search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கூகுள் பிக்சல் 4 டீசர் ஸ்கிரீன்ஷாட்
    X
    கூகுள் பிக்சல் 4 டீசர் ஸ்கிரீன்ஷாட்

    புதுவித ஃபேஸ் அன்லாக் வசதியுடன் உருவாகும் கூகுள் பிக்சல் 4

    கூகுள் பிக்சல் 4 ஸ்மார்ட்போன் புதுவித ஃபேஸ் அன்லாக் வசதியுடன் உருவாகி வருவது சமீபத்திய டீசரில் தெரியவந்துள்ளது.



    புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் ஐ.ஆர். சென்சார்கள், பிராஜக்ட் சோலி சார்ந்த மோஷன் சென்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படும் என கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ரேடார் சாந்து இயங்கும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் தொழில்நுட்பம் பிராஜக்ட் சோலி என்ற பெயரில் கூகுள் உருவாக்கி இருக்கிறது. இது கூகுளின் அதிநவீன தொழில்நுட்ப திட்ட குழுவினரால் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் போது ஃபேஸ் அன்லாக் சென்சார்களை ஆன் செய்யும் பணியை சோலி ரேடார் சிப் மேற்கொள்ளும். ஃபேஸ் அன்லாக் சென்சார்கள் மற்றும் அல்காரிதம்கள் உங்களை அங்கீகரித்துவிட்டால், போனினை கையில் எடுக்கும் போதே அன்லாக் ஆக்கிவிடும்.

    பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதி போனை எப்படி பிடித்திருந்தாலும் சீராக வேலை செய்யும். இதனை பேமன்ட் மற்றும் இதர ஆப் பாதுகாப்பிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பிக்சல் 4 டீசர்

    சோலி ஜெஸ்ட்யூர்கள்

    பிக்சல் 4 ஸ்மார்ட்போன்களின் மேல்பகுதியில் பொருத்தப்படும் மோஷன் சென்சிங் ரேடார்கள் பல்வேறு மென்பொருள் மற்றும் அதிநவீன ஹார்டுவேர் சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர் ஸ்மார்ட்போன் அருகில் இருப்பதை இவை கண்டறிந்து கொள்ளும். 

    இதனால் பாடல்களை மாற்றுவது, அலாரம் ஆஃப் செய்வது, போன் அழைப்புகளை சைலன்ட்டில் வைப்பது போன்றவற்றை கை அசைவுகளிலேயே இயக்க முடியும். மோஷன் சென்ஸ் அம்சம் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது

    பாதுகாப்பு மற்றும் தனியுரிமை

    ஃபேஸ் அன்லாக் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பம் சாதனத்திலேயே இயக்கப்படுவதால், புகைப்பட தரவுகள் ஸ்மார்ட்போனை விட்டு வெளியே போகாது. ஃபேஸ் அன்லாக் அம்சத்திற்கு பயன்படுத்தப்படும் புகைப்படங்கள் கூகுள் சர்வெர்களுக்கோ மற்றவர்களுக்கோ பகிர்ந்து கொள்ளப்படாது.

    இந்த தகவல்கள் முழுமையாக பிக்சலின் டைட்டன் எம் பாதுகாப்பு சிப்செட்டில் சேமிக்கப்படுகிறது. இதேபோன்று சோலி டேட்டாவும் போனிலேயே சேமிக்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் விவரங்களில் பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அல்லது 855 பிளஸ் பிராசஸர், 6 ஜி.பி. ரேம், புதிய ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் வழங்கப்படும் என கூறப்பட்டது.

    கூகுள் பிக்சல் 4 டீசர் வீடியோவை கீழே காணலாம்..,


    Next Story
    ×