என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ஐபோன் 12 மினி
ஐபோன்களுக்கு ரூ. 10 ஆயிரம் விலை குறைப்பு வழங்கும் ப்ளிப்கார்ட்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விலை குறைப்பு வழங்கப்படுகிறது.
அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது.
ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களில் ஆப்பிள் ஏ12 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸர் 5ஜி மற்றும் 4ஜி எல்.டி.இ. கனெக்டிவிட்டி வழங்குகிறது.

ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் விலை குறைப்பு
ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மாடல் 64 ஜி.பி. விலை ரூ. 53,999 என மாறி இருக்கிறது. அமேசானில் இதன் விலை ரூ. 63,900 என மாறி இருக்கிறது. சில்லறை விற்பனை மையங்களில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 65,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ப்ளிப்கார்ட், அமேசான் தளங்களில் ஐபோன் 12 128 ஜி.பி. விலை ரூ. 64,999 என்றும் சில்லறை விற்பனை மையங்களில் ரூ. 70,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மினி 64 ஜி.பி. விலை ரூ. 40,999 என்றும் அமேசானில் ரூ. 53,900 என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மினி வாங்குவோருக்கு இதர தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்டில் ஐபோன் 12 மினி 128 ஜி.பி. விலை ரூ. 54,999 ஆகும். அமேசான் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் இந்த மாடல் ரூ. 64,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story