என் மலர்
தொழில்நுட்பம்

கொரோனா வைரஸ்
கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த களத்தில் இறங்கிய பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ
மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன.
அன்பானவர்களுக்கு அழைப்பை மேற்கொள்ளும் போது, வழக்கமான காலர் டியூனிற்கு பதில் இருமல் சத்தம் கேட்கிறதா? அச்சம் வேண்டாம், இது பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைப்புகளில் மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த செயல்படுத்தப்பட்டு இருக்கும் பிரசாரம் ஆகும்.
சீனாவில் துவங்கி உலக மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய வீண் வதந்திகளை குறைக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்கிய சுகாதார துறை சார்பில் இந்த பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 33 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருக்கிறது.

முதற்கட்டமாக பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் காலர் டியூனில் புதிய விழிப்புணர்வு பிரசார குறுந்தகவலை தானாக செயல்படுத்தி இருக்கின்றன. இதன் மூலம் எந்த நெட்வொர்க்கில் இருந்து அழைப்பை மேற்கொள்வோர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்காமல் இருக்க பொது மக்கள் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய தகவல் பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைப்புகளில் மத்திய அரசு தானாக செயல்படுத்தி இருப்பதாக சுகாதாக துறை அதிகாரி தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
விழிப்புணர்வு பிராசார தகவல் பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா இணைப்புகளிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Next Story






