என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஃபேஸ்புக்
    X
    ஃபேஸ்புக்

    ஃபேஸ்புக் ஸ்டோரிக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து கொள்ள புதிய வசதி

    ஃபேஸ்புக் ஸ்டோரிக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ள வழி செய்யும் வசதி சோதனை செய்யப்படுகிறது.



    ஃபேஸ்புக் நிறுவனம் தனது சமூக வலைதள ஸ்டோரிக்களை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொள்ளும் வசதியினை சோதனை செய்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விவரங்கள் ஃபேஸ்புக் ஆண்ட்ராய்டு செயலி குறியீடுகளில் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த அம்சத்தினை ரிவர்ஸ் என்ஜினியரான ஜேன் மன்சுன் வொங் என்பவர் கண்டறிந்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதன்படி ஃபேஸ்புக்கில் ஸ்டோரியை பதிவிடும் முன், அதனை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொள்ளும் வசதி திரையில் தோன்றுவதாக வொங் தெரிவித்திருக்கிறார்.



    ஃபேஸ்புக் ஸ்டோரியை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யும் போது நேரடியாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.

    தற்சமயம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. 
    Next Story
    ×