என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டிக்டாக்
    X
    டிக்டாக்

    ஒரே வருடத்தில் ஆறு நூற்றாண்டை கழித்த இந்தியர்கள் - தொடர்ந்து லாபம் ஈட்டும் சீன நிறுவனம்

    கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் ஆறு நூற்றாண்டுக்கு இணையான நேரத்தை டிக்டாக் செயலியில் கழித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    இந்தியர்கள் டிக்டாக் செயலி மீது அதீத ஆர்வம் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. தற்சமயம் வெளியாகி இருக்கும் அறிக்கையும் இதற்கு சான்றாக அமைந்துள்ளது. 

    செயலிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு வரும் ‘ஆப் ஆனி’ எனும் நிறுவனம் இந்தியர்கள் 2019 ஆண்டில் மட்டும் சுமார் 550 கோடி மணி நேரங்களை டிக்டாக் வீடியோ பார்க்க செலவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. வருட கணக்கில் இது சுமார் 6.27 லட்சம் ஆண்டுகள் எனலாம். இது கிட்டத்தட்ட ஆறாயிரம் நூற்றாண்டுகள் ஆகும்.

    ஆய்வறிக்கையின் படி இந்தியர்கள் டிக்டாக் செயலியில் செலவிடும் நேரம் 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆறு மடங்கு அதிகம் ஆகும். 2018ம் ஆண்டில் இந்தியர்கள் 90 கோடி மணி நேரத்தை டிக்டாக்கில் செலவிட்டிருந்தனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு டிக்டாக் பயனர் எண்ணிக்கையில் புதிய சாதனைகளை எதிர்பார்க்கலாம்.

    டிக்டாக்

    சர்வதேச அளவில் வளர்ச்சி அடிப்படையில் டிக்டாக் ஃபேஸ்புக் நிறுவனத்தை முந்தியிருக்கிறது. 2019 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் டிக்டாக் செயலியின் மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 90 சதவீதம் அதிகரித்துள்ளது. 

    நாடுகளின் அடிப்படையில் டிக்டாக் பயனர்கள் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. ஃபேஸ்புக்குடன் ஒப்பிடும் போது டிக்டாக் செயலியில் பயனர்கள் செலவிட்ட நேரம் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. டிசம்பரில் ஆண்ட்ராய்டு தளத்தில் டிக்டாக் பயனர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் டிக்டாக் செயலி 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் 2019-ம் ஆண்டில் மட்டும் டிக்டாக் செயலி ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் சுமார் 32.3 கோடி முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் இரு இயங்குதளங்களில் ஃபேஸ்புக் செயலி சுமார் 15.6 கோடி முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×