என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு குறைந்த விலையில் புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    பி.எஸ்.என்.எல். நிறுவனம் பட்ஜெட் விலை பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 184 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 347 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த சலுகைகளில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், இலவச எஸ்.எம்.எஸ்., அதிவேக டேட்டா போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன. 'ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்' பிரிவில் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    பலன்களை பொருத்தவரை பி.எஸ்.என்.எல். ரூ. 184 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் அரினா மொபைல் கேமிங் சேவை வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதே பலன்கள் வழங்கும் ரூ. 185 மற்றும் ரூ. 186 சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

     கோப்புப்படம்

    இவற்றில் ரூ. 185 சலுகையில் கூடுதலாக லிஸ்டன் பாட்கேஸ்ட், ரூ. 186 சலுகையில் பார்டி கேம்ஸ், பி.எஸ்.என்.எல். டியூன்ஸ் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 347 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இத்துடன் அரினா மொபைல் கேமிங் சேவை வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு டெவலப்பர்களுக்கு 60 பில்லியன் டாலர்களை கொடுத்ததாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டு டெவலப்பர்களுக்கு 60 பில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 4,43,300 கோடி கொடுத்ததாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றி ஆப்பிள் வெளியிட்ட தகவல்களில், அந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டெவலப்பர்களுக்கு எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் இதுவரை இல்லாத அளவு அதிக தொகையை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் செலவிட்டுள்ளனர் என ஆப்பிள் அறிவித்து இருக்கிறது. எனினும், சரியான தொகை பற்றிய விவரங்களை ஆப்பிள் வெளியிடவில்லை.

     ஆப் ஸ்டோர்

    2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஆப் ஸ்டோரில் இருந்து டெவலப்பர்களுக்கு 260 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 19,21,486 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஆப் ஸ்டோரில் அதிக டவுன்லோட்களை பெற்ற ஆப் பட்டியலை ஆப்பிள் வெளியிட்டுள்ளது.

    ஆப்பிள் வெளியிட்டுள்ள தகவல்கள் பெரும் தொகையாக தெரிந்தாலும், இதன் மூலம் எத்தனை டெவலப்பர்கள் பயன்பெற்றனர் என்ற விவரங்களை அறிந்து கொள்ள இயலாது. ஆப் ஸ்டோரில் ஏராளமான போலி செயலிகள் இடம்பெற்று இருப்பதாக டெவலப்பர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
    கூகுள் ஜிமெயில் செயலி ஆண்ட்ராய்டு டவுன்லோட்களில் புது மைல்கல் எட்டி சாதனை படைத்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆண்ட்ராய்டு தளத்தில் ஜிமெயில் செயலி ஆயிரம் கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது. டவுன்லோட்களில் இத்தகைய மைல்கல் எட்டிய நான்காவது செயலியாக ஜிமெயில் இருக்கிறது. முன்னதாக கூகுள் பிளே ஸ்டோர், யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற செயலிகள் ஆயிரம் கோடி டவுன்லோட்களை கடந்தது. 

    ஏப்ரல் 2004 வாக்கில் அறிமுகமான ஜிமெயில் செயலி இன்றும் உலகின் பிரபல மின்னஞ்சல் செயலிகளில் ஒன்றாக இருக்கிறது. ஜிமெயில் செயலியில் அவ்வப்போது பல்வேறு புது அம்சங்கள் அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அப்டேட் ஜிமெயில் செயலியில் அண்டூ அம்சம் வழங்கியது. இதை கொண்டு அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெற முடியும்.

     ஜிமெயில்

    அனுப்பிய மின்னஞ்சல்களை 5 நொடிகள், 10 நொடிகள், 20 நொடிகள் அல்லது 30 நொடிகளில் திரும்ப பெற முடியும். ஜிமெயிலில் அண்டூ அம்சம் ஜிமெயில் வெப் மற்றும் மொபைல் செயலியில் வழங்கப்படுகிறது. 
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2999 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை 20 சதவீதம் ஜியோமார்ட் மகா கேஷ்பேக் சலுகையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சலுகையை ஜியோ மார்ட் வலைதளத்தில் இருந்து ரிசார்ஜ் செய்யும் கேஷ்பேக் கிடைக்கும்.

    புதிய ரூ. 2999 சலுகையில் தினமும் 2.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர 365 நாள் வேலிடிட்டி வழங்கும் இதர சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது. எனினும், இவற்றின் விலை வித்தியாசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    கோப்புப்படம்

    ஜியோ ரூ. 3110 சலுகையில் ஒருவருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, ஒரு வருடத்திற்கு 740 ஜி.பி. அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 2999 சலுகையில் வருடத்திற்கு 912 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய ரூ. 2999 சலுகை மட்டுமின்றி ஜியோ ரூ. 299, ரூ. 666 மற்றும் ரூ. 719 விலை சலுகைகள் 20 சதவீதம் கேஷ்பேக் வழங்குகின்றன. 
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் மற்ற நிறுவன வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது.


    கடந்த ஆண்டு இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வி மற்றும் ஜியோ தங்களின் பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தின. அனைத்து சலுகை கட்டணங்களும் அதிகபட்சமாக 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன. 

    இதன்காரணமாக பலர் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற துவங்கினர். இதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை விளம்பர நோக்கில் அறிவித்து இருக்கிறது. அதன்படி ஏர்டெல், ஜியோ மற்றும் வி நிறுவன வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறும் போது 5 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. 

     கோப்புப்படம்

    இந்த சலுகை 30 நாட்கள் அல்லது சலுகை தற்போதைய சலுகையின் வேலிடிட்டி இருக்கும் வரை வழங்கப்படுகிறது. இது குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு ஜனவரி 15, 2022 முன் போர்ட் செய்ய வேண்டும். 

    பின் இலவச 5 ஜி.பி. டேட்டாவை பெற வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறியதற்கான காரணத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, உடன் #SwitchToBSNL ஹேஷ்டேக் சேர்த்து பின் பி.எஸ்.என்.எல். அக்கவுண்டை டேக் செய்ய வேண்டும். இத்துடன் பி.எஸ்.என்.எல். சமூக வலைதள பக்கங்களை பின்தொடர்ந்து, இதற்கான ஆதாரத்தை பி.எஸ்.என்.எல். வாட்ஸ்அப் எண் - 9457086024 அனுப்ப வேண்டும். 

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விலை குறைப்பு வழங்கப்படுகிறது.


    அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது.

    ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களில் ஆப்பிள் ஏ12 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸர் 5ஜி மற்றும் 4ஜி எல்.டி.இ. கனெக்டிவிட்டி வழங்குகிறது. 

     ஐபோன் 12

    ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் விலை குறைப்பு

    ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மாடல் 64 ஜி.பி. விலை ரூ. 53,999 என மாறி இருக்கிறது. அமேசானில் இதன் விலை ரூ. 63,900 என மாறி இருக்கிறது. சில்லறை விற்பனை மையங்களில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 65,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ப்ளிப்கார்ட், அமேசான் தளங்களில் ஐபோன் 12 128 ஜி.பி. விலை ரூ. 64,999 என்றும் சில்லறை விற்பனை மையங்களில் ரூ. 70,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மினி 64 ஜி.பி. விலை ரூ. 40,999 என்றும் அமேசானில் ரூ. 53,900 என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

     ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட்

    ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மினி வாங்குவோருக்கு இதர தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்டில் ஐபோன் 12 மினி 128 ஜி.பி. விலை ரூ. 54,999 ஆகும். அமேசான் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் இந்த மாடல் ரூ. 64,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்திய விலை உயர்வின் போது நீக்கிய சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 499 பிரீபெயிட் சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது. முந்தைய விலை உயர்வின் போது ரூ. 499 சலுகை நீக்கப்பட்டு இருந்தது. தற்போது சந்தாதாரர்களை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் ஜியோ ரூ. 499 சலுகை கிட்டத்தட்ட முந்தைய பலன்களுடனேயே மீண்டும் வழங்கப்படுகிறது.

    ஜியோ ரூ. 499 சலுகையில் தற்போது 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சேவைக்கான ஒரு வருட சந்தா வழங்கப்படுகிறது. இவைதவிர தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 56 நாட்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

     ஜியோ சலுகை

    இந்த பலன்களுடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகை ஜியோ செயலி, வலைதளம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலுக்கான முன்பதிவை இந்திய சந்தையில் துவங்கி இருக்கிறது.


    சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலுக்கான இந்திய முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு சாம்சங் இந்தியா ஸ்டோரில் நடைபெற்று வருகிறது.

    புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி ஸ்மார்ட் டேக் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் முன்பதிவு செய்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை ரத்து செய்து 100 சதவீத தொகையை திரும்ப பெறலாம். 

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ.

    கேலக்ஸி எஸ்21 எப்.இ. இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், சர்வதேச சந்தையில் விற்பனை துவங்கும் ஜனவரி 11 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் விரைவில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் டென்சார் பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவே இல்லை. பிக்சல் 3 வெளியீட்டை தொடர்ந்து பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் இந்திய வெளியீட்டை கூகுள் தவிர்த்து வருகிறது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த காலாண்டு இறுதிக்குள் கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் பிக்சல் 6ஏ என அழைக்கப்படலாம்.

     கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்

    அம்சங்களை பொருத்தவரை பிக்சல் 6ஏ மாடலில் 6.2 இன்ச் பிளாட் ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டென்சார் சிப்செட், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. இரண்டாவது சென்சார், 8 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படலாம்.
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் விலையை இந்தியாவில் திடீரென குறைத்து இருக்கிறது.


    தென் கொரியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் இந்தியாவில் தனது கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது. விலை குறைப்பை தொடர்ந்து சாம்சங் விரைவில் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

    முன்னதாக பலமுறை வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இதுமட்டுமின்றி கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

     கேலக்ஸி ஏ12

    சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4 ஜி.பி. + 64 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. + 128 ஜி.பி. என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இதன் பேஸ் மாடல் விலை ரூ. 13,999 இல் இருந்து ரூ. 12,999 என்றும் 6 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ. 16,499 இல் இருந்து ரூ. 15,499 என்றும் குறைக்கப்பட்டு உள்ளது.
    ஐபோன்களில் பேட்டரி சார்ஜ் அதிக நேரம் நீடிப்பதில்லை என்று கூறும் வாடிக்கையாளர்கள், பேட்டரி பிரச்சனையை சமாளிக்க சில வழிமுறைகள் உள்ளன.

    பெரும்பாலும் ஐபோன் என்றாலே பேட்டரி நீண்ட நேரம் நீடிக்காது என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

    கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 13 மாடல்களில் பேட்டரி திறன் முந்தைய மாடல்களை காட்டிலும் சற்று அதிகமாகவே கூட்டப்பட்டுள்ளது. ஆனாலும் வாடிக்கையாளர்கள் பேட்டரி சார்ஜ் அதிக நேரம் நீடிப்பதில்லை என்றே கூறுகின்றனர்.

    இந்த பிரச்சனையை சமாளிக்க தற்போது சில வழிமுறைகளை நாம் காண்போம்:

    ஐபோன்

    முதலில் செட்டிங்ஸ் சென்று > அதில் ஜெனரல் கிளிக் செய்து > பேக்ரவுண்ட் ஆப் ரெப்ரெஷ் > ஆஃப் செய்யவும் 

    Settings > General > Background App Refresh

    இரண்டாவதாக மீண்டும் செட்டிங்ஸ் சென்று > பேட்டரி ஹெல்த் > ஆப்டிமைஸ்டு பேட்டரி சார்ஜிங் டாக்கில் செய்யவும் 

    Settings > Battery > Battery Health > Toggle on Optimized Battery Charging

    மூன்றாவதாக மீண்டும் செட்டிங்ஸ் சென்று > அக்செசபிலிட்டி > மோஷன் > ஆட்டோ பிளே மெசேஜ் எபக்ட்ஸ் மற்றும் ஆட்டோ பிளே வீடியோ ப்ரிவியூஸ் டாக்கில் செய்யவும் 

    Settings > Accessibility > Motion > Toggle off Auto-Play Message Effects and Auto-Play Video Previews

    மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் செய்தால் உங்கள் ஐபோனின் பேட்டரி சார்ஜ் நீண்ட நேரம் நீடிக்கும். இந்த வழிமுறை புதிய மற்றும் பழைய என அனைத்து ஐபோன்களுக்கும் பொருந்தும்.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 2399 பிரீபெயிட் சலுகை வேலிடிட்டியை நீட்டித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பி.எஸ்.என்.எல். ரூ. 2399 பிரீபெயிட் சலுகையில் 60 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டி வழங்குகிறது. அதன்படி இந்த சலுகை வேலிடிட்டி குறுகிய காலக்கட்டத்திற்கு 425 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ரூ. 2399 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். டியூன்ஸ், இரோஸ் நௌ சந்தாவும் வழங்கப்படுகிறது. வேலிடிட்டி நீட்டிப்பு பற்றிய அறிவிப்பு தமிழகத்துக்கான பி.எஸ்.என்.எல். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. 

     கோப்புப்படம்

    இதுதவிர பி.எஸ்.என்.எல். ரூ. 1499 விலையிலும் பிரீபெயிட் சலுகையை வழங்கி வருகிறது. இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 2 ஜி.பி. டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.

    பி.எஸ்.என்.எல். ரூ. 1999 விலை பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 500 ஜி.பி. டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.  
    ×