என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பிக்சல் 4ஏ லீக்
    X
    பிக்சல் 4ஏ லீக்

    இணையத்தில் லீக் ஆன கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.



    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் விலை 400 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 29,660) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய ரென்டர்களின் படி பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஒற்றை பன்ச் ஹோல் வடிவமைப்பு மற்றும் பின்புறம் ஒற்றை கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. இதன் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    பிக்சல் 4ஏ லீக்

    கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனில் 60 ஹெர்ட்ஸ் பேனல் வழங்கப்படுகிறது. இத்துடன் இதன் கேமரா தலைசிறந்த புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    பென்ச்மார்க் விவரங்களின் படி புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. பிரைமரி கேமரா, 4K தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான வீடியோவில் புதிய ஸ்மார்ட்போன் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 3080 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என தெரிகிறது. இதில் இரண்டாவது சிம் இசிம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×