search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fitbit"

    • பிட்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புது பிட்னஸ் சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • மூன்று சாதனங்களும் பயனர் உடல்நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தகவல்களை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன.

    பிட்பிட் நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய அணியக்கூடிய சாதனங்கள்- இன்ஸ்பயர் 3, வெர்சா 4 மற்றும் சென்ஸ் 2 மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. மூன்று சாதனங்களும் பிட்பிட் நிறுவனத்தின் ஆரோக்கியம் மற்றும் உடல்நல அம்சங்களை கூகுள் ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் இணைந்து வழங்குகின்றன. இவற்றின் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடைபெறுகிறது.

    பிட்பிட் இன்ஸ்பயர் 3: இந்த பிட்னஸ் டிராக்கர் முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இது எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். இதில் வைப்ரண்ட் கலர் டிஸ்ப்ளே உள்ளது. அளவில் சிறியதாகவும், குறைந்த எடை கொண்டிருக்கும் போதிலும், இந்த சாதனம் ஏராளமான உடல் அசைவுகளை டிராக் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    பிட்பிட் வெர்சா 4: ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் பிட்பிட் வெர்சா 4 பிட்னஸ் சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பயன்படுத்தலாம். மேலும் இதில் 40-க்கும் அதிக பயிற்சி மோட்கள், இண்டகிரேடெட் ஜிபிஎஸ், ஆக்டிவ் ஜோன் நிமிடங்கள், பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் பிட்பிட் சென்ஸ் 2 மாடலில் உள்ள ஏராளமான சென்சார்கள் உடல் ஆரோக்கியத்தை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    பிட்பிட் இன்ஸ்பயர் 3 மாடலின் விலை இந்தியாவில் ரூ. 8 ஆயிரத்து 999 என்றும் வெர்சா 4 விலை ரூ. 20 ஆயிரத்து 499 என்றும் சென்ஸ் 2 விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மூன்று சாதனங்களில் எதை வாங்கினாலும் ஆறு மாதங்களுக்கு பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது. இவற்றின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.

    ×