என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
பெரும்பாலான ஊழியர்கள் கட்டாய விருப்ப ஓய்வு பெற்றதால், வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க முடியாமல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் திணறி வருகிறது.
தொலைதொடர்பு துறையின் வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். முக்கிய பங்காற்றியது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த நிறுவனத்துக்கென்று சுமார் 12 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். சுமார் ஒரு லட்சத்து 53 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ‘4ஜி’ அலைக்கற்றை உரிமம் வழங்குவதில் மத்திய அரசு தாமதம் காட்டியது. அதே சமயத்தில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உடனே அனுமதியை கொடுத்தது.
இதனால் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்கும் வாடிக்கையாளர் சேவைகளுக்கு நிகராக, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் ஈடு கொடுக்க முடியாமல் போனது. இதனால் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.

இந்தநிலையில் கட்டாய விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தின் மூலம் 78 ஆயிரத்து 500 பணியாளர்கள் கடந்த மாதம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றனர். இது அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த பணியாளர்களில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அதிகம் ஆகும்.
ஒரே நேரத்தில் 78 ஆயிரத்து 500 பணியாளர்கள் கட்டாய விருப்ப ஓய்வு பெற்றாலும், சுமார் ஒரு மாதம் ஆகியும் அவர்கள் வகித்த பொறுப்புகளுக்கு தற்காலிக பணியாளர்களும் போதுமான அளவுக்கு நியமிக்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர் சேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக ஓரிரு நாட்களில் நிவர்த்தி செய்யப்படும் பழுது உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் பல்வேறு புகார்களை சரி செய்வதில் கடுமையான கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. சில வாடிக்கையாளரின் புகார்கள் மாத கணக்கில் நிவர்த்தி செய்யப்படாமல், பழுதடைந்த நிலையில் இருப்பதால் அவதியடைந்து வருகின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விரைவில் சொந்தமாக ஆன்லைன் ஸ்டோர் திறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் ஸ்டோரினை திறக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து 2021 ஆண்டு வாக்கில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களை இந்தியாவில் துவங்க இருக்கிறது.
புதிய தகவல்களை ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் அமெரிக்காவில் நடைபெற்ற ஆண்டு பங்குதாரர்கள் சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களை திறக்க இருப்பது பற்றிய தகவல்களை வெளியிட்டு இருந்தது.
பிராண்டினை எங்களுக்காக மற்றவர்கள் இயக்குவதை நான் விரும்பவில்லை என டிம் குக் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை ஆப்பிள் நிறுவன பொருட்கள் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சில்லறை விற்பனையில் எங்களது பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையிலே செயல்படும் என டிம் குக் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள தகவல்களின் படி 2019 டிசம்பரில் ரிலையன்ஸ் ஜியோவை பி.எஸ்.என்.எல். முந்தியிருக்கிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பி.எஸ்.என்.எல். ரிலையன்ஸ் ஜியோவை முந்தி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் ரிலையன்ஸ் ஜியோ சேவையில் 82,308 பேர் இணைந்து இருக்கின்றனர்.
எனினும், பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4.2 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்து இருக்கின்றனர். இதே காலக்கட்டத்தில் வோடபோன் நிறுவனம் 36 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் நிறுவனம் 11,000 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.

முன்னதாக டெலிகாம் நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களின் விலையை 14 இல் இருந்து 33 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் டெலிகாம் நிறுவனங்கள் மேலும் அதிக வாடிக்கையாளர்களை இழக்கும் என தெரிகிறது.
2019 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தற்சமயம் ஜியோ நெட்வொர்க்கில் 37 கோடி, ஏர்டெல் நெட்வொர்க்கில் 28.3 கோடி மற்றும் வோடபோன் ஐடியா நெட்வொர்க்கில் 30 கோடி வாடிக்கையாளர்களை வைத்திருக்கின்றன.
வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் விரைவில் டார்க் தீம் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் தீம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு செயிலிக்கான பீட்டா வெர்ஷன் 2.20.12 மற்றும் ஐ.ஒ.எஸ். 2.20.30.25 பீட்டா வெர்ஷனில் டார்க் தீம் வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஸ்மார்ட்போனை தொடர்ந்து வாட்ஸ்அப் வெப் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கும் டார்க் தீம் வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதற்கட்டமாக வாட்ஸ்அப் பீட்டா செயலியில் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது. எனினும், பீட்டா பதிப்பில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை.

வாட்ஸ்அப் வெப் சாட்பாக்ஸ், ஜிஃப் பேனல் என முழுமையாக டார்க் மோட் செயல்படுத்தப்பட்டு இருப்பது தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. புதிய அம்சத்திற்கான சோதனை நிறைவுற்றதும் அனைவருக்கும் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் டார்க் மோட் வழங்கப்படுவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. முதற்கட்டமாக ஸ்மார்ட்போன்களுக்கு டார்க் மோட் ஸ்டேபில் அப்டேட் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப் வெப் தளத்திற்கு வழங்குவதற்கான பணிகளை வாட்ஸ்அப் துவங்கும் என தெரிகிறது.
வு பிராண்டு இந்தியாவில் புதிய பிரீமியம் டி.வி. சீரிஸ் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
வு பிரீமியம் டி.வி. சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் டால்பி ஆடியோ, டி.டி.எஸ். ஸ்டூடியோ சவுண்ட் இன்டகிரேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் உருவாகி இருக்கும் ஸ்மார்ட் டி.வி.க்களில் கூகுள் குரோம்காஸ்ட் பில்ட்-இன் கொண்டிருக்கிறது. இரு டி.வி.க்களில் ஆண்ட்ராய்டு டி.வி. 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்து"ன் அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
64 பிட் குவாட் கோர் பிராசஸருடன் 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் வு பிரீமியம் டி.வி. மாடல்கள் சியோமியின் Mi டி.வி. 4ஏ ப்ரோ மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை வு பிரீமியம் டி.வி. 32 இன்ச் மாடலில் 32 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1366x768 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு மாடலில் 43 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 32 இன்ச் மாடலில் 20 வாட் பாக்ஸ் ஸ்பீக்கரும், 43 இன்ச் மாடலில் 24 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் டால்பி டிஜிட்டல், டிடிஎஸ் ஸ்டூடியோ சவுண்ட் இன்டகிரேஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் கோர் ஜி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு இரு டி.வி. மாடல்களிலும் வைபை, ப்ளூடூத், இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள், லேன், ஆர்.எஃப்., ஹெட்போன் ஜாக் மற்றும் ஆப்டிக்கல் ஆடியோ அவுட் வழங்கப்பட்டுள்ளது. இரு டி.வி. ரிமோட்களில் அமேசான் பிரைம் வீடியோ, கூகுள் பிளே, ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் சேவைகளுக்கான ஹாட் கீ வழங்கப்பட்டுள்ளது.
வு பிரீமியம் டியவிய 32 இன்ச் மற்றும் வு பிரீமியம் டி.வி. 43 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 10,999 மற்றும் ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
336 நாட்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2121 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ஜியோ ரூ. 2121 சலுகையில் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகளை இலவசமாக வழங்குகிறது. இதில் லேண்ட்லைன் வாய்ஸ் காலிங் சலுகையையும் வழங்குகிறது.
ரூ. 2121 ஜியோ பிரீபெயிட் சலுகையில் ரூ. 2020 சலுகையில் வழங்கும் பலன்களே வழங்கப்படுகிறது. எனினும், ரூ. 2020 சலுகையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. ஜியோ ரூ. 2020 சலுகை புத்தாண்டை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ. 2121 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 336 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், ஜியோ அல்லாத எண்களுக்கு 12,000 நிமடங்கள் வாய்ஸ் கால் வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்குகிறது.
இதுதவிர ஜியோ ரூ. 2121 சலுகையில் ஜியோ டி.வி., ஜியோசினிமா மற்றும் ஜியோநியூஸ் போன்ற செயலிகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.1,000 கோடி நிலுவை தொகையை செலுத்தியதாக கூறப்படுகிறது.
வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை நள்ளிரவுக்குள் செலுத்துமாறு கடந்த 14ந்தேதி மத்திய அரசின் தொலைதொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டது.
இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் ரூ.53 ஆயிரம் கோடி அரசுக்கு வழங்க வேண்டும். இதனை அடுத்து, வோடபோன் நிறுவனம் கடந்த 17ந்தேதி மத்திய அரசின் தொலைதொடர்பு துறைக்கு ரூ.2,500 கோடி வழங்கியது. இந்த வார இறுதியில் ரூ.1,000 கோடி வழங்கவும் ஒப்புதலளித்தது.

இதன்படி, வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.1,000 கோடியை இன்று செலுத்தியுள்ளது.
இதுபற்றி தொலை தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தியில், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கும் இன்னும் ஓரிரு நாட்களில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்து உள்ளது. அந்நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவை தொகையான ரூ.14 ஆயிரம் கோடியில், கடந்த திங்கட்கிழமை ரூ.2,197 கோடி செலுத்தப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்த நிலையில், தற்சமயம் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனினை ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் சேம்ப் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 7.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுறது. மேலும் இதன் விலை இசட் ஃபிளிப் மற்றும் 2020 மோட்டோ ரேசர் மாடல்களை விட சற்றே அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
மத்திய டெலிகாம் துறைக்கு கொடுக்க வேண்டிய ஒரு லட்சம் கோடி ரூபாய் நிலுவை தொகையை செலுத்துவது பற்றிய ஆலோசனையில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட 15 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.1.47 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்படி பாக்கித்தொகையை கடந்த 14-ந் தேதி நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து இந்த கட்டண பாக்கியில் ஒரு பகுதியை பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் ஆகிய 3 நிறுவனங்கள் இன்று (பிப்ரவரி 17) செலுத்த தீர்மானித்து உள்ளன. இந்த தொகையின் அடிப்படையில் மேற்படி நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் கூறினர்.

மொத்த தொகையில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இந்த 3 நிறுவனங்களும் செலுத்த வேண்டியிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
முன்னதாக தங்கள் கட்டண பாக்கியில் ரூ.10 ஆயிரம் கோடியை பிப்ரவரி 20-ந் தேதிக்குள் செலுத்த அனுமதிக்குமாறு பாரதி ஏர்டெல் நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால் இதற்கு மேல் எந்த அவகாசமும் வழங்கப்படாது என தொலை தொடர்புத்துறை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை பற்றிய கணக்கீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் நிலுவை தொகையில் ஒருபகுதியை செலுத்துவதாக தெரிவித்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய தொலை தொடர்புத்துறைக்கு சுமார் 53,038 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல் உதிரி பாகங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்வான் நாட்டு உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் புதிய ஐபோன் மாடலுக்கான உதிரிபாகங்களை விநியோகம் செய்வதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கு தேவையான பாகங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய தகவல்களின் படி ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கான தயாரிப்பு பணிகள் அடுத்த சில வாரங்களில் துவங்கிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த ஐபோனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வின் செமி, சின்டெக் போன்ற நிறுவனங்கள் உருவாக்கிய ஸ்டிரக்ச்சர்டு லைட் 3டி சென்சார்கள், VCSEL பாகங்கள் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. விலை குறைந்த ஐபோன் எஸ்.இ. 2 மாடல் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கான பணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் நடைபெறும் பணிகளை கவனிக்க பொறியாளர்களை அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு அனுப்புவதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திவிட்டது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் 4.7 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, நாட்ச்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 138.5x67.4x7.8 எம்.எம். அளவில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் ஐபோன் எஸ்.இ. 2 பார்க்க ஐபோன் 8 போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.
ஐபோன் எஸ்.இ.2 மாடலில் ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஐபோனில் டச் ஐ.டி. அம்சம் வழங்கப்படலாம்.
புதிய விலை குறைந்த ஐபோனில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ13 பயோனிக் பிராசஸர், 3 ஜி.பி. ரேம் மற்றும் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஐபோன் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகளவில் 200 கோடியை கடந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியை 2014-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியதைத் தொடர்ந்து 2017 ஜுலை மாதத்தில் வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை 100 கோடியை கடந்தது.
பின் 2018-ம் ஆண்டிலேயே இது 150 கோடியாக அதிகரித்தது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை தற்சமயம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. புதிய மைல்கல் எட்டியதை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. வலைதள பதிவில் வாட்ஸ்அப் செயலி மூலம் பயனர்கள் உலகம் முழுக்க தொடர்புகொள்வது எப்படி என்பதை விவரித்துள்ளது.

இத்துடன் வியாபாரம் செய்வோர் தங்களது வியாபாரத்தை வாட்ஸ்அப் பயன்படுத்தி எவ்வாறு வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பது பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் பற்றிய தகவல்களும், பயனர் விவரங்களை பாதுகாக்கும் முறை பற்றியும் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்தியாவில் வாட்ஸ்அப் பே அம்சத்தை வழங்குவதற்கான அனுமதியை வாட்ஸ்அப் பெற்று இருப்பதாக தகவல் வெளியானது. அந்த வகையில், இந்தியர்கள் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் இருந்து பண பரிமாற்றம் செய்ய முடியும்.
தொழில்நுட்ப சந்தையில் மிகவும் பிரபலமான சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
உலக தொழில்நுட்ப சந்தையில் மிகப்பெரும் மொபைல் போன் வர்த்தக விழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னணி தொழில்நுட்ப மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்ததை தொடர்ந்து 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பார்சிலோனாவில் பிப்ரபரி 24-ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டது. இவ்விழாவில் உலகம் முழுக்க 200 நாடுகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது. பார்சிலோனாவில் 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா நான்கு நாட்களுக்கு நடைபெற இருந்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிட்டத்தட்ட 40 நிறுவனங்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் கலந்த கொள்ள மாட்டோம் என அறிவித்ததைத் தொடர்ந்து விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு 2020 மொபைல் காங்கிரஸ் விழாவினை ரத்து செய்வதாக அறிவித்தது.






