search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blaupunkt"

    • புதிய ஸ்மார்ட் டிவியை மாணிட்டர், டிவி மற்றும் ஸ்மார்ட் டிவைஸ் என மூன்று வழிகளில் பயன்படுத்த முடியும்.
    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் QLED டிவிக்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது புதிய HD டிவி அறிமுகமாகி இருக்கிறது.

    Blaupunkt நிறுவனத்தின் புதிய 24 இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி மாணிட்டர், டிவி மற்றும் ஸ்மார்ட் டிவைஸ் போன்று பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த ஆண்டு QLED டிவிக்களை அறிமுகம் செய்த Blaupunkt இந்த முறை Blaupunkt புதிதாக HD ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.

    Blaupunkt பிரீமியம் ஸ்மார்ட் டிவி சீரிஸ் தலைசிறந்த வியூவிங் அனுபவம், பிரத்யேக பரிந்துரை, அதிக தரமுள்ள சவுண்ட் மற்றும் ஆப்டிமைஸ்டு கண்டென்ட் வழங்குகிறது. இதில் HD டிஸ்ப்ளே, 20 வாட் சவுண்ட் அவுட்புட், டிவியின் கீழ்புறத்தில் ஸ்பீக்கர்கள் மற்றும் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஏர்ஸ்லிம் டிசைன் கொண்டிருக்கும் Blaupunkt ஸ்மார்ட் டிவி மெல்லிய தோற்றம், A35 x 4 சிப்செட் மற்றும் 2.4 GHz வைபை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் 24 இன்ச் மாடலில் 300 நிட்ஸ் பிரைட்னஸ், 512MB ரேம், 4 ஜிபி ரோம், டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்ட்டர், A+ பேனல் உள்ளது.

    இந்த ஸ்மார்ட் டிவி- கணினி, மொபைல் மற்றும் லேப்டாப்களுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் வரும் ரிமோட்டில் யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5, வூட் மற்றும் சோனிலிவ் போன்ற சேவைகளுக்கான ஹாட்கீ கொண்டிருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    Blaupunkt சிக்மா 24 இன்ச் 3-இன்-1 ஸ்மார்ட் டிவி-யின் விலை தற்போது ரூ. 6 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதன் உண்மை விலை ரூ. 10 ஆயிரத்து 999 ஆகும்.

    ×