என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஏர்டெல் வழங்கும் தினம் 1ஜிபி டேட்டா, 1.5 ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வை அறிவித்தன. இதனால் பயனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் குறைந்த பட்ஜெட்டில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கான திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.
தற்போது ஏர்டெல்லில் உள்ள குறைந்த பட்ஜெட் திட்டங்களை காணலாம்.
ஏர்டெல் நிறுவனம் ரூ.209-க்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை 21 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.239-க்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்டவற்றை 24 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.265-க்கு ரீசார்ஜ் செய்தால் தினம் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ்களை 28 நாட்களுக்கு பெறலாம்.
ஏர்டெல்லில் ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் தினம் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்களை ரூ.299-க்கு பெறலாம்.
இதைத்தவிர தினமும் 1.5 ஜிபி டேட்டா தரும் நீண்ட அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களையும் இப்போது பார்க்கலாம்.
ரூ.479 திட்டத்தில் தினம் 1.5 ஜிபி டேட்டா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் இலவச அழைப்புகள், எஸ்.எம்.எஸ்களும் உண்டு. ரூ.666 ரீசார்ஜ் திட்டத்தில் தினம் 1.5 ஜிபி டேட்டா 77 நாட்களுக்கு வழங்கப்படும். ரூ.799-க்கு தினம் 1.5 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படும்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு உதவுவதற்காக ரூ.7.65 கோடி சேர்ப்பதே தங்களது இலக்கு என தெரிவித்துள்ளது.
இட்ச்.ஐஓ (itch.io) என்ற இணையதளம், உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் மக்களுக்கு 1000 மேற்பட்ட கேம்கள், டிஜிட்டல் புத்தகங்கள், காமிக்ஸ்களை இலவாசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
ரஷியாவுக்கு எதிரான போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு குறைந்தபட்சம் 10 டாலர்கள் நிதியுதவி வழங்குபவர்களுக்கு 566 வீடியோ கேம்கள், 317 டேபிள் டாப் கேம்கள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன. இதற்காக 700-க்கும் மேற்பட்ட கேம் தயாரிப்பாளர்கள் உதவ வந்துள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு உதவுவதற்காக ரூ.7.64 கோடி சேர்ப்பதே தங்களது இலக்கு என்றும், இதுவரை 75 சதவீத இலைக்கை அடைந்துவிட்டதாகவும் அந்த இணையதளம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிக்ஸல் போன்களுக்கு மட்டுமே வெளியாகியுள்ள இந்த அப்டேட் விரைவில் மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வரும் என கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு 12L அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்ட்ராய்டு 12L அப்டேட் பழைய Pixel 3a முதல் Pixel 5a வரையிலான ஸ்மார்ட்போன்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிற பிக்சல் போன்களுக்கும் புதிய அப்டேட் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டின் சிறப்பம்சமாக வாய்ஸ் அழைப்புகளுக்கு நேரடி கேப்ஷன் வழங்கப்படுகிறது. இதற்கு முன் வீடியோக்களுக்கு மட்டுமே நேரடி கேப்ஷன்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புதிய அம்சத்தின் மூலம், வாய்ஸ் அழைப்புகளில் மற்றவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதையும் நாம் திரையில் வார்த்தைகளாக காணலாம். காது கேளாதோருக்கு இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

புதிய பேட்டரி விட்ஜெட்டும் இந்த அப்டேட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பேட்டரி திறன், எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும் போன்ற தகவல்கள் இந்த விட்ஜெட்டில் காட்டப்படும்.
தற்போது பிக்ஸல் போன்களுக்கு மட்டுமே வெளியாகியுள்ள இந்த அப்டேட் விரைவில் மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வரும் என கூறப்படுகிறது.
இந்த அம்சம் இந்த வருடத்தின் பின்பகுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு எவ்வளவு ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் போதாமல் போய்விடும். ஸ்டோரேஜை கிளியர் செய்வதற்கு நாம் அதிகம் பயன்படுத்தாத மொபைல் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்துகொண்டிருப்போம். மீண்டும் ஒரு கட்டத்தில் தேவைப்படும்போது அந்த செயலியை இன்ஸ்டால் செய்ய முயற்சித்தால் இடம் இருக்காது.
இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு நாம் அதிகம் ஸ்டோரேஜ் உள்ள போன்களை வாங்க வேண்டும். ஆனால் இது எல்லோராலும் முடியாது. இந்நிலையில் இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கூகுள், ஆண்ட்ராய்டு போன்களில் புதிய அம்சம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய அம்சத்திற்கு ‘ஆப் ஆர்கைவிங்’ என பெயரிட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தை பயன்படுத்துவது மூலம் மொபைல் செயலியின் ஸ்டோரேஜ் 60 சதவீதம் வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நமது தனிநபர் தரவுகள் எதுவும் பாதிக்கப்படாது.

இந்த அம்சத்தில் செயலியை அன் இன்ஸ்டால் செய்வதற்கு பதில் ஆர்கைவ்ட் ஏபிகேவாக மாற்றிகொள்ள முடியும். அதன்பின் தேவைப்படும்போது செயலியை ரீஸ்டோர் செய்து மீண்டும் பழைய வடிவத்திற்கு கொண்டு வந்துவிடலாம்.
இந்த அம்சம் இந்த வருடத்தின் பின்பகுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த புதிய அம்சம் பயனர்கள் மற்றும் டெவலப்பர்கள் இரண்டு பேருக்கும் பெரும் அளவில் பயன்படும். குறிப்பாக பயனர்கள் அதிகம் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்வதை தடுக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையில் பணம் அனுப்புவது மட்டுமின்றி கேஸ் பில், மொபைல் ரீசார்ஜ் செய்யலாம், வங்கிக் கணக்கில் இருப்பை சரி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டர்நெட் இல்லாத சாதாரண செல்போன்களிலும் கூட இனி யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்யப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதற்காக 'யுபிஐ- 123 பே' என்ற சேவையை அவர் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்கள் சாதாரண செல்போன் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்கள் டிஜிட்டல் நவீனமயத்தில் பங்கேற்கும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த 'யுபிஐ123 பே' சேவையில், சாதாரண போன் வைத்திருக்கும் பொதுமக்கள் வங்கிக்கு சென்று தங்களது செல்போன் எண்ணை, வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். பின் டெபிட் கார்டு எண்ணை உள்ளீடு செய்து, யுபிஐ பாஸ்வேர்டு உருவாக்க வேண்டும். அதன்பிறகு பரிவர்த்தனை செய்யலாம்.
இந்த சேவையில் 4 வகையில் பணம் அனுப்பலாம். சாதாரண போன்களுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் செயலியை பயன்படுத்தி பணம் அனுப்பலாம். ஐவிஆர் எண்ணுக்கு கால் செய்து அதில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது வங்கி எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து பணம் அனுப்பலாம்.
இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர் போன்ற கருவியை கொண்டு பணம் அனுப்பலாம். ஆர்.பி.ஐ கொடுத்திருக்கும் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தும் பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையில் பணம் அனுப்புவது மட்டுமின்றி கேஸ் பில், மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றையும் செய்யலாம். வங்கிக் கணக்கில் இருப்பை சரி பார்க்கலாம், ஸ்மார்ட்போன் ஸ்கேன் அண்ட் பே செய்யப்படும் இடங்களிலும் கூட இந்த சேவை மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேப்டாப் பேட்டரி நீடித்து உழைக்கவும், நீண்ட நேரம் சார்ஜ் நிற்கவும் நாம் செய்யவேண்டியது என்ன என்பதை பார்க்கலாம்.
இன்றைய சூழலில் கல்வி, பணி இடங்கல் ஆகியவற்றில் லேப்டாப்களின் தேவை அதிகரித்துள்ளது. லேப்டாப்களை நாம் கவனமாக பயன்படுத்தாவிட்டால் நாளடைவில் பேட்டரி செயழிலக்க தொடங்கிவிடும். சராசரியாக 4-6 மணி நேரம் சார்ஜ் நிற்பதில் இருந்து குறைந்து, சார்ஜரை இணைத்தால் மட்டுமே லேப்டாப்பை பயன்படுத்த முடியும் என்ற நிலைக்கு சென்று விடும்.
இந்நிலையில் லேப்டாப் பேட்டரி நீடித்து உழைக்கவும், நீண்ட நேரம் சார்ஜ் நிற்கவும் நாம் செய்யவேண்டியது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்:-
கன்ட்ரோல் பேனலுக்கு சென்று ’பவர் சேவர்’ மோட் பயன்படுத்துவது நம் சார்ஜ் நீண்ட நேரம் நீடித்து நிற்க உதவும். இதன்மூலம் லேப்டாப் பயன்பாட்டில் இருக்கும்போது குறைந்த பவரையே எடுத்துகொள்ளும்.
பேட்டரி ஆரோக்கியத்தை ஆய்வு செய்யும் செயலிகளை பயன்படுத்தலாம். இதன்மூலம் எப்போதெல்லாம் அதிகம் சார்ஜ் பயன்படுத்தபடுகிறது என்பதை தெரிந்துகொண்டு கட்டுப்படுத்தலாம்.
மவுஸ், எக்ஸ்டர்னல் வைஃபை, எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர், ப்ளூடூத் ஆகியவை அதிகம் சார்ஜை குறைக்கும். இவற்றை பயன்படுத்தாதபோது ஆஃப் செய்வது நல்லது.
திரையின் பிரைட்னஸ் அளவை குறைப்பது நல்லது. நம் கண்களுக்கு பாதிப்பு இல்லாத அளவுக்கு பிரைட்னஸை கையாள வேண்டும்.
லேப்டாப் சார்ஜ் முழுதாக தீர்ந்துபோவதும் பேட்டரியை பாதிப்படையவைக்கும். அதனால் சார்ஜ் குறைந்து இருக்கும்போதே மீண்டும் சார்ஜ் செய்துகொள்வது நல்லது.
லேப்டாப்பை பயன்படுத்தாதபோது அணைத்துவிடவும். இல்லையென்றால் ஸ்லீப் மோடிற்கு பதில் ஹைபர்நெட் மோட்டில் லேப்டாப்பை வைத்துக்கொள்ளவும்.

அதிக வெப்பமும் லேப்டாப் பேட்டரியை பாதிப்படைய செய்யும். குளிர்ந்த, காற்றோட்டமான இடத்தில் லேப்டாப்பை வைத்துகொள்ளவும். முடிந்தவரை லேப் டெஸ்க் வைத்து பயன்படுத்தவும்.
ஒரே நேரத்தில் பல மென்பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். குறிப்பாக எக்ஸல் ஷீட்டுகள், பவர் பாய்ண்ட், போட்டோஷாப் ஆகியவற்றை செய்யும்போது அதிகம் சார்ஜ் செலவாகும். அதேபோன்று கிராஃபிக்ஸ் அதிகம் இருக்கும் மென்பொருட்களும் பேட்டரியை வேகமாக குறைக்கும். அதிகபட்சம் 2 புரோகிராம்களுக்கு மேல் வேண்டாம்.
நாம் பிளக்பாயிண்ட்டுக்கு பக்கத்தில் இருந்தால் பேட்டரியை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம். சராசரியாக ஒரு லேப்டாப் பேட்டரி 500 முதல் 700 முறை வரை முழுமையாக சார்ஜ் ஏற்றப்படும் வரை ஆரோக்கியமாக இருக்கும். அதன்பின் அதன் ஆற்றல் குறையத்தொடங்கும். இதனால் பிளக்பாயிண்ட் பக்கத்தில் பேட்டரியை கழற்றி விடுவது நல்லது.
ஸ்கிரீன் சேவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதேபோன்று ஆட்டோமேட்டிக்காக செயல்படும் அப்ளிகேஷன்களை அணைத்து வைக்கவும்.
இந்த கார்டை பயன்படுத்துபவர்களுக்கு சலுகைகள், கேஷ்பேக்குகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்கஸ் செயலிக்கு சென்று இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கார்ட் ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன் ரூ.500 அமேசான் இ-வவுச்சர் வழங்கப்படும்.
இந்த கார்ட்டை பயன்படுத்தி ஏர்டெல் சேவைகளுக்கு கட்டணம் செலுத்தும்போது 25 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும். மேலும் மின்சாரம், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பில் கட்டணங்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக், ஸ்விக்கி, ஜொமேட்டோ, பிக்பாஸ்கெட் ஆகியவற்றில் ஆர்டர் செய்யும்போது 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகின்றன.
மொபைல், டிடிஹெச் ரீசார்ச், ஏர்டெல் பிளேக், எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ஆகிய சேவைகளுக்கு இந்த கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 25 சதவீதம் கேஷ்பேக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தால் தனியாக இனி யூடியூப் வீடியோ டவுன்லோடர்கள், கிளிப் கட்டர்கள் செயலிகளை நாம் பயன்படுத்த வேண்டியதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துளது.
உலகம் முழுவதும் வீடியோக்களை பதிவிடும் பிரபல இணையதளமாக யூடியூப் உள்ளது. யூடியூப்பில் தினமும் கோடிக்கணக்கான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. பயனர்கள் வீடியோக்களை பார்ப்பதுடன் தங்களுக்கு விருப்பமான வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர்.
இந்நிலையில் பயனர்களுக்கு முழு வீடியோவையும் பகிராமல் தங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டும் கட் செய்து பகிரும் வகையில் புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி பயனர்கள் 60 நொடிகளுக்கு வீடியோக்களை கட் செய்து பகிர முடியும். இதற்கு கிளிப் என பெயரிடப்பட்டுள்ளது. யூடியூப் வீடியோவிற்கு கீழ் லைக், ஷேர், சேவ் ஆகிய ஐகான்களுக்கு மத்தியில் இந்த கிளிப் அம்சம் இடம்பெறும். தற்போது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும்.

இந்த அம்சத்தால் தனியாக இனி யூடியூப் வீடியோ டவுன்லோடர்கள், கிளிப் கட்டர்கள் செயலிகளை நாம் பயன்படுத்த வேண்டியதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட்போன்களை எஸ்பிஐ கிரெடிட் கார்ட்டில் வாங்குபவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஃபிளிப்கார்டின் பிங் சேவிங்ஸ் டே விற்பனை வரும் மார்ச் 12-ம் தேதி தொடங்கி மார்ச் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள், லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.
ஃபிளிப்கார்ட் வெளியிட்ட தகவலின் படி, பிக் சேவிங் டே விற்பனையில் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். ஸ்மார்ட்வாட்சுகளுக்கு 60 சதவீதம் தள்ளுபடியும், லேப்டாப்களுக்கு 40 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.
ஸ்மார்ட்வாட்சை பொறுத்தவரை டிஜோ வாட்ச் 2, ரியல்மி வாட்ச் 2, ஃபயர் போல்ட் நிஞ்சா ப்ரோ மேக்ஸ், அமேசாஜ்ஃபிட் பிப் யூ ஆகியவை தள்ளுபடி விற்பனையில் இடம்பெறுகின்றன. லேப்டாப்பை பொறுத்தவரை ஆசுஸ், டெல், ஹெச்.பி, லெனோவா ஆகியவை இடம்பெறுகின்றன.
மேலும் இந்த விற்பனையில் ஸ்மார்ட் மற்றும் ஃப்ளூடூத் ஸ்பீக்கர்கள், ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் ஆகியவைகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன.
டி.எஸ்.எல்.ஆர், மிரர்லெஸ் கேமரா, சவுண்ட் பார்களுக்கும், கீபோர்ட், மவுஸ் உள்ளிட்ட கணினி பாகங்களுக்கும் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. டேப்லெட்டுகளுக்கு 45 சதவீதம் தள்ளுபடி தரப்படவுள்ளது.

இதுதவிர மைக்ரோ எஸ்டி கார்டுகள், ஹெச்.டி.டி, எஸ்.டிடி ஆகியவைகளுக்கு 60 சதவீஇதம் வரை தள்ளுபடியும், கேமிங் சாதனங்களுக்கு 80 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளது.
இந்த தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட்போன்களை எஸ்பிஐ கிரெடிட் கார்ட்டில் வாங்குபவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து கூகுள் நிறுவனம், சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தை சேர்ந்த பெண்களை குறிப்பிடும் வகையில் இந்த சிறப்பு டூடுல் அமைந்துள்ளது.
மருத்துவம், விண்வெளி, கலை, உள்ளிட்ட பல துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்களின் வெற்றியை பறைசாற்றும் வகையில் அனிமேஷன் காட்சிகள் இந்த டூடுளில் இடம்பெற்றுள்ளன.
கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் வரப்போகும் இந்த அம்சம் முதலில் ஐஓஎஸ்ஸில் அறிமுகமாகும் என்றும், பிறகு ஆண்ட்ராய்டு, கணினிக்கும் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிரபல குறுந்தகவல் பரிமாற்ற செயலியாக இருக்கும் வாட்ஸ்அப், பயனர்களுக்கு புது புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது.
வீடியோ கால், ஆடியோ கால், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்ட பல அம்சங்கள் வாட்ஸ்அப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் போலிங் (கருத்துக்கணிப்பு) வசதியும் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அம்சம் குரூப் சேட்டில் இடம்பெறும். குரூப்பில் உள்ள நபர்கள் கருத்துக்கணிப்பில் கலந்துக்கொண்டு வாக்களிக்கலாம். அதன் முடிவுகளும் குரூப்பிலேயே காட்டப்படும் என கூறியுள்ளது.

இதேபோன்ற போலிங் அம்சம் இதற்கு முன் டெலிகிராம் செயலியில் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
வாட்ஸ்அப்பில் வரப்போகும் இந்த அம்சம் முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்கு அறிமுகமாகும் என்றும், பிறகு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும், கணினிக்கும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மாதம் ரூ.299 திட்டமே குறைந்த விலை ஹாட்ஸ்டார் டிஸ்னி+ திட்டமாக இருக்கிறது.
டிஸ்னி நிறுவனம் தனது டிஸ்னி பிளஸ் ஓடிடி சேவையில் குறைந்த விலை திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சேவை அமெரிக்காவில் இந்த வருடத்தில் அறிமுகமாகி, பின் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஸ்னி நிறுவனம் கூறியதாவது:-
டிஸ்னி பிளஸ் சேவை பல்வேறு தரப்பட்ட பயனர்களை சென்றடைவதற்காக இந்த விலை குறைந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில் மற்ற திட்டங்களை போல அல்லாமல் விளம்பரங்கள் இடம்பெறும். அதனால் வாடிக்கையாளர்கள் குறைந்த விலை கொடுத்தால் போதும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள், விளம்பரதாரர்கள், ஓடிடி நிகழ்ச்சியை உருவாக்குபவர்கள் மூன்று பேரும் பயனடைவர்.
இவ்வாறு டிஸ்னி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் டிஸ்னி பிளஸ் நிறுவனம் ஹாட் ஸ்டாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இங்கு விளம்பரம் இல்லாத குறைந்த விலை திட்டமாக மாதம் ரூ.299 திட்டம் இருக்கிறது. விரைவில் வர இருக்கும் திட்டம் மேலும் குறைந்த விலையில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






