என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் டீசர்
    X
    ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் டீசர்

    விரைவில் இந்தியா வரும் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்

    சியோமியின் புதிய ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    சியோமியின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் மார்ச் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனிற்கான டீசரை ரெட்மி இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.



    அந்த வகையில் புதிதாக ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசர் புகைப்படத்தில் குவாட் கேமரா செட்டப் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 8 சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்ற கேமரா சென்சார்களே வழங்கப்படலாம்.

    ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் டீசர்

    எனினும், புதிய ஸ்மார்ட்போன்களில் டெப்த் சென்சாருக்கு மாற்றாக டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டீசருடன் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போன் புளூ நிறம் கொண்டிருப்பதும், ஸ்பீக்கர் கிரில், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுவதும் தெளிவாக தெரிகிறது.

    முந்தைய ரெட்மி நோட் 8 சீரிஸ் போன்றே புதிய ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களும் அமேசான் இந்தியா வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    Next Story
    ×