என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ஜியோமி பெர்பாமன்ஸ் டி சர்ட்
உங்களை கிருமிகளில் இருந்து காக்கும் ஜியோமி டி-சர்ட்: இந்தியாவில் அறிமுகம்
இந்த டி-சர்ட்டுகள் ரூ.699 விலையில் எம்.ஐ இணையதளத்தில் கிடைக்கின்றன.
ஜியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வைரஸ் எதிர்ப்பு டி-சர்ட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த டி-சர்ட்டுகளுக்கு ஜியோமி ஃபெர்பாமன்ஸ் டி சர்ட் என பெயரிடப்பட்டுள்ளது.
ஆன்டி- மைக்ரோபியல் துணியால் செய்யப்பட்டுள்ள இந்த டி-சர்ட் வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளை அண்டவிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டி- சர்ட் புற ஊதா கதிர்களை தடுக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது.
இந்த ஆன்டி- மைக்ரோபியல் டி-சர்ட்டை ஒருமுறைக்கு மேல் கழுவினாலும் இதன் ஆற்றல் குறையாது. டி-சர்ட்டின் உள்ளேயும் வெளியேயும் 2 டிகிரி வெப்பநிலை வேறுபாடு இருக்கும். இதனால் இந்த டி-சர்ட்டை அணிந்து வெளியில் விளையாடுவது பாதுகாப்பானது என கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் இந்த டி-ஷர்ட்டுகள் மக்களை பாதுகாக்க உதவும் என ஜியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த டி-சர்ட்டுகள் 4 அளவுகளில் வருகின்றன. இதன் உண்மை விலை ரூ.1,499 என்றும், சலுகை விலையில் ரூ.699-க்கு கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டி-சர்ட்டுகளை மக்கள் எம்.ஐ இணையதளம் மூலம் ஆர்டர் செய்யலாம்.
Next Story






