என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    மெய்நிகர் தொழில்நுட்பத்தின் துணையை கொண்டு உருவாகி வரும் மெட்டாவெர்ஸ் உலகத்தில் நாம் விரும்பியதை செய்யலாம்.
    பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மெட்டாவெர்ஸ் மெய்நிகர் உலகத்தை உருவாக்கி வருவதாக அறிவித்தார். 

    மெய்நிகர் தொழில்நுட்பத்தின் துணையை கொண்டு உருவாகி வரும் இந்த மெட்டாவெர்ஸ் உலகத்தில் நாம் விளையாடலாம், நண்பர்களுடன்  கூடி அரட்டையடிக்கலாம், பாடம் கற்கலாம், நிலம் வாங்கலாம் மற்றும் விரும்பும் விஷயங்களை செய்யலாம். இணைய உலகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மெட்டாவெர்ஸ் அமையப்போவதாக பலரும் கருதுகின்றனர்.

    இந்நிலையில் மெட்டாவெர்ஸில் தங்களை இணைத்துகொள்ளும் முயற்சியில் பெரும்பாலான நிறுவனங்களும் இறங்கிவிட்டன. இதன் ஒரு பகுதியாக பிரபல பாஸ்ட் புட் நிறுவனமான மெக்டோனல்ட்ஸும் மெட்டா உலகில் இணையப்போவதாக அறிவித்துள்ளது.

    மெக்டோனல்ட்ஸ் நிறுவனம்

    இதன்மூலம் மெய்நிகர் உலகத்தில் அமைந்துள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகத்திற்கு பொதுமக்கள் செல்லலாம். அங்கு உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தவுடன், நிஜ உலகத்தில் அந்த உணவு டெலிவரி செய்யப்படும். மேலும் இசை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றையும் மெட்டாவெர்ஸில் மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்யும் என தெரிவித்துள்ளது.

    இதுதவிர டிஜிட்டல் ஓவியங்கள், இசைகள், வீடியோக்கள் ஆகியவையும் மெட்டாவெர்ஸ் மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மெக்டோனல்ட்ஸ் உணவகத்தின் திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது.
    ஏர்டெல் அறிவித்துள்ள இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் வாடிக்கையாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
    இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்கள் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் அறிவித்துள்ள இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் வாடிக்கையாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதன்படி ஏர்டெல்லின் ரூ.2999, ரூ.3359 ஆகிய இரண்டு திட்டங்களும் ஒரே பலனை அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 

    ஏர்டெல்லின் ரூ.3,359 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இந்த திட்டத்துடன்  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பு 365 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ், இலவச விங் மியூசிக் ஆகிய சேவைகளும் வழங்கப்படுகின்றன.

    ஏர்டெல் திட்டங்கள்

    இதேபோன்று ஏர்டெல்லின் ரூ.2,999 ரீசார்ஜ் திட்டத்திற்கும் இதே பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் ஆகியவை கிடைக்கின்றன. மேலும், ரூ.3,359 திட்டத்தில் உள்ளது போன்றே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பு 365 நாள்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ், இலவச விங் மியூசிக் ஆகியவையும் இந்த திட்டத்தில் வழங்கபடுகின்றன.

    இந்த அறிவிப்பு ஏர்டெல் வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி ஏர்டெல் நிறுவனத்திடம் பலரும் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    வழக்கமாக உணவு வகைகளின் பெயர்களை ஆண்ட்ராய்டு ஓ.எஸ்களுக்கு வைக்கும் கூகுள் நிறுவனம் ஆண்டாய்டு 13-க்கு ‘டிராமிசூ’ என்ற இத்தாலி உணவு வகையின் பெயரை சூட்டியுள்ளது.
    இந்தியாவில் பெரும்பான்மையாக ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களே பயன்பாட்டில் இருக்கின்றன. இதுவரை கூகுள் நிறுவனம் 12 வெர்சன் ஆண்ட்ராய்டு ஓஎஸ்களை வெளியிட்டுள்ளது. 

    ஆண்ட்ராய்டின் 12-வது வெர்சனான “ஸ்னோ கோன்” கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி பயன்பாட்டில் உள்ளது. 

    இந்நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ் பிரீவ்வை வெளியிட்டுள்ளது.

    இந்த ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ் பதிவு செய்யப்பட்ட, குறிப்பிட்ட டெவலப்பர்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓ.எஸ்ஸின் பீட்டா வெர்ஷன் ஏப்ரல் மற்றும் அதற்கு பின் வரும் மாதங்களில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்

    வழக்கமாக உணவு வகைகளின் பெயர்களை ஆண்ட்ராய்டு ஓ.எஸ்களுக்கு வைக்கும் கூகுள் நிறுவனம், ஆண்டாய்டு 13-க்கு ‘டிராமிசூ’ என்ற இத்தாலி உணவு வகையின் பெயரை சூட்டியுள்ளது.

    ஆண்ட்ராய்டு 13-ன் டெவலப்பர் ப்ரீவ் 1-ஐ பிக்ஸல் 4, பிக்ஸல் 4 எக்ஸ் எல், பிக்ஸல் 4 ஏ, பிக்ஸல் 4 ஏ(5ஜி), பிக்ஸல் 5, பிக்ஸல் 5ஏ 5ஜி, பிக்ஸல் 6 மற்றும் பிக்ஸல் 6 ப்ரோ ஆகிய போன்களில் இன்ஸ்டால் செய்யலாம்.

    ஆண்ட்ராய்டு 13-ல் செயலிகளை பயன்படுத்த அருகில் உள்ள வைஃபை கருவிகளை இணைக்கும்போது ரன் டைம் அனுமதி கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓ.எஸ்ஸில் உள்ள செயலிகளுக்கு தீம் ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த புதிய ஓ.எஸ்ஸில் இதற்கு முன் இருந்ததை விட சிறந்த தீம்கள், செயலிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதில் மேம்பாடு, சிறந்த தனியுரிமை அம்சங்கள், மொழி கட்டுப்பாடுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ட்விட்டர் நிறுவனம் இந்த அம்சத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அறிமுகம் செய்து சோதனையை தொடங்கியது.
    முன்னணி சமூக வலைதள நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் “சேப்டி மோட்” அம்சத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறிய மக்கள் தொகையினருக்கு அறிமுகப்படுத்தி சோதனையை தொடங்கியது. 

    இந்த சேப்டி மோட் அம்சத்தை பயன்படுத்தும் பயனர்களின் பதிவுகளில் யாரேனும் ஆபாசமாகவோ, வன்முறையை தூண்டும் விதமாகவோ கமெண்ட் செய்தால் அவர்களுடைய கணக்கு தானாகவே 7 நாட்களுக்கு பிளாக் செய்யப்படும். 

    ட்விட்டர் சேப்டி மோட்

    இந்த அம்சம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த அம்சத்தை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 50 சதவீத ட்விட்டர் கணக்குகளுக்கு விரிவுப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

    இதன்பின் இந்த அம்சம் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கும் இந்த அம்சங்கள் விரைவில் பீட்டா பயனர்களுக்கும், பிறகு பொது பயன்பாட்டுக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. பயனர்கள் எளிய வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது. 

    முதலில் குறுஞ்செய்தி வசதியுடன் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் பின்னாளில் வாய்ஸ் மெசேஜ், ஆடியோ கால்கள், வீடியோ கால்கள், ஸ்டேட்டஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் மேலும் சில அம்சங்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, வாட்ஸ்அப்பில் குரூப் காலில் நாம் பேசும்போது, எதிரே யார் பேசுகின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்கான வேவ்ஃபார்ம் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான முயற்சியில் வாட்ஸ் ஆப் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஸ்மார்ட்போன் தவிர கணினியில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும் பயனர்களுக்கும் வாய்ஸ் கால் செய்யும் வசதி விரைவில் தரப்படவுள்ளது.

    வாட்ஸ்அப் குரூப் கால்

    இதுமட்டும் இல்லாமல் வாட்ஸ்அப்பில் கவர் போட்டோ வைக்கும் வசதியும் விரைவில் வரவுள்ளது. தற்போது வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி தரப்பட்டுள்ள நிலையில், சாதாரண பயனர்களுக்கும் இந்த வசதி தரப்படவுள்ளது.

    வாட்ஸ்அப்பில் தற்போது உள்ள குரூப் சேவை போல கம்யூனிட்டி சேவையும் தொடங்கப்படவுள்ளது. இந்த கம்யூனிட்டி சேவையில் பல வாட்ஸ்அப் குரூப்களை அட்மினின் அனுமதியுடன் ஒன்றாக இணைக்க முடியும்.

    இது மட்டுமல்லாமல், வாட்ஸ்அப்பில் தடை செய்யப்படும் அக்கவுண்ட்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் பயனாளர்களுக்கு, பதில் அளிப்பதற்கான அம்சம் ஒன்றையும் வாட்ஸ் அப் நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. 

    தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கும் இந்த அம்சங்கள் விரைவில் பீட்டா பயனர்களுக்கும், பிறகு பொது பயன்பாட்டுக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜியோவின் 5ஜி பரிசோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா முழுவதும் 2022-2023 நிதியாண்டில் 5ஜி சேவை தொடங்கப்படும் என பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து பெரும் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே மொபைல் நிறுவனங்கள் 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டன.

    இந்நிலையில் தற்போது 5ஜி சோதனைக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஓப்போ நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஜியோ நிறுவனம் 5ஜி பரிசோதனையை டெல்லி, புனே, மும்பை, குஜராத் ஆகிய மாநிலங்களில் நிகழ்த்தியது. இதை தொடர்ந்து அதிவேக மற்றும் குறைந்த வேக 5ஜி சேவை சோதனையை ஓப்போ நிறுவனத்தின் ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்போன்களில் ஜியோ பரிசோதித்தது. 

    ஒப்போ ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்

    இந்த சோதனை வெற்றி பெற்றிருப்பதாக ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஓப்போ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஜியோவின் 5ஜி சேவையை சோதனை செய்ததில் இடையூரே இல்லாமல் 4கே வீடியோக்களை பார்க்க முடிந்தது. அதேபோல அப்லோட் மற்றும் டவுன்லோட்கள் அதிவேகத்தில் இருக்கின்றன. இந்த சோதனை வெற்றி அடைந்ததுள்ளது. அதிகாரப்பூர்வமாக 5ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கு முன் மேலும் சோதனைகள் நடத்தப்படும்.

    இவ்வாறு ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
    இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய அம்சம் ‘பிரைவேட் ஸ்டோரி லைக்ஸ்’ என அழைக்கப்படுகிறது.
    இணையவாசிகள் தங்களது புகைப்படங்களை பகிரும் பிரபல சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. அதில் ஸ்டோரிஸ், ரீல்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

    இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை லைக் செய்யும் புதிய அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    இதன்மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இனி தாங்கள் பின் தொடர்பவர்களின் இன்ஸ்டா ஸ்டோரிகளை லைக் செய்ய முடியும். முன்னதாக பயனர்கள் ஸ்டோரிக்களை ஷேர் செய்யவும், கமெண்ட் மூலம் ரிப்ளை செய்யும் அம்சங்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் தற்போது ஸ்டோரிகளை லைக் செய்யும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    இன்ஸ்டாகிராம் நிறுவன தலைவர் ஆடம் மொசெரி

    இந்த புதிய அம்சம் ‘பிரைவேட் ஸ்டோரி லைக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. 

    இந்த முறையில் ஸ்டோரிகளை லைக் செய்யும் போது பயனருக்கு டைரெக்ட் மெசேஜ் நோட்டிபிகேஷன் செல்லாது. அதே போன்று இந்த அம்சத்தில் எத்தனை பேர் லைக் செய்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையும் காட்டாது. 

    இதுகுறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைவர் ஆடம் மொசெரி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்தார்.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்8 மாடலின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் எஸ்8 மாடல் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதன்  வடிவமைப்பு, அம்சங்கள் பற்றிய விவரங்கள் அதிகளவில் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதன் விலை விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது. 

    அதன்படி கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா டாப் எண்ட் மாடல் விலை 1699 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,43,712 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம். இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., குவால்காம் ஸ்னாப்ராகன் 8 ஜென் 1 பிராசஸர், 11,200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 14.6 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என தெரிகிறது. 

     சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7

    கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை 999 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 84,501 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இதில் 12.4 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 10.090 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. 

    சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 பேஸ் வேரிண்ட் மாடலில் 11 இன்ச் டி.எப்.டி. ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இதன் விலை 970 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 82,048 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
    ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐமேக் ப்ரோ டிசைன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் தனது கணினி மாடல்கள் ஒவ்வொன்றையும் மெல்ல அப்டேட் செய்து வருகிறது. அப்டேட் செய்யப்படும் மாடல்களில் ஆப்பிள் சிலிகான் பிராசஸர்கள் முதன்மை அம்சமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐமேக் ப்ரோ வெளியீடு இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும்  புதிய விவரங்களின் படி புதிய ஐமேக் ப்ரோ வடிவமைப்பு மாற்றப்பட்டு மேம்பட்டு சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் 27 இன்ச் ஐமேக் ப்ரோ மாடலின் டிசைன் பார்க்க எம்1 சிப்செட் கொண்டிருக்கும் 24 இன்ச் ஐமேக் மாடலை போன்றே காட்சியளிக்கும் என அவவர் தெரிவித்தார். 

     ஆப்பிள் ஐமேக்

    புதிய மேம்பட்ட ஐமேக் ப்ரோ மாடலில் மினி எல்.இ.டி. பேக்லைட்டிங் மர்றும் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐமேக் ப்ரோ ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்களை கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதே பிராசஸரகள் 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிதாக ஐமேக் ப்ரோ வெளியிடுவது பற்றி வழக்கம் போல் ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய சாதனங்கள் இந்த ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இவை ஸ்ப்ரிங் நிகழ்வில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஆப்பிள் ஐமேக் ப்ரோ மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் ப்ரோ 2, எம்2 சிப்செட், புதிய மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி  உள்ளது.
    மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய இன் நோட் 2 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ்  1080x2400 பிக்சல் அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 4GB ரேம், 64GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., கனெக்டிவிட்டிக்கு 4ஜி எல்.டி.இ., வை-பை, ப்ளூடூத்  5, யு.எஸ்.பி. டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2

    இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் பிளாக மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்தியாவில் புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 விலை ரூ. 13,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜனவரி 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 12,490 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

    கோவின் தளத்தில் இனி ஒற்றை நம்பர் பதிவு செய்து ஆறு பயனர்களை இணைக்கும் வசதி வழங்கப்படுகிறது.


    இந்தியா முழுக்க கொரோனா தொற்றின் மூன்றாவது அலை கோரத்தாண்டம் ஆடி வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை சீரற்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    மத்திய, மாநில அரசுகள் சார்பில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு முழுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு கோவின் இணையதளம் மூலம் முன்பதிவு மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

     கோவின்

    தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் பெயர், தொலைபேசி மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவை கோவின் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கோவின் தளத்தில் மத்திய அரசு புது மாற்றங்களை மேற்கொண்டு இருக்கிறது. 

    தடுப்பூசி செலுத்திய பின் அதற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்ட நபருக்கு தொலைபேசி எண்றிற்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை வைத்து சான்றிதழை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதில் ஒரு மொபைல் எண்ணை பயன்படுத்தி நான்கு நபர்களுக்கு முன்பதிவு செய்யும் வகையில் கோவின் தளம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 

    தற்போதைய மாற்றங்களின் படி கோவின் வலைதளத்தில் ஒரு மொபைல் எண் கொண்டு ஆறு பேருக்கு முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒப்போ பேட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த டேப்லெட் மாடல் 2022 முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதன் சரியான வெளியீட்டு தேதி இன்னமும் மர்மமாகவே உள்ளது. தற்போது இந்த மாடலின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    அதன்படி புதிய ஒப்போ பேட் மாடல் OPD2101 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது சிங்கில் கோர் சோதனையில் 4582 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 12,259 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஒப்போ பேட் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அட்ரினோ 650 ஜி.பி.யு. மற்றும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.

     ஒப்போ பேட்

    இந்த டேப்லெட் மாடல் முதலில் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். உடன் அறிமுகமாகி பின் கலர் ஓ.எஸ். 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 11 இன்ச் எல்.சி.டி. பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ பேட் மாடல் 8080 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது. 

    ×