள்ளது.

    பணிநீக்க நடவடிக்கை வரும் ஏப்ரலில் நிறைவடையும்.

    புதியதாக பணியாளர்களை சேர்ப்பதை ஃப்ளிப்கார்ட் சில மாதங்களுக்கு முன்னரே நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடைகள் மட்டுமின்றி இணையதள வழியாகவும் மக்கள் பொருட்களை அதிகம் வாங்குகின்றனர்
    • வர்த்தகர்கள் அறிவித்த அதிக தள்ளுபடி, அதிக விற்பனைக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர்

    அமெரிக்காவில், நவம்பர் மாத நான்காவது வியாழக்கிழமை "தேங்க்ஸ்கிவிங் டே" (Thanksgiving Day) என்றும் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை "ப்ளாக் ஃப்ரைடே" (Black Friday) என்றும் கொண்டாடப்படுகிறது.

    கருப்பு வெள்ளி என நவம்பரில் அழைக்கப்படும் இந்நாளில் தொடங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடக்கம் வரை அமெரிக்கர்கள், தங்கள் குடும்பத்தினருடன் ஆடைகள், அணிகலன்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

    இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதும். மேலும், வர்த்தகர்கள், தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்காக பல தள்ளுபடி அறிவிப்புகளையும், ஊக்க தொகை மற்றும் பரிசு பொருட்கள் போன்ற பல சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்.

    கடைவழி வர்த்தகத்தை போன்றே இணையதள வழி வர்த்தகமும் மிகவும் மும்முரமாக நடைபெறும்.

    இந்நிலையில், அமெரிக்காவில் கருப்பு வெள்ளி அன்று நடைபெற்ற இணையவழி வர்த்தகம், $9.8$ பில்லியன் அளவிற்கு நடைபெற்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதிக தள்ளுபடிகள் மற்றும் மின்னணு சாதனங்களை வாங்க அதிகரிக்கும் விருப்பம் ஆகியவையே இதற்கு காரணம் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்கள் மக்களால் முதலில் விரும்பப்படும் பொருட்களாக உள்ளன.

    கடந்த சில மாதங்களாக விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் அதிக செலவு செய்வதை தவிர்த்து வந்ததால், வர்த்தகர்களிடம் பொருட்கள் தேங்கி கிடந்தது. ஆனால், தற்போது விற்பனை சூடு பிடித்திருப்பதை வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

    கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொய்வடைந்திருந்த சில்லறை வர்த்தகத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என தெரிவிக்கும் பொருளாதார நிபுணர்கள், அடுத்து வரும் நாட்களில் விற்பனையின் அளவு இதே போன்று நீடிக்குமா என்பது இனிதான் தெரிய வரும் எனவும் கூறுகின்றனர்.

    ×