search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஜியோ 5ஜி
    X
    ஜியோ 5ஜி

    அதிவேக இணைய சேவைக்கு தயாரா? பிரபல மொபைல் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சோதனை செய்யும் ஜியோ

    ஜியோவின் 5ஜி பரிசோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா முழுவதும் 2022-2023 நிதியாண்டில் 5ஜி சேவை தொடங்கப்படும் என பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து பெரும் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே மொபைல் நிறுவனங்கள் 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டன.

    இந்நிலையில் தற்போது 5ஜி சோதனைக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஓப்போ நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஜியோ நிறுவனம் 5ஜி பரிசோதனையை டெல்லி, புனே, மும்பை, குஜராத் ஆகிய மாநிலங்களில் நிகழ்த்தியது. இதை தொடர்ந்து அதிவேக மற்றும் குறைந்த வேக 5ஜி சேவை சோதனையை ஓப்போ நிறுவனத்தின் ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்போன்களில் ஜியோ பரிசோதித்தது. 

    ஒப்போ ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்

    இந்த சோதனை வெற்றி பெற்றிருப்பதாக ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஓப்போ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஜியோவின் 5ஜி சேவையை சோதனை செய்ததில் இடையூரே இல்லாமல் 4கே வீடியோக்களை பார்க்க முடிந்தது. அதேபோல அப்லோட் மற்றும் டவுன்லோட்கள் அதிவேகத்தில் இருக்கின்றன. இந்த சோதனை வெற்றி அடைந்ததுள்ளது. அதிகாரப்பூர்வமாக 5ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கு முன் மேலும் சோதனைகள் நடத்தப்படும்.

    இவ்வாறு ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×