search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இன்ஸ்டாகிராம்
    X
    இன்ஸ்டாகிராம்

    இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாவதை தடுக்கும் ‘டெய்லி லிமிட்’ அம்சத்தில் புதிய மாற்றம்

    2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் பயனர்கள் செலவிடும் நேரத்தை கணக்கிட்டு கட்டுப்படுத்துவதற்காக ‘டெய்லி லிமிட்’ என்ற அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.
    உலக அளவில் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. 

    இது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதற்காக பயன்படுத்தப்படும் செயலி என்பதால் பிற சமூக வலைதளங்களை விட அதிகம் பயனர்களை ஈர்க்கிறது. இதனால் பலரும் இன்ஸ்டாகிராம் செயலிக்கு அடிமையாகி அத்தளத்தில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் 2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் பயனர்கள் செலவிடும் நேரத்தை கணக்கிட்டு கட்டுப்படுத்துவதற்காக ‘டெய்லி லிமிட்’ என்ற அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.

    இன்ஸ்டாகிராம் டெய்லி லிமிட் அம்சம்

    இதில் சென்று பயனர்கள் தங்களுக்கான செலவிடும் நேரத்தை தேர்வு செய்துகொள்ளலாம். அந்த நேரத்தை பயனர்கள் எட்டியவுடன் தானாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.

    குறைந்தது 10 நிமிடத்தில் இருந்து இந்த ‘டெய்லி லிமிட்’ நேரத்தை தேர்வு செய்யலாம் இருந்த நிலையில், தற்போது குறைந்தபட்ச நேரம் 30 நிமிடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    இனி இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களுக்கான டெய்லி லிமிட் நேரத்தை 30 நிமிடங்கள், 45 நிமிடங்கள், ஒரு மணி நேரம், 2 மணி நேரம், 3 மணி நேரம் என வைத்துக்கொள்ளலாம்.
    Next Story
    ×