என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஓடிடியை நோக்கி செல்லும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    டாடா பிளே நிறுவனம் தனது டிடிஹெச் சேனல் பேக்குகளின் விலையை திடீரென குறைத்துள்ளது.

    டாடா ஸ்கை என்ற பெயரில் இயங்கி வந்த டிடிஹெச் சேவை நிறுவனம் சில மாதங்களுக்கு முன் டாடா பிளே என பெயரை மாற்றியது. 
    இந்தியாவில் டாடா பிளே வாடிக்கையாளர்களாக 1.9 கோடி பேர் உள்ளனர்.

    இந்நிலையில் அந்த நிறுவனம் தற்போது தனது சேனல் பேக்குகளின் விலையை குறைத்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.30 முதல் ரூ.100 வரை சேமிக்கலாம் என தெரிவித்துள்ளது.

    டாடா பிளே

    இந்த விலை குறைப்பு ஓவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் வேறுபடும். வாடிக்கையாளர்கள் எந்தெந்த சேனல்களை அதிகம் பார்க்கின்றனர் என்பதை அறிந்து, அவர்கள் பார்க்காத சேனல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையளர்கள் தாங்கள் விரும்பி பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் விலை கொடுத்தால் போதும் என்ற வசதி தரப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹரித் நாக்பால் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் இன்று ஓடிடி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிடி நோக்கி செல்லும் டிடிஎச் வாடிக்கையாளர்களை தக்கவைத்துகொள்ள டாடா பிளே விலை குறைப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    ஃபேஸ்புக், யூடியூப்பை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனமும் இந்த சேவையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
    ட்விட்டர் நிறுவனம் ஸ்பேஸ் சேவையை கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதையடுத்து அந்த சேவை ட்விட்டர் பயனர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் மற்றொரு ஆடியோ சேவையான போட்கேஸ்ட் சேவையையும் மொபைலில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

    இதன் மூலம் ட்விட்டர் ஆப்பிள், ஸ்பாடிஃபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் ஸ்பேஸ் அம்சத்தில் புதிய அப்டேட்டை வெளியிட்டது. இதன்மூலம் ஸ்பேஸ் சாட் ரூமில் பேசுபவர்களின் ஆடியோக்களை பதிவு செய்துகொள்ள முடியும். ஆனால் இந்த பதிவு செய்யப்பட்ட ஆடியோக்கள் 30 நாட்கள் மட்டுமே இருக்கும். பின் தானாக டெலிட் ஆகிவிடும். இதுவே போட்கேஸ்ட் அம்சம் வந்தால் நிரந்தரமாக ஆடியோ தகவல்களை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

    ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு சில குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் போட்கேஸ்ட் அம்சத்தை அறிமுகம் செய்தது. யூடியூப்பும் போட்கேஸ்ட் அம்சத்தை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனமும் விரைவில் போட்கேஸ்ட் சேவையை தொடங்கும் என கூறப்படுகிறது.
    இந்த புதிய திட்டத்தில் 1000 ஜிபி டேட்டா குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.329-க்கு ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

    இந்த திட்டத்தில் ரூ.329-க்கு வாடிக்கையாளர்கள் 1000 ஜிபி டேட்டாவை, 20 Mbps வேகத்தில் பெறுவர். அத்துடன் ஃபிக்சட் லைன் வாய்ஸ் அழைப்பு இலவசமாக வழங்கப்படும். இதுமட்டும் இல்லாமல் முதல் மாத கட்டண தொகையில் 90 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இதற்கு முன் குறைந்த விலை ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமாக பி.எஸ்.என்.எல்லின் ரூ.449 திட்டம் இருந்தது. இந்த திட்டத்தில் 30Mbps வேகத்தில் 3.3 டிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த புதிய திட்டம் தனி நபர் ஒருவர் இணையம் பயன்படுத்த போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய திட்டம் நாட்டின் சில மாநிலங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் இணையதளத்திற்கு சென்று இந்த திட்டம் தங்கள் இடங்களுக்கு அமலில் உள்ளதா என அறிந்துகொள்ளலாம்.
    தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 2.22.6.7 அப்டேட்டில் இயங்கும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் பீட்டா டெஸ்டர்களுக்கு தரப்பட்டுள்ளது.
    வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாய்ஸ் மெசேஜ் சேவையில் ‘பாஸ்’ அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதன்மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது பயனர்கள் தாங்கள் பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு, மீண்டும் சிறிது நேரம் கழித்து கூட தொடர முடியும். இதற்கு முன் ஒரு முறை நிறுத்திவிட்டால் அந்த மெசேஜ்ஜை அனுப்பிவிட வேண்டும் அல்லது டெலிட் செய்துவிட வேண்டும் என்ற இரண்டு தேர்வுகள் மட்டுமே இருந்தன.

    தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 2.22.6.7 அப்டேட்டில் இயங்கும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் பீட்டா டெஸ்டர்களுக்கு தரப்பட்டுள்ளது. இது விரைவில் பிறருக்கும் தரப்படும் என கூறப்படுகிறது.

    இதேபோல பயனர்கள் வாட்ஸ்அப் அழைப்புகளில் எளிதாக இணைவதற்கு லிங்க் அனுப்பும் அம்சத்தையும் கொண்டுவரவுள்ளது. இதன்மூலம் நமது தொடர்பில் இல்லாதவர்கள் கூட அந்த லிங்கை கிளிக் செய்து அழைப்பில் இணையலாம்.
    ஆப்பிள், அமேசான், ஸ்பாட்டிஃபை ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கு யூடியூப் திட்டமிட்டுள்ளது.
    யூடியூப் நிறுவனம் போட்கேஸ்ட் படைப்பாளிகள், வீடியோக்களை உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2.30 கோடி வரை தருவதற்கு முன்வந்துள்ளது. 

    இன்று இணையத்தில் வீடியோக்கள் எந்தளவிற்கு மக்களால் பார்க்கப்படுகிறதோ, அதே அளவுக்கு போட்கேஸ்ட் எனப்படும் ஆடியோ வடிவிலான தகவல்களும் விரும்பி கேட்கப்படுகின்றன.

    ஆப்பிள், அமேசான், ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட நிறுவனங்கள் போட்கேஸ்ட் உருவாக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் அவர்களுடன் போட்டியிடுவதற்கு கூகுளும் யூடியூப் மூலம் போட்கேஸ்ட் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்கு பணத்தொகை வழங்கவுள்ளது.

    போட்கேஸ்ட் எபிசோட்களை வீடியோ வடிவில் எடுப்பதற்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.  தனிப்பட்ட படைப்பாளிகளுக்கு ரூ.38 லட்சமும், போட்கேஸ்ட் நிறுவனங்களுக்கு ரூ.2.30 கோடி வரையும் கொடுக்கவுள்ளது.
    இந்த தள்ளுபடி விற்பனை எம்.ஐ டாட்காம், எம்.ஐ ஹோம், ஃபிளிப்கார்ட், அமேசானில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹோம் டேஸ் விற்பனை வரும் மார்ச் 7-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 10 வரை நடைபெறவுள்ளது. இந்த விற்பனையில் வீட்டிற்கு தேவையான ஸ்மார்ட் சாதனங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

    இந்த விற்பனையில் ஸ்மார்ட் சாதனங்களுக்கு 80 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விற்பனையில் எம்.ஐ ரோபோட் வேக்கம்-மாப், எம்.ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா 360 டிகிரி 1080, எம்.ஐ ஸ்மார்ட் வாட்டர் புயூரிஃபையர் (ஆர்ஓ+யூவி), எம்.ஐ 360 ஹோம் செக்யூரிட்டி கேமரா 2கே ப்ரோ, எம்.ஐ எல்.இ.டி ஸ்மார்ட் பல்ப், எம்.ஐ ஸ்மார்ட் எல்.இ.டி டெஸ்க் லேம்ப் 1 எஸ், எம்.ஐ பெட்சைட் லேம்ப் 2 மற்றும் எம்.ஐ ரவுட்டர் 4ஏ கிகாபிட் எடிஷன் ஆகியவை வழங்கவுள்ளது.

    ஸ்மார்ட் ஹோம் டேஸ் விற்பனை

    மேலும் தள்ளுபடி விற்பனை நடைபெறும் 4 நாட்களும் தினசரி மாலை 4 மணிக்கு வைப் அவுட் சேல் நடைபெறும். இதில் ஒவ்வொரு நாளும் 2 சாதனங்களுக்கு அதிக விலை குறைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த தள்ளுபடி விற்பனை எம்.ஐ டாட்காம், எம்.ஐ ஹோம், ஃபிளிப்கார்ட், அமேசானில் நடைபெறும்.
    ஏற்கனவே டிக்டாக்கால் ஃபேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள நிலையில் தற்போது யூடியூப்பையும் எதிர்கொள்ள டிக்டாக் இந்த அம்சத்தை அறிமுகம் செய்கிறது.
    உலகம் முழுவதும் வீடியோக்களை பதிவேற்றும் பிரபல தளமாக யூடியூப் இருந்து வருகிறது. கல்வி, விளையாட்டு, திரைப்படம் என்று அத்தனை பிரிவுகளிலும் ஏராளமான யூடியூப் வீடியோக்கள் காண கிடைக்கின்றன. 

    அதேபோன்று சிறிய அளவிலான வீடியோக்களை பதிவேற்றுவதில் டிக்டாக் பிரபலமாக இருந்து வருகிறது. டிக்டாக்கின் வளர்ச்சியால் ஃபேஸ்புக் நிறுவனமே தினசரி பயனர்களை இழக்கும் அளவிற்கு அந்நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது.

    இந்நிலையில் யூடியூப்பிற்கும் கடும் போட்டியாக அமையும் வகையில் டிக்டாக் புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. இதன்படி டிக்டாக்கில் பயனர்கள் இனி 10 நிமிடங்கள் வரை வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

    டிக்டாக் ஆரம்பத்தில் அறிமுகமானபோது 1 நிமிடத்திற்கு வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வகையில் இருந்தது.  அதன்பின்  கடந்த ஆண்டு முதல் 3 நிமிடங்களுக்கு வீடியோக்களை பதிவேற்றுவதற்கு அனுமதி அளித்தது. இன்னிலையில் தற்போது 10 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களையும் டிக்டாக்கில் பதிவேற்றலாம் என கூறியுள்ளது. 

    யூடியூப், டிக்டாக்

    உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்களின் படைப்பாற்றலை அதிகரிக்கும் வகையில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
    கடந்த மாதம் ஃப்ரீபயர் தடை செய்யப்பட்ட நிலையில் பப்ஜியை போலவே உள்ள பி.ஜி.எம்.ஐயும் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
    இந்திய உட்பட உலகின் மிக பிரபலமான மொபைல் கேமாக பப்ஜி இருந்து வந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய அரசு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பப்ஜி உள்ளிட்ட பல சீன செயலிகளுக்கு தடை விதித்தது. 

    இதையடுத்து பப்ஜிக்கு மாற்றாக ஃப்ரீபயர் உள்ளிட்ட கேம்கள் விளையாடப்பட்டு வந்தன. இதில் பப்ஜியை போன்றே இருக்கும் பி.ஜி.எம்.ஐ என்ற மொபைல் கேமும் இந்தியாவில் அறிமுகமாகி பெரும் ஆதரவை பெற்றது. 

    இந்நிலையில் கடந்த மாதம் சீனாவுடன் தொடர்பில் இருப்பதாக கூறி ஃப்ரீபயர் கேமிற்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து தற்போது பி.ஜி.எம்.ஐ கேமையும் தடைவிதிப்பதற்காக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அந்த மனுவில் பப்ஜி கேம் தான் பி.ஜி.எம்.ஐ என்ற பெயரில் தென் கொரியா தயாரிப்பாளர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அந்த கேமை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பப்ஜி விளையாட்டும், பி.ஜி.எம்.ஐ விளையாட்டும் வேறு வேறு என்பதை உறுதி செய்தபின் தான் அனுமதி அளிக்கப்பட்டது என விளக்கம் அளித்தது.

    ஃப்ரீபயர் கேமும் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தது. ஆனால் சீனாவுடன் தொடர்பில் இருப்பதாக அந்த கேம் தடை விதிக்கப்பட்டது. அதேபோன்று பி.ஜி.எம்.ஐயும் எந்நேரத்திலும் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
    யூடியூப்பால் இந்தியாவில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 900 முழு நேர வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
    இன்று யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் படைப்பாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். தனிப்பட்ட வீடியோ படைப்பாளிகளில் இருந்து பெரும் நிறுவனங்கள் வரை யூடியூப் மூலம் பயனடைகின்றன. 

    யூடியூப் வீடியோக்கள் தயாரிப்பு மூலம் வேலைவாய்ப்புகளும் தோன்றியுள்ளன. இந்நிலையில் யூடியூப் படைப்பாளிகள் சூழலமைப்பு இந்திய பொருளாதாரத்திற்கு பலன் அளித்து வருவதாகவும், கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ.6,800 கோடி பங்களிப்பு யூடியூப் படைப்பாளிகள் மூலம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் எகானாமிக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    யூடியூப் மூலம் இந்தியாவில் பொருளாதார, சமூக, கலாசார தாக்கங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2020-ம் ஆண்டில் யூடியூப் படைப்பாளிகள் சூழலமைப்பு மூலம் மட்டும் இந்திய ஜிடிபிக்கு ரூ.6,800 கோடி பங்களிப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 6 லட்சத்து 83 ஆயிரத்து 900 முழு நேர வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. 

    யூடியூப் விளம்பரங்களால் வரும் வருமானம், சந்தா, ஸ்பான்ஷர்ஷிப் உள்ளிட்ட வழிகளில் மூலம் கிடைக்கும் வருமானமும் இதில் கணக்கிடப்பட்டுள்ளன. 

    யூடியூப் கிரியேட்டர்கள்

    மேலும் யூடியூப் வீடியோக்களை உருவாக்கும் படைப்பாளிகள் மற்றும் குழுக்கள், அவர்களால் உருவாகும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவையும் இதில் ஆராயப்பட்டுள்ளன. 

    யூடியூப்பில் கிடைக்கும் வருமானம் மட்டுமின்றி படைப்பாளிகளுக்கு உலக அளவில் ரசிகர்கள், பிராண்ட் பார்ட்னர்ஷிப்கள், நேரலை நிகழ்ச்சிகள் மூலமும் வருமானம் கிடைக்கின்றன. இந்த வருமானங்களால் படைப்பாளிகள் மட்டும் பயனடையவில்லை, அவர்களை சார்ந்திருக்கும் பிற துறைகளும் பயனடைகின்றன.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 44.8 கோடி யூடியூப் பயனர்கள், 53 கோடி வாட்ஸ் அப் பயனர்கள், 41 கோடி ஃபேஸ்புக் பயனர்கள், 21 கோடி இன்ஸ்டாகிராம் பயனர்கள் உள்ளனர்.
    பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா (விஐ) உள்ளிட்ட 13 நிறுவனங்களின் 5ஜி சோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
    இந்தியாவில் வரும் சுதந்திர தினத்தன்று 5ஜி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் உள்ளிட்ட விஷயங்களில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு (டிஓடி) பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால் டிராய் இன்னும் பரிந்துரை வழங்காததால் 5ஜி அலைக்கற்றை ஏலத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையடுத்து டிராய் தனது செயல்முறையை விரைவுப்படுத்தி இந்த மாதத்திற்குள் பரிந்துரையை சமர்பிக்க வேண்டும் என தொலைத்தொடர்புத்துறை கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு அறிக்கை சமர்பிக்கப்பட்டால் 5ஜி அலைக்கற்றை ஏலம் மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும், வரும் ஆகஸ்டு 15-ம் தேதி 5ஜி அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா (விஐ) உள்ளிட்ட 13 நிறுவனங்களின் 5ஜி சோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் 6ஜி நெட்வொர்க்கும் இந்தியாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 6ஜி மேம்பாட்டிற்கு தேவையான அனுமதிகளை மத்திய அரசு முன்னதாகவே வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    வரும் ஜூன் மாதத்தில் புதிய அறிவிப்புகளை நெட்ஃபிலிக்ஸ் வெளியிடும் என கூறப்படுகிறது.
    இன்று உலகம் முழுவதும் வீடியோ கேம்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிலிக்ஸும் கேமிங் துறையில் தனது வணிகத்தை விரிவு செய்ய திட்டமிட்டுள்ளது. 

    ஏற்கனவே நெட்ஃபிலிக்ஸ் சில கேம்களை மட்டும் தனது தளத்தில் வழங்கி வந்த நிலையில், தற்போது ஃபின்லாந்து நாட்டின் மொபைல் கேம் தயாரிப்பு நிறுவனமான நெக்ஸ்ட் கேமை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

    ரூ.550 கோடி விலையில் நெக்ஸ்ட் கேம் நிறுவனத்தை வாங்குவதற்காக  நெட்ஃபிலிக்ஸ் பேரம் பேசிவருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அந்த நிறுவனத்தை கைப்பற்றி, கேமிங் துறையில் புதிய அறிவிப்புகளை நெட்ஃபிலிக்ஸ் வெளியிடும் என கூறப்படுகிறது.
    விரைவில் உலகம் முழுவதும் வொர்க் ஃபிரம் ஹோம் செயல்முறை நிறுத்தப்பட்டு அனைவரும் அலுவலகம் திரும்பும் கட்டாயம் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் நாம் வாழும் சூழலையே மாற்றிவிட்டது. பணியாளர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் “ஒர்க் ஃபிரம் ஹோம்” என்று  செயல்முறையை பெரும்பாலான நிறுவனங்கள் அமல்படுத்தின.

    குறிப்பாக அமெரிக்காவில் கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கொரோனா தொற்று முடியும் வரை நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்யுமாறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அழைத்து வருகின்றன.

    கூகுள் நிறுவனம் குறிப்பிட்ட பெரும்பாலான ஊழியர்களை ஏப்ரல் 4 முதல் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ளும் வழிமுறைகள் அதிகரித்துவிட்டன. தொற்றும் கட்டுக்குள் வந்துவிட்டது. இதையடுத்து அலுவலர்கள் வீடுகளில் சில நாட்களும், அலுவலகத்திற்கும் வந்து சில நாட்களும் ஹைப்ரிட் முறையில் பணியாற்ற வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

    கூகுள் அலுவலகம்

    அடுத்த மாதத்தில் இருந்து வாரம் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும். அதன்பிறகு நிலைமையை பொறுத்து முழுதாக அலுவலகத்தில் இருந்தே பணியாற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அலுவலகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்கள், கேம் மற்றும் இசைக்கூடங்கள் ஆகியவை திறக்கப்பட்டுவிடும் என தெரிவித்துள்ளது.

    கூகுளை தொடர்ந்து மெட்டா, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களும் பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருகின்றன. இந்நிலையில் விரைவில் உலகம் முழுவதும் ஒர்க் ஃபிரம் ஹோம் செயல்முறை நிறுத்தப்பட்டு அனைவரும் அலுவலகம் திரும்பும் கட்டாயம் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×