என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    லாவா நிறுவனம் இண்டர்நெட் இல்லாமல் பண பரிமாற்றம் செய்யும் புதிய லாவா பே சேவையை அறிமுகம் செய்துள்ளது.



    இந்திய மொபைல் போன் உற்பத்தியாளரான லாவா நிறுவனம் இண்டர்நெட் வசதியின்றி பண பரிமாற்றம் செய்யும் லாவா பே சேவையை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த செயலி லாவா ஃபீச்சர் போன் மாடல்களில் பிரீ இன்ஸ்டால் செய்யப்படும் என லாவா தெரிவித்து இருக்கிறது. இதுதவிர ஏற்கனவே மொபைல் போன் பயன்படுத்துவோர், அருகாமையில் உள்ள லாவா சர்வீஸ் சென்டர்களுக்கு சென்று புதிய செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

    லாவா பே

    மிக எளிமையான யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் லாவா பே செயலியில் பயனர்கள் பணம் அனுப்ப வேண்டியவரின் மொபைல் போன் நம்பர், அனுப்ப வேண்டிய தொகை மற்றும் யு.பி.ஐ. பின் அல்லது டிரான்சாக்‌ஷன் குறியீட்டை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், பணம் அனுப்பியவர் மற்றும் பெறுவோருக்கு நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பப்பட்டு விடும்.

    பணம் அனுப்பி கொள்வது மட்டுமின்றி பயனர்கள் தங்களின் வங்கி கணக்கில் உள்ள அக்கவுண்ட் பேலண்ஸ் விவரங்களையும் செயலியில் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு செய்ய பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள வங்கி கிளைக்கு சென்று செயலியை கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.



    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் விலை 400 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 29,660) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய ரென்டர்களின் படி பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஒற்றை பன்ச் ஹோல் வடிவமைப்பு மற்றும் பின்புறம் ஒற்றை கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. இதன் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    பிக்சல் 4ஏ லீக்

    கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனில் 60 ஹெர்ட்ஸ் பேனல் வழங்கப்படுகிறது. இத்துடன் இதன் கேமரா தலைசிறந்த புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    பென்ச்மார்க் விவரங்களின் படி புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. பிரைமரி கேமரா, 4K தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான வீடியோவில் புதிய ஸ்மார்ட்போன் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 3080 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என தெரிகிறது. இதில் இரண்டாவது சிம் இசிம் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்.இ. 2 வெளியீடு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    மார்ச் 31 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டு இருந்த ஆப்பிள் நிகழ்வு கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்.இ. 2, ஐபேட் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஐபோன் 11 ப்ரோ

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் அதிகமாக கூடும் நிகழ்வுகளுக்கு சான்டா கிளாரா கவுண்ட்டி தடை விதித்து இருப்பதை தொடர்ந்து மார்ச் நிகழ்வினை ஆப்பிள் ரத்து செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் தனது பொறியாளர்கள் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க உத்தரவிட்டு இருக்கிறது.

    ஆப்பிள் பொறியாளர்கள் பயணம் செய்ய ஏப்ரல் மாதம் வரை தடை விதித்து இருக்கிறது. இதன் காரணமாக ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கான உற்பத்தி பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ஃபேஸ்புக் ஸ்டோரிக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ள வழி செய்யும் வசதி சோதனை செய்யப்படுகிறது.



    ஃபேஸ்புக் நிறுவனம் தனது சமூக வலைதள ஸ்டோரிக்களை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொள்ளும் வசதியினை சோதனை செய்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விவரங்கள் ஃபேஸ்புக் ஆண்ட்ராய்டு செயலி குறியீடுகளில் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த அம்சத்தினை ரிவர்ஸ் என்ஜினியரான ஜேன் மன்சுன் வொங் என்பவர் கண்டறிந்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதன்படி ஃபேஸ்புக்கில் ஸ்டோரியை பதிவிடும் முன், அதனை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொள்ளும் வசதி திரையில் தோன்றுவதாக வொங் தெரிவித்திருக்கிறார்.



    ஃபேஸ்புக் ஸ்டோரியை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யும் போது நேரடியாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.

    தற்சமயம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. 
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் 360 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகை 360 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.

    ரூ. 4999 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 350 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டாவுக்கு மாற்றாக வேலிடிட்டி நிறைவு பெறும் வரை டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் டேட்டா என்பதால், 350 ஜி.பி. தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.யாக குறைக்கப்படும்.

    ரிலையன்ஸ் ஜியோ

    இத்துடன் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 12,000 நிமிடங்கள் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது. இவைதவிர தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ ரூ. 2121 விலையில் புத்தாண்டு சலுகையை வழங்கி வந்தது. இதில் 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. பலன்களை பொருத்தவரை தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 12,000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன.



    அன்பானவர்களுக்கு அழைப்பை மேற்கொள்ளும் போது, வழக்கமான காலர் டியூனிற்கு பதில் இருமல் சத்தம் கேட்கிறதா? அச்சம் வேண்டாம், இது பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைப்புகளில் மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த செயல்படுத்தப்பட்டு இருக்கும் பிரசாரம் ஆகும்.

    சீனாவில் துவங்கி உலக மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய வீண் வதந்திகளை குறைக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்கிய சுகாதார துறை சார்பில் இந்த பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 33 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருக்கிறது.

    பி.எஸ்.என்.எல்.

    முதற்கட்டமாக பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் காலர் டியூனில் புதிய விழிப்புணர்வு பிரசார குறுந்தகவலை தானாக செயல்படுத்தி இருக்கின்றன. இதன் மூலம் எந்த நெட்வொர்க்கில் இருந்து அழைப்பை மேற்கொள்வோர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

    ரிலையன்ஸ் ஜியோ

    கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்காமல் இருக்க பொது மக்கள் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய தகவல் பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைப்புகளில் மத்திய அரசு தானாக செயல்படுத்தி இருப்பதாக சுகாதாக துறை அதிகாரி தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    விழிப்புணர்வு பிராசார தகவல் பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா இணைப்புகளிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியாவின் முதல் 5ஜி போன் வெளியீட்டு விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் முன்னதாக புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மார்ச் 19-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தது. அந்த வரிசையில் நோக்கியாவின் முதல் 5ஜி மொபைல் அதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

    நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போனின் பெயர், வடிவமைப்பு மற்றும் ஹார்டுவேர் அம்சங்களின் விவரங்கள் மர்மமாக உள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்போனிற்கான விளம்பர வீடியோ புதிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்துடன் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் முதல் 90 நொடி வீடியோ மார்ச் 8-ம் தேதி வெளியாகிறது.

    ஹெச்.எம்.டி. குளோபல் டீசர்

    மற்ற ஸ்மார்ட்போன்களுடன் நோக்கியாவின் முதல் 5ஜி ரெடி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என ஹெச்.எம்.டி. குளோபல் தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. 

    ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசரினை ஹெச்.எம்.டி. குளோவல் வெளியிட்டு இருந்தது. அதன்படி இதில் செய்ஸ் ஆப்டிக்ஸ், 4K யு.ஹெச்.டி. அல்ட்ரா வைடு வீடியோ சப்போர்ட், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்கள் பதிவிட்ட ட்விட்கள் 24 மணி நேரத்தில் தானாக மறைந்து போக செய்யும் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது.



    ஸ்னாப்சாட் தளத்தின் 24 மணி நேரத்தில் தரவுகளை தானாக மறைய செய்யும் அம்சத்தை வழங்கும் புதிய சமூக வலைதளமாக ட்விட்டர் உருவாகி இருக்கிறது. ஃபிளீட்ஸ் என அழைக்கப்படும் புதிய அம்சம் முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் மட்டும் வழங்கப்படுகிறது.

    வழக்கமான ட்வீட்களை போன்று இல்லாமல், பயனர்கள் ஃபிளீட்ஸ் ட்விட்களை ரீட்வீட், லைக் அல்லது கமென்ட் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாது. ட்விட்களின் வழக்கமான போக்கு பெரும்பாலான ட்விட்டர் வாடிக்கையாளர்கள் அசவுகரியமாக உணர்வதாக ட்விட்டர் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இதுபோன்ற சூழல் காரணமாக பலர் தங்களது அன்றாட கருத்துக்களை பதிவிடும் முன் பதற்றம் கொள்வதாக கூறப்படுகிறது. 

    ட்விட்டர் ஃபிளீட்ஸ்

    ஃபிளீட்ஸ் அம்சம் பொதுவெளியில் இருக்கும் என்பதால், இதனை பதிவிட்ட 24 மணி நேரத்தில் யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். எனினும், ஃபிளீட்ஸ் ரக ட்விட்களை ட்விட்டர் சர்ச், மொமன்ட்ஸ் அல்லது வெளிப்புற வலைதளங்களில் எம்பெட் செய்வதற்கான வசதியை நீக்கிவிடுகிறது.

    முதற்கட்டமாக ட்விட்டர் ஃபிளீட்ஸ் அம்சம் பிரேசில் நாட்டில் உள்ள ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் ட்விட்டர் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. பிரேசில் நாட்டில் இந்த அம்சத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து இந்த அம்சத்தினை மற்ற நாடுகளில் வழங்குவது பற்றி முடிவு செய்ய இருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் 2020 ஐ.ஒ. டெவலப்பர்கள் நிகழ்வு கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.



    கூகுள் நிறுவனம் தனது ஐ.ஒ. 2020 டெவலப்பர்கள் நிகழ்வினை கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக ரத்து செய்துள்ளது. 2020 டெவலப்பர்கள் நிகழ்வினை கூகுள் நிறுவனம் கலிஃபோர்னியாவில் மே 12 முதல் மே 14-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டு இருந்தது.

    ‘டெவலப்பர் குழுவாக இம்முறை நாம் ஒன்றுகூட முடியாதது வருத்தம் அளிக்கிறது, எனினும், உங்களது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம்’ என கூகுள் தெரிவித்துள்ளது. 



    மேலும் சர்வதேச டெவலப்பர்களுடன் தொடர்பு கொண்டு இணைப்பில் இருப்பதற்கான வழிமுறைகள் பரிசீலனை செய்யப்படுவதாகவும், இதுபற்றிய விவரங்கள் கூகுள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    2020 ஐ.ஒ. டெவலப்பர்கள் நிகழ்வுக்கு பதிவு செய்தவர்கள் ஐ.ஒ. 2021 நிகழ்வில் கலந்து கொள்வதற்கான நுழைவு சீட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம். சிறு வியாபாரங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஸ்டெம் ஆய்வு மற்றும் கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்கு பத்து லட்சம் டாலர்களை வழங்குவதாக கூகுள் அறிவித்துள்ளது.

    முன்னதாக 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ், ஃபேஸ்புக் நிறுவனத்தின் எஃப்8 டெவலப்பர்கள் நிகழ்வு, கேம் டெவலப்பர்கள் நிகழ்வு உள்ளிட்டவையும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டன. நிகழ்வு ரத்து செய்யப்பட்டு இருந்தாலும், புதிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகளை கூகுள் ஆன்லைன் நேரலையில் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர, இந்த வாரம் துவங்கி ஜூலை 1-ம் தேதி வரை உலகளவில் அனைத்து ஜி சூட் வாடிக்கையாளர்களுக்கும் அட்வான்ஸ்டு ஹேங்அவுட்ஸ் மீட் வீடியோ கான்ஃபரென்சிங் வசதியினை இலவசமாக பயன்படுத்துவதற்கான வசதியை வழங்குவதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்து இருக்கிறார்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    புதிய ரேசர் ஸ்மார்ட்போன் 15 ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்யப்பட்ட மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் ஆகும். முன்னதாக மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மூன்று மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மோட்டோரோலா ரேசர்

    மோட்டோரோலா ரேசர் சிறப்பம்சங்கள்:

    – 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்
    – 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளே
    – ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
    – 6 ஜி.பி. பேம்
    – 128 ஜி.பி. மெமரி
    – 16 எம்.பி. f/1.7 கேமரா
    – 5 எம்.பி. கேமரா
    – ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
    – 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    – 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதி
    – இசிம் வசதி
    – ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைபை

    சர்வதேச சந்தையில் மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போனின் விலை 1499.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,07,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் இந்திய விலை வரும் வாரங்களில் தெரியவரும்.
    சியோமியின் புதிய ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    சியோமியின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் மார்ச் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனிற்கான டீசரை ரெட்மி இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.



    அந்த வகையில் புதிதாக ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசர் புகைப்படத்தில் குவாட் கேமரா செட்டப் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 8 சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்ற கேமரா சென்சார்களே வழங்கப்படலாம்.

    ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் டீசர்

    எனினும், புதிய ஸ்மார்ட்போன்களில் டெப்த் சென்சாருக்கு மாற்றாக டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டீசருடன் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போன் புளூ நிறம் கொண்டிருப்பதும், ஸ்பீக்கர் கிரில், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுவதும் தெளிவாக தெரிகிறது.

    முந்தைய ரெட்மி நோட் 8 சீரிஸ் போன்றே புதிய ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களும் அமேசான் இந்தியா வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    பாரதி ஏர்டெல் நிறுவனம் தொலை தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் ரூ. 8000 கோடியை செலுத்தி இருக்கிறது.



    பாரதி ஏர்டெல், வோடாபோன் ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் உள்பட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தொலை தொடர்பு துறைக்கு ரூ.1.47 லட்சம் கோடி நிலுவை வைத்துள்ளன. உரிமம் கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் ஆகியவை நிலுவையில் இருந்தது.

    ஏர்டெல்

    இந்த நிலுவைதொகையை தொலை தொடர்பு நிறுவனங்கள் செலுத்த சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு’ விதித்து உத்தரவிட்டது. பாரதி ஏர்டெல் நிறுவனம் மொத்தம் ரூ.35 ஆயிரத்து 586 கோடி ரூபாய் நிலுவையில் வைத்து இருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி கடந்த 17-ந்தேதி ஏர்டெல் ரூ.10 ஆயிரம் கோடியை தொலை தொடர்பு துறைக்கு செலுத்தி இருந்தது.

    இந்த நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மேலும் ரூ.8004 கோடியை இன்று தொலை தொடர்பு துறைக்கு கட்டியது. இதன் மூலம் அந்த நிறுவனம மொத்தம் ரூ.18,004 கோடி நிலுவை தொகையை செலுத்தி இருக்கிறது. மார்ச் 17-ந்தேதிக்குள் நிலுவை தொகை முழுவதையும் செலுத்தி விடுவதாக ஏர்டெல் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
    ×