என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. அந்த வகையில் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனின் ஃபிரேம் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஃபிரேம் புகைப்படத்தின் படி புதிய ஸ்மார்ட்போன் சிறிய பன்ச் ஹோல் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். முதல் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ10 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படலாம் மற்றும் சாம்சங்கின் புதிய ஒன் யு.ஐ. 2.0 வழங்கப்படலாம் என தெரிகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், குறைந்தபட்சம் 32 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. இதன் வெளியீடு மற்றும் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியகாலம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: 91Mobiles
வாட்ஸ்அப் பே சேவையை விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் பே சேவை தற்சமயம் குறைந்த பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் பே சேவையை நாடு முழுக்க வழங்குவதற்கு தேசிய பணப்பட்டுவாடா கழகம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் பேமன்ட் சேவையை அந்நிறுவனம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முடியும்.
முன்னதாக 2018 ஆண்டில் வாட்ஸ்அப் நிறுவனம் சுமார் பத்து லட்சம் பேருடன் வாட்ஸ்அப் பே சேவைக்கான சோதனையை துவங்கியது. எனினும் அரசு அனுமதி கிடைக்காததால் இந்த சேவையை வாட்ஸ்அப் இதுவரை வழங்கவில்லை.

தற்சமயம் தடைகள் நீங்கி சேவையை துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வாட்ஸ்அப் பே சேவை முதற்கட்டமாக சுமார் ஒரு கோடி பேருக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த சேவை யு.பி.ஐ. மூலம் மொபைலில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வழி செய்யும்.
நாடு முழுக்க சுமார் 40 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் பே சேவை வழங்கப்படும் போது, நாட்டின் மிகப்பெரும் மொபைல் பேமண்ட் சேவைகளில் ஒன்றாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியாகி இருக்கும் பகீர் உண்மை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர். சார்லஸ் ஜெர்பா ஸ்மார்ட்போன்களின் மூலம் பரவும் நோய்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். ஆய்வு முடிவில் ஸ்மார்ட்போன்கள் கழிவறைகளை விட பெருமளவு கிருமிகளை கொண்டிருப்பதாக சார்லஸ் தெரிவித்து இருக்கிறார்.
ஆய்வின் போது சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 25 ஸ்மார்ட்போன்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை ஒரு சதுர அடிக்கு 25,127 கிருமிகளை கொண்டிருப்பதாக சார்லஸ் தெரிவித்து இருக்கிறார். டெஸ்க்டாப் எனப்படும் கணினிகளில் ஒரு சதுர அடிக்கு 20,961 கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. பொதுவாக கழிவறைகளில் ஒரு சதுர அடிக்கு 49 கிருமிகளே காணப்படுகின்றன.

அந்த வகையில் கிருமிகளின் எண்ணிக்கையை வைத்தே ஸ்மார்ட்போன்கள் எந்தளவு சுத்தமாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும். இதனால் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அங்கமாக சார்ஜ் செய்வதோடு மட்டுமின்றி அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு அறிக்கை உணர்த்துகிறது.
இவ்வாறு ஸ்மார்ட்போன்களை சுத்தமாக வைத்துக் கொள்வது மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள, மற்றவரின் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் இருப்பதோடு உங்களது ஸ்மார்ட்போனை மற்றவரிடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் பற்றி அதீத சிந்தனைகள் இல்லாவிட்டாலும் அவை ஒருவரின் முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பட்ட சாதனம் ஆகும். எப்போதும் ஒருவரின் ஸ்மார்ட்போன் அவரது கைகள், முகம் மற்றும் வாய் அருகே அதிக நேரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போன்களில் உள்ள கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் தான்.
மேலும் பயன்படுத்தாத நேரங்களில் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும், வெப்பமாக இருக்கும் பாக்கெட் அல்லது பர்ஸ் போன்றவற்றில் தான் வைக்கப்படுகிறது. வெப்பமான சூழல்களில்தான் கிருமிகள் வேகமாக வளரும். இதனாலேயே ஸ்மார்ட்போன்களில் எளிதில் கிருமிகள் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

ஸ்மார்ட்போன்களில் கிருமிகள் தொற்றாமல் இருக்க என்ன செய்யலாம்?
ஸ்மார்ட்போன்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அடிக்கடி கைகளை கழுவ வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஒரு நாள் பொழுதில் பலமுறை கைகளாலேயே ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனாலேயே கைகளை அடிக்கடி கழுவுதல் ஸ்மார்ட்போனை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முதல் படியாக இருக்கிறது.
ஸ்மார்ட்போன்களை சுத்தமாக வைத்துக் கொள்ள சந்தையில் பல்வேறு பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றில் முதன்மையான ஒன்றாக ஆல்கஹால் வைப் இருக்கின்றன. இவற்றை கொண்டு நாள் பொழுதில் கிறுமிகளை கொன்றுகுவிக்கலாம். இது அதிகளவு பயன்தரும் ஒன்றாக இருக்கிறது.

ஆபத்து காலங்களில் அழைப்புகளை மேற்கொள்ள மற்றவரிடம் ஸ்மார்ட்போனை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் அவருக்காக அழைப்பை மேற்கொண்டு ஸ்மார்ட்போனை ஸ்பீக்கர் அல்லது ஹெட்போன் மூலம் பேச வைக்கலாம். ஸ்மார்ட்போனினை சானிடைஸ் செய்யும் போது இது பெரிய விஷயமாக இருக்காது.
சாப்பிட அமரும் முன் ஸ்மார்ட்போன்களை வைத்துவிட்டு, கைகளை நன்கு கழுவ வேண்டும். சாப்பிட அமரும் போது ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டாம். மேலும் சாப்பிட்டு முடிக்கும் வரை ஸ்மார்ட்போனை கையில் எடுக்க வேண்டாம்.
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிராண்டு இந்திய சந்தையில் கணிசமான சதவீத பங்குகளை பெற்று இருப்பது சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை உணர்த்தி வருகிறது.
இந்நிலையில், கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் பிரீமியம் பிரிவில் ஒன்பிளஸ் 33 சதவீத புள்ளிகளை பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்தி சந்தையின் பிரீமயம் பிரிவில் ஒன்பிளஸ் முதலிடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விநியோகம் 2 கோடிகளை கடந்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7டி சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
ஒன்பிளஸ் 7 சீரிஸ் மாடல்களை தொடர்ந்து ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ போன்ற மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் ஆறு நூற்றாண்டுக்கு இணையான நேரத்தை டிக்டாக் செயலியில் கழித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியர்கள் டிக்டாக் செயலி மீது அதீத ஆர்வம் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. தற்சமயம் வெளியாகி இருக்கும் அறிக்கையும் இதற்கு சான்றாக அமைந்துள்ளது.
செயலிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு வரும் ‘ஆப் ஆனி’ எனும் நிறுவனம் இந்தியர்கள் 2019 ஆண்டில் மட்டும் சுமார் 550 கோடி மணி நேரங்களை டிக்டாக் வீடியோ பார்க்க செலவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. வருட கணக்கில் இது சுமார் 6.27 லட்சம் ஆண்டுகள் எனலாம். இது கிட்டத்தட்ட ஆறாயிரம் நூற்றாண்டுகள் ஆகும்.
ஆய்வறிக்கையின் படி இந்தியர்கள் டிக்டாக் செயலியில் செலவிடும் நேரம் 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆறு மடங்கு அதிகம் ஆகும். 2018ம் ஆண்டில் இந்தியர்கள் 90 கோடி மணி நேரத்தை டிக்டாக்கில் செலவிட்டிருந்தனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு டிக்டாக் பயனர் எண்ணிக்கையில் புதிய சாதனைகளை எதிர்பார்க்கலாம்.

சர்வதேச அளவில் வளர்ச்சி அடிப்படையில் டிக்டாக் ஃபேஸ்புக் நிறுவனத்தை முந்தியிருக்கிறது. 2019 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் டிக்டாக் செயலியின் மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 90 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாடுகளின் அடிப்படையில் டிக்டாக் பயனர்கள் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. ஃபேஸ்புக்குடன் ஒப்பிடும் போது டிக்டாக் செயலியில் பயனர்கள் செலவிட்ட நேரம் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. டிசம்பரில் ஆண்ட்ராய்டு தளத்தில் டிக்டாக் பயனர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் டிக்டாக் செயலி 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் 2019-ம் ஆண்டில் மட்டும் டிக்டாக் செயலி ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் சுமார் 32.3 கோடி முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் இரு இயங்குதளங்களில் ஃபேஸ்புக் செயலி சுமார் 15.6 கோடி முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்சமயம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் சுமார் 12,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை உலகம் முழுக்க 25 நாடுகளில் சுமார் 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், ஆன்லைனில் கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகள் அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில், ஃபேஸ்புக் தளத்தில் கொரோனா வைரஸ் பற்றிய போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையை துவங்கி இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார மையம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் தகவல்களுக்கு முரணாக இருக்கும் தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என ஃபேஸ்புக் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

உலகளவில் போலி செய்திகள் அதிகளவு பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பற்றிய போலி தகவல்களை எதிர்கொள்வது சமூக வலைதள நிறுவனங்களுக்கு புதிய சவாலாக பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக்கில் ஆரோக்கியம் சார்ந்த விவரங்கள் தேடல் மற்றும் விளம்பரங்கள் மூலம் பயனர்களுக்கு சென்றடைவதை கட்டுப்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் உண்மையான விவரங்கள் மட்டும் அனைவரும் பார்க்க வழி செய்கிறது.
தளத்தில் போலி செய்திகளை முடக்குவது ஃபேஸ்புக்கிற்கு புதிய காரியமில்லை. முன்னதாக சமோவா சார்ந்த போலி செய்திகள் அதிகளவு பரவியதால் ஃபேஸ்புக் நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. பின் சமோவா சார்ந்த போலி செய்திகளை ஃபேஸ்புக் தனது தளத்தில் இருந்து நீக்கியது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் வயர்லெஸ் பவர் கன்சோர்டியத்தில் இணைந்திருக்கிறது. இந்த அமைப்பு வயர்லெஸ் சார்ஜிங் தரத்தினை உருவாக்கி அதன் பராமரிப்பு பணிகளை கவனித்து வருகிறது. ஒன்பிளஸ் இந்த அமைப்பில் இணைந்து இருப்பதை தொடர்ந்து இந்நிறுவனத்தின் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
எனினும், ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படுமா அல்லது ஒன்பிளஸ் 8டி மாடல்களில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. வயர்லெஸ் பவர் கன்சோர்டியத்தில் தற்சமயம் ஆப்பிள், சாம்சங், எல்.ஜி., ஒப்போ, ஹெச்.எம்.டி. குளோபல், ஹூவாய், அசுஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன.
ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைக்கும் முயற்சியின் அங்கமாக வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஒன்பி்ளஸ் தனது சாதனங்களில் வழங்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்திற்கு மாற்றாக தனது ஸ்மார்ட்போன் மாடல்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கி வருகிறது.

புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் மற்றும் 5ஜி வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே சிப்செட் ஒன்பிளஸ் 8 மாடலிலும் வழங்கப்படும் என தெரிகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மோட்டோரோலா நிறுவன ஸ்மார்ட்போன் ஒன்றின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி ஸ்டைலஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் சோஃபியா பிளஸ் எனும் குறியீட்டு பெயரில் XT2043 என்ற மாடல் நம்பர் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக எஃப்.சி.சி. வலைதள சான்றுகளில் தெரியவந்துள்ளது. மோட்டோ ஜி8 மற்றும் மோட்டோ ஜி8 பவர் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் சோஃபியா மற்றும் சோஃபியர் எனும் குறியீட்டு பெயர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

எஃப்.சி.சி. வலைதளத்தின் படி புதிய ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்றும் இதில் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், பன்ச் ஹோல் வடிவமைப்பில் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மோட்டோ ஜி8, மோட்டோ ஜி8 பவர் மற்றும் மோட்டோ ஜி8 ஸ்டைலஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை இந்திய சந்தையில் இருமடங்கு உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை இந்தியாவில் இருமடங்கு உயர்ந்து இருக்கிறது. இதனை ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார்.
‘டிசம்பர் 28, 2019 வரை நிறைவுற்ற காலாண்டு வாக்கில் பிரேசில், சீனா, இந்தியா, தாய்லாந்து மற்றும் துருக்கி போன்ற வளரும் நாடுகளில் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறோம்’ என டிம் குக் தெரிவித்தார். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 8 சதவீதம் வரை அதிகம் ஆகும்.
விற்பனை வளர்ச்சிக்கு ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்கள் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அதிகம் விற்பனையான மாடலாக ஐபோன் 11 இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஐபோன் மாடல்களின் மூலம் கிடைத்த வருவாய் 5600 கோடி டாலர்கள் ஆகும்.

இந்தியாவில் ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR போன்ற மாடல்கள் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன. ஐபோன்கள் தவிர மேக் மற்றும் ஐபேட் மூலம் ஆப்பிள் நிறுவனம் முறையே 720 கோடி டாலர்கள் மற்றும் 600 கோடி டாலர்கள் வருவாய் பெற்றிருக்கிறது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் ஹோம்பாட் இந்திய விலை அந்நிறுவன வலைதள பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் ஹோம்பாட் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
மேக் ஒ.எஸ். தளத்தில் இந்திய பயனர்களை அதிகம் பாதித்த மால்வேர் பற்றிய விவரங்கள் சமீபத்திய ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது.
மேக் ஒ.எஸ். தளத்தில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட ஷ்லேயர் மால்வேர் மூலம் இந்தியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர் என சைபர்செக்யூரிட்டி ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்லேயர் மால்வேர் நெட்வொர்க், பொழுதுபோக்கு வலைதளம் மற்றும் விக்கிப்பீடியா தளங்களில் பரவுகிறது.
இதனால் நம்பத்தகுந்த வலைதளங்களை பயன்படுத்தும் போதும், பயனர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில்- அமெரிக்கா (31 சதவீதம்), இந்தியா (18.9 சதவீதம்), ஜெர்மனி (14 சதவீதம்), ஃபிரான்ஸ் (10 சதவீதம்) மற்றும் பிரிட்டன் (10 சதவீதம்) உள்ளிட்டவை இருக்கின்றன.
மேக் ஒ.எஸ். தளத்தில் கண்டறியப்பட்ட மால்வேர் பயனர் சாதனங்களில் ஆட்வேர்- பயனர் விவரங்களை சேகரிக்கும் விளம்பரங்களை பதிவிட்டு, பயனர்களின் தேடல்களை அறிந்து கொண்டு விளம்பர நிறுவனங்களின் குறுந்தகவல்களை அதிகளவு வெளியிட வழிவகை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஷ்லேயர் மால்வேர் ஜனவரி முதல் நவம்பர் 2019 வரையிலான காலகட்டத்தில் கேஸ்பர்ஸ்கை சேவைகளை இன்ஸ்டால் செய்யப்பட்ட மேக் ஒ.எஸ். சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஷ்லேயர் மால்வேர் மேக் ஒ.எஸ். தளத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய அச்சுறுத்தல்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
பயனர் விவரங்களை சேகரிக்க புதிய வழிகளை தேடும் சைபர் குற்றவாளிகளுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் இயங்குதளமாக மேக் ஒ.எஸ். இருக்கிறது. இதன் காரணமாகவே இதுபோன்ற பிழைகள் நம்பத்தகுந்த வலைதளங்களிலும் காணப்படுகின்றன என்று கேஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளர் ஆன்டன் இவானோவ் தெரிவித்தார்.
மேக் ஒ.எஸ். தளத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பெரும்பான்மை மால்வேர்கள் சட்டவிரோத விளம்பர முறைகளை பயன்படுத்துவதால், பயனர்களின் பணத்தை அபகரிப்பது போன்ற அபாயங்களை கொண்டிருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவன சேவைக்கு போட்டியாக சாம்சங் புதிய அம்சத்தினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
கடந்த சில ஆண்டுகளில் ஃபைல் ஷேரிங் சேவைகள் அதிக பிரபலமாகி வருகின்றன. தரவுகளை பகிர்ந்து கொள்ளும் சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் பயனர்கள் விரும்பியவற்றை தேர்வு செய்யும் வசதி இருக்கிறது.
அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர் டிராப் சேவை ஆப்பிள் பயனர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. ஆப்பிள் நிறுவன சேவைக்கு போட்டியாக சாம்சங் நிறுவனமும் சொந்தமாக ஃபைல் ஷேரிங் சேவையை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங்கின் ஃபைல் ஷேரிங் சேவை க்விக் ஷேர் எனும் பெயரில் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த சேவையை கொண்டு பயனர்கள் இரு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களிடையே தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
க்விக் ஷேர் கொண்டு பயனர்கள் யாருடன் தரவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் யாரிடம் இருந்து தரவுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். சேவையில் ஸ்மார்ட்போனில் உள்ள காண்டாக்ட்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ள கான்டாக்ட்ஸ் ஒன்லி எனும் ஆப்ஷனும் அனைவருடன் பகிர்ந்து கொள்ள எவ்ரிவொன் என இரண்டு ஆப்ஷன்களை வழங்கப்படுகிறது.

மேலும் பயனர்கள் சாம்சங் ஸ்மார்ட்திங்ஸ் சாதனங்களுக்கும் தரவுகளை பகிர்ந்து கொள்ள முடியும். இவ்வாறு செய்யும் போது, தரவுகள் சாம்சங் கிளவுடில் அப்லோட் செய்யப்பட்டு பின் அதற்கான ஸ்மார்ட்போனில் ஸ்டிரீம் செய்யப்படும். ஸ்மார்ட்திங்ஸ் சாதனத்திற்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 2 ஜி.பி. அளவிலான டேட்டாவையும், அதிகபட்சமாக ஒரே சமயத்தில் 1 ஜி.பி. அளவிலான டேட்டாவை மட்டுமே அனுப்ப முடியும்.
புதிய க்விக் ஷேர் அம்சம் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு, மென்பொருள் அப்டேட் மூலம் மற்ற சாதனங்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.
புகைப்படம் நன்றி: xda developers
வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் செயலியிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய அம்சம் வழங்கப்பட இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோட் அம்சம் சமீபத்தில் அதன் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலிகளில் டார்க் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், ஃபேஸ்புக்கின் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் டார்க் மோட் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஃபேஸ்புக் ஆண்ட்ராய்டு பதிப்பில் டார்க் மோட் வழங்குவது பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. தற்சமயம் ஃபேஸ்புக் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் டார்க் மோட் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு டார்க் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்களும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கிரீன்ஷாட்களின் படி ஃபேஸ்புக் செயலியில் முழுமையான டார்க் மோடிற்கு பதில் வாட்ஸ்அப் செயலியில் உள்ளதை போன்ற டார்க் மோட் வழங்கப்படும் என தெரிகிறது.

சமீபத்தில் வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு புதிய அப்டேட்டை வெளியிட்டது. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்களை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்டிக்கர் பேக் அனிமேட் ஆகும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ஸ்டிக்கர் பேக் அருகில் பிளே ஐகானும் காணப்படுகிறது. பிளே ஐகான் கொண்டு அனிமேஷன்களை டவுன்லோடு செய்யும் முன் அவற்றை பிளே செய்து பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய அப்டேட்டில் டெலீட் மெசேஜஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பதிப்பில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பதிவு செய்யும் வசதி சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்த அம்சம் ஐ.ஒ.எஸ். பயனர் ஐகிளவுட் கீசெயின் ஆப்ஷனை தங்களது அக்கவுண்ட்டில் செயல்படுத்தி இருந்தால் மட்டுமே வேலை செய்யும். இதே போன்ற அம்சத்தினை ஆண்ட்ராய்டு தளத்தில் அக்கவுண்ட் டிரான்ஸ்ஃபர் பெயரில் வழங்கி வருகிறது.






