என் மலர்
நீங்கள் தேடியது "கருத்தரித்தல்"
- கருக்கலைப்பு செய்ய உள்ள பெண்ணின் கருவானது 12 வாரத்துக்கு கீழே உள்ளதாக இருக்க வேண்டும்.
- கருக்கலைப்பின்போது முதல் முக்கியமான பிரச்சினை உடல் ரீதியான பிரச்சினை ஆகும்.
இன்றைய காலகட்டத்தில் திருமணத்துக்கு முன்பே கருத்தரித்தல் மற்றும் கருக்கலைப்பு அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைகள் பெண்களின் வாழ்க்கையில், குறிப்பாக இளம்பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் தரித்தலும், அதை செய்கிற கருக்கலைப்பு முறைகளும், இளம் வயது பெண்களின் இறப்பு, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கிய பாதிப்பில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே கருக்கலைப்பை எப்படி பாதுகாப்பாக செய்வது? பாதுகாப்பாக கருக்கலைப்பை செய்தாலும் என்னென்ன பிரச்சி னைகள் ஏற்படுகிறது? இந்த பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.
கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
பெண்களுக்கு கருக்கலைப்பை பாதுகாப்பாக செய்வதற்கு, அதற்கான தகுதி பெற்ற மருத்துவர் இருக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வதற்கு தகுதி பெற்ற அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக இருக்க வேண்டும். அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். அந்த மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய உள்ள பெண்ணின் உடல் நலனை காப்பதற்கான வழிமுறைகள் சரியாக இருக்க வேண்டும்.
கருக்கலைப்பு செய்ய உள்ள பெண்ணின் கருவானது 12 வாரத்துக்கு கீழே உள்ளதாக இருக்க வேண்டும். கருக்கலைப்பு செய்யலாம் என்று ஒரு மருத்துவர் உறுதி செய்தால் அந்த கருவை கலைக்க முடியும். கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஒரு முறையான கவுன்சிலிங் பெறவேண்டும். கருக்கலைப்பு செய்யலாம் என்று அவரிடம் முறையாக ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு தான் கருக்கலைப்பு செய்ய முடியும்.
இதுவே கருவில் உள்ள குழந்தைக்கு உடல் பாதிப்பு என்றால், அதற்கான ஒரு சரியான ஸ்கேன் பரிசோதனை அறிக்கை இருக்க வேண்டும். அதற்கு ஒரு முதுநிலை மருத்துவர் சான்றிதழ் வழங்கி இருக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வதற்கு இதெல்லாம் சில வரைமுறைகள் ஆகும்.
கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு பெண்கள் இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும். இந்த வகையில் இவை எல்லாமே சரியாக இருந்தால் கருக்கலைப்பு என்பது சாத்தியமானது. அதற்கு கணவரின் கையெழுத்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெண்களின் முடிவையே இதில் ஏற்றுக் கொள்ள முடியும்.
கருக்கலைப்பு விஷயத்தில் பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்:
என்னிடம் ஆலோசனைக்கு வரும் பெண்கள் முதலில் சில சந்தேகங்களை கேட்பார்கள். டாக்டர் நான் திருமணத்துக்கு முன்பு கருத்தரித்தேன், அதன்பிறகு பெரிய கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில் மிகவும் பாதுகாப்பான முறையில் தான் கருக்கலைப்பு செய்தேன். நல்ல மருத்துவமனையில் போய் தான் பார்த்தேன், தகுதியற்ற மருத்துவர்களிடம் போகவில்லை. அப்படிப்பட்ட நிலையில் கருக்கலைப்பு செய்துள்ள எனக்கு பின் விளைவுகள் வருமா,,,? என்பார்கள். இன்றைய பெண்கள் கேட்கிற முதல் கேள்வியே இப்படித்தான் இருக்கும்.
அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான். கருக்கலைப்பு செய்வதால் கண்டிப்பாக பிரச்சினைகள் வரலாம். இந்த பிரச்சினைகள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், எப்போது வேண்டுமானாலும் வரலாம், திருமணம் என்பது இதற்கு தடையே அல்ல. திருமணமாகி இருந்தாலும், திருமணமாகவில்லை என்றாலும், எந்த காலகட்டத்திலும் கருக்கலைப்பு செய்யும்போது, சில பிரச்சினைகள் அதிகமாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தகுதி பெற்ற மருத்துவர் கருக்கலைப்பு செய்தால் கூட பிரச்சினைகள் வருமா என்றால் வரலாம். என்னென்ன பிரச்சினைகள் வரலாம்? முதலில் உடல் ரீதியான பிரச்சினைகள் வரலாம். இரண்டாவதாக, மன ரீதியான பிரச்சினைகள் வரலாம். மூன்றாவது, அவர்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். நான்காவதாக, சமுதாய ரீதியாக பிரச்சினைகள் வரலாம்.
எனவே ஒரு தேவையில்லாத கர்ப்பத்தை, திருமணத்துக்கு முன்பே உருவான கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்யும்போது பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள்.
கருக்கலைப்பின்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்:
கருக்கலைப்பின்போது முதல் முக்கியமான பிரச்சினை உடல் ரீதியான பிரச்சினை ஆகும். அவர்களுக்கு உடல் ரீதியாக என்ன பிரச்சினை வரலாம் என்று பார்த்தால், கருக்கலைப்பு செய்யும்போது பல நேரங்களில் ரத்தப்போக்கு அதிகமாகலாம். கர்ப்ப வாயில் தொற்றுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படலாம். கர்ப்பப்பையில் காயங்கள் ஏற்படலாம்.
அதனால் கர்ப்பம் தரிக்காத நிலை உருவாகலாம். கர்ப்பப்பையில் ஓட்டை விழுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். பல நேரங்களில் கர்ப்பப்பையில் தொற்றுகளும் ஏற்படலாம். அதனால் அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு பிற்காலத்தில் கருத்தரிக்க முடியாத நிலையும் வரலாம்.
தேர்ச்சி பெற்ற மருத்துவர் கருக்கலைப்பு செய்தாலும் கூட, அல்ட்ரா சவுண்ட் வழிகாட்டுதலில் செய்தாலும் கூட சில நேரங்களில் கர்ப்பப்பை பழுது அடைவது, ரத்தப்போக்கு ஏற்படுவது என்பது போன்ற பிரச்சினைகளும் வரலாம்.
இரண்டாவது மன ரீதியான என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்றால், இவர்களை பாதிக்கின்ற ஒரு முக்கியமான விஷயம் மன அழுத்தம். அதாவது கவலை, தேவையில்லாத மன கஷ்டம், இதனால் குற்ற உணர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. பல நேரங்களில் கருக்கலைப்பு செய்யும்போது, தாய்மைக்கான ஒரு விஷயத்தை, ஏதோ ஒரு காரணத்துக்காக கலைத்தோம் என்கிறபோது, அதனால் ஏற்படுகிற மன அழுத்தமும் பெண்களை பாதிக்கின்ற மன ரீதியான பிரச்சினைகள் ஆகும்.
மூன்றாவதாக, சமுதாய ரீதியாக பிரச்சினைகள் வருகிறது. திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் தரித்து கருக்கலைப்பு செய்வது என்பது சமுதாய ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் ஆகும். அந்த வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அவர்களுடைய நிலை தாழ்ந்து விடுகிறது. இதனால் அவர்கள் சமூகத்தில் பழகுவதே குறைவாகிறது. சமூக ரீதியாக தேவையில்லாத செயல் செய்துவிட்டார் என்ற குற்ற உணர்ச்சியோடு அவர்களை பார்ப்பவர்களும் அதிகம். இந்த மாதிரியான பிரச்சினைகள் சமுதாய ரீதியாக ஏற்படுகிறது.
நான்காவது, இதுபோன்ற பிரச்சினைகளால் அந்த பெண்கள் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்படுகிற குழப்பங்களால் அவர்களுடைய வேலைத்திறன் குறைவாகிறது. பல நேரங்களில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தேவையில்லாத பண செலவு ஏற்படுகிறது. உடல் நிலை பாதிப்பினால் நீண்ட நாள் பிரச்சினைகள் நிறைய வரலாம். இவை தவிர பல நேரங்களில் இவர்களுக்கு பிற்காலத்தில் குழந்தையின்மை பாதிப்பும் ஏற்படலாம். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியாக மாறும் நிலையும் வரலாம்.
ஒவ்வொரு பெண்ணும் தேவையில்லாத கர்ப்பம், தேவையில்லாத கருக்கலைப்பு, திருமணத்துக்கு முன்பு உருவாகும் கர்ப்பம் ஆகியவற்றை கண்டிப்பாக தடுக்க முடியும். ஏனென்றால் இதை தடுப்பதற்கு நிறைய முக்கியமான வழிமுறைகள் இருக்கிறது. இன்றைக்கு கருத்தடை முறை என்பது மிகவும் பொதுவாக இருக்கிறது. கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு சட்ட ரீதியாகபாதுகாப்பு இருந்தாலும், அந்த பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கி யத்துக்கு இது பங்கம் விளைவிக்கிறது.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
தேவையில்லாத கர்ப்பம், கருக்கலைப்பை கண்டிப்பாக தடுக்க முடியும்:
இந்த வகையில் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், தேவையில்லாத கர்ப்பத்தை தடுக்க முடியும். இன்றைக்கு எத்தனையோ வகையில் கருத்தடை முறைகள் இருக்கிறது. இந்த கருத்தடை முறைகளை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும். இதைப்பற்றி ஒரு தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.
தேவையில்லாத உறவுகளால் ஏற்படுகிற கர்ப்பம், அதை கலைப்பதால் ஏற்படுகிற மன உளைச்சல், இதனால் ஏற்படுகிற உடல் ரீதியான பிரச்சினைகள், அதனால் நீண்ட நாட்களாக குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் இவர்களில் நிறைய பேரை நாங்கள் பார்க்கிறோம்.
பெண்களுக்கு நாங்கள் சொல்கின்ற முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தை பேறு என்பது நமது நாட்டை பொறுத்த வரைக்கும் திருமணத்துக்கு பிறகு என்பதுதான். தற்காலத்தில் எத்தனையோ கருத்தடை முறைகள் இருக்கிறது. இவற்றினை தெளிவாக தெரிந்து கொண்டு, உங்களுடைய பாலியல் உறவுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். பல நேரங்களில் தேவையில்லாமல் பாலியல் உறவு கொண்டு, அதனால் வருகிற தேவையில்லாத கர்ப்பத்தை கலைக்க போய் உடல், மன ஆரோக்கியம் எல்லாமே கெட்டுப்போகிறது. நல்ல கருத்தடை முறைகள் நமது நாட்டில் மிகவும் எளிதாக கிடைக்கிறது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். திருமணத்துக்கு முன்பே உறவு கொள்வது தவறு தவறு இல்லை என்பது ஒவ்வொருவரின் மனம் சார்ந்த விஷயம். அதேபோல் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் தரிப்பதும் சரியா தவறா என்பது சொல்வதற்கில்லை. ஆனால் உங்களது கர்ப்பத்தை திட்டமிடுவது என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.
நீங்கள் முறையாக உங்கள் கருத்தரிப்பை திட்டமிட்டால், கண்டிப்பாக இந்த தேவையில்லாத கர்ப்பமும், கலைக்க வேண்டிய அவசியமும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் வராது. உணர்வு ரீதியான விஷயங்களில் தேவையில்லாமல் உங்களை இழந்து கருத்தரித்து, அதனால் ஏற்படுகிற மன உளைச்சல், நீண்ட நாள் உடல் ரீதியான பாதிப்பு, பிற்காலத்தில் குழந்தையின்மை ஏற்பட்டு அதனால் உருவாகும் குற்ற உணர்வு, அதோடு உங்களுடைய துணையுடன் ஏற்படுகிற பிரச்சினைகள் ஆகிய அனைத்துமே உங்களால் கண்டிப்பாக தடுக்கக்கூடியது தான். எனவே தேவையில்லாமல் கர்ப்பம் அடைந்து, அதை கருக்கலைப்பு செய்து, உங்கள் உடல், மன ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உடல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் இந்த விஷயங்களில் தெளிவாக பொறுப்புடன் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முழுமையாக தடுக்க முடியும்.
- கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல.
- கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.
கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது.
சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்த கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன.
செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்த செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது.
நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.
கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

உண்மையில், இந்த செயற்கை கருப்பை ஒரு புதிய முறை அல்ல என்று டாக்டர் ஜாங் கூறினார்.
விஞ்ஞானிகள் முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பெற்றெடுத்ததாக அவர் விளக்கினார்.
இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும், இதற்கு ரூ. 12.96 லட்சம் வரை செலவாகும் என்றும் ஜாங் கூறினார்.
- பழுப்பு நிற கொழுப்பு திசு ஆற்றலை எரிக்கும், நம்மை சூடாக வைத்திருக்கும்.
- 'நேச்சர் மெட்டபாலிசம்' என்ற இதழில் வெளியாகி உள்ளது.
ஒருவரின் பிறந்த மாதத்திற்கும், அவரின் உடல் கொழுப்பை எவ்வாறு சேமிக்கிறது என்பதற்கும் தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறா?.. ஆம் என புதிய ஆய்வு ஒன்று அடித்துக் கூறுகிறது.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு 'நேச்சர் மெட்டபாலிசம்' என்ற இதழில் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வின்படி, குளிர் காலத்தில் கருத்தரித்தவர்களில் ஒப்பீட்டளவில் அதிக பழுப்பு நிற கொழுப்பு திசுக்களின் செயல்பாடு (brown adipose tissue activity) இருந்துள்ளது.
பழுப்பு நிற கொழுப்பு திசு என்பது ஆற்றலை எரிக்கும், நம்மை சூடாக வைத்திருக்கும் மற்றும் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும் ஒரு வகை கொழுப்பு ஆகும்.
இதன்படி வெப்பமான காலங்களில் கருத்தரிக்கப்பட்டவர்களை விட, குளிர்ந்த மாதங்களில் கருத்தரிக்கப்பட்டு 10 மாதங்கள் கடந்து பிரசவிக்கப்படுபவர்களுக்குக் குறைந்த BODY MASS INDEX மற்றும் உள் உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு குறைவாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
- தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடந்தது.
- இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச கருத்த ரித்தல் பரிசோதனை முகாம் உசிலம்பட்டியில் வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது.
முகாமில், தொடர்ச்சி யாக கருசிதைவால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், விந்தணு குறைபாடு உள்ள வர்கள், கர்ப்பப்பையில் நீர்கட்டி உள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.
மேலும் ஆண், பெண்க ளுக்கான குழந்தையின்மை பிரச்சனைகள், கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள், கர்ப்பப்பையில் விந்தணு உட்செலுத்தும் முறை, செயற்கை கருத்தரித்தல், ஹார்மோன் சிகிச்சைகள், விந்தணுவை விதைப்பை யில் இருந்து பிரித்தெடுத்தல், விந்தணு கருமுட்டை மற்றும் கருவை தானமாக பெறுதல், விந்தணு கருமுட்டை மற்றும் கரு உறைநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சி னைகளுக்கு முகாமில் இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)உசிலம்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சரஸ்வதி மஹாலிலும்,
25-ந் தேதி திங்கட்கிழமை தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையிலும் கருத்தரித்தல் முகாம் நடக்கிறது.
முகாமில் பங்கேற்ப வர்களுக்கு பத்தாயிரம் மதிப்புள்ள மருத்துவ பரிசோதனைகள் இலவச மாக செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்க 89258-01358 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்யலாம். இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் சில ஊட்டச்சத்து உணவுகள்.
- ஒமேகா-3 கொண்ட உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சீரான உணவு உடலுக்கு சமநிலையை வழங்குகிறது. இது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. தாதுக்கள், புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மிகவும் பரிந்துரைக்கப்பட்ட உணவுகளாக உள்ளன.
கர்ப்ப காலத்தில் குறிப்பாக பரிந்துரைக்கப்படும் சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும் ஒமேகா-3 கொண்ட உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும். இதனால் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த முடியும். இது கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துவற்கு உதவும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவற்கும் உதவுகிறது.

பேரீச்சை
பேரீச்சம்பழத்தில் வைட்டமின் பி மற்றும் கே, இரும்புச்சத்து, பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய தாதுப்பொருட்கள் உள்ளது.
கருத்தரித்தல் மற்றும் கர்ப்ப காலத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள். பேரீச்சம்பழங்கள் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் கர்ப்ப காலத்திற்கு உதவும் ஒரு சக்தி வாய்ந்த உணவாகும்.

மாதுளை
மாதுளையில் வைட்டமின் சி மற்றும் கே, அத்துடன் பல ஆக்ஸிஜனேற்றிகள், ஃபோலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க மாதுளை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவை பெண் கருவுறுதலை அதிகரிக்கச் செய்வதாகவும், கருப்பை சுவரை தடிமனாக்க உதவுவதாகவும், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மக்கா வேர்
மக்கா ரூட் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் குறைந்த கருவுறுதல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம். இது சத்தானது மற்றும் வைட்டமின்கள் பி, சி, இரும்பு மற்றும் பொட்டாசியம் நிறைந்தது. இந்த வேர் உடலில் உள்ள ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தவும், விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
இதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்துகிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் அரை டீஸ்பூன் மக்கா ரூட் தூள் சேர்க்கவும். நீங்கள் பல மாதங்களுக்கு மக்கா ரூட் தூள் எடுக்கலாம், ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அதை தவிர்க்கவும்.
வைட்டமின் டி
உடலில் வைட்டமின் டி இல்லாதது கருவுறாமைக்கு வழிவகுக்கும் மற்றும் முந்தைய கர்ப்பத்தை இழந்த பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம். வைட்டமின் டி உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து.
எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. பல அறிவியல் ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாட்டால் பெண் கருவுறுதலில் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் காட்டுகின்றன.

லவங்கப்பட்டை
இந்த அற்புதமான மருந்து பெண்களின் கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் மலட்டுத்தன்மையை தடுக்கிறது. பெண் மலட்டுத்தன்மையின் முக்கிய காரணங்களில் ஒன்றான பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது பிசிஓஎஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் சேர்த்து இந்த தேநீரை பல மாதங்களுக்கு குடிக்கலாம்.

ஆலமரத்தின் வேர்கள்
ஆலமரத்தின் வேர் கருத்தரிப்பிற்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். உங்கள் மாதவிடாய் முடிந்த பிறகு தொடர்ந்து 3 நாட்களுக்கு வெதுவெதுப்பான பாலுடன் ஆலமரத்தின் வேரின் பொடியை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் பல மாதங்கள் கூட இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். நல்ல ரிசல்ட் இருக்கும்.

பூண்டு
கர்ப்பம் தரிக்க ஒரு சிறந்த இயற்கை தீர்வு உண்டு என்றால் அது பூண்டு சாப்பிடுவது. பூண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கருவுறுதலை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. பூண்டு விந்தணு மற்றும் கருமுட்டையின் தரத்தை மேம்படுத்துகிறது. 1 முதல் 5 பல் பூண்டுகளை மென்று சாப்பிடலாம்.
பூண்டை மென்று சாப்பிட்ட பிறகு, ஒரு கிளாஸ் சூடான பால் குடிக்கவும். அல்லது பாலில் பூண்டு பற்களை வேகவைத்தும் சாப்பிட்டு வரலாம். கருவுறுதலை மேம்படுத்த குளிர்காலங்களில் இந்த வழக்கத்தை தவறாமல் பின்பற்றவும்.
- 40 வயதிலும் பல பெண்கள் கருவுற்றிருக்கிறார்கள்.
- குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது.
முதல் குழந்தைக்கு பிறகு உடனடியாக அடுத்த குழந்தையா அல்லது சில வருடங்கள் காத்திருக்க வேண்டுமா? நீண்ட வருடங்கள் ஆகிவிட்டால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி தம்பதிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதோடு உடல்நலம், பொருளாதார சூழ்நிலை போன்ற பல காரணங்கள் இதில் அடங்கும்.
ஆனால் 40 வயதிலும் பல பெண்கள் கருவுற்றிருக்கிறார்கள். சில பெண்களுக்கு குடும்ப அரவணைப்பு முழுமையாக கிடைக்கும் போது இரண்டு குழந்தைகளை வெற்றிகரமாக வளர்க்க முடியும்.
முதல் குழந்தைக்கு பிறகு மீண்டும் இரண்டாவது கர்ப்பம் தரிக்க விரும்பினால் பின்வரும் காரணங்களை கவனித்து முடிவு செய்யலாம்.

உடல் ஆரோக்கியம்:
முதல் கர்ப்பம் சிக்கல் இல்லாமல் ஆரோக்கியமானதா அல்லது சிக்கல் நிறைந்ததா என்பதை யோசிக்க வேண்டும். முதல் குழந்தைக்கு எடைகுறைப்பு, வேறு குறைபாடுகள் இருந்தால் 2-வது குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் திட்டமிடலாம்.
வயது:
கருத்தரிக்க பெண்களின் வயது மிகவும் முக்கியம். 2-வது குழந்தை பெற்றுக்கொள்வதிலும் வயது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் பெண்கள் வளர வளர அவர்களின் மாதவிடாய் சுழற்சி முறையிலும், கருமுட்டை உற்பத்தி அடிப்படையிலும் மாற்றங்கள் ஏற்படும்.
மேலும் கருத்தரிக்க பெண்ணின் வயது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஆண்களின் வயதும் மிகவும் முக்கியம். ஏனென்றால் 35 வயதை கடந்தவுடன் ஆண்களுக்கு விந்தணுக்களின் தரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.

திட்டமிடுதல்:
இன்றைய சூழலில் 2-வது குழந்தைக்கு திட்டமிடுவதற்கு நிதியும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் செலவுகள் இரட்டிப்பாகும். நீங்களும், உங்கள் துணையும் பொருள் ஈட்டினாலும் இரண்டு குழந்தைகளின் கல்வி, மருத்துவம் போன்ற இதர செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
கணவன் -மனைவி இருவரும் இணைந்து பரஸ்பரமாக ஒருவருக்கொருவர் பேசிய பிறகு இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கலாம். இல்லை என்றால் கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
குழந்தை பராமரிப்பு:
குழந்தையை பராமரிப்பதில் முதல் குழந்தைக்கு நேரத்தை ஒதுக்குவது மற்றும் குழந்தையை கவனிக்க குடும்ப உறுப்பினர்கள் உள்ளனரா என்பதையும் கவனிக்க வேண்டும். இல்லை என்றால் இரண்டு குழந்தைகளை பராமரிப்பதிலும் சிரமம் ஏற்படும்.
வயது இடைவெளி என்பது முதல் குழந்தைக்கும் 2-வது குழந்தைக்கும் இடையே உள்ள வயது இடைவெளியை கவனிக்க வேண்டும்.

பரிசோதனை:
முதல் குழந்தை சிசேரியனாக இருந்தால் குறைந்தது 2 வருடங்களாவது இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்க வேண்டும். ஏனெனில் சிசேரியனுக்கு பிறகு மருத்துவரின் அறிவுரையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வழக்கமான பரிசோதனையை கணவன் - மனைவி இருவரும் செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே இரும்புச்சத்து குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஏனெனில் பிரசவித்த பின்னர் ஏராளமான பெண்கள் ரத்த சோகை சிக்கலை சந்திக்கிறார்கள்.
- சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும்.
- ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும்.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாய்மை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் பல நேரங்களில் இந்த மகிழ்ச்சி எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. சில காரணங்களால் கர்ப்பம் தரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரோக்கியமான உடல் எடை
ஆரோக்கியமான உடல் எடை இல்லாமல் இருந்தால் அவை முட்டைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் கர்ப்பமடையும் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக எடை கொண்ட பெண்கள் தான் குறிப்பாக கர்ப்பம் அடைய மிகவும் சிரமம் அடைகிறர்கள்.
அதேபோல் ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியமான உணவுமுறையுடன் தொடர்ந்து உடல் எடையை பராமரிக்கலாம்.

சரியான மாதவிடாய் சுழற்சி
சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும். உங்களின் அதிகபட்ச மாதவிடாய் நாட்கள் 3 நாட்கள் ஆகும்.
தைராய்டு பிரச்சனைகள்
தைராய்டு ஹார்மோன்களில், T3 மற்றும் T4 ஆகியவையே இனபெருக்கத்துடன் தொடர்புடையவை. உணவு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் ஆகியவற்றின் மீது இவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
தைராய்டு ஹார்மோன் சமநிலையற்று இருந்தால் கருத்தரிப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம். கர்ப்பங்கள் மற்றும் கருச்சிதைவுகளுக்கு வழிவகுக்கும்.

பி.சி.ஓ.ஸ் பரிசோதனை
பி.சி.ஓ.எஸ் என்பது சினைப்பை நீர்க்கட்டி ஆகும். இதனால் ஹார்மோன் குறைபாடு, கருத்தரித்தலில் பிரச்சனை, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கொண்டு வரும்.
பி.சி.ஒ.எஸ் இருந்தால் உங்கள் சினைப்பையில் சிறிது சிறிதாக நீர்கட்டிகள் உருவாகும். அப்படி நடந்தால் கருமுட்டை உருவாவதில் சிக்கல் ஏற்படும். இதனால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படும். சரியான சிகிச்சை எடுப்பதன் மூலம் இதனை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
ஹார்மோன் குறைபாடு
பெண்களின் ஹார்மோன் அளவுகளில் மிகக் குறைந்த அளவில் மாறுதல் ஏற்பட்டால் கூட எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
விந்தணுக்கள் பரிசோதனை
தம்பதிகள் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கும்போது விந்து பகுப்பாய்வு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பகுப்பாய்வு குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது விந்தணு செயலிழப்பு கருவுறாமைக்கு காரணமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. மேலும் இந்த சோதனை செய்து கொள்வதன் மூலம் உங்கள் குறைகளை கண்டறிந்து அதனை சரிசெய்து விடலாம்.

ஃபோலிக் அமிலம்
கருவுற்ற முதலில் குழந்தையின் முதுகெலும்பு மூளை, மற்றும் நரம்புக் குழாய் போன்றவைகள் உருவாகும். அதற்கு இந்த ஃபோலிக் அமிலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நரம்புக் குழாய் குறைபாடுகளிலிருந்து குழந்தையின் அதிகபட்ச பாதுகாப்பிற்காக ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் சோதனை
நீங்கள் 35 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருந்து கர்ப்பத்தை திட்டமிட்டால், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கர்ப்பம் தரிப்பதற்கு முன் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

உடற்பயிற்சி
கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டியவை உடற்பயிற்சி செய்தல் தான். லேசானது முதல் மிதமான உடற்பயிற்சி மாதவிடாய் சுழற்சியை சரிசெய்து, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை சீராக்கும்.






