என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8
    X
    சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8

    3 அட்டகாசமான டேப்லெட்டுகளை அறிமுகம் செய்த சாம்சங் - சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்...

    இந்த டேப்லெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.10,000 கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்8, கேலக்ஸி டேப் எஸ்8+ மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா ஆகிய டேப்லெட்டுகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

    சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 One UI 4-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்ஸில் இயங்கும். இதில் WQXGA (2,560x1,600 pixels) LTPS TFT டிஸ்பிளே, 276ppi பிக்ஸல் டென்சிட்டி, 120Hz ரெப்ரெஷ் ரேட் வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் 4nm octa-core SoC, Qualcomm Snapdragon 8 Gen 1 SoC பிராசஸரை கொண்டுள்ளது.

    மேலும் இந்த டேப்லெட்டின் பின்புறத்தில் 13 எம்.பி ஆட்டோ போகஸ் கேமரா, 6 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, முன்புறத்தில் 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளன. இதில் 11,200 mAh பேட்டரி, 45W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி தரப்பட்டுள்ளன. இந்த டேப் கிராபைட் கலர் வேரியண்டில் மட்டும் வருகிறது.

    8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த டேப்பின் வைஃபை மாடல் ரூ.58,999-ஆகவும், 5ஜி வேரியண்டின் விலை ரூ.70,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ டேப்லெட்டில் 12.4-inch WQXGA+ (2,800x1,752 pixels) Super AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது 266ppi பிக்ஸல் டென்சிட்டி 120Hz ரெப்ரெஷ் ரேட் வரை வழங்குகிறது. இதில் Qualcomm Snapdragon 8 Gen 1 SoC பிராசஸர் தரப்பட்டுள்ளது. 

    இந்த டேப்லெட்டிலும் 13 எம்.பி ஆட்டோ போகஸ் மற்றும் 6 எம்பி அல்ட்ரா வைட் கேமராக்கள் பின்புறத்திலும், முன்புறத்தில் 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளன. 

    இதில் 10,090mAh பேட்டரி, சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 சப்போர்ட் (45W வரை), டிஸ்பிளேக்கு கீழ் பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்டவை தரப்பட்டுள்ளன.

    இந்த டேப்லெட் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது. இதன் வைஃபை மாடல் ரூ.74,999-ஆகவும், 5ஜி மாடல் ரூ.87,999-ஆகவும் இருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்8  சீரிஸ்எஸ்8 சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா டேப்லெட்டில் 14.6-inch WQXGA+ (2,960x1,848 pixels) Super AMOLED டிஸ்பிளே, 240ppi பிக்ஸல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வழங்கப்படுகிறது. 

    இந்த டேப்லெட்டிலும் 13 எம்.பி ஆட்டோ போகஸ் மற்றும் 6 எம்பி அல்ட்ரா வைட் கேமராக்கள் பின்புறத்திலும், முன்புறத்தில் 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளன. 

    இதில் ஏ.கே.ஜியால் டியூன் செய்யப்பட்ட குவாட் ஸ்டிரியோ ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. டோல்மி அட்மோஸ் சப்போர்ட் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப் 3 மைக்ரோபோன்களை கொண்டுள்ளது. 11,200mAh பேட்டரிம், சூப்பர் பாஸ்ட் சார்ஜ் 2.0 சப்போர்ட் கொண்டுள்ள இந்த டேப்பின் வைஃபை மாடலின் விலை ரூ.1,08,999-ஆகவும், 5ஜி வேரியண்டின் விலை ரூ.1,22,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த டேப்லெட்டுகளின் முன்பதிவு வரும் நாளை முதல் மார்ச் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவற்றை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.22,999 மதிப்புள்ள கீபோர்ட் கவர் இலவசமாக வழங்கப்படும். 

    மேலும் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா டேப்பை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.10000 கேஷ்பேக் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ் முன்பதிவு செய்பவர்கள் ரூ.8000 கேஷ்பேக் பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×