என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • இது பாரம்பரிய கற்பித்தல் மாதிரியையே தலைகீழாக மாற்றுகிறது.
    • சீனாவில் மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கற்றல் செயல்முறை இருக்கிறது.

    20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவை விட சீனா மிக வேகமாக முன்னேறியுள்ளது.

    கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது.

    உலக அரங்கில் சீனாவின் எழுச்சிக்கு பெரும்பாலும் செயல்முறை கல்வி (Practical education) மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதே காரணம் என்று பல கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    கல்வியை நவீனமயமாக்குவது சீனாவை நவீனமயமாக்குவதற்கு மிக முக்கியமானது. குறிப்பாக சமீப காலங்களில் கல்வியில் மனப்பாடம் செய்யும் கற்றல் முறையை குறைத்துள்ளது.

    அதை தாண்டி, நிஜ உலக சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய திறன்களை வளர்ப்பதற்கு அதிகளவில் செயல்முறை கற்றலுக்கு சீன கல்விமுறை முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளது.


    விவசாயம், கைவினைப்பொருட்கள் செய்தல் முதல் தொழில்நுட்ப திறன்கள் வரை செயல்முறையாக கற்றுத் தரப்படுகிறது. கல்விச் சுற்றுலாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    மாணவர்களின் கற்றல், விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன், புதுமைகளை உருவாக்குதல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்ப்பதே இதன் குறிக்கோள்.

    இது பாரம்பரிய கற்பித்தல் மாதிரியையே தலைகீழாக மாற்றுகிறது. ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தி, மாணவர்கள் வீட்டில் வீட்டுப்பாடம் செய்யும் வழக்கமான முறைக்குப் பதிலாக, மாணவர்கள் வீட்டிலேயே பாடம் கற்க ஊக்குவிக்கப்படுகிறது. ஆன்லைன் விரிவுரைகள் மூலம் இது சாத்தியப்படுகிறது.

    அதே நேரத்தில் வகுப்பறை நேரம், விவாதங்கள், சிக்கல்களை தீர்க்கும் திறன் மற்றும் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

    அடுத்ததாக கேமிஃபிகேஷன். இது கற்பித்தல் செயல்பாட்டில் விளையாட்டு கூறுகளை இணைப்பதாகும். சீனாவில், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி இரண்டிலும் கேமிஃபிகேஷன் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

    மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும் புள்ளிகள், நிலைகள் மற்றும் வெகுமதிகள் போன்றவை இதன் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. 

    டிஜிட்டல் கருவிகள் மற்றும் தளங்களின் வளர்ச்சியுடன், கற்றல் செயல்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்த ஆசிரியர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

    தொழில்நுட்பம் வகுப்பறை அனுபவத்தை மேம்படுத்துவதோடு கற்றலை மேலும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது.

    சீனாவில் குறிப்பாக  மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கற்றல் செயல்முறை இருக்கிறது.

    இந்த தனிப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்க செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாணவரின் தேவைகளுக்கும் ஏற்ப கற்றல் உள்ளடக்கத்தையும், கற்றலின் வேகத்தையும் மாற்றியமைக்கும் வழிமுறைகள் பயன்படுத்துகின்றன. 


    மென்பொருளின் உதவியுடன், ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் கற்றல் பாணிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைக்கின்றனர். 

    தொழில்நுட்பங்களால் வேகமாக மாறி வரும் உலகில் அதற்கு தகவமைத்து கொள்ளும் வகையில் அடுத்த தலைமுறையை சீனா  முனைப்புடன் உருவாக்கி வருகிறது. 

    • முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • ஆப்பிள் பாதுகாப்பு அப்டேட்களை உடனே புதுப்பிக்கும்படி பயனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் சாதனங்கள் (iPhone, iPad, MacBook, Apple Watch) உலகளவில் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. ஆனால் முழுமையான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில், இந்தியாவில் செயல்படும் ஐபோன் உள்பட அனைத்து ஆப்பிள் பொருட்களும் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக இந்திய இணைய பாதுகாப்பு அமைப்பான CERT- In அதி தீவிர எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    iOS, iPadOS, macOS, watchOS, TVOS/ visionOS 2 இருந்து முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆப்பிள் பாதுகாப்பு அப்டேட்களை உடனே புதுப்பிக்கும்படி பயனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

    • மேக்-இன் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி தளங்களை பி.எஸ்.என்.எல். நிறுவி வருகிறது.
    • ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு நெட்வொர்க்கை 30 நாட்களுக்கு இலவசமாக சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக சோதித்து பார்க்க வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.1 விலையில் வாய்ப்பை வழங்குகிறது.

    இந்தியாவில் உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

    இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி.) தினமும் 2 ஜி.பி. அதிவேக டேட்டா கிடைக்கும். 100 எஸ்.எம்.எஸ். செய்யலாம். ஒரு பி.எஸ்.என்.எல். சிம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    "ஆத்ம நிர்பார் பாரத்" திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையின் மூலம் இந்தியா தனது சொந்த தொலைத்தொடர்பு கட்டமைப்பை உருவாக்கிய ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருப்பதில் பெருமை அடைகிறது.

    பி.எஸ்.என்.எல். சுதந்திர தின திட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு நெட்வொர்க்கை 30 நாட்களுக்கு இலவசமாக சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    மேக்-இன் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி தளங்களை பி.எஸ்.என்.எல். நிறுவி வருகிறது. மேலும் இந்த முயற்சி பாதுகாப்பான, உயர்தர மற்றும் மலிவான மொபைல் இணைப்பின் மூலம் டிஜிட்டல் இந்தியாவிற்கு அதிகாரம் அளிக்கும் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.

    பொதுமக்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது மேளா இடங்களுக்கு சென்று இந்த சுதந்திரதின திட்டத்தை பெறலாம் என்று தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். தெரிவித்து உள்ளது.

    • இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாக உருவாகி வருகிறது.
    • இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.

    இந்நிலையில், இன்ஸ்டாவில் உள்ள லைவ் வசதியை அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதாவது இனிமேல், குறைந்தபட்சம் 1,000 Followers கொண்ட பொது கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளும் இன்ஸ்டாவில் மூழ்கி இருக்கிறது.
    • மக்கள் தொகை, அதிக இணைய ஊடுருவல் விகிதம் மற்றும் வீடியோக்களை ஆதரிக்கும் பழக்கமே அதற்கு காரணமாகும்.

    இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவில் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.

    இந்தியாவில், அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல... உலகின் பல்வேறு நாடுகளும் இன்ஸ்டாவில் மூழ்கி இருக்கிறது. சரி..! எந்த நாட்டு மக்கள், இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோமா..?

    1. இந்தியா

    இந்தியாதான் உலகிலேயே அதிகமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சுமார் 413 மில்லியன் (41.3 கோடி) மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். அதில் 33.1 சதவிகிதம் பெண் பயனர்கள், 66.9 சதவிகிதம் ஆண் பயனர்கள். இந்த அதிக எண்ணிக்கைக்குக் காரணம் அதன் மிகப்பெரிய மக்கள் தொகைதான். அவர்களில் பெரும்பாலானவர்கள் 2-கே கிட்ஸ்கள். இந்தியாவில் ஸ்மார்ட்போனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.



    2. அமெரிக்கா

    உலக வல்லரசான அமெரிக்கா, இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இருக்கிறது. அங்கு 172.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். அங்கு ஆண்களை விட பெண்கள் அதிகமாக இன்ஸ்டாகிராமை கையாளுகிறார்கள்.

    3. பிரேசில்

    இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு 141.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். இங்கு 58 சதவிகிதம் பெண்களும், 42 சதவிகிதம் ஆண்களும் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடக்கிறார்கள். இணைய வசதிகள் மற்றும் இன்ஸ்டாகிராம் தரும் பொழுதுபோக்கே இதற்கு முக்கிய காரணாமாக இருக்கிறது.

    4. இந்தோனேசியா

    இந்தோனேசியாவில் 90.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமில் பொழுதை போக்குகிறார்கள். அதில் பெண்கள் 54 சதவிகிதம் பேர், ஆண்கள் 46 சதவிகிதம் பேர். இந்தோனேசிய மக்களின் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிற்கு அதன் மக்கள் தொகை மற்றும் அதிகரித்து வரும் சமூக ஊடக கலாசாரம் காரணமாக விளங்குகிறது.

    5. துருக்கி

    58.3 மில்லியன் பயனர்களுடன் துருக்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதில் 47.1 சதவிகிதத்தினர் பெண்கள் மற்றும் 52.9 சதவிகிதத்தினர் ஆண்கள். மக்கள் தொகை, அதிக இணைய ஊடுருவல் விகிதம் மற்றும் வீடியோக்களை ஆதரிக்கும் பழக்கமே அதற்கு காரணமாகும்.

    இந்த டாப்-5 நாடுகளை தொடர்ந்து, ஜப்பான் 6-வது இடத்திலும், மெக்சிகோ 7-வது இடத்திலும், இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கின்றன.

    • கோல்ட்மேன் சாக்ஸ், சோடியாக் ஏரோஸ்பேஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
    • சாட்ஜிபிடியில் `ஏஐ மூளை’ என்ற செல்லமான பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டார்.

    மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்திடமிருந்து வந்த 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 8,757 கோடி) சம்பள வேலை வாய்ப்பை நிராகரித்து கவனம் பெற்றுள்ளார் ஓபன்ஏஐ முன்னாள் ஊழியர் மீரா முராதி (36 வயது)

    அல்பேனியாவை சேர்ந்த மீரா முராதி (Mira Murati) மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றவர்.

    ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, அவர் கோல்ட்மேன் சாக்ஸ், சோடியாக் ஏரோஸ்பேஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

    2018 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்ந்த அவர், குறுகிய காலத்தில் அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உயர்ந்தார்.

    சாட்ஜிபிடி, டால்-இ மற்றும் கோடெக்ஸ் போன்ற உலகை மாற்றியமைத்த திட்டங்களை வழிநடத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

    சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டபோது, மீரா முராதி மூன்று நாட்களுக்கு இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றினார்.

    சாட்ஜிபிடியில் `ஏஐ மூளை' என்ற செல்லமான பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு வந்த மீரா, சமூகப் பொறுப்புடன் ஏஐ செயலிகளை உருவாக்க வேண்டும் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து விலகிய மீரா முராதி, தனது "திங்கிங் மெஷின்ஸ் லேப்" Thinking Machines Lab) நிறுவனத்தை தொடங்கினார்.  

    • சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.
    • இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.

    ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 50,000 கோடி) முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட தரவு மையத்தை (data center) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஆந்திரப்ரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையை கூகிள் முதலீடு செய்வது இதுவே முதல் முறை. மேலும், ஆசியாவில் இவ்வளவு பெரிய தரவு மையம் இவ்வளவு அதிக செலவில் கட்டப்படுவது இதுவே முதல் முறை.

    இந்த தரவு மையத்திற்கு மின்சாரம் வழங்க, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.

    நேற்று முன் தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்டில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், கூகிள் கிளவுட் இயக்குனர் ட்ரூ பெய்ன்ஸை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.
    • சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்டவர்கள் இனி YouTube சேனல்களை நடத்த தடை விதித்துள்ளது.

    இந்தப் புதிய விதி டிசம்பர் முதல் அமலுக்கு வரும். TikTok, Instagram மற்றும் Snapchat போன்ற சமூக ஊடக தளங்களிலும் ஆஸ்திரேலியா ஏற்கனவே இதே போன்ற விதிகளை அமல்படுத்தி வருகிறது.

    YouTube ஒரு வீடியோ தளமாக இருந்தாலும், வழக்கமான சமூக ஊடகங்களின் அபாயங்கள் இங்கும் இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

    ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.

    டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு தனது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறினார்.

    சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.

    குழந்தைகள் யூடியூப்பை பயன்படுத்த முடியும், ஆனால் அவர்களுக்கென தனி யூடியூப் சேனல்களை வைத்திருக்க அனுமதி கிடையாது. பத்தில் ஒன்பது ஆஸ்திரேலியர்கள் இந்த முடிவை ஆதரிக்கின்றனர்.

    எதிர்காலத்தில் இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக அமையும். 

    • உங்களில் பலர் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றியும் நான் பேச விரும்புகிறேன்.
    • இன்று நாம் நிற்கும் அடித்தளத்தை உருவாக்க உதவுகின்றன.

    சத்யா நாதெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட், இந்த ஆண்டு 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து தொழில்நுட்ப உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணம், நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) நோக்கி விரைவாக மாறுவதே என்று தலைமை நிர்வாக அதிகாரி நாதெல்லா தெரிவித்துள்ளார்.

    ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய செய்தியில், "வேறு எதற்கும் முன், என்னை மிகவும் பாதித்து வரும் விஷயத்தைப் பற்றியும், உங்களில் பலர் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றியும் நான் பேச விரும்புகிறேன்.

    இந்த முடிவுகள் நாம் எடுக்க வேண்டிய மிகக் கடினமான முடிவுகளில் ஒன்றாகும். வெளியேறியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவர்களின் பங்களிப்புகள் ஒரு நிறுவனமாக நாம் யார் என்பதை வடிவமைத்துள்ளன, இன்று நாம் நிற்கும் அடித்தளத்தை உருவாக்க உதவுகின்றன. அதற்காக, நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 9,000 ஊழியர்களையும் சேர்த்து, இந்த ஆண்டு 15,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மைக்ரோசாப்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இந்த கடினமான முடிவுகள் தவறல்ல என்று நாதெல்லா கூறுகிறார்.

    இந்த பணிநீக்கங்களால் மைக்ரோசாப்டின் கேமிங் பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மைக்ரோசாப்ட் AI தொழில்நுட்பத்தில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனம் AI உள்கட்டமைப்பில் 80 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இலக்கு வைத்துள்ளது. இந்த முதலீடுகள் AI தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அவற்றை அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தப்படும்.    

    • இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மற்றும் மேம்பாட்டு மையம் (INSPAC) அனுமதி வழங்கியுள்ளது.
    • இந்தியாவின் விண்வெளித் துறையைத் தாராளமயமாக்குவதற்கும், டிஜிட்டல் பிளவைக் குறைப்பதற்கும் உதவும்

    எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (SSCPL) நிறுவனம் இந்தியாவில் ஸ்டார்லிங்க் ஜென்1 (Gen1) செயற்கைக்கோள் கூட்டமைப்பு மூலம் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்க இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மற்றும் மேம்பாட்டு மையம் (INSPAC) அனுமதி வழங்கியுள்ளது.

    ஜூலை 8 முதல் தொடங்கும் இந்த 5 ஆண்டு கால அனுமதி, இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கும் அதிவேக இணையத்தை கொண்டு செல்லும் ஒரு முக்கிய படியாகும். இருப்பினும், அனைத்து ஒழுங்குமுறை அனுமதிகளையும் பெற்ற பின்னரே ஸ்டார்லிங்க் சேவைகள் தொடங்கும்.

    இது, இந்தியாவின் விண்வெளித் துறையைத் தாராளமயமாக்குவதற்கும், டிஜிட்டல் பிளவைக் குறைப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பிட்சாட் செயலி இணைய வசதி இல்லாமலேயே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • இந்தப் புதிய செயலி தகவல் தொடர்பு உலகில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும்.

    எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்து வருபவர் ஜாக் டோர்சி. இவர் 'பிட்சாட்' (Bitchat) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    பிட்சாட் செயலி இணைய வசதி இல்லாமலேயே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.

    பிட்சாட், செய்திகளை அனுப்பவும் பெறவும் ப்ளூடூத் (Bluetooth) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன்மூலம் பயனர்கள் இணைய அணுகல் இல்லாத பகுதிகள், இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். பேரிடர் காலங்கள் அல்லது தொலைதூர கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.

    இதுதொடர்பாக ஜாக் டோர்சி கூறுகையில், பிட்சாட் செயலி தற்போது மறுபரிசீலனையில் உள்ளது. விரைவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

    • லாபத்தை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் எக்ஸ்பாக்ஸ் பிரிவு மீது விழுந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
    • மைக்ரோசாஃப்ட் தனது கேமிங் பிரிவு மற்றும் பிற வணிகங்களில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் அடுத்த வாரம் பெரும் பணிநீக்கங்களை மைக்ரோசாப்ட் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

    மைக்ரோசாப்ட்டின் நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 69 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆக்டிவிஷன் பிலிசார்ட் கையகப்படுத்தலுக்குப் பிறகு லாபத்தை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் எக்ஸ்பாக்ஸ் பிரிவு மீது விழுந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

    ப்ளூம்பெர்க் மற்றும் தி வெர்ஜ் அறிக்கைகளின்படி, எக்ஸ்பாக்ஸ் பிரிவில் உள்ள மேலாளர்கள் கணிசமான பணிநீக்கங்களை எதிர்கொள்கின்றனர்.

    டியூக் நியூகெமின் இணை நிறுவனர் மற்றும் அனுபவம் வாய்ந்த கேமிங் துறை நிபுணரான ஜார்ஜ் புரூசார்ட், 1000 முதல் 2000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும், இது எக்ஸ்பாக்ஸ் பணியாளர்களில் சுமார் 10% பேரைப் பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

    சில ஸ்டுடியோக்கள் முற்றிலுமாக மூடப்படலாம் என்றும் கூறப்படுவதால் டெவலப்பர்கள் மத்தியில் மிகுந்த கவலை எழுந்துள்ளது.

    இது கடந்த 18 மாதங்களில் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் நடைபெறும் நான்காவது பெரிய பணிநீக்க நடவடிக்கையாகும்.

    முன்னதாக மே மாதம், மைக்ரோசாப்ட் தனது கேமிங் பிரிவு மற்றும் பிற வணிகங்களில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த மாத தொடக்கத்திலும் 300க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    ×