என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்

X
கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்
விரைவில் இந்தியா வரும் பிக்சல் ஸ்மார்ட்போன்
By
மாலை மலர்4 Jan 2022 11:28 AM GMT (Updated: 4 Jan 2022 11:28 AM GMT)

கூகுள் நிறுவனம் விரைவில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் டென்சார் பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவே இல்லை. பிக்சல் 3 வெளியீட்டை தொடர்ந்து பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் இந்திய வெளியீட்டை கூகுள் தவிர்த்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த காலாண்டு இறுதிக்குள் கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் பிக்சல் 6ஏ என அழைக்கப்படலாம்.

அம்சங்களை பொருத்தவரை பிக்சல் 6ஏ மாடலில் 6.2 இன்ச் பிளாட் ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டென்சார் சிப்செட், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. இரண்டாவது சென்சார், 8 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படலாம்.
Next Story
×