என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    வீடியோ பிரியர்களுக்கு அமேசான் பிரைம் அறிமுகமானது போல வீடியோ கேம் பயனர்களை கவர இந்த சேவை அறிமுகமாகியுள்ளது.
    ஆன்லைனில் புத்தக விற்பனை தளமாக அறிமுகமாகிய அமேசான் நிறுவனம் இன்று அமேசான் பிரைம் வீடியோ, கிண்டில், அமேசான் ஆடிபிள் உள்ளிட்ட பல்வேறு இணைய சேவைகளை வழங்கி வருகிறது. 

    இந்நிலையில் தற்போது வீடியோ கேம் விளையாடுபவர்களையும் கவரும் வகையில் அமேசான் நிறுவனம் அமேசான் லூனா என்ற கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. 

    தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த சேவையின் மூலம் ஃபயர் டிவி, ஃபயர் டேப்லெட், விண்டோஸ் கணினி, குரோம்புக், மேக், ஐபோன், ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் கேம்கள் விளையாட முடியும்.

    இந்த லூனாவில் 3 புதிய சேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரைம் கேமிங் சேனல் மூலம் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் இலவசமாக கேம் விளையாடலாம். ரெட்ரோ சேனல் மூலம் பழைய கேம்களை விளையாட முடியும். மேலும் ஜேக்பாக்ஸ் கேம் சேனலிலும் புதுவகையான கேம்கள் விளையாட கிடைக்கும்.

    அமேசான் லூனா

    ட்விட்ச் நிறுவனத்துடன் இணைந்து லைவ் ஸ்ட்ரீமிங் வசதியையும் லூனா வழங்கியுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.

    மேலும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொருமாதமும் முக்கியமான கேம்கள் இலவசமாக விளையாட கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 

    இந்த லூனா சேவைக்கு இந்திய மதிப்பில் மாதம் ரூ.750-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லூனா ஃபேமிலி சேனலுக்கு இந்திய மதிப்பில் ரூ.450-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சேவை இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டிக்டாக் பயனர்களை தன்பக்கம் இழுப்பதற்காக இன்ஸ்டாகிராம் இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    இன்று இணையவாசிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது.

    ஆரம்பத்தில் புகைப்படங்களை பகிரும் சமூக வலைதளமாக இருந்த இன்ஸ்டாகிராம் இன்று வீடியோக்கள், ரீல் வீடியோக்கள் உள்ளிட்ட பல அம்சங்களை வழங்கி வருகிறது.

    இன்று உலகம் முழுவதும் இணையத்தில் அதிகம் வீடியோக்கள் தான் பார்க்கப்படுகின்றன. இதனால் பயனர்கள் வீடியோ காணும் அனுபவத்தை மேம்படுத்துவதில் இன்ஸ்டாகிராம் தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில் அதில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போது ஆட்டோ ஜெனரேட்டட் கேப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை அப்லோட் செய்பவர்கள் கேப்ஷனை (சப் டைட்டில்) தனியாக சேர்க்க வேண்டும். ஆனால் இனி வீடியோவில் பேசப்படும் வார்த்தைகள் தானாக மொழிபெயர்க்கப்பட்டு கேப்ஷனில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை பயன்படுத்துவதற்கு பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலிக்குள் Advanced Settings > Accessibility > Show Captions சென்று செட்டிங்கை மாற்றிகொள்ள வேண்டும்.

    இன்ஸ்டாகிராம் ஆட்டோ கேப்ஷன் அம்சம்

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ஆட்டோ கேப்ஷன் அம்சத்தில் தற்போது 17 மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலம், ஃபிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலி, ரஷ்யன், ஜப்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் அறிமுகமாகியுள்ள இந்த அம்சத்தில் தமிழ் மொழி இன்னும் இடம்பெறவில்லை.

    டிக்டாக் அடைந்த வளர்ச்சி மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பின்னடைவை சந்திக்க வைத்தது. டிக்டாக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆட்டோமேட்டட் கேப்ஷனை கொண்டு வந்தது. இதையடுத்து டிக்டாக் பயனர்களை தன்பக்கம் இழுப்பதற்காக இன்ஸ்டாகிராமும் தற்போது இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    வாட்ஸ்அப்பின் கொள்கையை மீறியதாக இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
    வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 18,58,000 கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    இந்த கணக்குகள் வாட்ஸ்அப்பின் கொள்கைகளை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதிக அளவில் உண்மைக்கு புறம்பான மெசேஜ்களை ஃபார்வெர்ட் செய்தது, அச்சுறுத்தும் வகையில் வாட்ஸ்அப்பில் தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    இதுபோல உங்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டால், வாட்ஸ்அப் சப்போர்ட்டை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

    நம் கணக்கு வெரிஃபை செய்யப்பட்டு பின் மீண்டும் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும்.
    பயனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக கூறி இந்த செய்தியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.
    ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் எச்சரிக்கை இ-மெயில் ஒன்றை அனுப்பி வருகிறது. அந்த இ-மெயிலில், பயனர்கள் உடனடியாக ஃபேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

    முதலில் இது ஹேக்கர்களிடம் இருந்து வந்த போலி மெயிலாக இருக்கலாம் என பலரும் சந்தேகித்த நிலையில், இந்த இ-மெயில் உண்மையில் ஃபேஸ்புக்கில் இருந்து தான் அனுப்பப்பட்டது என அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

    ஃபேஸ்புக்கின் எச்சரிக்கை செய்தி

    ஃபேஸ்புக்கை நீண்ட நாட்களாக பயன்படுத்தாதவர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட வாய்ப்பிருப்பதால் இவ்வாறு இ-மெயில் அனுப்பி எச்சரிக்கை விடுக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் புரொடக்ட்டை ஆன் செய்வதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு அந்த கணக்குகளுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளது.

    குறிப்பாக ஃபேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் நபர்கள் நீண்ட நாட்களாக கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கும் இந்த மெயில் அனுப்பப்படுகிறது. காரணம் அவர்கள் கணக்கை ஹேக் செய்வது மூலம் நீண்ட நபர்களை எளிதாக சென்றடையும் அபாயம் இருக்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    இணையவாசிகள் அதிக அளவில் வீடியோக்களை பார்ப்பதில் நேரம் செலவிடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது ஐஜிடிவி செயலியை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

    இன்ஸ்டாகிராம் நிறுவனம் வீடியோக்களை அடிப்படியாக கொண்டு ஐஜிடிவி சேவையை கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து அந்த சேவையை நிறுத்தி, ஐஜிடிவியை தனி செயலியாக மாற்றியது. இந்நிலையில் தற்போது ஐஜிடிவி சேவையை முழுவதுமாக நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

    ஐஜிடிவியில் வழங்கப்பட்டு வந்த அனைத்து அம்சங்களும், வீடியோ சேவைகளும் இனி இன்ஸ்டாகிராம் செயலியிலேயே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    ஐஜிடிவி

    மேலும் தற்போது உள்ள இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோக்களில் விளம்பரங்கள் இடம்பெறும் வகையிலும் இன்ஸ்டாகிராம் மாற்றம் செய்து வருகிறது. இதன்மூலம் வீடியோ கிரியேட்டர்கள் ரீல்ஸ் மூலம் வருமானமும் பெறலாம் என கூறியுள்ளது.

    இணையவாசிகள் தற்போது அதிக அளவில் வீடியோக்களை பார்ப்பதிலேயே நேரம் செலவிட்டு வருவதால், தனியாக இயங்கும் ஐஜிடிவி சேவையை நிறுத்தி, இன்ஸ்டாகிராமில் உள்ள வீடியோ அம்சத்தை மேம்படுத்தும் வேலையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.
    இன்று பலரும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைஃபையை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
    இன்று இண்டர்நெட் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் தொடங்கி, ஒர்க் ஃபிரம் ஹோம் வேலை, மொபைல் கேம் வரை அனைத்திற்கும் இண்டர்நெட் பயன்பாடு தேவைப்படுகிறது. 

    நமக்கு தேவையான டேட்டாக்கள் மொபைல் இண்டர்நெட் மூலம் தான் பெரும்பாலும் கிடைக்கிறது. இருப்பினும் பலர் பொது இடங்களில் வைஃபை மூலம் தரப்படும் இலவச இண்டர்நெட்டையும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இருக்கும் ஆபத்துகளையும், அவற்றை எப்படி தவிர்ப்பது என்றும் இப்போது காணலாம்.

    ரெயில் நிலையம், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தரப்படும் இலவச வைஃபையைப் பயன்படுத்தும் போது, குற்றவாளிகள் எளிதாக நமது தகவல்களை திருடலாம். அவற்றின் மூலம் பண இழப்பு முதல் ஆபத்தான குற்றங்கள் வரை எதுவேண்டுமானாலும் ஏற்படலாம். இவற்றை தவிர்ப்பதற்காக நாம் சில பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். 

    இதன்படி, முதலில் நமக்கு தரப்படும் இண்டர்நெட் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு வைஃபை நெட்வொர்க் சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வைஃபை ஆபரேட்டரை தொடர்புகொண்டு சரியான சிக்னல் பெயரை கேட்டறிந்துகொள்ள வேண்டும்.

    இலவச வைஃபையில் உள்ள ஆபத்து

    ஹேக்கர்கள் போலி வைஃபையை உருவாக்கி மக்களின் தகவலின் திருடுவதை தவிர்க்க ஐபி முகவரி வழியாக உங்கள் சாதனங்களை வைஃபையுடன் இணைக்கலாம்.

    அதேபோன்று பொது இடங்களில் வரும் வைஃபை மூலம் நாம் பயன்படுத்தும் இணையதள முகவரிக்கு முன்னால் HTTPS இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும்.

    நமது கணினி மற்றும் ஸ்மார்ட்போனை பொது இடங்களில் உள்ள வைஃபையில் இணைக்கும்போது ஆன்டி-வைரஸ் அல்லது பிற இணைய பாதுகாப்பு செயலி, மென்பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

    நமது தகவல்கள் திருடப்படுவதை தடுக்க விபிஎன்-ஐ பயன்படுத்தலாம். வி.பி.என் பொது வைஃபையில் நமது தரவுகளை பாதுகாக்கும். 
    இந்த விற்பனையில் ஐபோன் எஸ்.இ ரூ.28,999 விலைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஃபிளிப்கார்ட் நிறுவனம் பிக் பச்சட் தமால் விற்பனையை மார்ச் 4 முதல் மார்ச் 6-ம் தேதி வரை அறிவித்துள்ளது.

    இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த விற்பனையில் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ, ரியல்மி 9 ப்ரோ மற்றும் ஐபோன் 12 சீரிஸ் ஆகியவற்றுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர எலக்ட்ரானிக் சாதனங்கள் 80 சதவீதத்திலும், டிவிக்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

    மேலும் இந்த பிக் பச்சாட் தமால் விற்பனையில் தினமும் நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி, மாலை 4 மணிக்கு புதுப்புது தள்ளுபடிகள், கோம்போ சலுகைகள் அறிவிக்கப்படும் என கூறபட்டுள்ளது.

    ஃபிளிப்கார்ட் விற்பனை

    இந்த சிறப்பு தள்ளுபடியில் யூ.பி.ஐ பரிவர்த்தனை மூலம் ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படும். மேலும் ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்ட் மற்றும் யெஸ் பேங்க் கிரெடிட் கார்ட்ஸ் ஆகியவற்றுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படும். இத்துடன் நோ-காஸ்ட் இ.எம்.ஐ, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகியவையும் உண்டு.

    இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்கள் ரூ.7,499-க்கும், போக்கோ சி31 போன் ரூ.7,999-க்கும், ரியல்மி C21Y ரூ.7,749-க்கும், விற்கப்படவுள்ளது. அதேபோன்று ஐபோன் 12 மினி ஸ்மார்ட்போன் ரூ.40,999-க்க்கும், ஐபோன் எஸ்.இ ரூ.28,999-க்கும், ஐபோன் 12 ரூ.53,999-க்கும் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
    இந்த விலை குறைப்பு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.
    பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டங்களுக்கு விலை குறைப்பை அறிவித்துள்ளது. இதன்படி பி.எஸ்.என்.எல்லின் ‘செல்ஃப் கேர்’ செயலி மூலம் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 4 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

    இந்த தள்ளுபடி மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

    இதுமட்டுமின்றி இந்த தள்ளுபடி ரூ.201 அல்லது அதற்கும் மேல் கட்டணம் உள்ள ரீசார்ஜ் திட்டங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். செல்ஃப் கேர் செயலியை பயன்படுத்தினால் மட்டுமே இந்த தள்ளுபடி வழங்கப்படும். 

    கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பிற செயலிகள் மூலம் ரீசார்ஜ் செய்தால் தள்ளுபடி கிடையாது எனவும் பி.எஸ்.என்.எல் கூறியுள்ளது.
    இந்த சேவையில் முதற்கட்டமாக சுமார் 1000 செயலிகள் மற்றும் கேம்கள் இடம்பெற்றுள்ளன.
    கூகுள் நிறுவனம் தனது “கூகுள் பிளே பாஸ்” சந்தா சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவை தற்போது இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சந்தா சேவையில் மாதம் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ஆண்ட்ராய்டு செயலிகள் மற்றும் மொபைல் கேம்களை விளம்பரம் மற்றும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பயன்படுத்திகொள்ளலாம். 

    பொதுவாக கேம் அல்லது செயலியில் சில அம்சங்களை பயன்படுத்துவதற்கு நாம் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். அதேபோல சில செயலிகளையே பணம் கொடுத்து வாங்க வேண்டியது இருக்கும். இந்த சந்தா சேவையில் அந்த கட்டணத்தில் இருந்து விலக்கு பெறலாம். 

    இந்த வாரத்தில் இருந்து இந்த சேவை இந்தியாவில் கிடைக்கும் என்றும், தற்போது கூகுள் பிளே பாஸ் சேவையில் முதற்கட்டமாக சுமார் 1000 செயலிகள் மற்றும் கேம்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 41 பிரிவுகளில் 59 நாடுகளில் இருந்து வெளியாகும் செயலிகள் மற்றும் கேம்கள் இந்த சேவையில் தரப்பட்டுள்ளன.

    இந்த பிளே பாஸில் இந்திய தயாரிப்புகளான ஜங்கிள் அட்வெஞ்சர்ஸ், வேர்ல்ட் கிரிக்கெட் பேட்டில் 2 உள்ளிட்ட 15 செயலிகள், கேம்களும் தரப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் மேலும் தயாரிப்புகளை இணைப்பதற்கு கூகுள் பணியாற்றி வருவதாகவும், மாதம் மாதம் கேம்கள் மற்றும் செயலிகள் கூடுதலாக சேர்க்கப்படும் எனவும் கூறியுள்ளது.

    கூகுள் பிளே பாஸ்

    இந்தியாவில் இந்த சேவைக்கு 1 மாதத்திற்கு ட்ரையல் வடிவில் கிடைக்கும். அதன் பிறகு மாதம் ரூ.99 அல்லது வருடத்திற்கு ரூ.889 என்ற கட்டணங்களில் இந்த சேவை வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. இந்த சேவையை ப்ரீபெய்ட் ஒரு மாத சந்தாவாக ரூ.109-க்கும் பெறலாம். இந்த சேவையை ஒரே கணக்கில் 5 பேர் வரை பயன்படுத்திகொள்ளலாம்.

    இந்த சேவை ஆண்ட்ராய்டு 4.4 அல்லது அதற்கும் மேலான வெர்ஷன் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கும் என்றும், 16.6.25 வெர்ஷன் கூகுள் பிளே செயலியும் இதற்கு தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரூ.15,000 முதல் ரூ.2000 வரை உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு இன்று விலை குறைக்கப்பட்டுள்ளது.
    அமேசான் நிறுவனத்தின் ‘ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் சேல்’ சிறப்பு விற்பனை பிப்.26 முதல் பிப்.28 வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் விற்பனையில் ரூ.15,000 விலை முதல் ரூ.20,000 வரை மதிப்பில் உள்ள பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ரூ.15,999-ல் இருந்து ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு கிடைக்கிறது.

    விவோ நிறுவனத்தின்  விவோ Y33T ஸ்மார்ட்போன் ரூ.4000 குறைக்கப்பட்டு ரூ.18,990-க்கு கிடைக்கிறது. ஒப்போவின் ஏ74 5ஜி, 6ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட்போன் ரூ.4000 குறைக்கப்பட்டு ரூ.16,990-க்கு கிடைக்கிறது.

    விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள்

    ரியல்மியின் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.11,499-க்கு கிடைக்கிறது. ரெட்மி நோட் 10T 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.2,500 குறைக்கப்பட்டு ரூ.14,499-க்கு கிடைக்கிறது. ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.12,990-க்கும், ரெட்மி 9 ஆக்டிவ் ரூ.1,492 விலை குறைக்கப்பட்டு ரூ.9,499-க்கும் கிடைக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கும், ஒப்போ ஏ31 ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.15,990-க்கும், ஒப்போ ஏ55 ரூ.3,500 குறைந்து ரூ.15,490-க்கும், ரியல்மி நார்சோ 30 5ஜி ரூ.1000 குறைந்து ரூ.16,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ரெட்மியின் நோட் 11T 5ஜி ரூ.3,500 குறைந்து ரூ.17,499-க்கும், டெக்னோ கெமான் 17 ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.13,999-க்கும் கிடைக்கிறது.
    வெறும் ஆடியோ வடிவத்தில் மட்டுமே உரையாடல்களை நிகழ்த்தும் வகையில் இருந்த கிளப் ஹவுசில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகமாகிய கிளப்ஹவுஸ் செயலி முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக இருக்கிறது. மக்கள் ஆடியோ வடிவில் உரையாடுவதற்கு இந்த செயலி பெரிதும் உதவுகிறது. 

    வெற்று அரட்டைகளுக்கு மட்டுமில்லாமல் சினிமா, இசை, அரசியல் என்று பல்வேறு பிரிவுகளில் முக்கியமான உரையாடல்கள் கிளப் ஹவுசில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் இந்த செயலி தற்போது புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. ‘இன் ரூம் சாட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய அம்சத்தில் பயனர்கள் குறுந்தகவல்கள் அனுப்பி ‘டெக்ஸ்ட்’ வடிவத்திலும் பேசிக்கொள்ளலாம். 

    கிளப் ஹவுஸ் சாட்

    யாராவது பேசிக்கொண்டிருக்கும்போது தங்களது எண்ணங்களை மெசேஜ்ஜில் அனுப்பியும் உரையாடலாம். இதே வகையில் எமோஜிக்களையும் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய அம்சத்தில் உரையாடல்களை பற்றிய கருத்துக்களை பதிவு செய்வதற்கும் தனியாக தரப்பட்டிருக்கும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தற்போது பீட்டா வெர்ஷனில் தரப்பட்டுள்ள இந்த அம்சங்கள் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் தரப்படும்.
    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. பயனர்கள் எளிய வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது. 

    முதலில் குறுஞ்செய்தி வசதியுடன் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் பின்னாளில் வாய்ஸ் மெசேஜ், ஆடியோ கால்கள், வீடியோ கால்கள், ஸ்டேட்டஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.

    இந்நிலையில் பயனர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் 5 புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பில் வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    செர்ச் மெசேஜ் ஷார்ட்கட்:  இந்த அம்சத்தில் ஒரு நபரிடம் பேசிய உரையாடலில் இருந்தும் குறிப்பிட்ட மெசேஜ்ஜை எளிதாக தேடி எடுக்க முடியும். ஏற்கனவே இந்த அம்சம் இடம்பெற்றிருந்தாலும். தற்போது மேம்படுத்தப்பட்ட வடிவில் தரப்படவுள்ளது. இன்று முதல் சில பீட்டா டெஸ்டர்களுக்கு தரப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.

    செர்ச் மெசேஜ் ஷார்ட்கட் அம்சம்

    மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ்: வாட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ்களுக்கு ரியாக்‌ஷன்ஸ் அனுப்பும் அம்சத்தையும் கொண்டு வரவுள்ளது. இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்டுள்ளது போல இருக்கும் இந்த அம்சத்தில் 6 எமோஜ்ஜிக்களை ரியாக்‌ஷனாக அனுப்ப முடியும். இதே அம்சம் டெஸ்க்டாப் வாட்ஸ்அப்பிலும் வரவுள்ளது.

    கேமரா மீடியா பார்: ஒரு நபருக்கு எளிய முறையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்புவதற்காக இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எமோஜி ஷார்ட்கட்ஸ்: எமோஜிக்களை விரைவாக பயன்படுத்தும் வகையில் இந்த அம்சம் வரவுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் சில குறிப்பிட்ட வார்த்தைகளை டைப் செய்வது மூலம் எமோஜிக்கள் காட்டப்படும். அதை கிளிக் செய்து விரைவாக அனுப்பலாம்.

    புதிய வாய்ஸ் கால் யூ.ஐ:  தற்போதுள்ள வாய்ஸ் காலின் தோற்றம் மாற்றப்படவுள்ளது. வீடியோ கால்களுக்கு வருவது போன்ற ஒரு யூசர் இன்டர்ஃபேஸை வாட்ஸ் அப் நிறுவனம் உருவாக்கி வருகிறது. அதேபோன்று குரூப் காலில் யார் பேசுகிறார்களோ அவர்களது புகைப்படத்தில் வேவ் போன்ற தோற்றம் வரும்.

    இந்த புதிய அம்சங்கள் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் தரப்படவுள்ளது.
    ×