என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் சமீபத்தில் நீக்கிய ரூ. 601 விலை பிரீபெயிட் சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது.


    வி நிறுவனம் ரூ. 601 பிரீபெயிட் சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது. எனினும், இம்முறை இதன் வேலிடிட்டி 28 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த சலுகை 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    வேலிடிட்டி மட்டும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 601 வி சலுகையின் பலன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சலுகையில் தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    வி ரூ. 601 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் வார இறுதி நாட்களில் டேட்டா ரோல்-ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை வி செயலியில் ரீசார்ஜ் செய்யும் போது ரூ. 100 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
    அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சிறுமிக்கு விடுத்த அபாயகரமான சேலன்ஜ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    அமேசான் நிறுவனத்தின் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட், சிறுமிக்கு விடுத்த சேலன்ஜ் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. 10-வயது சிறுமியிடம் அலெக்சா, மின் இணைப்புள்ள வயரில் நாணயத்தை கொண்டு தொட கூறி இருக்கிறது. 

    இதுபற்றிய சேலன்ஜ் ஒன்று டிக்டாக்கில் டிரெண்ட் ஆனதாகவும், இந்த டிரெண்ட் செய்தியாக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை கொண்டு அலெக்சா சிறுமியிடம் இவ்வாறு கூறி இருக்கலாம் என தெரிகிறது.

     அமேசான்  அலெக்சா

    இந்த சம்பவதத்தை சிறுமியின் பெற்றோர் தங்களின் டுவிட்டர் டைம்லைனில் பதிவேற்றம் செய்தனர். பதிவுடன் அலெக்சா ஆக்டிவிட்டி ஹிஸ்ட்ரி ஸ்கிரீன்ஷாட்டையும் இணைத்துள்ளனர். ஸ்கிரீன்ஷாட் படி, சிறுமி முதலில் 'எனக்கு ஏதேனும் சவால் விடு,' என கேட்டிருக்கிறார். 

    இதற்கு பதில் அளித்த அலெக்சா, 'நான் இணையத்தில் ஒன்றை கண்டறிந்தேன். வலைதளத்தின் படி சவால் மிகவும் எளிமையானது தான். பவர் பிளக்-இல் போன் சார்ஜரை சொருகி, அதன் மறுமுனையில் நாணயம் ஒன்றை வைக்கவும்,' என பதில் அளித்துள்ளது.

    இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய அமேசான், 'இதுபற்றிய தகவல் கிடைத்ததும், அதனை சரிசெய்யும் முயற்சியை துவங்கிவிட்டோம்,' என தெரிவித்துள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகம் செய்த பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகை திடீரென நீக்கப்பட்டது.


    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சலுகை கட்டணங்களை சமீபத்தில் உயர்த்தின. ரிலையன்ஸ் ஜியோவும் தன் பங்கிற்கு பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தியது. பின், பயனர்களை மகிழ்விக்கும் நோக்கில் ரூ. 1 விலையில் சலுகையை அறிமுகம் செய்தது.

    ரூ.1 ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் ஓரளவு சுமாரான பலன்களே வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சலுகை நீக்கப்பட்டது. ஜியோ ரூ. 1 பிரீபெயிட் சலுகையில் 100 எம்.பி. அதிவேக 4ஜி டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது. பின் இதன் பலன்கள் 10 எம்.பி.-யாக குறைக்கப்பட்டது.

     கோப்புப்படம்

    குறைந்த விலை காரணமாக இந்த சலுகை பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனினும், ரூ. 1 ஜியோ சலுகை தற்போது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஜியோ மொபைல் செயலியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

    ஏர்டெல் நிறுவனம் தினசரி டேட்டா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது.

    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளுக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்குகிறது. எனினும், இந்த சலுகை ஏர்டெல் தேங்ஸ் செயலி பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் தேர்வு செய்யும் போது, கூடுதல் டேட்டா கூப்பன்களும் வழங்கப்படுகிறது.

    ரூ. 359 விலையில் கிடைக்கும் ஏர்டெல் பிரீபெயிட் சலுகை தற்போது ரூ. 309-க்கு கிடைக்கிறது. இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 2 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    ஏர்டெல் ரூ. 599 பிரீபெயிட் சலுகைக்கும் ரூ. 50 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை ரூ. 549 விலையில் வழங்கப்படுகிறது.
    இந்தியாவில் சென்னை உள்பட மேலும் சில நகரங்களில் 5ஜி சேவை எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


    இந்தியாவில் தற்போது 4ஜி இணைய சேவை வழங்கப்படுகிறது. பல நாடுகளில் 5ஜி சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் அந்த சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    5ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் 5ஜி சேவை மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை பயன்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் 5ஜி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சோதனைகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு 5ஜி சேவை சென்னை உள்பட 13 நகரங்களில் முதலில் அறிமுகமாக இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

     கோப்புப்படம்

    "அடுத்த ஆண்டு 5ஜி சேவை, சென்னை, அகமதாபாத், டெல்லி, பெங்களூர், சண்டிகர், காந்திநகர், குர்கிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, புனே, மும்பை ஆகிய 13 நகரங்களில் முதலில் வழங்கப்பட இருக்கிறது."

    "இந்தியாவில் 5ஜி சேவையை வணிக ரீதியாக எந்த தொலைத் தொடர்பு நிறுவனம் முதலில் வழங்க போகிறது என்பதை மத்திய தொலைத் தொடர்பு துறை அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை. தொலைத் தொடர்பு துறை 5ஜி சேவைக்கான சோதனையை நடத்த எட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தது. இந்த சோதனை 2018-ம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைய இருக்கிறது," என மத்திய தொலைத் தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2545 விலை பிரீபெயிட் சலுகை வேலிடிட்டியை நீட்டித்து இருக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 2545 பிரீபெயிட் சலுகை வேலிடிட்டி மாற்றப்பட்டது. புத்தாண்டு சலுகையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஜியோ ரூ. 2545 சலுகை 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. தற்போது இந்த சலுகையின் வேலிடிட்டி 29 நாட்கள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ரூ. 2545 சலுகை தற்போது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த சலுகையை ஏற்கனவே ஜியோ சேவையை பயன்படுத்துவோர் மற்றும் புதிதாக ஜியோ நெட்வொர்க்கில் இணைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 

     கோப்புப்படம்

    இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜியோ வலைதளம் மற்றும் மைஜியோ செயலியில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோ செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 2545 சலுகை வேலிடிட்டி நீட்டிப்பு ஜனவரி 2, 2022 வரை வழங்கப்பட இருக்கிறது.

    வி நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் இரண்டு சலுகைகளை திடீரென நீக்கி இருக்கிறது.


    ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை சத்தமின்றி நீக்கின. தற்போது வி நிறுவனமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை நீக்கி இருக்கிறது. 

    வி நிறுவனத்தின் ரூ. 601 மற்றும் ரூ. 701 பிரீபெயிட் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. இதில் ரூ. 601 சலுகையில் 75 ஜி.பி. டேட்டா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சேவைக்கான ஒரு வருட சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 701 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    இரு சலுகைகள் நீக்கப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. எனினும், இதே பலன்களை வழங்கும் ரூ. 501, ரூ. 901 மற்றும் ரூ. 3099 விலை பிரீபெயிட் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. ரூ. 3099 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ. 4 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்குகிறது.


    ரியல்மி நிறுவனம் வருடாந்திர விற்பனையை அறிவித்து இருக்கிறது. இந்த விற்பனை நாளை (டிசம்பர் 26) துவங்கி டிசம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ரியல்மி ஸ்மார்ட்போன் மற்றும் இதர அக்சஸரீக்களுக்கு அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது.

    ரியல்மி சி சீரிஸ், நார்சோ சீரிஸ், ரியல்மி ஜி.டி. நியோ 2 5ஜி போன்ற மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. தள்ளுபடி ரூ. 500-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 4 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனையின் போது ரியல்மி ஜி.டி. நியோ 2 5ஜி மாடலின் 8 ஜி.பி. + 128 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ. 31,999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் 12 ஜி.பி. + 256 ஜி.பி. ரூ. 35,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

     ரியல்மி ஸ்மார்ட்போன்

    ரியல்மி ஜி.டி. மாஸ்டர் எடிஷனுக்கு ரூ. 4 ஆயி்ரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 6 ஜி.பி. + 256 ஜி.பி. ரூ. 25,999-க்கு கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. + 128 ஜி.பி. ரூ. 27,999 விலைக்கு கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் 8 ஜி.பி. + 256 ஜி.பி. ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ரியல்மி 8 ஜி.பி. + 128 ஜி.பி. மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ளது. ரியல்மி 8எஸ் 8 ஜி.பி. + 128 ஜி.பி. ரூ. 19,999 விலைக்கு கிடைக்கிறது. ரியல்மி 8 6 ஜி.பி. + 128 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 16,999 மற்றும் ரூ. 17,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ரியல்மி போன்றே நார்சோ சீரிஸ் மாடல்களுக்கும் அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் ரூ. 49 விலையில் புதிய சலுகையை அறிவிக்க இருக்கிறது.


    டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய வருடாந்திர சலுகைகளை வழங்க இருக்கிறது. அதன்படி ரூ. 499 மொபைல் சலுகையில் ஹெச்.டி. தர வீடியோக்களை ஒரு சாதனத்தில் பார்த்து ரசிக்க முடியும். மேலும் பழைய மாதாந்திர சலுகைகளையும் நீக்கியது.

    தற்போது ரூ. 99 விலையில் புதிய மாதாந்திர சலுகையை அறிவிக்க இருக்கிறது. இந்த சலுகையும் அதே பலன்களை வழங்குகிறது. மேலும் கார்டு, பேடிஎம், போன்பெ மற்றும் யு.பி.ஐ. கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 50 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

    முதல் மாதத்திற்கு இந்த கட்டணம் பொருந்தும். அதன்பின் கட்டணம் ரூ. 99 என மாறிவிடும். ஐ.பி.எல். அல்லது இதர கிரிக்கெட் தொடருக்காக மட்டும் ஹாட்ஸ்டார் சந்தா தேர்வு செய்வோருக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும். மற்றப்படி ரூ. 499 விலையில் கிடைக்கும் வருடாந்திர சலுகை சிறப்பானதாக இருக்கும்.
    கூகுள் நிறுவனம் தனது ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் விற்பனையை திடீரென நிறுத்தி இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் மாடலை 2017 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஏப்ரல் 2018 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கூகுள் ஹோம் மினி விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் கூகுள் ஸ்டோர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    கூகுள் ஸ்டோர் தளத்தில் ஹோம் மினி ஸ்பீக்கரை தேடும் போது, இனி எப்போதும் கிடைக்காது என காண்பிக்கிறது. மேலும் கூகுள் தேடல்களில் இந்த ஸ்பீக்கரை கூகுள் விற்பனை செய்வதை குறிக்கும் பதில்கள் எதுவும் பட்டியலிடப்படவில்லை. அந்த வகையில் கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கர் விற்பனை நிறுத்தப்பட்டது. எனினும், இதனை மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் வாங்கிக் கொள்ளலாம்.

     கூகுள் ஹோம் மினி

    இந்தியாவில் கூகுள் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் சால்க் நிற வேரியண்ட் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 2,745 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் சார்கோல் பிளாக் மற்றும் கோரல் நிற வேரியண்ட் விலை முறையே ரூ. 2,898 மற்றும் ரூ. 4,899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு 2 சி.இ. ஸ்மார்ட்போன் விவரங்கள் பி.ஐ.எஸ். தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் நார்டு 2 சி.இ. ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்தியாவில் வெளியீடு உறுதியாகி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் நார்டு 2 சி.இ. ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய நார்டு 2 சி.இ. மாடலில் 6.4 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் வழங்கப்படுகிறது. பி.ஐ.எஸ். தளத்தில் இடம்பெற்று இருப்பதால், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இந்த மாடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    தற்போதைய தகவல்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி, 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 16 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் தனது 8-வது ஆண்டு விழாவை இந்த வாரம் கொண்டாடி வருகிறது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் விற்றுள்ளது. டிசம்பர் 17 வரையிலான விற்பனையில் இந்த மைல்கல்லை ஒன்பிளஸ் எட்டியது. இதுதவிர உலகம் முழுக்க இரண்டு கோடிக்கும் அதிகமானோர் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களாகி இருக்கின்றனர்.

    ஒன்பிளஸ் கம்யூனிட்டி ஃபோரம் உறுப்பினர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 1.10 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இந்த தளத்தில் 11.6 கோடி குறுந்தகவல்கள் பகிரப்படுகின்றன.

     ஒன்பிளஸ்

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் 29 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் பிரிவில், ஒன்பிளஸ் 30 சதவீத பங்குகளை பெற்றுள்ளது.

    வட அமெரிக்காவில் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் ஒன்பிளஸ் நிறுவனம் 712 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் பட்டியலில் ஒன்பிளஸ் முதலிடம் பிடித்துள்ளது. 

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 சீரிஸ் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்திலும் நார்டு 2 சி.இ. மற்றும் மிட் ரேன்ஜ் மாடல்கள் அடுத்தடுத்து அறிமுகமாகின்றன.

    ×