என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.



    ஃபேஸ்புக் நிறுவனத்தின் எஃப்8 நிகழ்வில் அந்நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. இவற்றில் சில ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. அந்த வரிசையில் இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிக்களில் லே-அவுட், புதிய பூமராங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    தற்சமயம் இந்த புதிய அம்சங்கள் இன்ஸ்டாகிராமில் சோதனை செய்யப்படுகின்றன. ஃபேஸ்புக் எஃப்8 நிகழ்வில் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக ஸ்டோரி கேமரா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் யூசர் அனுபவம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய மாற்றங்கள் ஸ்டோரி லே-அவுட்டில் விரைவில் காண முடியும்.

    இன்ஸ்டாகிராம் கோப்புப்படம்

    லே-அவுட் மாற்றங்கள் கிட்டத்தட்ட இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதால், இது விரைவில் வழங்கப்படலாம் என தெரிகிறது. இன்ஸ்டாகிராம் செயலியில் லே-அவுட் அம்சம் கொண்டு பயணர்கள் பல்வேறு புகைப்படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். இதற்கான அப்டேட் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம்.

    இதுதவிர பூமராங் அம்சமும் மேம்படுத்தப்படுவதாக தெரிகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த அம்சத்தில் பல்வேறு மோட்கள் சோதனை செய்யப்படுகின்றன. கிளாசிக் பூமராங், ஹோல்ட், டைனமிக், டுயோ மற்றும் டுயோ 2 போன்றவை இருக்கின்றன. செயலியில் புதிய அம்சங்களுடன் வலைத்தள செட்டிங், கமென்ட் ஷேரிங், நோட்டிஃபிகேஷன் செட்டிங் உள்ளிட்டவையும் மாற்றப்பட இருக்கின்றன.

    சமீபத்தில் இந்நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி (ஏ.ஆர். டூல்) எஃபெக்ட், ஸ்பார்க் ஏ.ஆர். உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது. இதை கொண்டு யார் வேண்டுமானாலும் 3டி ஃபேஸ் ஃபில்ட்டரை உருவாக்க முடியும். முன்னதாக ஏ.ஆர். டூல் அம்சம் அனுமதிக்கப்பட்ட கிரியேட்டர்களுக்கு மட்டுமே வழங்கபப்ட்டிருந்தது. 
    வாட்ஸ்அப் செயலியில் சாட் விவரங்களை பாதுகாக்க புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது.



    வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. புது அம்சங்கள் சோதனை செய்வது வாடிக்கையான விஷயம் தான் என்ற போதும், சமயங்களில் சில அம்சங்கள் அனைவரும் அதிகம் எதிர்பார்த்திருக்கும் போது இவை சற்று முக்கியத்துவம் பெறுகின்றன.

    அவ்வாறு வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சாட்களை கைரேகை லாக் மூலம் பாதுகாக்கும் வசதி சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டாவில் சோதனை செய்யப்பட்ட இந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு பதிப்பிலும் சோதனை செய்யப்படுகிறது.

    வாட்ஸ்அப் பீட்டா 2.12.221 பதிப்பை பயன்படுத்துவோருக்கு புதிய பாதுகாப்பும் அம்சம் வழங்கப்படுகிறது. பீட்டா பதிப்பை பயன்படுத்துவோர் செயலியை அப்டேட் செய்து புதிய அம்சத்தை பயன்படுத்தி பார்க்க முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் கைரேகை லாக்

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பதிப்பில் கைரேகை லாக் வசதியை செயல்படுத்துவது எப்படி?

    வாட்ஸ்அப் செயலியில் செட்டிங்ஸ் - அக்கவுண்ட் - பிரைவசி ஆப்ஷன்களை தேர்வு செய்யவும்

    இதில் புதிதாக கைரேகை லாக் (Fingerprint lock) அம்சம் பிரைவசி பிரிவில் தெரியும்

    இனி ‘Unlock with fingerprint’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

    புதிய அம்சம் தேர்வு செய்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்

    செயலியை திறந்து அதனை பயன்படுத்த வாட்ஸ்அப் மூன்று ஆப்ஷன்களை வழங்குகிறது. இவை தானாக லாக் செய்வது (Automatically lock), உடனடியாக லாக் செய்வது (Immediately), ஒரு நிமிடத்திற்கு பின் (After 1 minute) மற்றும் முப்பது நிமிடங்களுக்கு பின் (After 30 minutes) போன்றவை தெரியும்.

    கைரேகை லாக் அம்சம் ஆன் செய்யப்பட்டிருந்தால், விட்ஜெட் தானாக மறைக்கப்பட்டு விடும். எனினும், பயனர்கள் வாட்ஸ்அப் அழைப்புகளை ஏற்கவும், நோட்டிஃபிகேஷன்களில் இருந்து குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும். செயலியை பயன்படுத்த திறக்கும் போது மட்டும் கைரேகை தேவைப்படும்.

    கைரேகை லாக் அம்சம் செயல்படுத்தப்பட்டிருக்கும் போது, நோட்டிஃபிகேஷன்களில் தரவுகளை தோன்ற செய்வது மற்றும் மறைத்து வைப்பதற்கு வாட்ஸ்அப் வழி செய்கிறது. இதனை Show content in notifications பகுதியில் இயக்க முடியும்.

    இந்த அம்சம் படிப்படியாக ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
    ஜியோவின் புதிய ஜியோபோன் மற்றும் ஜியோ ஜிகாஃபைபர் திட்ட விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது 43 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அந்நிறுவனம் வணிக ரீதியில் ஜியோ ஜிகாஃபைபர் சேவையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஜியோபோன் மாடலையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    புதிய ஜியோபோன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், முந்தைய ஆண்டுகளில் ஜியோ புதிய மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்திருக்கும் நிலையில், இந்த வாரம் புதிய ஜியோபோன் பற்றிய அறிவிப்பு இடம்பெறலாம் என எதி்ர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை இதுவரை வணிக ரீதியில் துவங்கப்படவில்லை. சில நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவை துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எவ்வித தகவலும் அந்நிறுவனம் வழங்கவில்லை.

    ஜியோ ஜிகாஃபைபர்

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி பிரீவியூ வாடிக்கையாளர்கள் முதற்கட்டமாக ரூ. 4500 திரும்பப் பெறக்கூடிய கட்டணம் செலுத்தி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். எனினும், ஜியோ ஜிகாஃபைபர் திட்ட விலை விவரங்கள் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஜியோ ஜிகாஃபைபர்  பிராட்பேன்ட் சேவைகள் விலை மாதம் ரூ.500 முதல் ரூ.700 முதல் துவங்கும் என்றும் குறைந்தபட்சம் 100 ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும், பிராட்பேன்ட் சேவையுடன் இன்டர்நெட் டிவி மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக ஜியோ சேவைகள் துவங்கப்பட்ட போது, சில மாதங்களுக்கு சேவைகள் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், புதிய ஜிகாஃபைபர் சேவைகளும் இலவசமாக வழங்கபப்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிதாய் ஃபைபர் சார்ந்த இணைப்புகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனத்துக்கு உள்கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு சவால் காத்திருக்கும் என வல்லுநர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ஹூவாய் நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களுக்கென பிரத்யேகமாக புதிய இயங்குதளத்தை அறிவித்துள்ளது.



    ஹூவாய் நிறுவனம் தனது சொந்த ஹார்மனிஒ.எஸ். இயங்குதளத்தை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் IoT சாதனங்களில் இயங்கும் வகையில் புதிய இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளம் ஹூவாயின் டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக நான்கு முக்கிய பில்டிங் பிளாக்களை நினைவில் கொண்டு மைக்ரோகெர்னல் சார்ந்து உருவாக்கப்பட முதல் இயங்குதளம் ஹார்மனிஒ.எஸ். என ஹூவாய் நிறுவன தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு தெரிவித்தார்.

    ஹார்மனிஒ.எஸ்.

    ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஹார்மனிஒ.எஸ். மைக்ரோகெர்னல் சாதனத்தின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஹார்மனிஒ.எஸ். பயனர்களுக்கு நான்கு மிகமுக்கிய தொழில்நுட்ப அம்சங்களை வழங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

    ஹூவாய் தனது ஹார்மனிஒ.எஸ். தளத்தை உலகம் முழுக்க ஓபன்-சோர்ஸ் பிளாட்ஃபார்மில் வெளியிட திட்டமிட்டுள்ளது. டெவலப்பர்களுடன் மிக நுணுக்கமாக இணைந்து செயல்படும் வகையில் ஓபன்-சோர்ஸ் பவுன்டேஷன் மற்றும் ஓபன்-சோர்ஸ் கம்யூனிட்டி முறையில் வழங்கப்படுகிறது.

    பயனர்களுக்கு புதிய இயங்குதளம் சக்திவாய்ந்த அதிநவீன அம்சங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினருக்கும் புதிய ஹார்மனிஒஎஸ் பல்வேறு புதிய வசதிகளை வழங்குகிறது. 
    வாட்ஸ்அப் செயலியில் பூமராங் போன்ற அம்சத்தை விரைவில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பூமராங் போன்ற அம்சத்தை விரைவில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பூமராங் அம்சம் கொண்டு வீடியோக்களை கஸ்டமைஸ் செய்து மகிழ முடியும். வீடியோக்களில் வித்தியாசமாக மாற்றிக் கொள்ளும் இந்த அம்சம் இன்ஸ்டா பயனர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வருகிறது.

    அந்த வகையில் இதேபோன்ற அம்சம் வாட்ஸ்அப் செயலியிலும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பயனர்கள் தங்களது வீடியோக்களை பல்வேறு விதங்களில் லூப் செய்ய முடியும். பல்வேறு புதிய அம்சங்களுடன் பூமராங் அம்சமும் மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    வாட்ஸ்அப்

    இந்த அம்சத்தை வீடியோ டைப் பேனலில் சேர்க்க டெவலப்பர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூமராங் அம்சம் வீடியோக்களை ஜிஃப் ஆக மாற்றும் ஆப்ஷனுடன் விரைவில் இணையும் என எதிர்பார்க்கலாம். ஜிஃப் போன்று பூமராங் அம்சமும் ஏழு நொடிகள் வரை பயன்படுத்தும் வசதி வழங்கப்படலாம்.

    பூமராங் வீடியோக்களை அதிகபட்சம் 7 நொடிகள் வரை உருவாக்கி அதனை பயனர்கள் தங்களது காண்டாக்ட்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். பூமராங் வீடியோக்களை பயனர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் வைக்கும் வசதியும் வழங்கப்படலாம். முந்தைய அப்டேட்களை போன்று புதிய அம்சம் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    முன்னதாக வெளியான தகவல்களில் வாட்ஸ்அப் செயலியை பல்வேறு தளங்களில் இயக்குவதற்கான வசதியை வழங்க இருப்பதாக கூறப்பட்டது. இதன் மூலம் பயனர்கள் ஒரே அக்கவுண்ட்டினை பல்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும். இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை.
    ட்விட்டர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் தவறு இழைத்துவிட்டதாகவும், இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.



    ட்விட்டர் நிறுவனம் தனது பயனர் விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. ட்விட்டர் வலைத்தள செட்டிங் காரணமாக இந்த பிழை ஏற்பட்டு விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

    தளத்தில் இருந்த பிழைகள் சமீபத்தில் கண்டறியப்பட்டு அவை சரி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் யார் யார் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை. பயனர் விவரங்களை பாதுகாக்கும் விவகாரத்தில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.

    போன் பயன்பாடு - கோப்புப்படம்

    ட்விட்டர் பயன்படுத்திய விவரங்களில் பயனரின் தேசிய குறியீடு, அவர்களது பயன்பாட்டு விவரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சாதனங்களின் விவரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

    "நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்தீர்கள், நாங்கள் இங்கு தோற்றுவிட்டோம்," என ட்விட்டர் தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறது. மேலும் இது போன்ற தவறு மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் நிறுவனம் பயனர் விவரங்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டோ அல்லது பயனர்களிடம் இருந்து அனுமதியின்றி சேகரித்த விவரங்களுக்கு ஏற்ப பயனர்களுக்கு விளம்பரங்களை தளத்தில் பதிவிட்டிருக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
    இந்தியாவில் ரெயில் பயணங்களை சிறப்பாக மாற்றும் புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்த இந்தியன் ரெயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    இந்தியன் ரெயில்வே துறை அதன் பயணிகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் நோக்கில் இலவசமாக வீடியோ ஸ்டிரீமிங் சேவையை வழங்க இருக்கிறது. விரைவில் ரெயில் பயணங்களின் போது பயணிகள் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தங்களது மொபைல் அல்லது டேப்லெட் சாதனங்களில் கண்டுகளிக்க முடியும்.

    புதிய சேவையை பயணிகள் ரெயில்வே நிலையங்கள் மற்றும் ரெயிலில் பயணிக்கும் போதும் பயன்படுத்தலாம். ஏற்கனவே விமானங்களில் இன்-ஃபிளைட் ஏர்கிராஃர்ட் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் எனும் சேவையில் இதுபோன்ற வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில இதுபோன்ற சேவை ரெயில்வே துறையிலும் அறிமுகம் செய்யப்பட்டு விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    “பயணிகளுக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். விரைவில் உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் இசையை ரெயிலில் பயணம் செய்யும் போதும் ரெயில்வே நிலையங்களிலும் ஸ்டிரீம் செய்யலாம்”, என இந்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

    வீடியோ ஸ்டிரீமிங் - கோப்புப்படம்

    புதிய சேவையை வழங்க இந்தியன் ரெயில்வே ரெயில்டெல் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. இந்தியன் ரெயில்வேயின் பிரிவாக செயல்படும் இந்நிறுவனம் ரெயில்வே நிலையங்களில் இலவச வைபை சேவையை வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் இந்நிறுவனம் வீடியோ ஸ்டிரீமிங் சேவையை வழங்கும் என எதிர்பார்க்கலாம். தற்சமயம் வரை இதன் வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

    எனினும், ரெயில்டெல் நிறுவனம் வீடியோ தரவுகளை பல்வேறு மொழிகளில் வழங்கும் என்றும் இதில் இசை, பொழுதுபோக்குகளான தொலைக்காட்சி சீரியல்கள், ஆன்மீக தொடர்கள், வாழ்வியல் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரெயில்டெல் இலவச வைபை வழங்கும் ரெயில் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.
    புதுவித தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட போக்கிமான் கோ கேமி டவுன்லோடுகளில் புதிய உச்சத்தை கடந்திருக்கிறது.



    சர்வதேச சந்தையில் 2016 ஆம் ஆண்டு வெளியான போக்கிமான் கோ கேமினை இதுவரை சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். 

    புதிய டவுன்லோடுகளை கொண்டாடும் வகையில் போக்கிமான் நிறுவனம் பல்வேறு புதிய வீடியோக்களை ஜப்பானில் வெளியிட்டுள்ளது. 100 கோடி எண்ணிக்கையில், பலர் அன்-இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்திருக்கின்றனர். எனினும், வருவாய் அடிப்படையில் இது லாபகரமான ஒன்றாகவே இருக்கிறது.

    துறை சார்ந்த ஆய்வாளர்களின் படி உலகளவில் ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து போக்கிமான் கோ வருவாய் 265 கோடி டாலர்களாக இருக்கிறது. இதே ஆண்டில் போக்கிமான் கோ வருவாய் 300 கோடி டாலர்களை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    போக்கிமான் கோ

    நியான்டெக் உருவாக்கிய இந்த கேம் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. வெளியான சில மாதங்களிலேயே போக்கிமான் கோ டவுன்லோடு எண்ணிக்கை 50 கோடிகளை கடந்தது. போக்கிமான் கோ கேம் தற்சமயம் நூற்றுக்கும் அதிகமான பிராந்தியங்களில் பிரத்யேக கேம் ரைடுகளை கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் நியான்டெக் அறிமுகம் செய்த ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கேமான ஹாரி பாட்டர் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பை பெறவில்லை. இதன் கேம்பிளே போக்கிமான் கோ போன்று இருந்தாலும், இது முந்தைய கேம் போன்ற டவுன்லோடுகளை பெறவில்லை.
    புதிய தலைமுறை ஃபிட்பிட் வெர்சா ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இந்த அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.



    ஃபிட்பிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தின் வெளியீட்டை உறுதிப்படுத்தும் தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபிட்-பிட் அடுத்த தலைமுறை வெர்சா சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ஃபிட்பிட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அமேசான் அலெக்சா வசதி வழங்கப்படலாம். இதுதவிர லீக் ஆகியிருக்கும் புதிய புகைப்படங்களின் படி புதிய ஸ்மார்ட்வாட்ச் OLED ஸ்கிரீன் மற்றும் வளைந்த கிளாஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    ஃபிட்பிட் வெர்சா

    இதுதவிர வெர்சா லைட் மாடலில் உள்ளதை போன்று ஒற்றை பட்டன் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ஃபிட்பிட் சப்போர்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்டுகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் வெளியீடு மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    எனினும் ஃபிட்பிட் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றிரண்டு மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வாட்ஸ்அப் நிறுவனம் தனது பிறந்தநாளை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜி.பி. இலவச டேட்டா வழங்குவதாக தகவல் பரவுகிறது.



    வாட்ஸ்அப் செயலியில் 1000 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுவதாக குறுந்தகவல் பரப்பப்படுகிறது. சைபர்செக்யூரிட்டி ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்களுக்கும் அந்த குறுந்தகவல் சென்றிருக்கிறது. வைரல் குறுந்தகவலில் வாட்ஸ்அப் தனது பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜி.பி. இலவச டேட்டா வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த குருந்தகவலை பயனர் விவரங்களை திருடும் கும்பல் உருவாக்கியதாகும். குறுந்தகவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இணைய முகவரி வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமானதில்லை. எப்போதும் போல் அதிக சலுகைகள் வழங்குவதாக கூறும் குறுந்தகவலில் போலி வலைத்தள முகவரிகளே இடம்பெற்றிருக்கும். இவற்றை க்ளிக் செய்தால் மால்வேர் நிறைந்த வலைத்தளம் திறக்கும். பயனர்கள் ஒரு க்ளிக் செய்தாலே அவர்களது விவரங்களை அவை பறித்துக் கொள்ளும்.

    பெரும்பாலும் இதுபோன்று பரவும் குறுந்தகவலில் உள்ள இணைய முகவரியை க்ளிக் செய்தால், சில கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கோரும் வலைத்தளம் ஒன்று திறக்கும். இதில் சலுகையை எவ்வாறு கண்டறிந்தீர்கள் போன்ற கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.

    வாட்ஸ்அப் வைரல் ஸ்கிரீன்ஷாட்

    இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, இதே தகவலை மேலும் 30 பேருக்கு பகிர்ந்து கொண்டால் தான் சலுகையை பெறலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கும். இவ்வாறு வரும் குறுந்தகவல்களை நம்பி மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம். போலி தகவல்களை பரப்புவதால், பயனர் விவரம் பறிக்கப்படுவதுடன் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படலாம்.

    சில நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இதுபோன்ற சலுகைகளை அறிவிக்கலாம் என்ற போதும், இதுபோன்ற தகவல்கள் வரும் போது அதில் வழங்கப்படும் இணைய முகவரியை உற்று நோக்க வேண்டியது அவசியமாகும்.

    வாட்ஸ்அப்பில் வரும் குறுந்தகவல்களின் உண்மைத் தன்மையை நன்கு அறிந்த பின்னரே அவற்றை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். போலி தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவே வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் அம்சத்தில் மாற்றம் செய்யப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஐந்து பேருக்கு மட்டும் ஃபார்வேர்டு செய்யும் வசதி வழங்கப்பட்டது.
    கூகுள் பிக்சல் 4 ஸ்மார்ட்போன் புதுவித ஃபேஸ் அன்லாக் வசதியுடன் உருவாகி வருவது சமீபத்திய டீசரில் தெரியவந்துள்ளது.



    புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் ஐ.ஆர். சென்சார்கள், பிராஜக்ட் சோலி சார்ந்த மோஷன் சென்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படும் என கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ரேடார் சாந்து இயங்கும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் தொழில்நுட்பம் பிராஜக்ட் சோலி என்ற பெயரில் கூகுள் உருவாக்கி இருக்கிறது. இது கூகுளின் அதிநவீன தொழில்நுட்ப திட்ட குழுவினரால் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் போது ஃபேஸ் அன்லாக் சென்சார்களை ஆன் செய்யும் பணியை சோலி ரேடார் சிப் மேற்கொள்ளும். ஃபேஸ் அன்லாக் சென்சார்கள் மற்றும் அல்காரிதம்கள் உங்களை அங்கீகரித்துவிட்டால், போனினை கையில் எடுக்கும் போதே அன்லாக் ஆக்கிவிடும்.

    பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதி போனை எப்படி பிடித்திருந்தாலும் சீராக வேலை செய்யும். இதனை பேமன்ட் மற்றும் இதர ஆப் பாதுகாப்பிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பிக்சல் 4 டீசர்

    சோலி ஜெஸ்ட்யூர்கள்

    பிக்சல் 4 ஸ்மார்ட்போன்களின் மேல்பகுதியில் பொருத்தப்படும் மோஷன் சென்சிங் ரேடார்கள் பல்வேறு மென்பொருள் மற்றும் அதிநவீன ஹார்டுவேர் சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர் ஸ்மார்ட்போன் அருகில் இருப்பதை இவை கண்டறிந்து கொள்ளும். 

    இதனால் பாடல்களை மாற்றுவது, அலாரம் ஆஃப் செய்வது, போன் அழைப்புகளை சைலன்ட்டில் வைப்பது போன்றவற்றை கை அசைவுகளிலேயே இயக்க முடியும். மோஷன் சென்ஸ் அம்சம் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது

    பாதுகாப்பு மற்றும் தனியுரிமை

    ஃபேஸ் அன்லாக் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பம் சாதனத்திலேயே இயக்கப்படுவதால், புகைப்பட தரவுகள் ஸ்மார்ட்போனை விட்டு வெளியே போகாது. ஃபேஸ் அன்லாக் அம்சத்திற்கு பயன்படுத்தப்படும் புகைப்படங்கள் கூகுள் சர்வெர்களுக்கோ மற்றவர்களுக்கோ பகிர்ந்து கொள்ளப்படாது.

    இந்த தகவல்கள் முழுமையாக பிக்சலின் டைட்டன் எம் பாதுகாப்பு சிப்செட்டில் சேமிக்கப்படுகிறது. இதேபோன்று சோலி டேட்டாவும் போனிலேயே சேமிக்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் விவரங்களில் பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அல்லது 855 பிளஸ் பிராசஸர், 6 ஜி.பி. ரேம், புதிய ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் வழங்கப்படும் என கூறப்பட்டது.

    கூகுள் பிக்சல் 4 டீசர் வீடியோவை கீழே காணலாம்..,


    ஆப்பிள் உற்பத்தி ஆலையை சீனாவிற்கு மாற்றும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தை எச்சரித்துள்ளார்.



    ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ப்ரோ கம்ப்யூட்டரின் பாகங்களை சீனாவில் உற்பத்தி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பாகங்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்ய வரிச்சலுகைகளை ஆப்பிள் அமெரிக்க அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தது.

    இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் பதில் அளித்திருக்கிறார். அதில், 'மேக் ப்ரோ பாகங்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டால், அவற்றுக்கு வரிச்சலுகை அளிக்க முடியாது. முடிந்தால் பாகங்களை அமெரிக்காவிலேயே உருவாக்கிக் கொள்ளுங்கள். வரிச்சலுகை அளிக்க முடியாது', என டிரம்ப் ட்விட் செய்தார்.

    மேக் ப்ரோ - கோப்புப்படம்

    வர்த்தக போட்டி தீவிரமடைந்திருப்பதால், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மேக் ப்ரோ சாதனத்திற்கான பாகங்களை சீனாவில் உருவாக்க திட்டமிட்டது. தற்சமயம் மேக் சாதனம் மட்டுமே டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் பகுதியில் உருவாக்கப்படுகிறது. ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்கள் சீனாவில் உருவாக்கப்படுகின்றன.

    ஆப்பிள் நிறுவனம் தாய்வானை சேர்ந்த குவாண்டா கம்ப்யூட்டர் எனும் நிறுவனத்துடன் இணைந்து 6000 டாலர் மதிப்புள்ள புதிய மேக் ப்ரோ கம்ப்யூட்டரை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. இதற்கென ஷாங்காயில் தயாரிப்பு ஆலை உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆப்பிள் நிறுவன சாதனங்களை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்றிக் கொள்ள டிம் குக்கிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
    ×