என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்

X
ஆப்பிள் ஐமேக்
புதிய ஐமேக் ப்ரோ டிசைன் இப்படி தான் இருக்குமா? இணையத்தில் வெளியான புது தகவல்
By
மாலை மலர்31 Jan 2022 8:35 AM GMT (Updated: 31 Jan 2022 8:35 AM GMT)

ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐமேக் ப்ரோ டிசைன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது கணினி மாடல்கள் ஒவ்வொன்றையும் மெல்ல அப்டேட் செய்து வருகிறது. அப்டேட் செய்யப்படும் மாடல்களில் ஆப்பிள் சிலிகான் பிராசஸர்கள் முதன்மை அம்சமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐமேக் ப்ரோ வெளியீடு இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் புதிய விவரங்களின் படி புதிய ஐமேக் ப்ரோ வடிவமைப்பு மாற்றப்பட்டு மேம்பட்டு சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் 27 இன்ச் ஐமேக் ப்ரோ மாடலின் டிசைன் பார்க்க எம்1 சிப்செட் கொண்டிருக்கும் 24 இன்ச் ஐமேக் மாடலை போன்றே காட்சியளிக்கும் என அவவர் தெரிவித்தார்.

புதிய மேம்பட்ட ஐமேக் ப்ரோ மாடலில் மினி எல்.இ.டி. பேக்லைட்டிங் மர்றும் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐமேக் ப்ரோ ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்களை கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதே பிராசஸரகள் 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிதாக ஐமேக் ப்ரோ வெளியிடுவது பற்றி வழக்கம் போல் ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய சாதனங்கள் இந்த ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இவை ஸ்ப்ரிங் நிகழ்வில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐமேக் ப்ரோ மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் ப்ரோ 2, எம்2 சிப்செட், புதிய மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×